Saturday, March 29, 2014

எருமை மாடு நாத்தீகத் தலைவரான கதை

வணக்கம் மக்கல்ஸ்!!

தகுஸ்தான் என்ற நாட்டில் ஒரு சிற்பி இருந்தாரு, சிலைகளை வடிப்பதில் வல்லவர்.  ஒருநாள் அவரிடம் ஒரு எருமை மாட்டின் சிலை வேண்டும் என்று ஒருத்தர் வந்தார்,  அதைக் கொண்டு போய் ஒரு பூங்காவில் வைக்க வேண்டும், மாணவர்கள் ஏறி விளையாட நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு என்ன விலை என்று சிற்பியிடம் கேட்டார்.   " ஒரு லட்சம் ஆகும்" என்றார் சிற்பி.   வந்தவர் ஐம்பதாயிரம் முன்பணம் கொடுத்துவிட்டு மீதியை சிலையைப் பெறும்போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று விடை பெற்றுச் சென்றார்.  சிற்பியும் அந்தப் பணத்தை வைத்து நல்ல கிரானைட் கல்லாக வாங்கி செவ்வனே என்று சிலையைச் செய்து முடித்தார். சிலை பிரமாதமாக வந்தது.

 

சிலையை வடிக்கச் சொன்னவரை தொடர்புகொண்டு, "சிலை தயார் வந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று தகவல் தெரிவித்தார் சிற்பி.  அதற்க்கு அவர், "ஐயா, அந்தச் சிலைக்கு வேண்டிய நிதியுதவி வசூல் சரியாகப் போகவில்லை, பணம் தருகிறேன் என்று சொன்னவர்கள் எல்லோரும் ரிவர்ஸ் கியர் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள், தயவு செய்து நீங்கள் வேறு யாருக்காவது விற்று விடுங்கள், நீங்கள் எனக்கு பணம் எதுவும் திருப்பித் தரத் தேவையில்லை" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்து  விட்டார்.

இதைக் கேட்டதும் சிற்பி சற்றே கதிகலங்கிப் போனார்.  இத்தனை நாள் உழைப்பு பாழாய்ப் போனதே என்று. அப்போது ஒரு பகுத்தறிவுவாதி அங்கே வந்தார்.   

பகுத்தறிவுவாதி என்றால் என்ன என்பதை நாம் இங்கே கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்.  யார் என்ன சொன்னாலும் கேட்கப் படாது, நீயே சிந்தி.... [ அய்யய்யோ,என்ன மூக்கை சிந்தப் போறீங்க..?!!  சிந்தி என்றால் சிந்தனைங்க......  நீங்க ஒன்னு!!]  அப்படி சிந்திச்சு உனக்கே சரின்னு பட்டால்  ஏத்துக்கொள். [ஒருவேளை சிந்திக்கிறவன் கேனை என்றால் அவன் எப்படி சரியா சிந்திப்பான்?!   இப்படியெல்லாம் புத்திசாலித் தனமா கொக்கி போடப் படாது.   தலைவன் சொன்னா அப்படியே ஏத்துக்கணும்.  ......  ஹி ...........ஹி ...........ஹி ...........   இப்பத்தானே, சொந்தமா சிந்தின்னு  சொன்னீங்க, அதுக்குள்ள தலைவன் சொன்னதை அப்படியே ஏத்துக்கணுமா?  குழப்புதே......  நாம்ம கொள்கையே அப்படித்தான்.   ...........ஹி ...........ஹி ...........  ]

நாம் ரொம்ப விலகிப்   போயிட்டோம். சரி, வந்த பகுத்தறிவு என்ன சொல்லிச்சு?  "ஐயா, எங்க தலைவருக்கு சிலை வைக்கணும்,  எவ்வளவு ஆகும் சொல்லுங்க?"

சிற்பி  சொன்னார், " ஒரு லட்சம்".

"இதெல்லாம் ஜுஜுபி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றதுக்கு ஊரைச் சுத்தி  இளிச்சவா பயலுவ நிறைய பேர்  இருக்கானுவ,  இந்தாங்க அட்வான்ஸ் ஐம்பதாயிரம், சிலையை முடிங்க வந்து மிச்சத்த குடுத்துட்டு வாங்கிகிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியது பகுத்தறிவு.

