Friday, December 13, 2013

ஸ்ரீநகர்-காஷ்மீர் டூர்..............

அன்புள்ள மக்கள்ஸ்!!

ரொம்ப வருடங்களாக போக ஆசைப் பட்ட  [அதே சமயம் போகத் தயங்கிய] இடம் காஷ்மீர்.  காரணம் தினம் தினமும் செய்தித் தாள்களில் அங்கே நடப்பதைப் பற்றி வரும் செய்திகள்தான். இன்னொன்னு தமிழன்னாலே ஹிந்தியில புலி என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச செய்தி, நாம வேற பச்சைத் தமிழன், அங்கே போய் மாட்டிக் கிட்டு முழிக்கிறதான்னு பயம்.  ஒரு வழியா ஒரு பேக்கேஜ் டூர் கிடைச்சது.  நாம அங்கே போய் இறங்கியதும் நம்மை காத்திருந்து அழைத்துச் சென்று ஐந்து நாட்கள் தங்க வைத்து, உணவும் கொடுத்து சுற்றிக் காண்பித்து திரும்ப வழியனுப்பும் வரைக்கும் அவங்க பொறுப்பு.  [ஹி ...............ஹி .........ஹி .........  நம்ம சாமர்த்தியம் வேற யாருக்கு வரும்னேன்].  சுற்றிப் பார்த்த இடங்களை படம் பிடித்து இங்க பதிவாக்கியுள்ளேன்.  வழ வழா கொழ கொழான்னு சொல்ல எதுவும் இல்லை.  நேரம் இருப்பவர்கள் படங்களை பார்த்து இரசிக்கவும்.  [என் கடைக்கு வந்ததற்கு உங்களுக்கு இதுதான் தண்டனை!!].


ஸ்ரீநகரில் நான்கு நாட்கள் தங்கினோம், ஒரு நாள் தங்கமணியின் உடல்நலக்குறைவால் வெளியில் செல்ல முடியவில்லை, படகு இல்லத்திலேயே கழிக்க வேண்டியிருந்தது.  நாங்கள் பார்த்த இடங்கள்:

நாள் 1: முகலாயர் தோட்டங்கள் [Mughal Garden]:  ஷாலிமார் பாக் மற்றும் நிஷாத் பாக்.

ஷாலிமார் பாக் நுழைவு வாயில் அருகே, இலை வடிவில் செடிகள்.  காஷ்மீரில் இந்த வடிவ இலைகளைக் கொண்ட ஒரு வகை மரமே எங்கும் உள்ளன, இந்த பூங்காவிலும் உள்ளன.

இந்த மரங்களின் இலைகளும் மேலே காட்டிய வடிவிலேயே உள்ளன.
உயர்ந்த மரங்கள், வழிந்தோடும் நீரூற்றுகள், பழைய கட்டிடக் கலைப்படி கட்டப் பட்ட அறைகள் சில என காணப் படுகின்றன. "சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்" [தேன் நிலவு] பாடல் படமாக்கப் பட்டது இங்கே தான்!!
ஷாலிமார் பாக் மிகவும் புகழ் வாய்ந்த முகலாயர் தோட்டம், சக்ரவர்த்தி ஜெஹாங்கீர் கி.பி. 1616-ஆம் ஆண்டு அவரது மனைவி நூர் ஜஹானுக்காக இதைக் கட்டினாராம்!!     ஷாலிமார் பாக்கின் உண்மையான பெயர் ஃபரா பக் ஷ் [Farah Bakhsh], அதன் அர்த்தம் குஷி  தோட்டமாம், இப்போ அதன் பெயர் 'Garden of Love' அன்பின் தோட்டம்!!

இது தான் டைனிங் ஹாலாம்!!

அடுத்து நிஷாத் பாக். நிஷாத் பாக்கை நூர் ஜஹானின் சகோதரர் அசஃப் கான் கட்டியிருக்கிறார்.  குளிர்காலத்தில் சினார்  (Maple) மரங்களும், கோடையில் மலர்களும் இப்பூங்காவை அலங்கரிக்குமாம்.

நிஷாத் பாக் நுழைவு வாயில்.
நிஷாத் பாக்கின் அடுக்கக்காய் மொத்தம் 12 தளங்கள் இருந்திருக்கிறது, மத்தியில் உள்ளது அருவிபோல நீர் கொட்டும் கால்வாய், இது இறுதியில் Dal ஏரியில் போய் 'சங்கமம்' ஆகிறது.


நிஷாத் பாக் ஒட்டி அமைந்துள்ள டால் ஏரி Dal Lake] .  இது ஜெமினி ஓஹோ எந்தன் பேபின்னு பாட்டு பாடுவாரே அதே ஏரி தான். நிஷாத் பாக்கின் 12 தளங்களில் மூன்றை இந்த ஏரியோடு  சேர்த்து விட்டு, நநிஷாத் பாக் - டால் ஏரி இரண்டுக்கும் நடுவில் ஏரியைச் சுற்றி கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் சாலையை  அமைத்துள்ளனர். 

7 comments :

 1. அருமையான படங்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. @ திண்டுக்கல் தனபாலன்

  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  Thank You Sir!!
  திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 3. படங்கள் எல்லாமே அழகா இருக்கு! குட்டீஸ் க்யூட்..! குட்டி மேடம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறதுல ரொம்ப அழகு! ரசித்தேன்!

  ReplyDelete
 4. காஷ்மீர் சுற்றுலா படங்கள் மிக அழகு. உங்கள் குழந்தைகள் ஷாலிமாரை விடவும் அழகு.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சகோதரரே .தங்களின் சுற்றுலா அனுபவத்தைப் படம்
  பிடித்துக் காட்டியதன் மூலம் நாங்களும் இதுவரைக் காணாத இடங்களைக்
  கண்டு ரசித்தோம் .தங்களின் இத் தொடர் பதிவு மேலும் சிறப்பாகத் தொடர
  என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 6. @ அம்பாளடியாள் வலைத்தளம்

  தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது நன்றி, தொடர்ந்து வாருங்கள் !!

  ReplyDelete
 7. ஸ்ரீநகர் காட்சிகளை சரியாகவே போகஸ் செய்து எடுத்துள்ளீர்கள். பிள்ளைகள் சந்தோஷம்தான் நமது சந்தோஷம். குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்! டைரக்டர் ஸ்ரீதரின் தேன்நிலவு படம் என்றாலே காஷ்மீர்தான் நினைவுக்கு வரும். அந்த படத்தை வண்ணப்படமாக எடுக்காமல் விட்டு விட்டார்களே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அந்த படத்திலிருந்து ஒரு பாடலை இந்த கட்டுரைக்கு பொருத்தமாக இணைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete