இன்று உலகக் கோப்பை துவக்க விழா ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் நடக்கவிருப்பதாக செய்தித் தாட்களில் படித்தேன். சென்ற முறை கோப்பையை வென்ற இந்திய அணி இம்முறையும் உச்சத்தைத் தொடுமா?
பதில் தொடாது. பயிற்சி ஆட்டங்களில் நம்மவர்கள் சொதப்பிக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இதற்க்கு வேறு காரணங்களும் உண்டு. சென்ற உலகக் கோப்பை நடந்தது இந்தியாவில், சொந்த மண்ணில். இந்திய ஆடுகளத்திற்க்கும், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இந்திய பிட்சுகள், Flat பிட்சுகள், ஆனால் தற்போது ஆட்டம் நடக்கவிருக்கும் பிட்சுகள் உயிருள்ளவை. அதாவது பந்து ஆடுகளத்தில் பட்டு கன்னா பின்னாவென்று திரும்பும். பந்து வீச்சாளர்களுக்குத் திருவிழாதான். அவற்றை சொந்த மண்ணாகக் கொண்ட மட்டையாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான், வெளுத்துக் கட்டுவார்கள். நம்மாட்கள் மண்ணைக் கவ்வுவார்கள்.
அதுசரி, உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு கிடைக்கும் தொகை இங்கே ஐ பி எல்லில் ஒரே ஆளே ஒரு சீசனில் சம்பாதித்து விடுவார். எவனுக்குக் கவலை!! விசனம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் , ஆடுபவர்களுக்கல்ல!!

இந்தியாவுக்கும் கிரிகெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் இந்த கிரிக்கெட் அணி இந்திய அணியே கிடையாது. இது ஒரு பிரைவேட் கம்பெனி BCCI யுடைய அணி மட்டுமே. BCCI என்பது ஒரு Private Club(Registred in Tamilnadu). அவ்வளவு தான். நிறைய மக்களுக்கு இந்த விஷயம் தெரியாமல் இந்தியா விளையாடுகிறது என்று சொல்லி, பல லட்சம் மக்கள் 7 மணி நேரத்தை வீணடிக்கிறார்கள்.
ReplyDeleteஉண்மையைச் சொன்னால் நிறைய பேருக்கு பிடிப்பது இல்லை! ஏலியன் சொல்லுவது போல யாரோ பணம் சம்பாதிக்க நாம் ஏன் அழ வேண்டும்?
ReplyDeleteவேண்டுதல்கள் வேறு... என்னமோ போங்கப்பா...!
ReplyDeleteஉண்மைய சொன்னா யார் கேக்குறாங்க.....
ReplyDelete