வணக்கம் மக்கள்ஸ்!!
[இது முடி உதிர்தல் சம்பந்தப் பட்ட பதிவு அல்ல!!]
சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் மகனின் முதலாம் பிறந்தநாள். அலுவலக நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க எண்ணினேன், ஆனால் அவர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நினைத்தேன். பிறந்த நாள் விழா அன்று காலை ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒரு துண்டு சீட்டில் மாலை வீட்டிற்க்கு வந்து சிறப்பிக்குமாறு எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டேன். பரிசு வாங்க நேரமிருக்காது என்று மனசுக்குள் நினைப்பு!! ஆனால் அது பொய்யாகியது,மாலை நான் எதிர் பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது!! பார்த்தால் வந்தவர்கள் அனைவரும் பரிசோடு வந்திருந்தனர்!! சிலர் வெள்ளி பொருட்கள், சிலர் விளையாட்டு பொம்மைகள், முக்கியமாக கார்கள், சிலர் வீட்டில் மாட்டி வைக்கும் படங்கள் என அசத்தி விட்டனர்.
விழா, விருந்து எல்லாம் முடிந்த பின்னர் சென்னையில் இருந்து வந்திருந்த தங்கமணியின் சகோதரரும் அவரது நண்பர்களும்பரிசுப் பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்தார்கள். அவற்றில் இருந்த விதம் விதமான பொம்மை கார்களை இயக்கிப் பார்த்தனர். அதில் ஒரு பொம்மை, சுவிட்சை போட்டவுடன் முன்னோக்கி சென்றது, பின்னர் நின்றது, இனிமையான இசையுடன் கார் கதவு தானாகத் திறந்தது, பின்னர் கதவு தானாக மூடிக் கொண்டது, பின்னர் வேறு திசையை நோக்கி வளைந்து சென்றது. இது எங்களில் யாருக்கும் அதிசயமாகத் தெரியவில்லை, ஒரே ஒருத்தரைத் தவிர. அவர் மட்டும் வைத்த கண் வாங்காமல் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், கண்களில் ஒரு மிரட்சி, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து அதில் லயித்திருந்தார்!! பின்னர் அவரது முதுகில் தட்டி, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்ட போது, "ஒன்றுமில்லை, இத்தனை விதமாகவும் இயங்கும்படி எப்படிச் செய்திருப்பானோ என எண்ணி எண்ணி வியக்கிறேன்" என்றார். மற்றவர்கள் யாருக்கும் அதிசயமாகத் தோன்றாது அது அவருக்கு மட்டும் ஏன் அதிசயமாகத் தோன்றியது? காரணமில்லாமலில்லை!! அவர் ஒரு கார் மெக்கானிக். ஒரு காரில் A -Z பிரித்து திரும்ப சேர்க்கத் தெரிந்தவர், எது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்தவர். அதிலுள்ள சங்கதிகள் தெரிந்தபடியால் இந்த பொம்மை கார் இயங்கும் விதம் அவருக்கு அதிசயமாகத் தெரிந்தது. நாங்கள் அது குறித்து எதுவும் தெரியாதவர்கள், ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!! இதுதான் வித்தியாசம்.
அதுசரி எதற்கு இந்த கதை? காரணம் இருக்கிறது. இந்த உலகையும் நம்மையும் படைத்து, காத்து அழிக்கும் வேலையை செய்து வரும் அதிகாரம் படைத்த ஒருத்தன் [இறைவன்] இருக்கிறான் என்று ஒரு சாராரும், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று மறு சாராரும் பட்டி மன்றம் போட்டு வாதிட்டு வருகிறோம். இதில் எந்த கட்சியில் ஒருத்தர் இணைகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது?
உலகில் நம்மைச் சுற்றி அத்தனை அதிசயங்கள் இருந்தாலும் பலர் அதை கண்டுகொள்வதே இல்லை, மேலே சொன்ன மெக்கானிக் மாதிரி அதை அதிசயமாகப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. அந்த சிலருக்கு இறைவன் இருக்கிறான் என்ற சந்தேகம் ஒருபோதும் வருவதில்லை. ஆனால், பாதி அறிந்து மீதி அறியாத அன்பர்கள் எல்லோருக்கும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை ஒருபோதும் உணரவே முடியாது.
அதுசரி, எதை வைத்து இறைவன் இருக்கிறான் என்று சொல்ல முடியும்? உலகில் நாம் இரண்டு விதமான சங்கதிகளைப் பார்க்கிறோம், ஒன்று உயிருள்ளது, எறும்பிலிருந்து யானை வரை, இன்னொன்று உயிரற்றது [ஜடம்] கல்லில் இருந்து மலை வரை. எப்போதெல்லாம் ஜடம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன், உயிர் இருந்தே தீரும். உதாரணத்துக்கு பாழடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று சொன்னால் நம்புவதில் தவறில்லை. அதே சமயம் அழகாக வண்ணம் பூசப் பட்டு வரவேற்பறை முதல், சமையல் கட்டு, குளியலறை வரை எல்லாம் மிக நேர்த்தியாக உள்ளது, ஹாலில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டுள்ளன, படுக்கையறையில் கட்டில் தலையணை படுக்கை விரிப்பு எல்லாம் சுத்தமாக நேர்த்தியாக உள்ளன என்றால் அதன் பின்னணியில் மனிதர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இல்லையில்லை அந்த வீட்டில் பத்து வருடமாக யாரும் உள்ளே செல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இதைப் போலவே எங்கெல்லாம் ஜடத்தில் ஒரு ஒழுங்கமைவைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன் நிச்சயம் இருக்கும்.
