Thursday, July 31, 2014

சத்யராஜ் தத்தெடுத்த நாய்- தொழில் இரகசியம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்,

தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ், "தகடு........தகடு.........", "என்னம்மா கண்ணு, சவுக்யமா?", "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே!!"  போன்ற பஞ்ச் வசனங்களால் புகழின் உச்சிக்குச் சென்றவர்.  வில்லன்களும் கதாநாயகனாகி வெற்றி பெற முடியும் என்று ரஜினிக்கப்புறம் மீண்டும் நிரூபித்தவர்.


அவரு இப்போ ஊரே மெச்சும்படி ஒரு வேலையை பண்ணியிருக்காரு.  என்ன அது?  ஒரு தெரு நாயை தத்தெடுத்திருக்கார்.  நாய்ன்னா சாதாரண நாயில்ல, அது சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 அடுக்காக இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய ஒரு நாய்.  அதை தற்போது இவர் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சத்யராஜ் பெரியார் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்,  அவற்றை ஏற்றுக் கொண்டவர்.   "மனிதனை சிங்கம் என்று ஒப்பிடுவது முட்டாள் தனம், ஒரு காளை என்றால் ஏர் பூட்டியாவது ஓட்டலாம், சிங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும், அதனால் என்ன பிரயோஜனம்?" என்றெல்லாம் பகுத்தறிவோடு சிந்திப்பவர். 

கட்டிடத்தில் இடிந்து விழுந்ததில் தொழிலாளிகள் பலர் 72 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கூட காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.  அவர்களில் யாராவது ஒருத்தரை தத்தெடுத்திருக்கலாம்.  ஆனால் அவர் தத்தெடுக்கத் தேர்ந்தெடுத்ததென்னவோ ஒரு நாய்.   அதற்க்குக் காரணம் இல்லாமலா இருக்கும். அதில் ஒளிந்திருக்கும் பகுத்தறிவு என்ன என்பதைத்தான் இங்கே நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

தேடிப் பார்த்ததில் தமிழகத்தில் 58 பேருக்கு ஒரு தெரு நாய் தான் இருக்காம்.  இவர்களில் ஒருத்தர் ஒரு நாயை தத்தெடுத்தாலும் தெருநாயே இல்லாம போயிடும்னு ஒரு புளு கிராஸ் காரர் புள்ளி விவரம் கொடுத்திருக்கார்.  நாய்ப் பிரச்சினையைத் தீர்க்க இவங்க கிளம்பிட்டாங்கைய்யா..............கிளம்பிட்டாங்க!!

ஆக ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கணும், தமிழகத்தில் உணவின்றி தவிப்பது நாய்கள் மட்டும் தான்.  மனுஷனுங்க எல்லாம் ஈமு கோழி வளர்த்ததில் கிடைத்த லாபத்தை வைத்து கல்யாண் ஜுவல்லரி நகைக் கடையில் தங்கம் வாங்கி சுகபோகமா இருக்காங்க.  எனவே மனிதர்களைப் பற்றி கவலையே படத் தேவையில்லை.  நாய்கள் நன்றாக இருந்தாலே போதும், மனிதன் தெருவில் படுத்துக் கிடந்தாலும் பரவாயில்லை.

அதுசரி நாய் ஒரு உயிர் அது கஷ்டப்படுவதைப் பார்த்து இறக்கம் கொள்வது வரவேற்கத் தக்கதே.   அதே மாதிரி கோழி, ஆடு இதுங்களை வெட்டும் பொது கூட வலிக்கத் தான் செய்யும், நாய் படும் துன்பத்துக்கு இணையாக அவையும் துன்பப் படும், அதற்கு ஏதாவது வழியுண்டா?  உங்கள் வீட்டு சமையல் கட்டில் இனி காய்கறிகளோடு நிறுத்துவீர்களா?


27 comments:

  1. இதெல்லாம் கூட பரவாயில்லை நண்பா சென்னையில் அனாதை ஆஸ்ரமங்கள் இருக்கு அவர்களை தத்து எடுக்காவிட்டாலும் மாதத்திற்க்கு ஒருநாளைக்கு 300 குழந்தைகளின் உணவுக்காகவாவது செலவு செய்யலாம், அந்தக்கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரிய விசயமில்லை இதெல்லாம் விளம்பர யுக்கி இதனைச்சுற்றி நான்குபேர் என்னத்தச்சொல்ல ?

