Wednesday, March 26, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்? -திருப்பூர் ஜோதிஜிக்குப் பதில்........

வணக்கம் மக்கள்ஸ்!!

வாழ்க்கையில் நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறோம், சிலவற்றை  நாமே தீர்கிறோம், அதே சமயம் பல பிரச்சினைகளுக்கு இது சாத்தியமாக இருப்பதில்லை.  ஒரு வாராமா  நெஞ்சில வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால், "காலம் தாமதிக்காமல் போய் நல்ல டாக்டரா பாரு" என்று தான் சொல்கிறோமே தவிர நாமே மருந்து கடைக்குப் போய் ஏதாவது ரெண்டு மாத்திரைகளை வாங்கி உள்ளே தள்ளிவிட்டால் சரியாகிவிடும் என விட்டு விடுவதில்லை.  வீடு கட்ட நிலம் வாங்க வேண்டுமென்றால் இடத்துக்குரிய ஆவணங்களை ஒரு தேர்ந்த வழக்கறிஞரிடம் காட்டி அவரது கருத்தை கேட்டறிந்தே முடிவெடுக்கிறோம்.  இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அது நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை, நமக்குத் தெரியாத நாம் அறிந்திராத விஷயங்கள் எண்ணற்றவை உண்டு, மேலும் ஒரு துறை பற்றிய தகவல்களைப் பெற வேண்டுமானால் அந்தத் துறையில் தேர்ந்த வல்லுனர்களை அணுக வேண்டும்.



இதை நாம் எல்லா இடத்திலும் பின்பற்றித்தான் வருகிறோம்.  ஆனால் ஆன்மிகம், இறைவன் என்று வந்து விட்டால் மட்டும் நாம் மனதுக்குள் நினைப்பது இவைதான்:  ஆன்மிகம் குறித்து எனக்கே எல்லாம் தெரியும், வேறு யாரையும் நான் யோசனை கேட்க வேண்டியதில்லை,  வேண்டுமென்றால் மற்ற எல்லோரும் என்னிடம் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.  இப்படியெல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை, நாம் ஒவ்வொருவருமே நினைக்கிறோம்,  அதன் விளைவு பின்வரும் கேள்விகள் எழுகின்றன!!  இவற்றை திரு.ஜோதிஜி, திருப்பூர் தனது ஆன்மீகம் என்பது யாதெனில்?  என்ற பதிவில் கேட்டிருக்கிறார்.  ஜோதிஜி அடக்கமானவர் என்றாலும், மனித இயல்பு வேறு ஆயிற்றே!!


ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 



மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 



கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 



மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, இறைவன் என்று ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கான விடையை அறிவியல் கூட இன்னமும் கூறா விட்டாலும்,  தாங்களாகவே "கடவுள் இல்லை" என்று முந்திரி கொட்டையாக  நாத்தீகர்கள் வழங்கிய நாட்டமை தீர்ப்பிற்கும் அடிப்படை நாம் மேலே சொன்ன அதே காரணங்கள் தான்!!

இன்னும் சிலர், இந்த நினைப்பை தம்மோடு நிறுத்திக் கொள்வதில்லை, மற்றவர்களிடமும் போய், "நீ யாரிடமும் ஆன்மிகம் குறித்து எதையும் கேட்கத் தேவையில்லை, நீயே ரூம் போட்டு யோசி, எல்லாம் புரிந்துவிடும்"  என்று போதிக்க ஆரம்பித்து விடுவதும் நடக்கிறது.  அப்படியே ஒருவேளை எனக்கே எல்லாம் தெரியும் என்றால் "நான் யோசித்தாலே எல்லாம் புரியும்" என்பது மட்டும் ஏன் எனக்குத் தெரியாமல் போனது?!!   அதை இன்னொருவர் வந்து எனக்கு சொல்லி புரிய  வைக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?  அது மட்டுமல்ல, இன்னொருவருக்கு நாம் யோசனை சொல்லும் போதே அவருக்கு அந்த விஷயம் குறித்து தெரியவில்லை என்று நாமே ஒப்புக் கொள்கிறோம் என்று தானே அர்த்தம்.  பின்னர், உனக்கே எல்லாம் தெரியும் என்பது எப்படி சரியாகும்?  இவையெல்லாம் லாஜிக் ஓட்டைகள்.  சரி இப்போது ஜோதிஜியின் கேள்விகளுக்கு வருவோம்.

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

ஏன் முடியாது?  நிச்சயம் முடியும், ஆடு, மாடுகள் அப்படித்தான் வாழ்கின்றன, மேலும் 99.99% மனிதன் அப்படித்தான் வாழ்ந்து முடிக்கிறான்.

