Tuesday, February 23, 2016

அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.

அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.
அடுத்து என்ன தி.மு.க தானே ???...
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்"
எது வேண்டும்? என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை.
எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்-
எரிச்சல் தாங்கவே முடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.
அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
நாமேதான்.
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும் தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?


[ஃபேஸ் புக்கில் படித்தது] 



கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான்.  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன்.  இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?  அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!

6 comments:

  1. அருமையான சிந்தனைக்குறிய கருத்து நண்பரே வெட்கமாக இருக்கின்றது
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. நல்ல ஒப்பந்தமா இருக்கே? எனக்கெனவோ உண்மையிலேயும் இப்படித்தான் இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
  3. mmm.....
    Same feeling!

    ReplyDelete
  4. சிறந்த பதிவு. அருமையான உதாரணம்.

    ReplyDelete
  5. அருமை அந்தக் கதையை வாட்சப்பில் படித்தேன். படம் சூப்பர்.வெளியில சண்ட போட்டுகிட்டாலும் உள்ள இப்படித்தான்.

    ReplyDelete
  6. அந்தக் கதையை நானும் வாட்சப்பில் படித்தேன்

    ReplyDelete