வீட்டைப் பராமரிக்கும் ஜீவனைப் போலவே தினமும் சூரியனை கிழக்கில் உதிக்க வைக்கவும், பூமி சுழலவும், காலநிலை மாறி மாறி வரவும் பூமியில் வசிக்கும் அத்தனை ஜீவன்களுக்கும் உணவு கிடைக்கவும் செய்யப் பட்டுள்ள ஒழுங்கமைவுக்குப் பின்னணியிலும் ஒரு ஜீவன் கண்டிப்பாக இருந்தே தீருவார். இது தான் ஒரு ஆத்தீகனின் முடிவு.
நாத்திக நண்பர்களே, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதில் சரியான முடிவு எது என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் உண்மையில் உங்களுக்கு இருந்தால் விஷயம் தெரிந்தவர்களை அணுக வேண்டும், அதை விடுத்து ஏமாந்த இளிச்சவா நண்பனை அழைத்து வந்து எடக்கு முடக்காக கேள்வியைக் கேட்டு அதைப் பதிவாகப் போட்டுவிட்டு, அதன் கமண்டு பாக்சையும் மூடி வைத்துவிட்டு, ஐயய்யோ எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டானே என்று ஒப்பாரி வைப்பதில் பிரயோஜனமேயில்லை. ஆகையால் கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்கு பதில் தரக் கூட வழி வைக்காமல் நம்மை விட அறிவாளி எவன்டா என்ற இறுமாப்பில் உழல வேண்டாம்.
உங்கள் கூமுட்டை கேள்விகள் அத்தனையும் பலமுறை நையப்புடைக்கப் பட்டு தோற்கடிக்கப் பட்டவை. புதுசு எதுவும் இல்லை.
இறைவன் இருக்கிறானா எனபதை அறிந்து கொள்ள நாத்தீகர்களுக்கும் ஆத்தீகர்க்களுமிடையே நடந்த விவாதம்.
http://www.youtube.com/watch?v=Xx0Y-4QeCu4
http://www.youtube.com/watch?v=VoAZmIaAxCw
முதல் வீடியோவின் லிங்க்:
http://www.youtube.com/watch?v=Y6VQwxmPzzA
இதன் தொடர்ச்சியாக உள்ள வீடியோக்களையும் பாருங்கள், உங்கள் நாத்தீக கேடராக்ட் திரை விலகும் உண்மை புரியும்.
என்ன திடீர்க் கோபம் இது? ஆனால் உங்கள் உதாரணங்கள் நன்றாக உள்ளன.
ReplyDelete@Amudhavan
Deleteகோபமெல்லாம் இல்லை சார், நாம பேசுவதே அப்படித்தான்.............!!
ஏதோ உள்குத்து பதிவுன்னு மட்டும் தெரியுது . ஆனால் உங்களை கோவப் படுத்தியதுதான் யார்னு தெரியில .
ReplyDelete@ Manimaran
Deleteஇப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், நன்றி.................
இருந்தால் நல்லதே..ஆனால் ,
ReplyDeleteஅந்த இறைவன் இங்கே பல அநீதி நடப்பதை கண்டு கொள்வதில்லையே...
இலங்கை போரின் போது பாதிக்க பட்ட மக்களை கண்டு வருத்தம் இல்லையா ?
ஒரு கூட்டம் திட்டம் போட்டு தமிழையும் தமிழரையும் இழிவு படுத்தி வருகிறதே? இவர்களை நிறுத்த அவர்/அவள்/அதுவால் முடியாதா ?
இங்கு தேங்கி கிடக்கும் வழக்குகளால் நிம்மதி இல்லாமல் இருக்கும் மக்களுக்கு நிம்மதியாவது தர இயலுமா?
நீங்கள் அறிந்தவரை இறைவன் என்பதன் எளிய அம்சங்களை விவரித்தால் என் போன்றவர்களுக்கு விளக்கம் கிடைக்கும், தடுமாற இயலாது.
எதை தான் அதுவால் செய்ய முடியும்? இருந்து எதை செய்திருக்கிறது ? இருந்து அதன் பயன் என்ன? தனக்கு கும்பிடு போடுபருக்கு கொடுப்பது முடியுமா ? சரியா ?
கேட்கவே கூடாது ..வெறும் நம்பிக்கை மட்டும் கொள்..காலமெல்லாம் கஷ்டபடு, அது உன் பிறப்பு, விதி என்பதை முன்பெல்லாம் கூறி கொள்ளை அடித்து பல நூற்றாண்டுகள் கும்மி அடித்து வருகிறார்கள் ..இப்போதும், இன்னமும் அது சரியா ?
AnonymousNovember 24, 2013 at 8:42 PM:
Deleteஇலங்கையில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த காலத்தில் கடவுள் இருந்தார், இப்போ கடவுள் இல்லை எனலாமா? அல்லது உலகிலேயே மிக சவுகரியமாக இருக்கும் சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களுக்கு மட்டும் கடவுள் இருக்கிறார் எனலாமா?
அய்யா , சில அம்சங்களை கேட்டேன். ஒரு தெளிவு பெற..