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

 
அடையாளங்கள் சம்பிரதாயங்கள் இல்லாமல் உலகில் எதுவுமே  நடப்பதில்லை.   பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சீருடை எதற்கு?  ஏன் ஒரு வக்கீல் கோவணம் கட்டிக் கொண்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது?  போலீசுக்கு காக்கிச் சட்டை எதற்கு?  நர்ஸ் ஏன் வெள்ளை நிற உடை அணிய வேண்டும்?  அடையாளங்களே கூடாது என்று சொல்லும் நாத்தீகர்கள் கூட கறுப்புச் சொக்காயைப் போட்டுக் கொண்டு கூட்டமாக நிற்ப்பது எதற்கு? ஒரு ஆண் சேலை கட்டிக் கொண்டு போனால் தான் என்ன?  இந்தக் கேள்விகள்  எதற்காவது பதில் தர முடியுமா?   ஆக அடையாளங்கள் என்பவை தவிர்க்க இயலாதவை.
 
"உனக்கு ஏன்டா குடுமி, உனக்கு ஏன்டா பூணூல், உனக்கு ஏன்டா தொப்பி, லுங்கி" என்று எங்க கூட்டத்துக்கு கேள்விதான் கேட்கத் தெரியும், பதிலுக்கு "உங்களுக்கு எதுக்கு கறுப்புச் சொக்கா, வெயிலில் போனா குளு குளுன்னு இருக்குமுன்னா?"- ன்னு பதிலுக்கு கேள்வி கேட்டுடாதீங்க தம்பி, ஏன்னா எங்களுக்கு கேட்க மட்டும் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது!!

ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழா என்றால் கூட அங்கே சம்பிரதாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பட்டம் வாங்குபவர்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து சென்று எங்கு நின்று வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்து பட்டம் பெற்று வெளியே வரும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்று அதற்கு முதல் நாளே தனி பயிற்சியளிக்கப் படும்.  செனட் தலைவர், "இந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதை நீங்கள் அமோதிக்கிறீர்களா" என்று செனட் குழுவைப் பார்த்து கேட்பார், "ஆம் அமோதிக்கிறோம்"  என்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  இதெல்லாம் அங்கே உட்கார்ந்து பார்க்கும் போது கோமாளித் தனமாகத் தோன்றும்.  ஆனாலும் சம்பிரதாயங்களை நீக்க முடியுமா?  



நம் நாட்டில் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்கும் போதும் சம்பிரதாயங்கள் இருக்கத் தானே செய்கிறது?  சம்பிரதாயங்கள் கூடாது என்று சொல்லும் நாத்தீகன்,  மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல் என சம்பிரதாயம் எதுவும் இல்லாமல், நேராக பெண்ணை அவள் வீட்டிலிருந்து அழைத்துப் போய் குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவாரா என்ன?
ஆக எந்த செயலிலும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சம்பிரதாயங்கள் சடங்குகள் இருக்கத்தான் செய்கின்றன, இவற்றைத் தவிர்க்க இயலாது. 


கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 


இங்கதான் நாம் பதிவின் ஆரம்பித்தில் சொன்ன விஷயங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது. 
முதலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.   எல்லா பிரச்சினைகளுக்கும் வல்லுனர்களை நாடிய நீங்கள் இதற்கும் வல்லுனர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை நாடி கேள்விகள் கேட்டு பதிலை அறிந்து கொள்ள வேண்டும்.


மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

நாத்தீகனை எடுத்துக் கொண்டால் பிரியாணியும் அதற்க்கு தயிர் பச்சடியும் நன்றாக இருக்கும் இதற்கும் மேல் வேறு எதுவும் இல்லை என்பான். [இதை நான் சொல்லலீங்க, கண்ணதாசன் சொல்லியிருக்கார்!!].  நாட்டிலுள்ள ஒவ்வொரு கள்ளச் சாமியாருடைய சீடர்களுக்கும் அந்தந்த  சாமியார் தான் கடவுள்.  அதற்கும் மேல் எதையாச்சும் சொன்னால் நம்மை அவரது சீடர்கள் காலி செய்து விடுவார்கள்.  இதைத் தவிர்த்து ஊர் ஊருக்கு ஒரு சாமி மீசை அரிவாளோட நின்னுகிட்டு இருக்கும்.  இவற்றில் எந்த கும்பலோட அளவுகோளைச் சொல்வது?  எனவே இன்னொரு மனிதன் என்ன அளவுகோல் வைத்திருக்கிறான் என்று ஆராய்வதில் பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையான ஆன்மீகத்திற்கு என்றென்றைக்குமான அளவுகோல் என்ன என்று கேட்பதே சரியான கேள்வியாக இருக்கும் என்பது எனது கருத்து!!

