Monday, March 3, 2014

தமிழ் திரையுலகை கலக்கிய பெண் இயக்குனர்கள்!!

வணக்கம் மக்கள்ஸ்!!

பெண்கள் என்றாலே மிகவும் திறமைசாலிகள் என்பதும், அவர்கள் கால் பதித்து சாதிக்காத துறையே இல்லை எனலாம்.  அந்த வகையில் தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் கலக்கிய [கதி கலங்கடித்த?!] பெண் சிங்கங்களைப் பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


நாம் நடிப்பை பற்றி சொல்லப் போகிறோம் என்று மண்டையில்  களிமண் கம்மியானவர்கள் சிலர் நினைக்கக் கூடும்.  ஆனா அவங்களுக்குத் தெரியாது நம்ம ரூட்டே தனின்னு!!  நாம பார்க்கப் போவது இயக்குனர்களை!!  அதில் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ஸ்ரீப்ரியா அம்மா தான்!! 


அவரு எடுத்தாங்க பாருங்க ஒரு படம், பேரு சாந்தி முகூர்த்தம்!!  இந்த படம் வந்தப்போ பீம்சிங், பாலசந்தர், பாரதிராஜா போன்றோர் சூரியன் முன்னாடி மெழுகுவர்த்தி மாதிரி ஆகிப் போனாங்கன்னு ஊரே பேசிக்கிட்டுது.  படம் பார்க்க வந்தவங்க எல்லோரும் பாதியிலேயே பின்னங்கால் பிடரியில அடிக்க வீட்டுக்கு ஓடிகிட்டு இருந்தாங்க. ஒருத்தரை இழுத்துப் பிடிச்சு கேட்டா, "படமாய்யா இது, பாடம்யா.  பாதிப் படமே போதும், கண்ணெல்லாம் நெறஞ்சு போச்சு, மீதியை பார்த்தால் தாங்காது " என்று ஓடிக்கொண்டே பதிலளித்தார்.  வாழ்க்கையில நான் இனிமே சினிமாவே பார்க்க மாட்டேன்னு பலர் பக்கத்திலிருப்பவர் தலையில் அடித்து சத்தியம் பண்ணினர்.  ஏன்னா இந்த படத்தை பார்த்த கண்ணால இன்னொரு படம் பார்க்கலாமா என்பதால் தான்.  அப்பேற்பட்ட கலக்கல் இயக்குனர் அம்மா.  அவர் ஏன் தொடர்ந்து இயக்கவில்லை என்று கேள்வி எழலாம், வேறொன்றுமில்லை மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்கள் பொழச்சு போகட்டும் என்பதால் தான்.

ஆண்டவா, நான் எடுக்கப் போற படத்தை பார்க்க வர்றவங்களை நீதாம்பா காப்பாத்தணும்...........
அடுத்து நமக்கு ஞாபகம் வருவது ஜெயசித்ரா அம்மா.  அவங்க தன்னையே கதாநாயகியா வச்சு புதியராகம்னு ஒரு படம் எடுத்து விட்டாங்க.  படம் பார்க்க ஈ, காக்கா கூட வரல.  இந்த படத்தைப் பார்க்க காசெல்லாம் கூட குடுக்கிறேன்னு சொன்னாங்க ஆனா யாருக்கும் பார்க்கிற துணிச்சல் வரல.  பொறுத்துப் பொறுத்து பார்த்து தியேட்டர் பக்கம் போற நாலஞ்சு பேர புடிச்சுகிட்டு போய் சேர்ல கட்டி வச்சு படத்தை ஓட்ட ஆரம்பிச்சாங்க, இந்த விஷயம் தெரிஞ்சதும் பயலுக ரூட்டை வேற பக்கம் மாத்தி வண்டிய ஓட்டிகிட்டு போக ஆரம்ச்ச கதையும் நடந்தது.  இவங்க அடுத்து தன மகனை ஹீரோவா வச்சு "நானே எனக்குள் இல்லை"  [யங்கப்பா......... இப்படி ஒரு தலைப்பை யோசிச்சதுக்கே ஆஸ்கார் குடுக்கணும் போலிருக்கேப்பா!!]  அப்படின்னு ஒரு படத்தை எடுக்க நினைச்சாங்க, ஆனா நமக்குத்தான் குடுப்பினை இல்லை படம் பாதியிலேயே நின்னு போச்சு.


வேற ஏம்ப்பா........  இதெல்லாம் ஒரு புரோகிராம்னு பாத்துகிட்டு இருக்கியே உனக்கு உருப்படியா வேலை இல்லியா?  !!