Deleteநீங்களோ எதற்கும் ஓரளவு விடை தராமல் ,சுவிட்சர்லாந்து போய் பார்க்க கூறுகிறீர்.. அங்கு மக்கள் செயலால் நலமாக உள்ளனர் என்று நம்புகின்றேன். அங்கு அவருக்கு வேலையில்லையே. அதன் தன்மை தான் என்ன என்று சொன்னால் நலம். தெரியாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை...பார்பனிய கூட்டத்துக்கு மட்டும் ஏன் மொத்த குத்தகையாக உள்ளார், எப்போது கடவுளுக்கு பார்பனிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதையும் சொல்லலாம்.
@ AnonymousNovember 27, 2013 at 4:21 PM
Deleteஐயா, இங்கே நாம் விவாதிப்பது படைத்தவன் என்று ஒருத்தன் இருக்கிறானா, இல்லை எல்லாம் தான்தோன்றித் தனமாக வந்ததா என்பதே. ஏன் நாத்தீகர்கள் எல்லோரும் இறை நம்பிக்கை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கொள்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு ஒருபோதும் புரியவேயில்லை. அதுமட்டுமல்ல, நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் இலங்கைப் பிரச்சினை பார்ப்பனர்களால் உருவானதா என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆன்மிகம் இறைநம்பிக்கை என்றால் சுகம் மட்டுமே இருக்கும், கஷ்டம் இல்லாமல் போகும், நோய்நொடி எதுவுமே இருக்காது என்ற பொய்ப் பிரச்சாரத்தை சுவிசேஷ கூட்டங்களும், போலிச் சாமியார்களும் பணத்துக்காக பரப்பி வருகின்றனர், அது உங்கள் சிந்தனையில் ஊடுருவி நிலைத்துப் போனது துரதிர்ஷ்டம். பாண்டவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே உறவினராகக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் படாத துன்பங்களே இல்லை. உணவில் விஷம், அரக்கு மாளிகையில் நெருப்பு, நாடு கடத்தப்படல், வனவாசம், கட்டிய மனைவி பொதுச் சபையில் துகிலுரிப்பு என்று அத்தனை இன்னல்களுக்கும் ஆளானார்கள். எல்லாம் முடிந்து சுபம் என்னும் வேளையில் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகைக்குப் புறப்படும் முன்னர் , "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று குந்தியைப் பார்த்து கேட்ட போது, "மேற்கண்ட இன்னல்கள் எல்லாம் என்றென்றும் திரும்ப திரும்ப வரவேண்டும் என்று கேட்டாள்". காரணம், "இன்பம் வந்தால் உன்னை நினைக்க மாட்டோம், மறந்து விடுவோம், துன்பத்தில் எந்நேரமும் உன்னையே நினைத்திருந்தோம், உன்னை நினைக்காமல் இருப்பதை விடக் கொடிய துன்பம் வேறெதுவும் இல்லை எனவே அத்தனை கொடிய துன்பங்களும் மீண்டும் மீண்டும் வரட்டும் " என்று பதிலளிக்கிறாள்.
இந்த உலகம் முற்றிலும் இன்னல்கள் நிறைந்தது, துன்பம் இருந்தாலும் பரவாயில்லை, நிரந்தரமாக இங்கேயே இருந்துவிடுவோம என்றால் அதுவும் இல்லை. எந்தா நொடியில் வேண்டுமானாலும் மரணம் வரலாம். [உங்களுடைய எத்தனையோ உறவினர்கள் திடீரென கால்மாகியிருக்கலாம், நீங்கள் அதற்க்கு முதல் நாள் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்.] வாழ்வு நிரந்தரமற்றது, இங்கே வந்தோம், விரைவில் இங்கிருந்து வெளியேற்றப் படுவோம், நடுவில் முற்றிலும் இன்னல்கள், எனவே இங்கே இருக்க வேண்டாம், என்னுடைய இருப்பிடத்துக்கு வந்து விடு இவை எதுவும் இருக்காது என இறைவன் கூறுகிறார். இந்தக் கருத்ததைத்தான் அனைத்து மதங்களுமே கூறுகின்றன. [இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம், அனால் வாழும் நெறிமுறையை புனித நூல்கள் தருகின்றன அதை பரிசோதித்து ஏற்பது அவரவரது புத்திசாலித் தனத்தைப் பொறுத்தது ]. இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்றாலும், அவர் சிலுவையில் அறையப் பட்டார், ஆனால் அவரது சீடர்கள், உன் துன்பத்தைத் தீர்க்கிறேன் பணம் கட்டு என்று சொல்லி ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்து வருகின்றனர். ஆனால் ஊர் துயரைத் துடைக்கும் அவர்கள் இல்லத்திலேயே கொடிய அகால மரணங்கள் சம்பவித்தன. இலங்கை அரசு மட்டுமா கொடுமைப் படுத்துகிறது? தாத்தா அரசும் கொடுமைதான், புயல், வெள்ளம், காலரா போன்றவையும் கொல்லும். எனவே இவ்வுலகில் யாராக இருந்தாலும் துன்பம் எல்லோருக்கும் பொதுவே. இறை நம்பிக்கை இருப்பவர் இல்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை. வாழ்நாள் முழுக்க துன்பமில்லை என்றே வையுங்கள், சாகும் போது கை கால் செயலிழப்பு, சர்க்கரை வியாதி, மாரடைப்பு என என்னென்ன கஷ்டமோ யார் கண்டது?