35 comments:

  1. மற்ற எல்லா விஷயங்களையும் பேசும்போதும் சாதாரணமாகப் பேசும் ஜெயதேவ் ஆன்மிகம், கடவுள் என்ற விஷயங்களைப் பேச வரும்போது மட்டும் சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றுகொண்டுதான் பேசுகிறார் என்பது இந்தப் பதிவிலும் தெரியவருகிறது. எத்தனை விதமான விவாதங்கள் எந்தெந்த திசைகளிலிருந்தெல்லாம் வரப்போகின்றன என்பதைப் பார்க்கத் தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. @Amudhavan

      நமக்கு ஜோதிஜி பிரியமானவர், ஆனால் நாத்தீகர்களை நினைத்தாலே எங்கிருந்தோ வேகம் வந்து விடுகிறது...............!!

      Delete
    2. இன்று சே... இது ஒரு தகவல்...

      வலையுலகம் வந்த புதிதில் (பெயர் சொல்ல விரும்பவில்லை) அன்பர் - வயதில் மூத்தவர் - சொன்ன பல அனுபவங்கள் பலதும் வியக்கவும் வைத்தன... ஆனால் ஒருவரின் கருத்துரையால் தொடர்ந்து பகிரவில்லை... நானும் பலமுறை சொல்லிப் பார்த்தேன்... "உங்களின் நம்பிக்கை உங்களுக்கே... அதனால் வருத்தப்பட்டு - இப்படி ஏன்...? உங்களின் மேன்மையை நீங்கள் முதலில் உணருங்கள் ஐயா... அது போதும்... மற்றவைகளின் எந்த ஒரு நம்பிக்கையைப் பற்றியும் நீங்கள் பேசியதும் இல்லை... எழுதியதும் இல்லை... விவாதித்ததும் இல்லை... பிறகென்ன பயம்...?" என்றேன்... கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் தொடர்கிறார்...

      Delete
  2. ஓட்டு போட்டு விட்டேன். சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. திண்டுக்கல் தனபாலன் இணைப்பு கொடுக்காவிட்டால் நிச்சயம் சற்று தாமதமாக வந்து இருப்பேன். எனக்கு உங்க அப்ரோச் பிடித்துள்ளது. (ஆகா ஏற்கனவே என்னை பிரியமானவர் என்று காட்டிய விசுவாசத்திற்கு இன்னும் எத்தனை ஜென்மத்திற்கு கடன் தீர்க்க வேண்டியிருக்குமோ?) நல்ல வேளை இன்று வெளியிட வேண்டிய அடுத்த பதிவு எழுதி முடித்த பின்பு இங்கே வந்துள்ளேன். நிச்சயம் நான் நினைத்துள்ள அத்தனை விசயங்களையும் (ஆன்மீகம் குறித்து) எழுதி வைத்து விட்டு நகர்வதே என் நோக்கம்.

    கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட புரிதலுக்கு என்றும் என் நன்றி. பலரும் இது போன்ற பதிவுகளுக்கு பதில் எழுதி வைக்கக்கூட தயங்குவார்கள். நீங்க சிக்சரே அடித்துள்ளீர்கள். நன்றி ஜெய்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு கருத்திடுவதற்குள் மின்வெட்டு... அதனால் உடனே இணைப்பு...

      Delete
    2. மின்வெட்டா? தமிழகத்திலா?
      நீங்க என்ன திமுகாவா DD?

      Delete
    3. ஒரு வாரமாக 2 மணி நேரம் ஆரம்பித்து, இப்போது தினமும் 3 மணி நேரம்... சில நாள் 6 மணி நேரம்... எப்போ போகும் எப்போ வரும்ன்னு சொல்ல முடியாது... போக வேண்டிய நேரத்திலே போயிடும்...

      Delete
    4. மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசின் சதி... தேர்தல் வரும் போது அம்மா ஆட்சிக்கு அவதூறு செய்ய முயற்சி.... தேர்தல் முடியும் வரை பொறுங்கள்....மோடி குஜராத்தில் வீணாகும் மின்சாரத்தை இலவசமாக தமிழ் நாட்டுக்கு திருப்புவார்...

      Delete
    5. I liked the Anony Comments.
      Super.

      Delete
  3. //இறைவன் என்று ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கான விடையை அறிவியல் கூட இன்னமும் கூறா விட்டாலும், தாங்களாகவே "கடவுள் இல்லை" என்று முந்திரி கொட்டையாக நாத்தீகர்கள் .......!!//

    "முதலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்."

    கற்றது கைமண் அளவுதான். இந்த சிறிய அறிவை வைத்துக்கொண்டு முந்திரிகொட்டை ஆத்திகர்கள் இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

    இன்னும் கல்லாத உலக அறிவையும் கற்றுக்கொண்ட பின்னர் கடவுளைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவும்.

    எங்க தலைவர் (வவ்வால்) இப்போது பின்னால் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பின் நான் ஆரம்பிக்கிறேன். இது முன்னுரை மட்டும் தான்.

