அன்புள்ள மக்கள்ஸ்!!
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் பயணத்தின் முதல் பகுதியை முன்னர் வெளியிட்டோம்!!
[சுட்டி]. பயணத்தில் கண்ட மீதமுள்ள இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இரண்டாம் நாள் நாங்கள் சென்ற இடம் பெகல்காம். ஸ்ரீநகர் போய் இறங்கிய பின்னர் வழியெங்கும் நாங்கள் தேடியது ஆப்பிள் மரங்களைத்தான். பெகல்காம் செல்லும் வழியில் ஆப்பிள் தோட்டங்கள் மட்டுமல்ல, வால்நட், ஆப்ரிகாட் மரங்கள் மற்றும் குங்குமப்பூ விளைவிக்கப் படும் வயல் வெளிகளும் நிறைந்திருக்கின்றன. குங்குமப்பூபறித்துக் கொண்டிருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னோம். ஊதா நிற வெல்வெட் போட்டு மூடியது போல இந்த வயல்கள் அழகாகதோன்றுகின்றன. எங்கள் ஓட்டுனர் நிறுத்திய இடத்தில் பூக்களின் அடர்த்தி குறைவு... :(, குங்குமப்பூ செடிகள் சில இன்ச் உயரம் மட்டுமே வளர்கின்றன, மேலும் உயரம் ஓரிரு இன்ச்கள் மட்டுமே. இறங்கி உள்ளே சென்று படமெடுக்கலாம் என நினைத்தால், நீளமான மூங்கில் கம்பை கையில்வைத்திருந்த காவல் கார அன்பர் ஓடி வர, வெளியில் நின்றபடியே படமெடுத்துக் கொண்டோம்.
 |
குங்குமப்பூ விளையும் வயல்கள், தூரத்தில் குங்குமப்பூ சேகரிக்கும் பணியாட்கள். பூக்களின் அடர்த்தி அதிகமான வயல்கள் அழகாக ஊதா நிறத்தில் இருக்கும்................. |
 |
பெகல்காம் நெருங்குகிறோம்................ |
வாழ்வில் முதன்முறையாக பனி தொப்பி அணிந்த இமயமலையை பெகல்காமில் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. இங்கிருந்து வெவ்வேறு உயரத்தில் உள்ள மலைப்பாங்கான இடங்களுக்கு குதிரைகளில் நம்மை அழைத்துச் செல்கிறார்கள். ஒரு நபருக்கு ஒரு குதிரை, அதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மணிக்கு 350 ரூபாய்.
 |
பெகல்காமில் குதிரைப் பயணம்...... |
 |
மலைப் பாதையில் குதிரைப் பயணம், வழியில் முதல் நிறுத்தம் ஒரு நீரோடை. இந்த நீர் மிகத்தூய்மையானதாம்!! கையை வைத்தால் ஃபிரிட்ஜில் Freezer ஐ defrost செய்தால் கொட்டும் நீரைப் போல இருந்தது. அங்கே வசிக்கும் ஒரு அம்மா சாதரணமாக அதில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது!! |
 |
குதிரைப் பயணம் தொடர்ந்தது, அங்கிருந்து மேலும் உயரமான இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்றனர். |
 |
மூன்றாவது நிறுத்தத்தை நோக்கி பயணம். |
 |
இந்த இடத்திற்குத்தான் இறுதியில் வந்து சேர்ந்தோம். |
 |
இது ஒரு மிகப்பரந்த புல்வெளி, பின்னணியில் பைன் மரங்களும், பனி படர்ந்த மலைகளும் சூழ்ந்திருக்கின்றன. |
 |
அங்கே ஒரு ஆள் முயலையும், ஆடு ஒன்றையும் படப்பிடிப்புக்கு [சினிமா சூட்டிங் இல்லீங்க, நீங்க எடுத்துக் கொள்ளும் படம்!!] வாடகைக்கு கொடுத்து, ஒரு படம் எடுத்துக் கொள்ள 10 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்!! |
 |
மூன்றாவது நாள் நாங்கள் சென்ற இடம் குல்மார்க். அங்கே போய் இறங்கியதும் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய தோற்றம் இது!! |
 |
குல்மார்கில் பிரபலமானது, ரோப் காரில் கொண்டோலா [Gondola] என்ற உயரமான பகுதிக்குச் செல்வது தான். இரண்டு கட்டமாக நீங்கள் டிக்கட் பெறலாம். முதல் கட்டம் 400 ரூபாய், இரண்டாவது கட்டம் மேலும் உயரமான இடத்திற்குச் செல்கிறது, அதற்க்கு மேலும் 600 ரூபாய் கட்டணம். டிக்கட்டுகள் இணையத்திலேயே கிடைக்கிறது, அங்கே சென்று வாங்குவது மிகவும் சிரமம், மேலும் சிலசமயம் கிடைக்காமலும் போகலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கே சென்று விட வேண்டும், பனிக்கட்டியில் நடப்பதற்கான சிறப்பு காலணிகள், உடைகள் செல்லும் வழியில் வாடகைக்குக் கிடைக்கின்றன. |
 |
Gondola இரண்டாம் கட்டம். இங்கே பணியில் விழுந்து விளையாடலாம் என நினைத்தேன், ஆனால் கட்டுமானத்திற்கு போடப்பட்டுள்ள முறுக்குக் கம்பிகள் ஆங்காங்கே கூறாக நிற்பதைப் பாருங்கள்!! எசகு பிசகாக ஏத்தினால் என்னாவது என்று தயங்கி கட்டுப் படுத்திக் கொண்டேன். இங்கே இருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு ஸ்கேட்டிங் அழைத்துச் செல்கிறோம் என்று சில நூறுகளைப் பிடுங்கிக் கொண்டு, சற்று தூரம் சென்ற பின்னர் இதே தான் எல்லை என்று காண்பித்து விட்டு திரும்ப அழைத்து வந்து விடும் கூத்தும் நடக்கிறது........ |
 |
திரும்பும் வழியில் ஆப்பிள் மரங்கள்!! |
 |
ஆப்பிள் தோட்டத்தில் கடை............ |
நான்காம் நாள் படகு இல்லத்தில் தங்கினோம்.