    ReplyDelete
    Replies
    1. @KILLERGEE Devakottai
      தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே, தொடர்ந்து வாருங்கள்!!

      Delete
  2. பாகவதரே, அது என்ன தொழில் ரகசியம்ன்னு நான் சொல்றேன்..

    சிபிராஜ் மறுபடியும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒரு நாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. இந்த தத்தெடுப்பு, அந்த பட விளம்பரத்திற்கான முன்னோட்டம். அடுத்து டிவில உட்கார்ந்துக்கிட்டு, அன்னை தெரசா ரேஞ்சுக்குப் பேசுவாங்க பாருங்க!

    ReplyDelete
  3. http://www.muthalone.com/listings/sibiraj-interview/

    ReplyDelete
    Replies
    1. @செங்கோவி

      நான் அப்பவே நினைச்சேன், புரிஞ்சு போச்சு. நன்றி செங்கோவி

      Delete
  4. இதெல்லாம் செய்தியென படத்துடன் போட்டு, நாறடிக்கிறார்கள்.
    இவர்கள் மேலிருந்த சொற்ப மரியாதையும் போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. @ யோகன் பாரிஸ்

      என்ன ஆளையே காணோம், அப்பப்போ கடை பக்கம் வரலாமே!!

      Delete
  5. அவர் ஒரு திறமையான நடிகன்னு நிருபிச்சு இருக்கார்! விட்டுத் தள்ளுங்க!

    ReplyDelete
  6. யோவ் பாகவதரே நீர் தமிழன் என்பதை சரியா நிருபிச்சுட்டீரய்யா , ஏன்னா தமிழன் தான் தமிழக கலைகளையும் ,கலைஞர்களையும் மதிக்காமல் ஏளனம் செய்வானாம்!!!

    நடிகர் சத்யராசு தமிழ் நாட்டில் பிறந்தது தமிழ்நாட்டின் அதிஷ்டம், (சிரிக்காமல் படிக்கவும்) எத்தனையோ நடிக, நடிகைகள் இருக்கலாம் அவர்கள் எல்லாம் "நடிப்புக்காக தங்களை" தயார் படுத்திக்கொண்டவர்கள், ஆனால் நடிப்புக்காக என்றே பிறந்த "மகாநடிகன்" சத்யராசு மட்டுமே.

    அக்காலத்தில் "பாகவதர் போல( எம்.கே.டியாகராச பாகவதரை சொன்னேன்) மண்டையில கொண்டை போடும் அளவுக்கு மயிரும், நன்றாக பாடத்தெரிந்தால் மட்டுமே நடிகராக முடியும் என்ற மரபை உடைத்து சொட்டை தலையுடன் விக் வைத்துக்கொண்டு, பாட,ஆட தெரியாமல் நடிகராக சாதித்துக்காட்டியது "புரட்சித்தமிழன் சத்யராசு "மட்டுமே!!!

    இவர் ஒருவர் மட்டும் 64 வகையான விக்குகளை கச்சிதமாக வைத்துக்கொண்டு நடிக்க கூடிய நடிகர் என "லெ அல்மனாக் டெ சினிமே டெ லெ இன்டெர்நேஷனல்" என பிரஞ்சு பத்திரிக்கையே பாராட்டியிருக்கு!!!