    ReplyDelete
    Replies
    1. போயும் போயும் ஒரு "வால்" -ஐ தலையை நீர் ஏற்றுக் கொண்டது உமது துரதிர்ஷ்டம். என்கிட்ட வாதம் பண்ண வர்றீங்க, ஏதாவது ஒரு நிலைப்பாட்டை தெளிவா எடுத்துகிட்டு வாங்க. எனக்கு சனாதன வழியில் நம்பிக்கை இருக்கிறது, அதனடிப்படையில் எழுதிகிறேன். இதை இரண்டு விதமாக மறுக்கலாம், ஒன்று எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஆகையால் ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது என்னுடைய நூல்கள் சொல்வது வேறு நான் சொல்வது வேறு என்று ஆதாரப் பூர்வமாக நிறுவி என் தவறைச் சுட்டிக் காட்டலாம். ஒரு கேம் ஆடி உன்னைத் தொர்க்கடிக்கிறேன் என்று வந்த பிறகு அதனுடைய rules & regulations களையும் பின்பற்ற வேண்டும், அல்லது அந்த கேமே எனக்குத் தேவையில்லை என்று சொல்லி விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும். நீரும் உமது வாலும் இதுவுமில்லை, அதுவுமில்லை என்ற ரெண்டுங்கெட்டன் நிலையிலேயே இருப்பது ஏன்?

      நான் இங்கே சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் எங்கே இருந்து அதை எடுத்தேன் என்ற மூலத்தையும் வைத்தே எனது வாதங்களை வைக்கிறேன், ஆனால் உங்கள் பதில் வாதங்களை அவ்வாறு ஒரு போதாவது வைத்திருக்கிறீர்களா? உமது தலையின் உளறல் ஒவ்வொன்றிலும் அதன் அறியாமையும் முட்டாள் தனமும் தான் பல்லிளிக்கிறது.

      நீயா நானா பார்த்துவிடுவோம் என்றால் நான் ரெடி, ஆனால் எனக்கு எதிரியாக இருப்பவனுக்கும் சில தகுதிகள் இருக்க வேண்டும். வடிகட்டிய முட்டாள்கள், விஷயம் தெரியாதவர்களிடம் நான் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. குறைந்தபட்சம் உண்மை என்று தெரிந்த பின்னராவது ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும், அதுகூட இல்லாத வீம்பு பிடித்தவர்களிடம் எனக்கென்ன வேலை.

      நான் பதில் சொல்லத் தெரியாமல் ஏதோ மலுப்புகிறேன் என்று நீர் தம்பட்டம் அடிக்கக் கூடும். உமது சந்தேகத்தைப் போக்குவது எனது கடமை. உமது தலை கேட்ட கேள்விகள் அறியாமை+முட்டாள் தனத்தின் உச்சகட்டம் என்பது கண்கூடு.

      இவரது சவால் சில:

      \\# விலங்குகளுக்கு கர்மா இல்லை,சொர்கம்,நரகம் இல்லைனு சொன்ன மனுசனுக்கு, கஜேந்திரனுக்கு மோட்சம் எப்படி நாராயணன் கொடுத்தார்னு தெரியாம போச்சே :-))\\

      எந்த விதிக்கும் விதி விளக்குகள் உண்டு. கடவுள் சட்டம் இயற்றுபவன், அதை உடைக்க அனைத்து உரிமையும் அவனுக்கு உண்டு. அவன் சர்வாதிகாரி. வீடுபேறு பெறுவதற்கு விலங்கு உடம்பே போதும் என்றால் பகவத் கீதையை எதற்கு ஒரு அர்ஜுனன் என்ற மனிதனுக்கு போதித்தார், ஏன் ஒரு யானைக்குப் போதிக்க வில்லை? யோசிக்க வேண்டாமா? சும்மா கூறுகெட்ட கேள்வியையா கேட்பது?

      இந்த மெய்ஞானியின் அடுத்த ஒரு கண்டுபிடிப்பு, பிராமணர்கள் பிரம்மா ஆவதற்கு முயற்சிக்கிறார்களாம். அட கூமுட்டையே அது தாமரை மேல் உட்கார்ந்திருக்கும் பிரம்மன் இல்லை, அது பிரம்மம். பிரம்மா வேறு, பிரம்மம் வேறு. அமரிக்காவில் வெளியாகும் Times பத்திரிகைக்குப் பதில் நம்மூர் Times of India போட்டு காங்கிரஸ் காரன் எரிச்ச கதையை விட கேவலமான கதையா இல்ல இருக்கு??

      அட விஷயம் தான் தெரியலை, எடுத்துச் சொன்னாவாவது ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இருக்கா? அதுவும் இல்லை. தப்பு என்று தெரிந்த பின்னரும் வெட்கமே இல்லாமல் நான் சொன்னாதே சரி என்று நூறு காமன்டுகள் போட்டு தான் வீரன் என்று தாமாகவே தம்பட்டம் அடித்துக் கொண்டு தன் முதுகில் தட்டிக் கொள்வது. எதற்கு இந்த மானங்கெட்ட பிழைப்பு?

