Saturday, November 1, 2014

கத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ

கத்தி படம் வெளிவருமா வராதா என்று மாதக்கணக்கில் ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு அதன் மூலமே படத்தின் பெயர் பிரபலமாகிவிட்டிருந்தது.  இறுதியில் மம்மிக்கு தொலைகாட்சி உரிமை கொடுக்கப் பட்டதால் படம் வெளியாகும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டும் அடுத்த நாளே படம் ரிலீசும் ஆனது.  ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு தலைவலி தான் தீர்ந்தபாடில்லை!!  படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.  இவரை கதாரிசியராகப் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதாகக் கோர்ட்டு படி ஏறியிருக்கிறார்.   கதைக்கு சன்மானமாக ஏதாவது கொடுத்தாரா என்றால், "இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார்.  அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார்." என்று வேதனையோடு வெதும்புகிறார்.

மீஞ்சூர் கோபி

கதை இவருடையது என்றால் காட்சிகளை வேறு ஆங்கிலப் படங்களில் இருந்து முருகதாஸ் களவாடியிருப்பதாக இணையங்களில் தகவல்கள் உலவுகின்றன.

காட்சிக்கு காட்சி அடிசிருக்காருய்யா..........!!




ஆத்தீ .........பாடல்.


இது மட்டுமல்ல, படத்தில் மின் விளக்கை ஆன் செய்தும், ஆ ஃப் செய்தும் வில்லன்களைப் பந்தாடும் காட்சியும் அப்பட்டமான காப்பியம்.



முருகதாஸுக்கு இந்த வேலைகள் புதிதல்ல.  ஆனால், கதையின் உரிமையாளர் கோபிக்கு தரவேண்டிய இடத்தை கொடுத்திருந்தால் அது வாழ்வில் அவருக்கு ஒரு திருப்பு முனையாகக் கூட இருந்திருக்கும்.  கீழ்க் கோர்டில் வழக்கை சரியாக எடுத்துரைக்கத படியால் தள்ளுபடியாகி தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  இதுபோன்ற வழக்குகள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கும், பத்து வருடங்கள் கூட ஆகலாம், இறுதியில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வரக்கூடும்.  மலையைத் தோண்டி எலியைப் பிடித்த கதைதான், போட்ட முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்காது.  எனினும், எனக்கு பணம் இரண்டாம் பட்சம் கதை என்னுடையது தான் பெயர் கிடைத்திருந்தால் அதுவே போதும் என்கிறார்.

தங்கள் கதை களவாடப் பட்டு இந்தியா போன்ற நாடுகளில் படமாவது குறித்து வெள்ளைக்கார பயலுவ ஒருபோதும் கவலைப் பட மாட்டானுங்க, பலமுறை அது தெரியாமல் கூட போகலாம்.  ஆனா நம்மூரில் உள்ள ஒரு அறிமுக படைப்பாளிக்கு அது பெரும் மனவலியாக இருக்கிறது.  முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ தெரியவில்லை.................


மீஞ்சூர் கோபி என்பவர்

4 comments:

  1. பாவம் மீஞ்சூர் கோபி!

    ReplyDelete
  2. வெறும் சினிமாப் பக்கம் மட்டுமே உங்க கவனம் போயிருச்சி போலருக்கே.

    ReplyDelete
  3. நாலு இட்லி ஒரு டீ கொடுத்து எடுத்த கதை, ஒரிஜினல் ஆங்கிலபட காட்சிகள், இசை.
    கில்லாடிங்கள் தான்.

    ReplyDelete
  4. ரொம்ப நாள் கழிச்சி கத்தி எடுத்திருக்கீங்க!
    மீஞ்சூர் கோபிகளின் நிலை பரிதாபம்தான்

    ReplyDelete