எனவே, புனித நூல்கள் தரும் பாதையை ஏற்பதா இல்லை வாழ்நாள் முழுவதும் சபித்துக் கொண்டே சாவதா, நீங்களே முடிவு செய்யுங்கள்.................... ஆனால் ஒன்று துன்பத்தை எந்த கொம்பனாலும் நீக்க முடியாது, அது எல்லோருக்கும் பொது...............
பாகவதரே,
Delete//எனவே, புனித நூல்கள் தரும் பாதையை ஏற்பதா இல்லை வாழ்நாள் முழுவதும் சபித்துக் கொண்டே //
அப்போ குரான் படித்து ,5 வேளை தொழுகை செய்யுறது அவ்வ்!
குரான் புனித நூலா இல்லையா?
நாத்திகம் பேசினாலும் ,ஆங்கில குரான் படித்துள்ளேன், இப்பவும் ஒரு பிடிஎஃப் இருக்கு.
குரானில் சந்தேகம் வந்தால் நம்ம சகோ.சார்வாகனிடம் கேட்கலாம், நடுநிலையான விளக்கங்கள் தருவார்!!!
அப்புறம் "ஒரிஜினல் மகாபாரதம்ம் படிச்சிருக்கேன்" அதுல என்ன சொல்லி இருக்குனு ஆச்சும் தெரியுமா அவ்வ்.
எல்லாம் காமலீலை கதைகள்1
ஆனால் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு ,கொலை,கொள்ளை, கற்பழிப்பு என செய்பவர்களை ஆதரிக்கும் உம்மை போன்றோர் எல்லாம் "புனித நூல்" பற்றி பேசுறத என்னானு சொல்ல அவ்வ்!
// துன்பத்தை எந்த கொம்பனாலும் நீக்க முடியாது, அது எல்லோருக்கும் பொது.........//
அப்புறம் எதுக்கு கடவுளை போய் கும்பிட்டு ,போலிச்சாமியாருக்கு காசு கொடுக்கணும். போலிச்சாமியார்கள் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு காமலீலை செய்யவா அவ்வ்!
\\அப்போ குரான் படித்து ,5 வேளை தொழுகை செய்யுறது அவ்வ்!
Deleteகுரான் புனித நூலா இல்லையா? \\ ஒருவேளை நான் குரானைப் படிப்பதாக இருந்தால் ஏன் பைபிள் படிக்கக் கூடாது என்பீர்.............
\\குரானில் சந்தேகம் வந்தால் நம்ம சகோ.சார்வாகனிடம் கேட்கலாம், நடுநிலையான விளக்கங்கள் தருவார்!!! \\ மாமூல் மாமுவா?!! குட்டையை குழப்பி மீன் பிடிப்பார், அதுதான் அவரது தொழிலே...........அவரை நீர்தான் மெச்சிக்கணும்.
\\அப்புறம் "ஒரிஜினல் மகாபாரதம்ம் படிச்சிருக்கேன்" அதுல என்ன சொல்லி இருக்குனு ஆச்சும் தெரியுமா அவ்வ்.
எல்லாம் காமலீலை கதைகள்.\\ தேனை சுவைக்க நினைத்தவன் அது வைக்கப் பட்டிருந்த கண்ணாடிக் குப்பியின் மூடியைத் திறவாமல் வெறும் பாட்டிலை நக்கிப் பார்த்து விட்டு தேனில் சுவை ஒன்றும் இல்லை என்றானாம். அதுபோல உள்ளது உமது நிலை!! மகாபாரதம் எவ்வாறு பயில வேண்டும் என்று அதனுள்ளேயே குறிப்புகள் உண்டு, அதைப் பின்பற்றாவிட்டால் அதன் உண்மையான பொருள் ஒருபோதும் உமக்கு கிட்டாது.
\\ஆனால் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு ,கொலை,கொள்ளை, கற்பழிப்பு என செய்பவர்களை ஆதரிக்கும் உம்மை போன்றோர் எல்லாம் "புனித நூல்" பற்றி பேசுறத என்னானு சொல்ல அவ்வ்!\\ அப்படி யாரேனும் இருந்தால் சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
\\அப்புறம் எதுக்கு கடவுளை போய் கும்பிட்டு \\ இறைவன் தன்னை வணங்கச் சொல்லி கட்டாயப் படுத்துவதில்லை, வணங்கினால் நல்லது, வணங்காமல் போவதற்கும் இறைவன் சுதந்திரம் அளித்திருக்கிறார்.
\\போலிச்சாமியாருக்கு காசு கொடுக்கணும். போலிச்சாமியார்கள் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு காமலீலை செய்யவா அவ்வ்!\\கள்ளச் சாமியார்களுக்கு நான் காசு குடுப்பதில்லை.
அய்யா உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. ஓரளவிற்கு தாங்கள் எடுக்கும் நிலை புரிகிறது.
Deleteதுன்பம் பொது என்கிறீர்கள். அது ஏன் ஒரு கூட்டத்துக்கு மிக குறைவாக உள்ளது.. அதுவும் அது கடவுளால் ஏற்படுத்த பட்டது எனும் போது ஏற்பது சிரமமாக உள்ளது.
ஆத்தா ஆட்சியின் சிறப்புகளும், இப்போதைய முக்கிய தீர்ப்பு ஒன்றும் மீண்டும் கடவுளை கேள்விகுறியாகி விட்டது.
நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணம் கடந்த காலத்திலோ அல்லது முற்பிறவிகளிலோ நாம் செய்த செயல்களே அன்றி வேறு யாருமல்ல. எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்பார்கள், எய்தவன் நமது பழைய பாவ/புண்ணிய கணக்கு, அம்பு நம்மை துன்புறுத்துபவர்கள்/துன்புறுத்தும் காரணிகள். ஆகையால் யாரையும் நொந்து பிரயோஜனமில்லை.