      இப்படி அடிப்படையே தெரியாமல் இங்கே வந்து என் நேரத்தை வீணடிக்க வேண்டாம். போய் வாருங்கள் அன்பர்களே..............

      Delete
  4. பாவம் கடவுள் என்ற சொல்.

    ReplyDelete
    Replies
    1. @இறைகற்பனைஇலான்

      தங்களது முதல் வருகைக்கு நன்றி சார். பாவ புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு போலிருக்கிறதே!! உங்கள் கருத்து இன்னதுதான் என்று தர்க்க ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ எதையும் சொல்லாமல் வெறுமனே பாவம் புண்ணியம் என்று கணக்கு போட்டால் அது உங்கள் கற்பனையாகவே இருக்கும். அதற்க்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை. Anyway, தொடர்ந்து வாங்க, நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் ஒவ்வொன்றாக இங்கே பிளக்கப் படும் பார்த்து திருந்துங்கள். நன்றி.

      Delete
    2. முதல்ல தன்னுடைய (ஆத்திகர்களின்) முட்டாள் தனங்களையே பிளக்கக்காணோம். இதில் வேறு நாத்திகர்களின் முட்டாள்தனங்களை பிளக்கப்போகிராராம்...
      ஹி..ஹி.. ஹி..

      Delete
  5. அருமையான பதில்கள். மின்சாரத்தைப் போல் கண்ணுக்குத் தெரியாதவர் கடவுள். மின்சாரம் இருப்பதை நம்மால் உணரத் தான் முடியும். தொட்டால் ஷாக் அடிக்கும். அதே போல் கடவுள் இருப்பதை நம்மால் உணரத் தான் முடியும். ஒவ்வொருவரும் நேரில் பார்க்கிறதுனு ஆரம்பிச்சால் எல்லாருக்கும் ஷாக் தான் அடிக்கும். :))))))

    ReplyDelete
  6. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் தான்! இதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்!

    ReplyDelete
  7. சொல்லப்பட்டுள்ள பதில்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம்.

      Thank You ..........

      Delete
  8. //அதே போல் கடவுள் இருப்பதை நம்மால் உணரத் தான் முடியும். //

    கீதா சம்பாசிவம்,
    நீங்கள் முதன் முதலில் கடவுளை எப்போது உணர்ந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
    முதன் முதலில் உணர்ந்தபோது எவ்வாறு இருந்தது?

    ReplyDelete
    Replies
    1. பிறரின் உணர்வைச் சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது. அவரவர் தானாகவே உணர வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன்; உணர்ந்தேன், இனி இருக்கும்வரையிலும் உணர்வேன். அவ்வளவே! :))) புரிதலுக்கு நன்றி.

      Delete
    2. உணர்வைச் சொல்லி எல்லாம் புரிய வைக்க வேண்டாம்.

      நீங்கள் முதன் முதலில் கடவுளை எப்போது உணர்ந்தீர்கள் என்று சொன்னால் போதும்

      Delete
    3. @ Geetha Sambasivam

      தங்களது முதல் வருகைக்கு நன்றி...............

      Delete
  9. வேற்றுகிரகவாசி,

    //எங்க தலைவர் (வவ்வால்) இப்போது பின்னால் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பின் நான் ஆரம்பிக்கிறேன். இது முன்னுரை மட்டும் தான்.//

    என்ன ஒரு வில்லத்தனம் அவ்வ்!

    செத்த தண்ணிப்பாம்ப அடிக்க என்னை கூப்பிடுறீரே ,விளங்குமா?

    # கடவுளும்,கரண்டும் ஒன்னு உணர முடியும் பார்க்க முடியாதுனு சொல்வாங்க,, கரண்டை கண்டுப்பிடிச்சது மனுசன்,அப்போ கடவுளையும் மனுசன் தானே கண்டுப்பிடிச்சான்னு சொல்லிப்பாரும் , நம்மளை கன்னாப்பின்னானு திட்ட ஆரம்ப்பிச்சுடுவாங்க, ஆன்மீகவாதிகளின் "லட்சணம்" அம்புட்டு தான் :-))

    # ஏ.சி. அல்லது டிசி கரண்டை ஆசிலாஸ்கோப்பில உள்ளீடு செய்து , ஹால்ப் வேவ்,ஃபுல் வேவ்னு படிக்கிறச்சொல்லோ காட்டினாங்க, அதே போல கடவுளை ஆசிலாஸ்கோப்பில கனெக்ட் பண்ணா தெரியுமா?

