Saturday, April 11, 2015

உண்ட கட்டி வாங்கி தின்ன- வேணும் ஆதார்கார்ட்!!

நல்லாக் கேட்டுக்குங்க,

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

அப்புறம்?

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

சரி, அப்புறம்?

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓ அப்புறம்?

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
அதுவும் சரிதான், அப்புறம்?

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓஓஓஓஓ அப்புறம்?

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

ஐயையோ அப்புறம்?

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க, அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவி!,


ஹோ........... ஆஹாஹாஹாஹாஹா!


4 comments:

  1. ஆஹா நல்லவே விளக்கம் கொடுதிதீர்கள் நண்பரே நாளைக்காலையில் முதல் வேலை அதுதான் நன்றி.

    ReplyDelete
  2. அரசியல்வாதிங்க கொள்ளை அடிக்கிறதை குறைத்துக் கொள்ளப் போவதில்லை ,நடுத்தர வர்க்கத்தின் கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் வரிப் பிடித்தம் செய்து ,உண்ட கட்டிக்கு அலைய விடத்தான் போகிறார்கள் :)

    ReplyDelete
  3. நல்லா லிங்க் கொடுக்கிறாங்கப்பா?

    ReplyDelete
  4. இப்படித்தான் நடக்கும் போல...!

    ReplyDelete