Deleteவியாதி, வயோதிகம், இறப்பு இவை கொடுமையானவை, அது எல்லோருக்கும் பொது, அவை மூன்றையும் கொடுப்பது பிறப்பு,அதை நிறுத்த வேண்டும் அதற்க்கு இறைவனை வழிபட வேண்டும்.
சமீபத்திய வழக்கில் தப்பியவர்கள், மனிதனால் ஏற்படுத்தப் பட்ட சட்டங்களின் ஓட்டைகளில் தப்பலாம், ஆனால் இறைவனின் கோர்ட்டில் யாரும் தப்ப முடியாது, பொறுத்திருங்கள்........................
வணக்கம் மாப்ளே,
ReplyDeleteமுதலில் மருமகன் பிறந்த தினத்திற்கு வாழ்த்து சொல்லி நம்து சண்டையை ஆரம்பிக்கிறேன். ஆமாம் உறவு,நட்பு வேறு கொள்கை வேறு!!!
*********
நாட்டியம் ஆரம்பம் ஆகட்டும் !!!
என்ன சொன்னீர்!!!
/ எங்கெல்லாம் ஜடத்தில் ஒரு ஒழுங்கமைவைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன் நிச்சயம் இருக்கும்./
1.இது ஒழுங்கமைவு என்பது என்ன என்பதன் வரையறையைப் பொறுத்தது.
ஒருவருக்கு ஒழுங்காக தெரிவது இன்னொருவருக்கு ஒழுங்காக தெரியாது!!!
சீரற்ற எண்ணிலும் ஒரு ஒழுங்கமைவை என்னால் காட்ட முடியும் என்றால் சீரற்ற எண் என ஒன்று உண்டா?
இதே போல் எந்த ஒரு ஒழுங்கற்ற அமைவிலும், ஒரு ஒழுங்கமைவு இருக்கும் என்றால் ஒழுங்கு,ஒழுங்கின்மை என்பதும் சார்பியல் பார்வை சார்ந்ததுதானே!!!
2. ஒழுங்கமைக்கும் ஜீவனுக்கு ஒழுங்கமைவு பற்றிய அறிவு இருக்கிறதா என பரிசோதிக்க இயலாது!!!.இந்த சூழலில் இயற்கையின் சில அமைவுகளை சில ஒழுங்கு என சொல்லப்ப்படும் வரையறைக்குள் கொண்டுவர நம்மால் இயலுவதால் மட்டுமே இப்படி சொல்கிறோம்.
3. உடல் ஊனமாக பிறக்கும் குழந்தைகள்,மூன்றாம் பாலினத்தவர்,புயல் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஒழுங்கா ஒழுங்கின்மையா?
4. அண்ணன் பீ.சே'வின் காணொளி காட்டுவதால் கேட்கிறேன்??
அவர் இபோதைய குரானில் எழுத்துப் பிழை இருக்கிறது என்பதால் புதிய குரான் எப்போது பிழையில்லாமல் அச்சடித்து வெளியிடுவார் என கேட்டு சொல்லவும்!!!
அண்ணனின் அல்லக்கைகளுக்கு நாம் கேட்ட கேள்விப் பதிவுக்கும் நீர்தான் பதில் அளிக்க வேண்டும்.
சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!
http://aatralarasau.blogspot.in/2013/01/blog-post_28.html
பதில் கூறும் கூறிப்பாரும்!!!
\\1.இது ஒழுங்கமைவு என்பது என்ன என்பதன் வரையறையைப் பொறுத்தது.
Deleteஒருவருக்கு ஒழுங்காக தெரிவது இன்னொருவருக்கு ஒழுங்காக தெரியாது!!!
சீரற்ற எண்ணிலும் ஒரு ஒழுங்கமைவை என்னால் காட்ட முடியும் என்றால் சீரற்ற எண் என ஒன்று உண்டா?
இதே போல் எந்த ஒரு ஒழுங்கற்ற அமைவிலும், ஒரு ஒழுங்கமைவு இருக்கும் என்றால் ஒழுங்கு,ஒழுங்கின்மை என்பதும் சார்பியல் பார்வை சார்ந்ததுதானே!!!\\ மாமு!! நீங்க பேசுவதைப் பார்த்தா ஒன்னு ஞாபகத்துக்கு வருது. தமிழ் சினிமாவில் ஊருபட்ட படங்கள் ஆங்கிலப் படங்களை காப்பியடிச்சு எடுத்திருக்காங்க, சிலவற்றில் காட்சிக்கு காட்சி கூட அப்படியே எடுத்து போட்டிருக்காங்க. ஆனா, அதைச் சுட்டிக் காட்டினால், அது காப்பியில்லை, by chance இரண்டு பேருக்கு ஒத்த சிந்தனை வரக்கூடாதா? என்று கேட்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே பொய், தமிழ்ப் படக் காட்சிகள் சில பின்னர் வந்த ஆங்கிலப் படங்களில் உள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்கள் கணக்குப் படி அவங்க எதையும் காப்பியடிக்கவில்லை. அது மாதிரி, நீரும் chance தியரியை தூக்கிகிட்டு அலையரீறு, இளிச்சவா பயலுக வாங்குவானுங்க நான் வாங்கத் தயாராக இல்லை!!