    ஹி..ஹி கடவுள் தான் கரண்டு என சொன்னால், அவர் அலையா இல்லை துகளா ,அல்லது இரு வடிவிலும் இருப்பாரா என டி ஃபிராக்ளி தத்துவம் வச்சோ இல்லைனா குவாண்டம் மெக்கானிக்ஸ் வச்சு எங்கும் இருப்பாரானு ஒரு ஆய்வு செய்து பார்த்துடலாம் :-))
    ---------------------

    கிரகம்,

    ஆன்மீக புத்தகமெல்லாம் படிக்காம ஏதோ ஒரு சாமினு கும்பிடுறான் பாரு அவனை நம்பலாம்,

    எல்லா ஆன்மீக சித்தாந்தம்,வேதாந்தம் எனப்படிச்சுட்டு ,ஒரு சாமிய கும்பிடுறான் பாரு அவனையும் நம்பலாம்,

    ஆனால் ஏதொ ஒரு புக்கில நாலு பக்கம் மட்டும் படிச்சிட்டு , ஆன்மிகம்னா இதான் , சாமினா இதான்னு கதை சொல்லுறான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது அவ்வ்!

    # விலங்குகளுக்கு கர்மா இல்லை,சொர்கம்,நரகம் இல்லைனு சொன்ன மனுசனுக்கு, கஜேந்திரனுக்கு மோட்சம் எப்படி நாராயணன் கொடுத்தார்னு தெரியாம போச்சே :-))

    "ஆன்மீகம் அபத்தமானது ,அரைகுறை ஆன்மீகம் ஆபத்தானது"
    - வவ்வால் திருமொழி-2014-V.1.1

    ReplyDelete
    Replies
    1. //"ஆன்மீகம் அபத்தமானது ,அரைகுறை ஆன்மீகம் ஆபத்தானது"
      - வவ்வால் திருமொழி-2014-V.1.1//

      வாங்க தல...வாங்க...நல்ல நேரத்தில வந்தீங்க.
      இனிமே தாஸ் போடுற ஒவ்வொரு பதிவிற்கும் ஒவ்வொரு திருமொழி தான் போல..... மொத்தமா சேர்த்து compile பண்ணி ஒரு Anti-Spiritual (ஆன்மிகம்) book வெளியிட்டுரலாம்.

      பாவம் தாஸ்...கஷ்டப்பட்டு ஒரு பதிவ போட்டு ஆன்மீகத்த ஒரு சான் உயர்த்தினால், வவ்வால் வந்து comment போட்டு ஒரு அடி கீழே இறக்கி விட்டிட்டு போய்டுராறு. ஹி....ஹி....ஹி....
      நமக்கு தாஸ் தான் பலமே...அவ்வ்....

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. எடுத்து உடுங்கப்பா. ஆர்வமா இருக்கோம். இன்னது கடவுளும் மின்சாரம் ஒன்னா? மின்சார இயக்கத்தை அலசி ஆராய முடியும், எலக்றான் ஓட்டங்களால். கடவுள் இயக்கத்தை மூளைக்கு வெளியே காணக்கூட இயலாது.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. வவ்வால்,
    வக்கீல் வண்டுமுருகன் (வடிவேலு), மீனுக்கும் ஜாமீனுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் போய் ஜாமீன் வாங்கிட்டு வரச்சொல்லுவாறே!! அந்த மாதிரி நம் நிலைமை ஆகிவிட்டதே.
    நாம், தாசுக்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கும் என்று நினைத்து தெரியாமல் கேள்வி கேட்டுவிட்டோம். இப்போது தான் தெரிகிறது, அவருக்கு கேள்வியே என்னவென்று புரியவில்லை. அதனால் கேள்வி கேட்டவர்களை வடிகட்டிய முட்டாள்கள் என்கிறார்.
    தீவிர ஆன்மீகவாதியாகிய தாசின் பொன்மொழிகள் சில....

    "......உமது தலையின் உளறல்......"
    "......முட்டாள் தனமும் தான் பல்லிளிக்கிறது...."
    "......கேள்விகள் அறியாமை+முட்டாள் தனத்தின் உச்சகட்டம் என்பது கண்கூடு........."
    ".........அட கூமுட்டையே ............"
    "..........எதற்கு இந்த மானங்கெட்ட பிழைப்பு..........."

    தமிழ் பதிவுலகில் ஒரு ஆன்மீகவாதி இவ்வளவு கேவலமா பேச முடியும் என்றால் அது நம் தாஸ் மட்டும் தான்.
    இவரது பையனுக்கு தமிழ் படிக்க தெரிந்தால் இவரைப் பார்த்து காரித் துப்புவான் (மனதிற்குள்).

