Friday, November 13, 2015

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்- விஷால் முடிவு சரியா?

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது - விஷால்.

முதல் முறையாக சினிமாக் காரர் ஒருத்தர் தெளிவா பேசியிருக்கார்!!  இதைப் பார்த்துவிட்டு அவரை தமிழன் மேல் அக்கறையில்லாத தெலுங்கன் என்று சிலர் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள் போராட்டத்தால் எதாவது பலன் இருக்கிறதா எனக் கேட்டால், "அந்த ஆட்டோ கண்ணாடிய திருப்பினா இந்த ஆட்டோ எப்படி ஓடும்?" என்ற கதை தான்.  

இலங்கை பிரச்சினையை இந்திய-இலங்கை அரசுகள் ராஜீய ரீதியாகவும், காவிரிப் பிரச்சினை தமிழக-கர்நாடக அரசுகளால் சட்ட ரீதியாகவும் தீர்க்கப் பட வேண்டியவையாகும்.  பின்னர் நடிகர் சங்கம் ஏன் போராடுகிறது?  " இத்தனை பிரச்சினைகள் வெட்டு குத்துன்னு நடக்குது இவனுங்க சினிமா எடுக்கிறதிலேயே குறியா இருக்கானுங்களே, எதையாச்சும் கண்டுகிறானுங்களா?" என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றக் கூடும், அந்த மாதிரி கொதிக்கும் மன நிலையில் மக்கள் இருந்தால் அது இவர்களது படங்களின் வசூலைப் பாதிக்கும். அதை சமாதானம் செய்யவே நடிகர்களின் அறப் போராட்டம், அதாவது எந்த விளைவும் இல்லாத போராட்டம்!!  
இவர்கள் போராட்டங்கள் எதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு போதும் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சாராயக் கடையை எதிர்த்து இவர்கள் ஒரு போதும் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள்.  தற்போது அரசே தாமிரபரணி ஆற்று நீரை பெப்சிக்கு 100 வருடத்துக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செய்தி பற்றி இவர்களுக்கு தெரியவே தெரியாது.  மாநிலம் முழுவது நடந்து வரும் ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை பற்றி மூச்.  அவ்வளவு ஏன் முல்லை பெரியார் அணை விஷயத்தில் கூட நடிகர்கள் ஒருத்தரும் வாயையே திறக்கவில்லை, காரணம் அவர்கள் படம் கேரளத்தில் கணிசமான தொகையை வசூலிக்கிறது, அவர்களுக்கெதிராக எதையாது பேசினால் அது பாதிப்புக்குள்ளாகும், அதனால் ஒருத்தனும் வாயைத் திறக்கவே மாட்டான்.

சரி நடிகர்கள் போராட்டத்தால் பிரயோஜனம் தான் இல்லை, அது  பிரச்சினைகளையாவது கிளப்பாமல் இருக்க வேண்டுமல்லவா?  அதுவும் இல்லை.  காவிரிப் பிரச்சினைக்கு இவர்கள் கூட்டம் போட்டு கன்னாபின்னாவென்று கோபத்தில் பேச அவை தொலைக் காட்சியிலும் செய்தித் தாட்களிலும் வெளிவர, அது ஒரு மானப் பிரச்சினையாகி, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விட்டாலும் அடுத்த தேர்தலில் ஆட்சி போய்விடும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளி விடப் பட, பிரச்சினை தீர்க்கவே முடியாது என்ற கட்டத்திற்குப் போய் விட்டது தான் இவர்கள் போராட்டத்தால் நாம் கண்ட பலன்.

எனவே இந்த மாதிரி தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவது இவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  அத்தகைய முடிவை விஷால் எடுத்திருக்கிறார், அதை வரவேற்போம்.

10 comments :

 1. உண்மைதான் நண்பரே இவர்களால் மக்களுக்கு இதுவரை என்ன நல்ல காரியம் நடந்து விட்டது சரியாக சொன்னீர்கள்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. விஷால் சொல்வது சரிதான்!

  ReplyDelete
 4. உங்கள் கடைசிப் பத்தியை அப்படியே ஆமோதிக்கிறேன்.

  அதென்ன, மேலும் கீழும் இரண்டுமுறை தம வசக்குப் பட்டை? ஆனால் வாக்கு ஒருமுறைதான் விழுகிறது! ஹிஹிஹி....

  ReplyDelete
  Replies
  1. இந்த கோவில்களில் பாருங்க, நாலஞ்சு இடத்துல உண்டியலை வச்சிருப்பாங்க. திரும்ப திரும்ப ஞாபகமூட்டினா ஒரு முறையாவது மனசு வந்து ஒட்டு போட்டுட மாட்டாங்களா என்ற நப்பாசை தான்!!

   Delete
 5. மாப்ளே நலமா?
  நல்ல பதிவு.
  இங்குதான் இருக்கீரா?.
  கூத்தாடிகளை இரசிக்கலாம், அதுக்கு மேலே அவங்களைக் கண்டுக்க கூடாது.ஆனாலும் தமிழனுக்கு கூத்தாடிகளைக் கும்பிடுவதில் உள்ள ஆர்வமே அலாதி!!!

  நன்றி!!!

  ReplyDelete
 6. மாப்பு,
  த.ம் 5 .இன்ட்லியை தூக்கிவிடும், தளம் , பார்க்க நேரம் ஆகிறது.

  நன்றி!!!

  ReplyDelete
 7. @ சார்வாகன்
  வாங்க மாமூல் மாமு!!

  \\இங்குதான் இருக்கீரா?\\ இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?

  ஏதோ நீங்க வாரம் நாலு பதிவு போட்ட மாதிரியும், நான் ரெண்டு வருஷமா காணாம போயிட்ட மாதிரியும் இருக்கே!! என்ன காரணத்துக்காக நீங்க தொலைஞ்சு போனீங்கன்னு நான் கேக்க மாட்டேன், அது உங்க சுதந்திரம், ஆனாலும் நீங்க இல்லாத வெறுமையை நான் ஃ பீல் பண்ணினேன் என்பதை மட்டும் இங்கே தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அவ்வப்போது தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் இருக்கிறது.

  \\.இன்ட்லியை தூக்கிவிடும், தளம் , பார்க்க நேரம் ஆகிறது.\\ தூக்கிட்டேன் மாமு, இட்லி......... சாரி.... இன்டலி மட்டுமில்ல வேறு சில கேட்கெட்ஜ்ஸ்களையும் சேர்த்து குப்பையில போட்டுட்டேன், இது மாதிரி அறிவுரை சொல்ல மாமு வேணுமில்ல, சொன்னா நாமும் கேட்டுகனுமில்ல!! வருகைக்கு தேங்க்ஸ் மாமு, அப்பப்போ நம்மையும் கண்டுக்குங்க, நன்றி.

  ReplyDelete
 8. தற்போதுள்ள சினிமாக்காரர்கள் போராட்டங்கள் நடத்தியதில் கிடைத்த ஒரே பலன் சீமான் என்ற சினிமாக்காரர் அரசியலில் இறங்கி முஷ்டி உயர்த்திக்கொண்டிருப்பதுதான்.

  ReplyDelete
  Replies
  1. முஷ்டி உயர்த்தினாலும் முஷ்டி புஷ்டியாக இல்லையே!

   Delete