\\3. உடல் ஊனமாக பிறக்கும் குழந்தைகள்,மூன்றாம் பாலினத்தவர்,புயல் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஒழுங்கா ஒழுங்கின்மையா?\\ ஊனமுற்ற குழந்தை மூன்றாம் பாலினத்தவர் உடலிலும் நன்றாக இயங்கும் உறுப்புகள் இருக்குமே, அவை இயங்குவது அதிசயமே, அவை தானாக உருவாக வாய்ப்பில்லை. சூரியன் போன்ற சீற்றம் கொண்ட நெருப்புக் கோலத்தை உருவாக்கியவனுக்கு புயலையும் உருவாக்கும் காரணம் இருக்கும்.
\\அண்ணனின் அல்லக்கைகளுக்கு நாம் கேட்ட கேள்விப் பதிவுக்கும் நீர்தான் பதில் அளிக்க வேண்டும்.\\ நேரில் வர விரும்பாவிட்டாலும், செட்டிங்கில் வாதிட்டால் அவர்கள் பதில் தரத் தயார், வாதம் செய்து மண்ணைக் கவ்வி, பின்னர் அதை பதிவாகப் போடும் தைரியம் உமக்கு உண்டா?
காமக் கிழத்தனின் பதிவு உங்களை கோபப் படுத்தி உள்ளது என்று தெரிகிறது !அவர் பதிவை அவர் போடட்டும் ,உங்கள் பதிவை நீங்கள் போடுங்கள் !தீர்ப்பை எங்களிடமே விட்டு விடுங்கள் !
ReplyDeleteத.ம 2
@ Bagawanjee KA
DeleteWhat you said is very correct, I will follow that, thanks...........!!
அன்புள்ள ஜெயதேவ்,
ReplyDeleteஇந்தப் பின்னூட்டம், கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி உங்களுடன் விவாதிப்பதற்கு அல்ல; அல்லவே அல்ல.
23.11.13இல் நான் எழுதிய, ‘இப்பதிவைப் படித்தால் மண்டை காயும்; தலைமுடி உதிரும்’ என்னும் பதிவுக்குப் பதில் தரவே இப்பதிவை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்பதை நம் இருவர் பதிவையும் படித்தவர்கள் அறிவார்கள்.
‘கடவுள் உண்டு’ என்பதற்கு ஆதரவாகச் சில கருத்துகளையும் முன் வைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றிய விவாதம் இன்று நேற்று அல்ல; பல நூறு ஆண்டுகளாக உலகம் முழுக்க நடைபெறுகின்ற ஒன்று. முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பது என் கருத்து. இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்றும் நான் [நான்தான்] நம்புகிறேன்.
ஆனாலும், என்றேனும் ஒரு நாள் உண்மை கண்டறியப்படலாம் என்ற நம்பிக்கையில்தான் சிந்தனையாளர்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். இந்நிலையில் நானும் என் பங்கைச் செலுத்தி வருகிறேன்[என் அறிவுக்கு எட்டியவரை].
கருத்தை முன் வைத்ததோடு நீங்கள் நிற்கவில்லை; என்னை மிக வன்மையாகச் சாடவும் செய்திருக்கிறீர்கள். உங்கள் பதிவின் வாசகங்களை உள்ளபடி கீழே தந்திருக்கிறேன்.....
//நாத்திக நண்பர்களே, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதில் சரியான முடிவு எது என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் உண்மையில் உங்களுக்கு இருந்தால் விஷயம் தெரிந்தவர்களை அணுக வேண்டும், அதை விடுத்து ஏமாந்த இளிச்சவா நண்பனை அழைத்து வந்து எடக்கு முடக்காக கேள்வியைக் கேட்டு அதைப் பதிவாகப் போட்டுவிட்டு, அதன் கமண்டு பாக்சையும் மூடி வைத்துவிட்டு, ஐயய்யோ எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டானே என்று ஒப்பாரி வைப்பதில் பிரயோஜனமேயில்லை. ஆகையால் கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்க்கு பதில் தரக் கூட வழி வைக்காமல் நம்மை விட அறிவாளி எவண்டா என்ற இறுமாப்பில் உழல வேண்டாம்.
உங்கள் கூமுட்டை கேள்விகள் அத்தனையும் பலமுறை நையப்புடைக்கப் பட்டு தோற்கடிக்கப் பட்டவை. புதுசு எதுவும் இல்லை//
நான் உரையாடியது ஒரு நண்பருடன். அது உண்மை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், அந்த நண்பரை ‘இளிச்சவா நண்பர்’ என்கிறீர்களே, வாதத்தில் தோற்றால் அவர் இளிச்சவாயரா?
நான் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டதாகச் சொல்கிறீர்கள். விவாதத்தில் அது சகஜம்தானே?
ஒரு பதிவாளர் கமெண்ட் பாக்சை மூடி வைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
1.கீழ்த்தரமான கமெண்டுகளைத் தவிர்ப்பது. 2.விவாதத் திறமை இன்மை.3. உணர்ச்சி வசப்படுதல். 4.கூமுட்டை, ட்ரவுசர் கிழியும் போன்ற சாடல்களை விரும்பாமை எனப் பல காரணங்கள்.
நான் கமெண்ட் பாக்ஸை மூடியதற்கு இவை அனைத்துமோ அல்லது ஏதாவது ஒன்றோ காரணமாக ஏன் இருக்கக் கூடாது?