சிற்பி  அந்த சிலைக்குத் தேவையான கல்லுக்கு ஆர்டர் குடுக்க போனை எடுத்தார்.

அப்போது அவருடைய உதவியாளர் "ஒரு நிமிஷம்" என்றார்.

"என்ன?" என்றார் சிற்பி.

"ஐயா, ஒரு  யோசனை.  எதுக்கு வீணா பணத்தை செலவு  செய்யணும்,இருக்கிறதை வச்சே சமாளிக்கலாமே?" என்றார் உதவியாளர்.

"என்னடா சொல்றே, இருந்த பணத்தைஎல்லாம்தான் அந்த எருமை மாட்டுச் சிலை வடிப்பதற்க்கே போச்சேடா, வேறென்ன இருக்கு நம்மகிட்ட?" என்று புரியாமல் வினவினார் சிற்பி.

"அது தான் ஐயா இப்போ நம்ம பிரச்சினையை தீர்க்கப் போவுது!!""

"எப்படிடா?"  சிற்பிக்கு இன்னமும்  விளங்கவில்லை.

"அந்த எருமைச் சிலையை நிமிர்த்தி நிக்க வச்சு லைட்டா டிங்கரிங் பண்ணினா போதும்,   இப்ப வந்திருக்கிற ஆர்டரை முடிச்சிடலாம்,  போட்ட பணத்தை எடுத்திடலாம்,  என் யோசனை எப்பூடி..........ஹி ...ஹி ...ஹி ...." என  சிரித்தார்  உதவியாளர்.

"சபாஷ்டா.......உனக்கு உடம்பெல்லாம் மூளைடா"  என்று குதூகலித்தார் சிற்பி.  விரைந்து சிலையை மாற்றியமைத்து பகுத்தறிவுக்கு தெரியப் படுத்தினர். 



சிலையைப் பார்த்த பகுத்தறிவுக்கு ரொம்ப  சந்தோசம்,  நாடு முழுக்க 3,99,999  [நாலு லட்சத்துக்கு ஒன்னு தான் கம்மி!!] சிலைகள்  இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியா எதுவும்  இல்லை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தது பகுத்தறிவு.  குஷியோடு பணத்தை செட்டில் செய்துவிட்டு முப்பது ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து சிலையை நகர்த்திக் கொண்டு போனது. தகுஸ்தான் நாட்டின்  பிரதான கடற்கரையில் அந்த சிலை நிறுவப்பட்டது.


 


தகுஸ்தான் நாட்டின் பகுத்தறிவுக் கட்சியின் தலைவர் கீரைமணிக்கு  சிலை நன்றாக வந்ததில் ஏக மகிழ்ச்சி.  தலைவனின் பிறந்த நாளையே சிலை திறப்புக்கு தெரிவு செய்தார்.  தலைவன் பிறந்த நாள் அன்று திறந்தால் தான் தலைவன் சிலை பிரதிஷ்டை ஆகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். வாசனையுள்ள ரோஜா பூக்களால் தொடுக்கப் பட்ட பெரிய பெரிய மாலைகளோடு வந்து சேருங்கள் என்று வாழ்வில் ஒருபோதும் மூளையைப் பயன்படுத்தாத தொண்டர்களுக்கு உத்தரவு போட்டார்.  மாலை போட்டதும் தலைவனின் சிலை வலதுபுறமும் இடதுபுறமும் தலையைத் திருப்பி, மூச்சை இழுத்து தோளிலுள்ள பூக்களை முகர்ந்து பார்க்கும் என்பதில் கீரை மணிக்கு அசையாத நம்பிக்கை.   இது நான்கு லட்சமாவது சிலை என்று திறப்புவிழாவில் பூரித்தார் கீரைமணி.  இதை நிறுவ எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு பணம் வந்தது என்ற லிஸ்டையும் வாசித்தார்.  மொத்தம் பத்து லட்சம் செலவு என்று கணக்கு காண்பித்தார்.  இந்த பணத்தையெல்லாம் தகுஸ்தான் நாட்டின் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து வீணடிக்கலாம் என்ற பிற்போக்கு சிந்தனையை சாடி தனது உரையை முடித்தார் கீரைமணி.