    தமிழ் நாட்டில் பிறந்த ஒரேக்காரணத்தால் சத்யராசுக்கு கிடைக்க வேண்டிய பல பல மரியாதைகள் கிடைக்காமலெ போய்விட்டது, இதே ஆந்திராவிலோ, கர்நாடகவிலோ பிறந்திருந்தால் ஊருக்கு ஊர் சிலை வைத்தும் ,தெருவுக்கு எல்லாம் பெயர் வைத்தும் கொண்டாடியிருப்பார்கள், அங்கெல்லாம் சத்யராசுவை விட சுண்டைக்காய் நடிகர்களூக்கெல்லாம் சிலை வைத்திருக்கிறார்கள், தெரூக்கு பெயர் வைத்திருக்கிறார்கள், பத்மசிரி,பாரதாத்னா, தாதா சாகேப் பால்கெ விருதென கொடுத்து கொண்டாடுகிறார்கள், ஆனால் தமிழனாய் பிறந்து விட்ட ஒரே கொடுமையான காரணத்தால் சத்யராசுவுக்கு பத்மசிரி விருது கூட கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள் , விருது கொடுத்து பாராட்டாவிட்டால் கூட பரவாயில்லை ,நாய் வளத்தால் கூட ஏளனம் செய்கிறார்கள், இப்படிலாம் ஆந்திராவிலோ ,கர்நாடகாவிலோ ஒரு நடிகரை ஏளனம் செய்துவிட்டு யாரும் முழுசாக இருக்க முடியாது என்பது தெரியுமா?

    சத்யராசு நினைத்தால் டாபர் மேன் , கிரே ஹவுண்ட் ,அல்சேஷன் ,ஆதி சேஷன் என பலப்பல விலை உயர்வான சீமை நாய்களை வளர்க்க முடியும், அதற்கான தெம்பும் திராணியும் அவருக்கு இருக்கு ஏன்னா அவரு தீபிகா படுகோனுக்கே அப்பாவ நடிச்ச மகாபெரிய நடிகர், அப்படி இருந்தும் ஏன் தெரு நாயை தத்தெடுக்க வேண்டும் அங்கே தான் புரட்சித்தமிழன் நிக்கிறார், வெளிநாட்டு நாய்கள் எல்லாம் மிச்சம் மீந்த சோத்தை போட்டால் திங்காது, அவற்றுக்கு என தனியாக கறிச்சோறு ஆக்கிப்போடனும், ஆனால் நம்ம ஊரு நாய்ங்க மிச்சம் மீதி இருப்பதை போட்டாலே சாப்பிட்டு விட்டு நன்றியுடன் வாலாட்டும் , சத்யராசு வீட்டில் நிறைய சாப்பாடு மிச்சம் ஆகுது அதை எல்லாம் வீணாக்காமல் ஒரு நாய்க்கு போடலாம் என நினைத்த நல்ல இதயம் கொண்ட "ஜீவகாருண்ய" வள்ளலை பாராட்ட மனம் இல்லை என்றாலும் இழிவுப்படுத்தாமல் இருக்க கற்றுக்கொள்ளும், இதெல்லாம் பலருக்கும் தெரியும் ஆனால் எப்படி எடுத்து சொல்வது என தெரியாமல் சும்மா இருக்கிறார்கள், எனவே தான் நான் தமிழர்களுக்கு எல்லாம் சத்யராசுவின் பெருமைகளை விளக்க வேண்டும் என பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  7. பாகவதரே,

    காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் இனம் தமிழினமாக மட்டுமே இருக்க முடியும், தமிழன் நல்லது செய்தால் கூட பகடி செய்யலாம், அதனை பாத்து முதலில் கைத்தட்டுவதும் ஒரு தமிழனாகத்தான் இருக்கும், அப்படி தமிழனை தமிழனே பகடி செய்வதை ஆதரிக்கும் நல்ல தமிழர்களில் அடியேனும் ஒருவனே என்பதை மறைக்கவோ ,மறுக்கவோ என்னாலாகாது அவ்வ்!

    முன்னர் "திரிசா மாமி" எனும் நவரச நடிகை கூட ஒரு தெரு நாயைத்தத்தெடுத்துக்கொண்டதாக ஊடகங்களில் எல்லாம் பளப்பள என விளம்ப்பரம் வந்தது ஆனால் அப்பொழுதெல்லாம் "அந்த தொழில் ரகசியம்" என்ன என எந்த தேங்கா மூடிப்பாகவதரும் கவலையே படலை,ஆனால் புரட்சித்தமிழன் அதையே செய்தால் மட்டும் என்ன ஒரு எகத்தாளாம்? ஏன் இந்த இழி நிலை தமிழனுக்கு மட்டும்?