அதை ஏன் நீங்கள் இகழ்கிறீர்கள்? பதில் தரத்தான் வலைப்பக்கம் இருக்கிறதே, அப்புறமென்ன?
ஒப்பாரி வைக்கிறேன் என்கிறீர்கள். அது என் பழக்கதோஷம். சின்ன வயசிலிருந்தே வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டு எண்ணற்ற முறை ஒப்பாரி வைத்தவன் நான்.
என்னைவிட அறிவாளி எவண்டா என்ற இறுமாப்பில் நான் உழல்கிறேனா? நானா? நானா? நானா?
இதற்கான பதிலை என் பதிவுகளைப் படித்த நண்பர்கள்[நீங்களும் நண்பர்தான்] சொல்லட்டும்.
‘உங்கள் கேள்விகள் அத்தனையும் நையப் புடைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டவை’ என்கிறீர்கள்!
என்னுடைய, கடவுள் சம்பத்தப்பட்ட அத்தனை பதிவுகளையும் எப்போது படித்து முடித்தீர்கள் ஜெயதேவ்? படித்திருந்தால் மகிழ்ச்சி.
நையப் புடைத்ததாகச் சொல்கிறீர்கள்? அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறீர்களா? அதையும் ஒரு பதிவாகப் போட்டுவிடுங்களேன்.
நான் உங்களிடம் சொல்ல நினைத்தவற்றுள் முக்கியமானவற்றைச் சொல்லிவிட்டேன்.
இவற்றுக்கான பதிலைத் தருவதும் தராமலிருப்பதும் உங்கள் விருப்பம். நான் எதிர்பர்க்கவில்லை.
என் எண்ணங்களைப் பிறருடன் பகிரவே பதிவு எழுதுகிறேன். மறுப்பு எழுத உங்களுக்கு முழு உரிமை உண்டு. எவ்வளவும் எழுதுங்கள்.
தவறு நேர்ந்து அதைப் பிறர் சுட்டிக் காட்டினால் தயங்காமல் மன்னிப்புக் கேட்பவன் நான். தற்செயலாக நிகழ்ந்த பிழைகளுக்கே மன்னிப்புக் கேட்டவன் நான்.
என் மனக்குறைகளை இங்கு வெளிப்படுத்தினேனே தவிர, இந்த உங்கள் பதிவுக்குப் பதில்...பதிலுக்குப் பதில் எழுதும் நோக்கமெல்லாம் எனக்கில்லை.
எனக்கு எழுதத் தோன்றும்போது எழுதுவேன். அவ்வளவுதான்.
நன்றி ஜெயதேவ்...மிக்க நன்றி நண்பரே.
@ காமக்கிழத்தன்
Deleteஎனது வலைப்பூவிற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும்!!
\\கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றிய விவாதம் இன்று நேற்று அல்ல; பல நூறு ஆண்டுகளாக உலகம் முழுக்க நடைபெறுகின்ற ஒன்று. முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பது என் கருத்து. இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்றும் நான் [நான்தான்] நம்புகிறேன்.\\ உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது மனதுக்கு இதுதான் உண்மை என்று தெரிந்தாலும் நீங்கள் எடுத்துக் கொண்ட கொள்கையை, அது தவறாகவே இருந்தாலும், விடக் கூடாது என்று முடிவு செய்து விட்டீர்களா என்பதைப் பொறுத்து சத்தியம் சாத்தியமில்லை என்பது முடிவாகும்.
\\நான் உரையாடியது ஒரு நண்பருடன். அது உண்மை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.\\ உண்மையில்லை என்று சொல்லவில்லை.
\\ஆனால், அந்த நண்பரை ‘இளிச்சவா நண்பர்’ என்கிறீர்களே, வாதத்தில் தோற்றால் அவர் இளிச்சவாயரா? \\தக்க பதில் தரும் ஒருத்தருடன் நீங்கள் உங்கள் கேள்விகளை எழுப்பியிருக்கலாம் என்பது எனது கருத்து.
\\நான் கமெண்ட் பாக்ஸை மூடியதற்கு இவை அனைத்துமோ அல்லது ஏதாவது ஒன்றோ காரணமாக ஏன் இருக்கக் கூடாது?
அதை ஏன் நீங்கள் இகழ்கிறீர்கள்? பதில் தரத்தான் வலைப்பக்கம் இருக்கிறதே, அப்புறமென்ன?\\ இவ்வளவு விளக்கமா சொல்றீங்க, அப்படியே பின்னூட்டம் மட்டறுத்தல் என்ற வசதியும் உள்ளது, அது எதற்கு என்று நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்!! உங்களைப் பொருத்தவரை கேள்வி கேட்க மட்டுமே தெரியும், பதில் சொல்லத் தெரியாது, பதில் தந்தாலும் உங்களால் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியாது. நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மோசமான வார்த்தைகளில் எழுதினால் அதை தவிர்ப்பதில் தவறேதும் இல்லை, ஆனால் கண்ணியமான முறையில் பின்னூட்டம் வந்தாலும் அதை உங்களால் பிரசுரிக்க முடியாது, ஏனெனில் நீங்கள் பரிதாபமாகத் தோற்பது மற்றவர்களுக்கும் தெரிந்து விடும், ஆனால் பிரசுரிக்காமல் விட்டால் நியாயமான கருத்தையும் இருட்டடிக்கும் உங்களுடைய போலித் தனம் பின்னூட்டமிடுபவருக்கு தெரியவரும். மொத்தத்தில் எல்லாவற்றையும் தவிர்க்கவே நீங்கள் பின்னூட்டங்களை அனுமதிப்பதே இல்லை. இதுதான் உண்மை. ஓட்டப் பந்தயம், நீங்கள் மட்டுமீ பங்கு பெறுவீர்கள், ஒவ்வொரு முறையும் வெற்றியும், தங்கப் பதக்கமும் உங்களுக்கே!! உங்கள் கனவை நானும் கலைக்க விரும்பவில்லை. உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொள்ளுங்க!!