அதன் பின்னர் ஊரில் இருக்கும் காக்கா எல்லாம் வந்து மாதக் கணக்கில் அந்த சிலை மீதே கக்கா போனது.  அதைப் பார்க்கும் போது தலைவனின் தலையில் பாலையும் தயிரையும் கலந்து ஊற்றி அபிஷேகம் நடப்பது போல கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  எப்போதாவது ஒருநாள் நகர சுத்தீகரிப்பு தொழிலாளி ஒருத்தர் வந்து தனது வேலைக்கு வைத்திருக்கும் துடைப்பம், பிரஷ், பினாயில் போன்ற உபகரணங்களை வைத்தே சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்.  சிலையின் முகத்தினை பிரஷால் துடைக்கும்போது மட்டும் தலைவர் சிலை, உவ்வே........ என்று குமட்டுவதை அவர் அவ்வப்போது கவனிக்கத் தவறவில்லை.


இந்த நிகழ்வு பற்றி "எல்லாம் தெரிந்த எல்லப்பன் " பதிவர் திரு.மிதிமாறன் அவர்களிடம் வாசகர்கள் கேள்விகளைக் கேட்டனர்.  [எப்பேர்பட்ட சூரனுக்கும் ஒன்றிரண்டு துறைகளைப் பற்றி மட்டுமே பதிலளிக்க முடியும், ஆனால் இந்த எல்லப்பனால் ஆட்டுப் புளுக்கையில் இருந்து அமரிக்கா வரைக்கும் எதைப் பற்றி கேட்டாலும் பதில்களை  வாரி வாரி வழங்க முடியும்.]

கேள்வி:  கோவில் சிலை வெறும் கல்லு, அதற்க்கு மாலை மரியாதை செலுத்துவது மூடத்தனம் என்றால் உங்க தலைவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் பகுத்தறிவா?

மிதிமாறன் பதில்:  "சாதாரண சிலைக்கு மாலை போட்டா அது கல்லு மாதிரிதான் நிக்கும், அதுக்கு ஒன்னும் விளங்காது.  மனிதனா வாழ்ந்து மண்டையைப் போட்ட ஒருத்தருக்கு தாராளமா சிலையை வைக்கலாம், தப்பேயில்லை.  ஏன்னா அந்த சிலைக்கு  போடுவது ரோஜா மாலை என்பதும், அது வாசனையானது என்பதும் நன்றாகவே தெரியும்,  மாலையை நுகர்ந்து பார்க்கும் அகமகிழும், இது தான்டா பகுத்தறிவு"

என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார் எல்லாம் பகுத்து அறிந்த தெரிந்த அறிவாளி.

இவ்வாறாக வருடத்தில் ஒருநாள் ரோஜா மாலைகளால் சூட்டப் பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு மற்ற நாட்களில் காக்காவின் கக்கா அபிஷேகத்தை வாங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது அந்த எருமை மாட்டுச் சிலை.




20 comments:

  1. ஜெயதேவ் இந்தமாதிரி பகுத்தறிவு விவகாரத்தை எல்லாம் பட்டுன்னு போட்டு உடைக்கப்படாது. கீரைமனிக்கும் மற்ற பகுத்தறிவு அல்லக்கைகளுக்கும் இவ்வளவே வெளிப்படையா சொன்னா புரியாது. அவிக எல்லாம் பெரியார்திடலை இயேசு வருகிறார் சுவிசேஷ கூட்டத்திற்கு வாடகைக்கு விட்டு கல்லா கட்டும் ஆட்கள். அங்கே எல்லாம் பகுத்தறிவை அடகு வைத்துவிடுவார்கள்.

    இருந்தாலும் நல்ல சிந்திக்கவேண்டிய நக்கல்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றி கும்மாச்சி!!

