Thursday, September 25, 2014

ஐ.நா. ராஜபக்சே பேச, கருப்புக்கொடி- கண்ணாடிய திருப்பினா எப்படிடா வண்டி ஓடும்?

Muthuramalingam Subramanian feeling confused
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
இதுல என்ன லாஜிக் இருக்குன்னே தெரியலை. இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? எதுக்காக இப்படி பண்ணனும்..? இதனால் ராஜபக்சேவுக்கு என்னவிதமான நெருக்குதலை ஏற்படுத்தும்..?? யார் என்ன கலர் சட்டை போட்டு இருக்காங்கன்னு கணக்கெடுத்தா ஐநாவுல பேசவைப்பாங்க..?உண்மையிலேயே தெரியாம கேக்குறேன்.


ஆட்டோ ஓடாததற்கு காரணம் கண்ணாடியை திருப்பி வச்சிருந்தது தான்.  அதை சரியா வச்சதும் பாருங்க பிரச்சினையில்லாம ஓடும்.







7 comments:

  1. ஐநா சபையில் ராஜபக்சே பேசும் விசயமே கறுப்புக் கோடி கண்டனத்தால் தான் பலருக்கும் தெரிய வந்தது ,இதுவே ராஜபக்சேவுக்கு நல்ல விளம்பரம்தான் !
    த ம 2

    ReplyDelete
  2. நண்பா இந்தசெயல்கள் எல்லாம் எதற்க்கு ஐ.நா. சபைக்கு தெரியவா ? இல்லை தமிழன் 4 பேர் பேசணும் இப்ப ஜெயதேவ் பதிவைப்போட்டு கில்லர்ஜி கருத்துரை போட, இதை 2 பேர் படிப்பாங்க இல்லையா ? ஆகமொத்தம் கணக்கு 4 பேர் வந்துருச்சா ? இதான் நண்பா தமிழக அரசியல்.

    ReplyDelete
  3. //உண்மையிலேயே தெரியாம கேக்குறேன்.//

    தெரியாம இருக்குறதுனாலதான் நீங்க ஆபீஸ்ல குப்பை கொட்டும் அப்பர் மிடில் கிளாஸா இருக்குறீங்க. தெரிஞ்சதுனாலதான் அவரு பில்லியன் கணக்குல தேத்தி எங்கியோ போயிட்டாரு!!!

    ReplyDelete
  4. அரசியல் செய்யறாங்களாம்பா!

    ReplyDelete
  5. மக்களை ஏமாற்றும் பக்கா அயோக்கியத்தனம்.

    ReplyDelete
  6. இவங்க அட்டகாசம் தாங்க முடியல்லைங்க.
    //இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? //
    ஓபாமாவும் அவர் மனைவியும் ராஜபக்சேக்கு விருந்தும் கொடுத்து சேர்ந்து நின்று படம் எடுத்து கவுரவிச்சாங்க.

    ReplyDelete
  7. எனக்கு ஒரு குழப்பம்..மேலே இருக்கற முத்துராமலிங்கம் அண்ணாச்சி ஆரு..எதுக்கு இப்பிடி முறைக்கிறாரு....

    சாரி...நெம்பக் கம்ப்ஃயூசிங்கா இருக்கு..

    ReplyDelete