    இதெல்லாம் ஆரிய மாயை செய்த சூழ்ச்சியா இல்லை பெண் என்றால் பேயும் இறங்கும் என பாகவதரும் இறங்கி ,கிறங்கி போயிட்டாரா அப்போது ?

    http://zeenews.india.com/entertainment/celebrity/adopt-homeless-dogs-trisha-krishnan_89346.html

    ReplyDelete
    Replies
    1. பாகவதர், கமலா காமேஷின் தீவிர ரசிகர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்!!!

      Delete
    2. @ செங்கோவி

      நான் ரசிப்பவர்களில் ஒன்றிரண்டு ஒல்லிபிச்சான்கள் இருப்பது நிஜம், அதுக்காக எல்லா ஒல்லிபிச்சான்களுக்கும் நான் இரசிகன் என்று false propaganda செய்ய வேண்டாம்.

      அதுசரி நீர்தான் கமலா காமேஷோட கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதாக கொஞ்ச நாள் முன்னாடி நம்மாளுங்க எல்லோரும் பேசிக்கிட்டாங்க நிஜமா?

      Delete
    3. செங்க்ஸ்,

      //பாகவதர், கமலா காமேஷின் தீவிர ரசிகர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்!!!//

      பாகவதர் ஒரு பழமை விரும்பிதான், புது செருப்பு போட்டால் கடிக்கும் என பழைய செருப்பை பஜனை மடங்களில் லவட்டுபவர் தான் அதுக்குனு கமலா காமேஷையா ச்ச்சே ச்சே அவ்வ்!

      ஆனாலும் மாமிகள் என்றாலே பாகவதர் தடுமாறிப்போவார் என்ற அடிப்படையில் " குற்றச்சாட்டு மெய்யாகிறது" அவ்வ்!

      Delete
  8. @ வவ்வால்

    தங்கள் பின்னூட்டம் இந்த பதிவுக்கே ஒரு கலங்கரை விளக்கம் என்பதில் சந்தேகமேயில்லை. சிபி ராஜின் அடுத்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் கதாநாயகன் ஒரு தெருநாயாம், படத்தில் அவரை விட அந்த நாய்க்கு அதிக முக்கியத்துவமாம். செங்கோவி தொழில் இரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.

    நடிகர்களோட மொழிப் பற்று மெய் சிலிர்க்க வைக்கும். காவிரி பிரச்சினையில் மேடை போட்டு குடுத்த காசுக்கும் மேல கூவிய பயலுக ஒருத்தன் கூட முல்லை பெரியார் பிரச்சினைக்கு வாயையே திறக்கக் காணோம். எல்லாம் கப்......சிப்...... ஆயிட்டானுங்க. காரணம் தமிழ் படங்களுக்கு கன்னட தேச வருமானம் கம்மி, கேரளாவில் ஜாஸ்தி. இவ்வளவுதான் இவனுங்க மொழிப் பற்று.

    எந்த ஆட்சி வந்தாலும் அதே பயலுவ ஜால்ராவை மாத்தி மாத்தி அடிக்கிறானுங்க, அப்புறம் நடிகைகளுக்கு ஒழுக்கம் அதிகம். இவங்களையெல்லாம் மொழிப் பிரதிநிதிகளாக நம்புவது தமிழனின் இழிச்சவாத் தனமே.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      //சிபி ராஜின் அடுத்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் கதாநாயகன் ஒரு தெருநாயாம், படத்தில் அவரை விட அந்த நாய்க்கு அதிக முக்கியத்துவமாம். செங்கோவி தொழில் இரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.//

      அதுக்கெல்லாம் படம் பார்க்குற காலமா இது அவ்வ்!!!

      சிபிராஜ் அன்ட் கோ 20 வருசத்துக்கு முன்ன இந்த டெக்னிக்க ஃபாலோவ் செய்திருக்கலாம் அவ்வ்!