      Delete
  2. என்ன திடீர்னு உருவகக் கதையெல்லாம் சொல்லக் கிளம்பிட்டீங்க?

    ReplyDelete
  3. Replies
    1. @ rajasekar

      மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாருங்கள்!!

      Delete
  4. ஓ! அப்படியா? இதே போல்தான். கழுதை சிலை காந்தி சிலை ஆனதோ! அப்படி என்றால் சரி.

    ReplyDelete
    Replies
    1. @ மாசிலா

      ஊரில் இருப்பவன் மூட நம்பிக்கையில் உழன்று இருப்பவன், சிந்திக்கத் தெரியாதவன். அவன் காந்திக்கும் சிலை வைப்பான், கழுதைக்கும் சிலை வைப்பான். நீங்கள் அப்படியா? நீங்கள் பகுத்தறிவுவாதிகள், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் அப்படியே ஏற்காதவர்கள், மூட நம்பிக்கைகளை களையெடுத்து கேள்விகேட்டு அதில் உண்மை எது என பகுத்து அறியும் அறிவாளிகள். நீங்களும் கல்லை நட்டு வைத்து அதற்க்கு மாலை மரியாதை செலுத்துவது தகுமா? இவ்வாறு செய்யச் சொன்ன உங்கள் தலைவனிடம் கல் எப்படி மறைந்த தலைவனாகும் என்று என்றைக்காவது எதிர்த்து கேள்வி கேட்டிருப்பீர்களா? இதுதான் மூடநம்பிக்கையை ஒழிப்பதா? மூளையை அடகு வைத்துவிட்டு கட்சிக் காரன் சொன்னது அத்தனையும் கேள்வியே கேட்காமல் செம்மறியாட்டுக் கூட்டம், அதில் நீரும் ஒரு முட்டாள் ஆடு.

      அதுசரி, அதென்னது காந்தி சிலை உதாரணம்? காந்தி பிராமணர் ஆகையால் எமக்கு கோபம் வரும் என்றா? நீர் செய்தது சரியா தவறா என்று யோசித்து திருத்திக் முயல்வீரா இல்லை ஊரில் நடக்கும் இன்னொரு முட்டாள் தனத்தைக் காட்டி உமது முட்டாள்தனத்தை நியாயப் படுத்துவீரா? இந்த அளவுக்கு உமக்கு சிந்தனைத் திறன் இருந்திருந்தால் நீர் அந்த கூட்டத்தில் சேர்ந்தே இருந்திருக்க மாட்டீரே......... திருந்துமைய்யா ..........திருந்து.

      Delete
  5. http://www.nambalki.com/2014/03/blog-post_29.html#comment-form

    ReplyDelete
  6. கொஞ்சம் துக்குணூண்டு மூளை உள்ள ஒரு பட்டிக்காட்டான் "எப்படிடா எருமைக் கடாகிட்ட இருந்து பால் வரும்" என்று கேட்டான்.

    அதுக்கு ஆத்திக அறிவாளிகள், "எங்கள் நம்பிக்கையை நீங்கள் கேள்வி கேட்டதினால் எங்கள் மனது புண்படுது" என்று ஒரு வழக்கமான ஒப்பாரியை வைத்தார்கள்!

    அதற்கு அந்த முட்டாள் கிராமத்தான், "ஏண்டா உங்களுக்கு மட்டும் தான் மனது இருக்கா? இல்லை உங்களுக்கு மட்டும் தான் மனது புண்படுமா? எருமை கடா எங்கள் தெய்வம். அது கிட்டே இருந்து பால் வாரதுடா முட்டாள்களா" என்றான்!

    கடா...ஆண் எருமை கிட்டே இருந்து பால் வரும் என்று சொல்லி எங்கள் நம்பிக்கையை [உண்மையையை] கேவலப்படுத்தி விட்டீர்களே! எங்கள் மனதும் புண்படுதுடா!

    டேய்! முட்டாள்களா! கடா கிட்ட இருந்து வருவது பால் இல்லைபா! அது டோட்டலா வேற-பா! சுருங்க சொன்னால்....வெளுத்ததெல்லாம் பால் அல்ல" என்றான் முட்டாள் கிராமத்தான்.