இதையடுத்து சுஹாசினி அக்கா.........    "இந்திரா"ன்னு ஒரு படமெடுத்தாங்க.  தியேட்டர்களில் படம் ஆரம்பச்சதில் இருந்து, முடியிற வரைக்கும் ஜே......ஜேன்னு........ கூட்டம்.  எங்கே?  வெளியில தம்மடிக்கிற இடத்திலும், தியேட்டர் டீஸ்டாலிலும்.  ஒரு பய தியேட்டருக்குள்ளே வரலயே.  இவர் இராவணன் படத்துக்கு எழுதிய வசனங்கள் பராசக்தி, மனோகரா படங்களையே பின்னுக்குத் தள்ளியது வரலாறு.    வேண்டாதவன் யாராச்சும் இருந்தா ஒரு ரூமுக்குள் கட்டிப் போட்டு வைத்து  இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியா வரும் வரும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள், சீக்கிரம் திருந்தி வழிக்கு வருவான்.   அக்கா சினிமா விமர்சனங்கள் டாப்பு........!!  இவர் கணிப்புப் படி பி.வாசு இயக்கியதிலேயே மிகச் சிறந்த படம் எது தெரியுமா?  குசேலனாம்!!  [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ...........ஐயோ...........



அடுத்து மூணு படம்.  அய்யய்யோ தனித்தனியா மூணு படம் இல்லீகோவ்......படத்தின் பேரே 3!!    தனுஷை புதிய கோணத்தில் காட்டி எடுக்கப் பட்ட படமிது.   தனுஷ் நூத்திபத்தாவது தடவையா லூசாவே நடிச்ச படம்.  பார்த்தவனையெல்லாம் போதும்டா சாமி ஆளை விடுங்க என்றாக்கிது!!

அடுத்து...............!!  ஹி ..............ஹி ..............ஹி ..............  என்னமோ சடையான்னு ஒரு படமாம்.  வரும்..........  ஆனா........  வராது........!!  அப்படின்னே மூணு வருஷமா இழுத்தடிச்சிகிட்டு இருக்கும் படம்.  இயக்குனர் ஒரு பெண் சிங்கம் தான்!!  வரலாறு திருத்தப் படுமா, இல்லை மீண்டும் நிகழுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்!!



9 comments:

  1. பல சிரமங்கள் இருக்கும் போது வெற்றி என்பது சிரமம் தான்... மாறலாம்...

    ReplyDelete
  2. பெண்களோட படத்தைரசிக்க ஆண்கள் ஈகோ தாங்காது.அகில உலகத்திலும் இதே நிலைதான்.
    நடிகை சாவித்ரி பானுமதி போன்றவர்கள் கூட டைரக்ட் செய்திருக்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு வலைப் பக்கத்தில் படித்தேன்.

    ReplyDelete
  3. முதல் ரெண்டு படங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கலை (நல்லவேளை).... இந்திரா சின்ன வயதில் பார்த்தது..... பாதி மணிரத்னம் படம் மாதிரியே இருக்கும்.... 3 ம்ஹூம்...

    ReplyDelete
  4. [[அடுத்து...............!! ஹி ..............ஹி ..............ஹி .............. என்னமோ சடையான்னு ஒரு படமாம். வரும்.......... ஆனா........ வராது........!! அப்படின்னே மூணு வருஷமா இழுத்தடிச்சிகிட்டு இருக்கும் படம். இயக்குனர் ஒரு பெண் சிங்கம் தான்!! வரலாறு திருத்தப் படுமா, இல்லை மீண்டும் நிகழுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!!]]

    கோச்சடையான் என்ற இந்த படம் வந்த பின் எப்படியும் லொள்ளு சபா இதை உல்ட்டா செய்து ஒரு டிவி படம் எடுப்பார்கள். அவர்களுக்கு பேர் வைக்க கஷ்டம் இருக்கக்கூடாது என்று இப்பவே அதற்கு ஒரு நாமகரணம் செய்துவிடுகிறேன்...அதன் பெயர்: சாக்கடையான்

    ReplyDelete
  5. என் தமிழ்மணம் ஒட்டு +5.
    இதை மகுடம் ஏற்றுங்கள்...
    .....இவர் கடவுளைப் பற்றி "இந்த பதிவில் ஒரு வார்த்தை கூட' எழுதாத காரணத்தால்!

    ReplyDelete
  6. பெண்களை புகழ்றீங்கன்னு வந்துப் பார்த்தா! இப்படியா சேதி!?

    ReplyDelete
  7. மதுமிதாவை விட்டுட்டிங்களே... சாயாசிங், பார்த்தீபனை வச்சி வல்லமை தராயோன்னு எடுத்திருந்தாங்களே அந்த படம் நல்லாதானே இருந்துச்சி....

    ReplyDelete
  8. ஜெயசித்ரா அம்மாவின் புதிய ராகம் பாடல்களை கேடடிருக்கிறிர்களா... இசைஞானியின் அற்புத கீதங்கள்.

    ReplyDelete
  9. பானுமதி நிறையப் படங்கள் டைரக்ட் செய்திருக்கிறார். சாவித்திரி சிவாஜிகணேசனை வைத்து பிராப்தம் படத்தைத் தயாரித்தார்.(டைரக்ஷனும் அவரே என்று நினைக்கிறேன்). நடிகை லட்சுமி மழலைப் பட்டாளங்கள் என்று ஒரு படத்தை டைரக்ட் செய்தார். நீங்கள் சொல்கிறபடி எந்தப் பெண் இயக்குநரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்களை டைரக்ட் செய்யவில்லை. இதற்குமேல் வருவார்களா பார்க்கவேண்டும்.

    ReplyDelete