      சத்யராசுவும் ஒரு ரியல் எஸ்டேட் புள்ளீ, அவரும் பல இடங்களை இப்படி வாங்கி கட்டிடம் கட்டி வியாபாரம் செய்திருக்கார், என்ன இப்படி எதுவும் இடியலை, எனவே இப்பவே அச்சாரம் போட்டு வைக்கிறாரோ என்னமோ :-))

      நிறைய திரையுலக பிரபலங்கள் இடத்தினை வாங்கி , அதில் பில்டிங்க் டெவலப்பர்ஸ் என கட்டுறவங்க கூட ஒப்பந்தம் போட்டு " அடுக்கு மாடி
      " கட்டி விக்குறாங்க.கொஞ்ச காலம் முன்னர் நடிகை சிரிதேவி சென்னையில் அப்படி கட்டிய அடுக்கு மாடி வீடு தானா விரிசல் விட்டதால் , சி.எம்.டிஏ இடிச்சது அப்போ எனக்கும் கட்டிடத்துக்கும் சம்பந்தமே இல்லைனு சிரிதேவி சொல்லிடுச்சு அவ்வ்!!!

      இங்கிலீஷ் விங்கீலீஷ் படம் பார்த்து தமிழனும் அதெல்லாம் மறந்துட்டான் -))

      # எந்த கட்டிடமா இருந்தாலும் மினிமம் ஸ்டேண்டர்டு என ஒன்று இருக்கு,அதை "வாங்குற மக்கள்" குறிப்பிட்டு கேட்கலாம், ஆனால் எவன் கேட்குறான் ? இந்த இடம் மெயின் இடம், போனா வராதுனு புரோக்கர் அல்லது சேல்ஸ் ஏஜண்ட் சொன்னதும் ஓடிப்போய் வாங்கிடுறான் ,அப்புறம் இடியாம என்ன செய்யும்?

      #//நடிகர்களோட மொழிப் பற்று மெய் சிலிர்க்க வைக்கும். காவிரி பிரச்சினையில் மேடை போட்டு குடுத்த காசுக்கும் மேல கூவிய பயலுக ஒருத்தன் கூட முல்லை பெரியார் பிரச்சினைக்கு வாயையே திறக்கக் காணோம். எல்லாம் கப்......சிப்...... ஆயிட்டானுங்க. காரணம் தமிழ் படங்களுக்கு கன்னட தேச வருமானம் கம்மி, கேரளாவில் ஜாஸ்தி. இவ்வளவுதான் இவனுங்க மொழிப் பற்று//

      விவரம் தெரியாத கூமுட்டையாவே இருக்கீர் :-))

      கேரளாவில் ரிலீஸ் ஆகி ஓடுற தமிழ் படமெல்லாம் பெரிய நடிகர்கள் படம் தான் , அப்படியான படங்கள் வெகு சிலவே எனவே அங்கே யாரும் அதுக்கு கட்டுப்பாடு போடனும் என சொல்வதில்லை, அதே சமயம் கர்நாடகாவில் ஓடும் தமிழ் படங்களூக்கு இத்தனை பிரிண்ட் என கட்டுப்பாடு போட்டு விட்டார்கள் ,அதான் நம்மாளுங்க பொங்கினாங்க அவ்வ்!

      நீர் என்ன கனட வெறியன் போல பேசுறீர், முல்லை பெரியார் பற்றி கேரள நடிகர்கள் பேசுவதில்லை ஆனால் காவிரியில் நீர் கொடுக்க கூடாது என்ற போராட்டத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் முதல் ராசுகுமார் பையன் வரை எல்லாம் கலந்துக்கொண்டு முழங்கினார்கள், அதே ரமேஷ் அரவிந்தை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான், இப்ப கூட லோகநாயகர் உத்தம வில்லனை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கார் அவ்வ்!

      ஊரை ஏமாத்தும் நடிகர்களை மக்கள் புறக்கணிக்கனும் என்றால் அது முதலில் லோகநாயகரிடம் இருந்து ஆரம்பிக்கட்டுமே அப்போ மட்டும் உமக்கு " அடி வயிறு" பத்திக்கிட்டு எரியுமே :-))

      Delete
  9. உங்கள் பதிவும் பதிவுக்கேற்ற வவ்வால் தந்த பின்னூட்டமும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  10. @தி.தமிழ் இளங்கோ

    சார் இங்க ஒண்ணுமே இல்லை, இந்த பதிவுக்கு போங்க

    http://amudhavan.blogspot.com/2014/07/blog-post_22.html

    வவ்வால் சிக்ஸரும், பவுண்டரியுமா டபுள் செஞ்சுரி அடிக்கிறத பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே படித்ததுதான். ஆனாலும் நீங்கள் சொன்னவுடன் ஏதோ விஷயம் இருக்கிறது என்று அமுதவன் சார் பதிவை மீண்டும் பார்த்தேன். களை கட்டிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க (படிக்க) வேண்டும். தகவலுக்கு நன்றி!