 |
Dal ஏரியில் படகு இல்லம். ஏரியைச் சுற்றி எக்கச் சக்கமாக இருக்கின்றன. இங்கே ஒரு சமயல்காரர் இரவு உணவு சுவையாக தயாரித்து தந்தார். |
 |
படகு இல்லம் எதுவும் நகராது!! இவற்றை உயர்த்தி மற்ற படகுகளைப் போலவே இயக்க முடியும் என்கிறார்கள். ஒரு வேலை முற்காலங்களில் அவ்வாறு இருந்திருக்குமோ என்னவோ!! நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்த ஏரியில் உள்ள நீர்
முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடுமாம், அதில் கிரிக்கெட் கூட
ஆடுவார்களாம்...........!! |
 |
Dal ஏரியைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் படகுகள். அங்கே இவற்றை சிகாரா என்று அழைக்கிறார்கள். 150 ரூபாய் கட்டணம், நீங்கள் ஏமாந்தால் 600 ரூபாய் என்பார்கள். இவற்றில் செல்லும் போது வழியில் வேறொரு படகில் வியாபாரிகள் உங்கள் அருகில் வந்து மரத்தாலான சாமான்கள், அணிகலன்களை கண்பித்து வியாபாரம் [Quick பிசினஸ்] செய்கிறார்கள். வேண்டாம் என்றால் விலகி அடுத்த வாடிக்கையாளரிடம் போகிறார்கள். |
நாங்கள் ஸ்ரீநகரில் வாங்கிய பொருட்களின் படங்கள்..............
 |
உளர் பழங்கள், தேன் [விலை எல்லாம் நம்மூர் விலையேதான்!! எதுவும் சல்லிசு இல்லை!!] |
 |
குங்கமப்பூ......... |
படங்களைஎல்லாம் பொறுமையாக பார்த்தமைக்கு நன்றி, மீண்டும் இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம், வணக்கம் மக்கள்ஸ்!!
வணக்கம்
ReplyDeleteபடங்கள் அனைத்தும் சிறப்பு..வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Great!
ReplyDeleteகூட்டமே இல்லையே! பாதுகாப்பான இடமா?
continue..
காஷ்மீர் காட்சிகள் அருமை. மனதை கொள்ளை கொள்கின்றன.சிறப்பான அனுபவத்து வாழ்த்துக்கள்
ReplyDeleteகாஷ்மீர் பியூடடிஃபுல் காஷ்மீர் என்று ஒரு படத்தில் எம்ஜிஆர் பாடுவார். படங்கள் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபோய்வந்து நிறுத்தி நிதானமாய் ஒரு மாதம் கழித்துப் போட்டிருக்கிறீர்கள். அப்போதும் மாறாத ஈர நினைவுகளுடன் பதிவும் படங்களும் உள்ளன. புகைப்படங்கள் மிகவும் சிறப்பாகவே உள்ளன, வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றாயிருக்கிறது காஷ்மீரில் எடுத்த படங்கள்.
ReplyDelete@ Amudhavan
ReplyDeleteநேரமின்மைதான் தாமதத்திற்க்குக் காரணம் சார்!!
@வேகநரி
Long time, no see??!! Why?!
நேரமின்மைதான்.தமிழ்மணம் பக்கம் வந்தபோ காஷ்மீர் பார்க்கலாம் என்ற உங்க அறிவிப்பு பளிச்சென்று கவர்ந்தது.ஊர் பார்க்கும் ஆசை கொண்ட நான் உடனே வந்துவிட்டேன் ஒவ்வொரு படத்துக்கு கீழேயும் விளக்கம் சிறப்பாக இருந்தது.
Delete@ வேகநரி
ReplyDeleteமிக்க நன்றி, அவ்வப்போது நம்ம கடைப் பக்கம் வாருங்கள்!!