    ReplyDelete
    Replies
    1. வேற்றுகிரகவாசி,

      இதெல்லாம் இப்போ தானா? எப்பவுமே பாகவதர் இப்படித்தான், அவரால் பதில் சொல்ல முடியாத நிலை ,தவறு அப்பட்டமாக தெரிந்து மாட்டிக்கொண்டால் , இப்படி வசை பொழிவார் :-))

      # முந்தைய பதிவில் "விலங்குகளுக்கு" கர்மாவே இல்லைனு ஒரே அடியாக அடித்தார் , கஜேந்திர மோட்சம்" எல்லாம் சொன்னதும் பதிலே சொல்லாமல் "வாயை மூடிக்கொண்டார்" ,

      இப்ப விடாமல் கேட்கவும் எரிச்சலாகி "அதெல்லாம் விதி விலக்கு" என்கிறார், விதி விலக்கு இருக்கென அவருக்கு நான் சொல்லும் வரையில் தெரியாது போலும் :-))

      நியாஸ்தராக இருந்தால் முந்தைய பதிவில் அவரே "விதி விலக்கை" சுட்டி எழுதி இருக்க வேண்டும் ,ஆனால் அறியாமையால் அவ்வாறு செய்யவில்லை, நாம சொன்னதும் " திருட்டு முழி" முழிச்சார் :-))

      # //பிராமணர்கள் பிரம்மா ஆவதற்கு முயற்சிக்கிறார்களாம். அட கூமுட்டையே அது தாமரை மேல் உட்கார்ந்திருக்கும் பிரம்மன் இல்லை, அது பிரம்மம். பிரம்மா வேறு, பிரம்மம் வேறு//

      ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!

      நான் பிரம்மனை அடைய என சொன்னதை லாவகமாக பிரம்மா ஆக முயல்கிறார்கள் என சொன்னதாக திரிச்சு சொல்லி அவரை மேதாவியாக்கிக்கொள்ள பார்க்கிறார்,ஏன் இந்த பித்தலாட்டம்.

      பிரம்மனை அடைதல் - பிரம்ம நிலை ,என சொல்லலாம்,ஆனால் பிரம்மா ஆக என நான் எங்கே சொன்னேன் கூமுட்டை பாகவதரே?

      பிரம்மனை அடைய ,பிரம்மனை தேடுபவர்கள் பிராமணர்கள் என தான் சொல்லி இருக்கிறேன்.

      த்வைதம்,அத்வைதம், விசிஷ்ட்டாத்வைதம் என்ன சொல்லுதுனு கொஞ்சம் படிச்சு பாரும் பிள்ளாய்!

      அதில் உள்ள வேறுபாடுகளே , மத சச்சரவுகளாயிற்று.

      #//தமிழ் பதிவுலகில் ஒரு ஆன்மீகவாதி இவ்வளவு கேவலமா பேச முடியும் என்றால் அது நம் தாஸ் மட்டும் தான்.//

      ஆன்மிகவாதி கேவலமாக பேச மாட்டான் ,ஆனால் போலி ஆன்மீகவேடதாரி எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசுவான் ,பாகவதர் ஒரு போலி வேடதாரி!

      Delete
    2. @ Alien

      ஒரு விஷயத்தை நீர் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒன்றும் மகான் இல்லை. உம்மையும் உமது "வால் " போலவும் சாக்கடையாக இருந்தவன் தான். என்ன நான் வெளியில் வர முயற்சிக்கிறேன் அவ்வளவுதான். நீர் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் உமது தலையைப் போன்ற மூன்றாம் தர ஆட்களை இதை விட நாகரீகமாக என்னால் டீல் செய்ய இயலாது.

      வெளிநாட்டுக் காரை இந்தியாவுக்குள் கொண்டுவர வரி செலுத்த வேண்டும், இது தான் இந்திய சட்டம். ஆனால் சச்சின் கொண்டு வந்த காருக்கு சில கோடி ரூபாய் வரிவிலக்கு கொடுக்கப் பட்டது. எனவே இனி எல்லோரும் எந்த வரியும் செலுத்தாமலேயே எதை வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் கொண்டுவரலாம் என்று அர்த்தமாகுமா?

      மிருகங்களும் வீடு பேரு பெறலாம் என்றால், மஹாபாரத்ததில்

      ahara nidra bhaya maithunam ca
      samanyam etat pasubhir naranam
      dharmo hi tesam adhika viseso
      dharmena hinah pasubhih samana
      மனிதனாகப் பிறந்தும் இறைவனை அடையும் வழியைப் பின்பற்றாதவர்கள் மிருகங்களுக்குச் சமம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறதே? ஏன்? சாதாரண புத்தகமல்ல அன்பர்களே, இது சாஸ்திரம். தனித் தனியாக பிரித்து அர்த்தம் பார்ப்பது குருடர்கள் யானையைப் பார்த்த கதைதான்.

      இன்றைக்கு எல்லோருக்கும் எது பொருந்தும், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமேயன்றி விதிவிலக்காக, எல்லோருக்கும் பொருந்தாத ஒன்றை பற்றி நான் பெரிது படுத்தத் தேவையில்லை. அப்படி எழுதிக் கொண்டே போனால் வியாச தேவர் எழுதிய மொத்தத்தையும் எழுத வேண்டி இருக்கும். அதற்க்கு நமக்கு நேரமோ, ஞானமோ இல்லை.