      Delete
  11. சபாஷ்! வௌவால்!
    உங்கள் பின்னூட்டம், அப்படியே சாருவின் புலம்பல் போல் இருக்கிறது.
    சத்தியராஜ் எனும் மகாநடிகரின் புகழை இதை விட எவருமே எடுத்துரைக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. யோகன்,

      டிவி சீரியல் முதல் திரைப்படம் வரையில் டீவிடி வாங்கிப்பார்க்கும் புலம்ப்பெயர் தமிழர்களூக்கு சாரு பெயரெல்லாம் தெரியாது என நினைத்தேன் அவ்வ்!

      சத்யராசு மட்டுமல்ல சீமான்,நெடுமாறன்,ரோசாப்புருஷன் செலவுமணீ என இன்னும் பலரின் புகழை கூட எடுத்துரைக்கலாம் என இருக்கேன் :-))

      Delete
  12. பாகவதரே,

    உமது பதிவுகள் அப்படி,இப்படினு சவ சவனு இருந்தாலும் , பின்னூட்டக்கருத்துக்கள் பெரும்பாலும் "அக்மார்க் பட்டாசு" ரகம்யா, அமுதவன் சார் பதிவில் உமது பின்னூட்டம் பார்த்தேன் , நாம ரெண்டு ,மூனு பின்னூட்டம் போட்டும் தெளிவா சொல்லாததை, ஒரே பின்னூட்டத்தில் விளாசிட்டீர்.

    காரிகனும் , மனசில் பட்டதை "தெளிவாக" சொல்லியுள்ளார், எங்கள் இருவர் பின்னூட்டங்கள் குறித்தான கருத்திற்கும் நன்றி! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என பாராட்டீருக்கீர்!!!

    இதனை அப்பதிவிலேயே சொல்லியிருப்பேன் , தற்போது அமுதவன் அவர்களும் எனது பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதால் இங்கு சொல்லும்படியாகிவிட்டது, ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை :-))

    ReplyDelete
  13. ---இதனை அப்பதிவிலேயே சொல்லியிருப்பேன் , தற்போது அமுதவன் அவர்களும் எனது பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதால் இங்கு சொல்லும்படியாகிவிட்டது---

    வவ்வால்,

    இப்படி நடக்கக்கூடாது என்று நினைத்தேன். பதிவர்களே பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள் என்ற சமாதானப் பதிவை அமர்க்களமாக எழுதியவர் அமுதவன். எனவே இந்த விரிசல் கொஞ்சம் கவலையளிக்கிறது. இந்தச் சிறிய நிகழ்வு வெகு விரைவில் மறக்கப்படும் என்று நம்புகிறேன்.

    ஜெயதேவ்,

    அமுதவன் தளத்தில் சிவாஜியைப் பற்றி நான் எதுவும் குறையாக எழுதவில்லை. அவருக்கு சிலை வைப்பதைப் பற்றியே என் கருத்து முரண்பட்டது. பிறகு அமுதவனின் எம் ஜி ஆர் பற்றிய கருத்துக்கும் ஒரு மாற்று கருத்து சொல்லவேண்டியதாகிவிட்டது.

    உங்களின் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  14. காரிகன்,

    விரிசல் ,வில்லங்கம்னுலாம் யோசிக்க தேவையில்லை,ஒவ்வொருவருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு, அவ்வெல்லைக்கு போனது தெரியாம போயிடுறோம், எனவே "கதவடைப்பு" செய்றாங்க , பிறிதொரு சந்தர்ப்பத்தில் "பூங்கதவே தாழ்திறவாய்"னு பதிகம் பாடி கதவை திறக்க வச்சிட வேண்டியது தான் :-))

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நன்றி ஜெயதேவ்...மிக்க நன்றி.

    ReplyDelete