Thursday, August 11, 2016

ஒலிம்பிக் தங்கப் பதக்கம், வியப்பான தகவல்கள்

ரியோ ஒலிம்பிக் ஆரம்பிச்சிடுச்சு, அமெரிக்காவும் சைனாவும் பதக்கப் பட்டியலில் யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, இந்தியா காரன் ஒரு தங்க மெடலாச்சும் வராதான்னு ஏக்கத்தோடு பார்த்துகிட்டு இருக்கான்.  வருஷம் முழுக்க கிரிக்கெட்டே கதின்னு டிவி முன்னாடி உட்கார்ந்தே இருந்தா எங்கிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்கும், நாச்சியப்பன் கடையில வாங்கினாத்தான் உண்டு!!

பள்ளியில் படிக்கும் போது நான் லண்டன் பிபிசி தமிழ் சேவையை தவறாமல் கேட்பதுண்டு.  ஒருநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பற்றி சொன்னார்கள்.  எனக்கு அது வியப்பாகவும் விந்தையாகவும் இருந்தது!!   அப்படி என்ன சொன்னார்கள்....???  நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஒலிம்பிக்கில் வழங்கப் படும் தங்கப் பதக்கம் என்பது தங்கத்தால் செய்யப் பட்டது இல்லையாம், வெறும் தங்க முலாம் பூசப் பட்டதாம்!!  (இதை நண்பர்களிடம் சொல்லப் போய் அவர்கள் யாரும் நம்பாமல் என்னை உதைக்க வந்தது வேறு கதை!!).

2016 ஆம் கனக்குப் படி ஒரு தங்க மெடலின் மொத்த எடை 500 கிராம், ஒரு ஆளுக்கு அரை கிலோ தங்கமாகவே கொடுக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் தங்க மெடல்களுக்கே சரியாகி விடும்!!  இது தாங்காதுடான்னு யோசிச்ச ஒலிம்பிக் கமிட்டீ 1912-ம் ஆண்டுடன் தங்கப் பதக்கத்தை தங்கமாகவே கொடுப்பதை நிறுத்திவிட்டு, தங்க முலாம் பூசிய மெடல்களையே  பரிசளிக்க பயன்படுத்தி வருகிறதாம்.  இதில் தங்கம் வெறும் 6 கிராம் மட்டுமே, மீதம் 494 கிராம் தூய வெள்ளி !!  



அப்போ முலாம் பூசிய பதக்கத்துக்கா மனுஷன் இந்த அடி அடிச்சிக்கிறான்?  பதக்கத்தின் மதிப்பு அதை செய்யப் பட்ட பொருளால் அல்ல, சொல்லப் போனால் அதன் மதிப்பு கண்ணால் தெரியும் பொருளாக இல்லை, அது அதற்கும் மேலே........!!

5 comments:

  1. நாச்சியப்பன் கடை ஹாஹாஹஹா நல்ல காமெடி நண்பரே

    ReplyDelete
  2. விசயம் தெரியாத எனக்கு வியப்பான தகவல்தான்!


    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. சொன்னா நம்பவா போறாங்க நம் இனிய தமிழ்மக்கள்...."நம்மளை" மாதிரி திறமைசாலிகள் எல்லாம் ஒலிம்பிக்குற்கு போகாததன் ஒரே காரணம் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் "பதக்கம்" என்பது முழுவதும் தங்கத்தால் செய்யாமல்...தங்க முலாம் பூசப் பட்ட தகர பதக்கம் என்று!

    ReplyDelete
  4. ஏற்கனவே படிச்சு இருக்கேன்! ஒலிம்பி துவங்கிய புதிதில் யூகலிப்டஸ் போன்ற ஓர் இலையால் செய்யப்பட்ட கீரிடத்தையே பட்டமாக கொடுத்தார்கள் என்று படித்ததாகவும் நினைவு.

    ReplyDelete
  5. எங்கே நீண்ட நாட்களாகவே இணையத்தின் பக்கமே வராமல் இருந்து இப்போது நல்லவேளையாய் தங்கப்பதக்கத்தோடு வந்து இறங்கி இருக்கிறீர்கள்.எனக்குத் தெரிந்த ஒரு பெண் (அவர் மாற்றுத் திறனாளி) தான் பல்வேறு உலக அரங்குகளில் பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கொண்டுவந்து என்னிடம் காட்டியிருக்கிறார். எல்லாமே முலாம் பூசப்பட்டவை என்பது அப்போதுதான் தெரியும்.

    ReplyDelete