      நூற்றுக் கணக்கான ஆன்மீக நூல்கள் தமிழில் உள்ளன, பிரம்மம் என்று தான் இறைவனின் impersonal feature-ஐ குறிப்பிடுகிறார்கள், தமிழில் பிரம்மன் என்றால் படைப்புக் கடவுளையே குறிக்கும்.

      மற்றபடி கடவுள் இல்லை என்று சொல்லும் பயல்கள் உங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள், நான் போலி என்பதால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஆகி விட மாட்டீர்கள்.

      Delete
    3. பாகவதரே,

      //உமது தலையைப் போன்ற மூன்றாம் தர ஆட்களை இதை விட நாகரீகமாக என்னால் டீல் செய்ய இயலாது. //

      நான் என்ன தரமோ இருந்துட்டு போறேன்,ஆனால் நீர் எப்பவும் என்னை விட மேலான தரத்துல இருக்கவே முடியாது , அதை நினைச்சும் பார்க்க முடியாத "கழிசடை"தரமாகவே இருப்பீர் ,அதான் உமக்கு விதிக்கப்பட்டது என "பெருமால்" சொன்னதாக நினைத்துக்கொள்ளும் :-))

      எனக்கு என்ன தரம் கொடுத்தாலும் ஓகே ,ஆனால் அதுக்கு கீழ தான் உமக்கான தரம் இருக்கும் :-))

      #//மனிதனாகப் பிறந்தும் இறைவனை அடையும் வழியைப் பின்பற்றாதவர்கள் மிருகங்களுக்குச் சமம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறதே? ஏன்? //

      இந்த ஏனை நல்லா இன்னொருக்கா கேட்டுக்கிடும், அப்புறம் எதுக்கு "மிருகமான" பசுவின் மூத்திரத்தை பிடிச்சு தீர்த்தம்னு குடிக்கிறீர், அதன் மலமான சாணியை எடுத்து பிள்ளையார் புடிச்சு வச்சு "பூஜிக்கிறீர்"?

      கர்மா இல்லாத, சொர்க்கம்,நரகம் செல்லவியலாத பசுவுக்கு எங்கிருந்து "புனிதம்" வந்தது?

      பசுவுக்கு புனிதம் இருக்குனா, அது ஏன் சொர்க்கம் போகாது/

      அட தேவலோகத்துலவே " காமதேனு" என பசு இருக்கு, ஐராவதம்னு யானை இருக்கு, ஏன் வைகுந்தம்ல ஆதிசேஷன்னு பாம்பு இருக்கு ,கருடன் தான் வாகனம், அப்போ அவங்க வாரிசுங்களான ,பாம்பு,கருடன்,பசு, யானைக்கு எல்லாம் மோட்சம் கொடுக்க கூடாதா?

      இல்லை தச அவதாரம் எடுத்த நாராயணன் ஏன் பன்றியாக வரனும்? பன்றியை புனிதம் என நினைத்து விட்டையை எடுத்து பூஜிக்க வேண்டாமா? அதன் மூத்திரத்தை குடிக்க வேண்டாமா?, நாராயண பக்தகேடிகளே , நாராயணனின் அவதாரம் பன்றியை கேவலப்படுத்தலமா?

      மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம்னு "கர்மா இல்லாத" வடிவங்களில் ஏன் பெருமால் வந்தார்?

      பெருமால் பக்தகேடிகள் வீட்டுக்கு ஒரு பன்றி, ஆமை,மீன் வளர்க்க வேண்டாமா? அதை எல்லாம் செய்யாமல் நாத்திகம் பேசிக்கிட்டு இருக்கீரே அவ்வ்!

      Delete
    4. //இன்றைக்கு எல்லோருக்கும் எது பொருந்தும், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமேயன்றி விதிவிலக்காக, எல்லோருக்கும் பொருந்தாத ஒன்றை பற்றி நான் பெரிது படுத்தத் தேவையில்லை. //

      பாயிண்டு ...பாயிண்டு ,இதை நான் அப்படியே வழி மொழிகிறேன் , இந்தியாவில சுமார் 80% மக்கள் மாமிச உணவை சாப்பிடுறாங்களாம், எனவே எல்லாருக்கும் எது பொருந்துதோ ,என்ன சாப்பிடுறாங்களோ அதையே பின்ப்பற்றவும் :-))

      விதிவிலக்கா ரொம்ப கொஞ்சம் பேரு சாப்பிடுற "ஊசிப்போன" சாம்ப்பார் எதுக்கு?

      Delete
  14. உங்கள் பதிவுகள், வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் பல புதிய செய்திகளைத் தருகின்றன. வியூகத்தின் மேல் வியூகங்கள் உங்கள் மீது விழுந்தாலும் பதில் சொல்ல நீங்கள் தயங்குவதில்லை. இந்த பொறுமை யாருக்கும் வராது. நன்றி!

    ReplyDelete
  15. அத்தனை தாக்குதல்களையும் திறமையாக சமாளிப்பவர் நீங்கள் ஒருவரே!

    ReplyDelete