    ReplyDelete
    Replies
    1. @ silver moon

      சுட்டிக்கு நன்றி. நம்பள்கி எழுதுவதைப் புரிந்து கொள்ள சென்னை சஹுகார் பேட்டையில் நாலு வருஷம் வசித்தால் மட்டுமே முடியும். அதில் நீர் புரிந்து கொண்டீர் என்றால் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியதே. இந்த ரெட்டை அர்த்த வசனம், கெட்ட வார்த்தைகளில் பேசுவது இதையெல்லாம் நம்மை இழிவு படுத்தலாம் என்ற நினைப்பு வேண்டாம். சுப்பிரமணியம் சுவாமி தமிழ் பேசும் நம்பள்கியை விட எமக்கு அதிகமாக இதைச் செய்ய முடியும், போய் வாரும்.

      Delete
  7. "நாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது"
    உனக்கே பொருந்தும் உன் வாசகம் ! நாத்தீகம் பேசுபவனுக்கும் உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நீயும் அதே மட்டை தான்
    குட்டை தெளிந்தால் தான் பயன் !

    ReplyDelete
  8. பகுத்தறிவு பேசுவது ஃபாஷன். சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதுபவர்களைச் சினிமாத் துறைக்கு எதிரிகள் மற்றும் குற்றம் செய்பவர்கள் போல் சித்தரித்து , நிஜ வில்லன்கள் என்று ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள் இதற்குத் தயவு செய்து (அவர்களுக்கு)விளக்கம் தரவும்.

    ReplyDelete
  10. very bad.. thinking that you want to defame keeraimani.. you really defamed someone great.

    எருமை மாடு நாத்தீகத் தலைவரான = this is unwanted..
    story could have started from second paragraph..

    ReplyDelete
  11. மூட நம்பிகையை எடுத்து சொன்னால் அவன் பகுத்தறிவாளன். மூட நம்பிக்கையே பகுத்தறிவு போல எடுத்து சொன்னால் அவன் பிராமிணன் இது சமீபத்தில் எனக்கு பெரியார் படம் பார்த்த பொது வந்த நினைவுக்கு வந்த வசனம்.

    ReplyDelete
    Replies
    1. @ Antony Raj

      \\மூட நம்பிகையை எடுத்து சொன்னால் அவன் பகுத்தறிவாளன்.\\

      அப்படி என்ன மூடநம்பிக்கையை எடுத்துச் சொன்னாங்கன்னு தெரியலை. சாமி சில வெறும் கல்லு, அதுக்கு மாலை மரியாதை செய்வது முட்டாள் தனம், மூடத்தனம் என்றார்கள். அதோட நிருத்தியிருந்தாலாவது ஒரு அர்த்தம் இருந்திருக்கும், செய்தார்களா? இல்லையே!! சாமி சிலைக்குப் பதிலா எங்க தலைவரோட சிலைக்கு மாலையை போடுங்க அது முகர்ந்து பார்க்கும் என்ற பிரச்சாரம் நடக்கிறதே, இதுதான் பகுத்தறிவா? பகுத்தறிவை உபயோகிக்கும் உங்களில் யாராவது இதைஎதிர்த்து கேள்வி கேட்டிருப்பீர்களா? உங்களில் ஒருத்தர் கூட மூளையைப் பயன்படுத்த மாட்டீர்களா?

      Delete
  12. //சாமி சிலைக்குப் பதிலா எங்க தலைவரோட சிலைக்கு மாலையை போடுங்க//

    அப்படி ஒருவன் மாலை போட்டிருந்தால் அவன் பகுத்தறிவாளன் கிடையாது. அவனும் ஒரு கூமுட்டை தான்.



    //அது முகர்ந்து பார்க்கும் என்ற பிரச்சாரம் நடக்கிறதே,//

    ஆதாரம் எங்கே?


    //பகுத்தறிவை உபயோகிக்கும் உங்களில் யாராவது இதைஎதிர்த்து கேள்வி கேட்டிருப்பீர்களா? //

    நான் எதிர்த்து கேள்வி கேட்கிறேன்.

    ReplyDelete
  13. @ Alien

    யோவ் நீரு எந்த ஊரு? நீரு நெஜமாவே வேற்று கிரகத்து ஆசாமி தான்யா. பகுத்தறிவுகள் அவங்க தலைவர் சிலைக்கு மாலை போட்டு நீர் பார்த்ததே இல்லையா? கூகுல்னு கருமாந்திரம் ஒன்னு இருக்கே அதுல போட்டு தேடிப் பார்க்க வேண்டியதுதானே, இங்கே ஏன்யா என்னோட டயத்த வேஸ்டு பண்ணுறே?

    http://www.modernrationalist.com/2011/October/page14.html
    http://1.bp.blogspot.com/-u14npZG4B10/T4z_3fqGCHI/AAAAAAAAADc/NWx6BHCrwc0/s1600/PERIYAR_STATUE_

    ********//அது முகர்ந்து பார்க்கும் என்ற பிரச்சாரம் நடக்கிறதே,//

    ஆதாரம் எங்கே?******

    சரி நீர் இப்போ இதற்க்கெல்லாம் விளக்கம் தரனும்:

    போட்ட மாலையை சிலை முகர்ந்து பார்க்காது என நீர் மறுத்தால் வேறு என்ன காரணத்திற்காகப் போடப் படுகிறது, அதற்க்கு அறிவியல் பூர்வமான
    விளக்கம் என்ன? [மாலையைப் போட்டதும் என் மனசுக்கு தலைவன் கொள்கையைப் பின்பற்றனும்னு உறுதி வருது அது இதுன்னு சும்மா பீலா விட்டா மூஞ்சி மேல குத்துவேன்......]

    மாலை போடுவதால் அந்த சிலைக்கு என்ன பிரயோஜனம், செத்த தலைவருக்கு அந்த மரியாதை எப்படி போய்ச் சேருகிறது?

    அதுசரி நீர் கள்ள ஐ.டி தயார் பண்ணி உன்னை நீயே மெச்சி வல்லவரு, நல்லவருன்னு, எங்க தலைவரு பின்னாடி வருவாருன்னு எல்லா பிளாக்கிலும் போய் பின்னூட்டம் போட்டுக்கிரியாமே? அப்புறம் சந்தேகம் வரக்கூடாதுன்னு உம்மோட ஒரிஜினல் பிளாக்கிலும் ஆஹா.....ஓஹோ..... உன்னை மாதிரி அறிவாலியே இல்லைன்னும் நீயே பின்னூட்டம் போடுறியாமே? இதெல்லாம் நிஜமா?

    ReplyDelete
  14. //சரி நீர் இப்போ இதற்க்கெல்லாம் விளக்கம் தரனும்://

    அதான் போன கமன்ட்லையே சொல்லிட்டேனேன். அவர்களும் உம்மைப்போலவே கூமுட்டைகள் தான்.

    ...//கள்ள ஐ.டி தயார் பண்ணி//.....
    அதெல்லாம் உம்மை போல போலி ஆன்மிகவாதிகளின் வேலை.

    வவ்வால்,
    இங்க பார்த்தீரா பாகவதரை..
    காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. @ Alien

      தி.க. கட்சியினர் செய்வது ஊடகங்களில் வருகிறது, அதனால் அவர்கள் கூமுட்டைத் தனம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. நீங்கள் கூமுட்டைத் தனம் கலவாத அக்மார்க் நாத்தீகர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள், உங்கள் சொந்த வாழ்வை உற்று கவனித்தால் உங்கள் கேனத்தனமும் வெளிப்படும் நீங்களும் "பகுத்தறியா" கூமுட்டைகள் என்பதும் உறுதியாகும்.

      நீர் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் உன் தலைவனும் இதே கூமுட்டைதான் என்பதற்கான ஆதாரங்கள் அவரது பல பின்னூட்டங்களில் நாறிக் கிடக்கிறது. நான் பார்த்தவரையில் எந்த நாத்தீகனும் சுத்த பகுத்தறிவாளன் கிடையாது.

      Delete