\\ஒப்பாரி வைக்கிறேன் என்கிறீர்கள். அது என் பழக்கதோஷம். சின்ன வயசிலிருந்தே வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டு எண்ணற்ற முறை ஒப்பாரி வைத்தவன் நான்.\\ இப்படியெல்லாம் கூட பெருமைப் பட்டுக் கொள்ளலாமோ!! பேஷ்.........பேஷ்........
\\என்னைவிட அறிவாளி எவண்டா என்ற இறுமாப்பில் நான் உழல்கிறேனா? நானா? நானா? நானா?\\ ஆமாம்.........ஆமாம்.........ஆமாம்......... அடி மனசில் அது இருக்கும். வெளியில் தெரியாது.
\\இதற்கான பதிலை என் பதிவுகளைப் படித்த நண்பர்கள்[நீங்களும் நண்பர்தான்] சொல்லட்டும்.\\ நண்பர்கள் ஒருபோதும் கசப்பானதைச் சொல்லவே மாட்டார்கள், உண்மை கசக்கும்.
\\நையப் புடைத்ததாகச் சொல்கிறீர்கள்? அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறீர்களா? அதையும் ஒரு பதிவாகப் போட்டுவிடுங்களேன்.\\
முடிந்தால் இந்தப் பதிவின் பின்னூட்டங்களைப் படிக்கவும்:
http://www.vinavu.com/2012/03/31/atheism/
\\இவற்றுக்கான பதிலைத் தருவதும் தராமலிருப்பதும் உங்கள் விருப்பம். நான் எதிர்பர்க்கவில்லை.\\ நியாயமான கேள்விகளுக்கு பதில் தருவது என் கடமை, இன்னும் ஆயிரம் வந்தாலும் பதில் தருவோம்..........!!
\\தவறு நேர்ந்து அதைப் பிறர் சுட்டிக் காட்டினால் தயங்காமல் மன்னிப்புக் கேட்பவன் நான். தற்செயலாக நிகழ்ந்த பிழைகளுக்கே மன்னிப்புக் கேட்டவன் நான்.\\ எழுத்துப் பிழை எதற்க்காச்சும் நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கலாம், ஆனால் நாத்திக விஷயத்தில் நான் பிடிச்ச முயலுக்கு மூனே கால்தான் என்ற நிலைபாட்டைத்தான் எல்லா நாத்தீகர்களும் எடுக்கிறார்கள்.
வருகைக்கு நன்று, மீண்டும் வருக...........!!
பதிவைப் படித்த வழுக்கைத் தலை நண்பனுக்கு முடி முளைக்கவில்லை...
ReplyDeleteஎன்ன செய்யலாம்??
@ கிருஷ் ணா
Deleteநண்பர் காமக்கிழத்தன் அவர்களின் பதிவைப் படித்து முடி கொட்டியவர்களுக்கு மட்டும் நிச்சயம் முளைக்கும் நண்பரே!!
பாகவதரே,
ReplyDeleteவழக்கம் போல கடவுள் இருக்காண்டா கொமாரு வகை ஒப்பாரியா அவ்வ்!
நீர் எங்கோ வேலை செய்கிறீர், அந்த நிறுவன முதலாளி சம்பளம் கொடுக்காமல் ,உமது சேவைக்கு கடவுள் கூலி கொடுப்பார்னு சொல்லி அனுப்பினால் சும்மா வருவீரா?
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் செய்த வேலைக்கு , யாரிடம் வேலை செய்தோமோ அவரிடம் தானே கூலி கேட்பீர்? அப்போ உமக்கு கூலி கொடுக்காமல் விட்டவரை கடவுளே தண்டிக்கட்டும்னு விட்ருவீரா?
கடவுள் நம்பிக்கை இருக்குமானால், உமது உடமைக்கோ,குடும்பத்தாருக்கோ சேதம் உண்டாக்கியவன் மீது கூட காவல் நிலையத்தில் புகார் செய்யாமல் இருக்கனும், ஜொரம் வந்தால் ஆசுபத்திரி போகாமல் இருக்கனும், நாய் கடிச்சால் ரேப்பிஸ் வரும்னு பயப்படாமல் இருக்கனும், ஏன் எனில் நாயும் கடவுளின் படைப்பே, கடவுளின் படைப்பு ,இன்னோரு கடவுளின் படைப்பை எப்படி பாதிக்க முடியும், எல்லாம் பகவான் பாத்துப்பார்னு இருக்கோனும் அவ்வ்!
போய்யா போய் , பெருமால் கோயிலில் உண்டக்கட்டி வாங்கி துண்ணு, பொழப்பை ஓட்டும்,எதுக்கு பணம் ,காசுனு அயல்நாட்டுக்காரனுக்கு வேலை செய்து கஷ்டப்படுறீர் :-))
நச் நச் நச்
Delete//அதற்க்கு//
ReplyDeleteஇது என்ன தமிழ். கடலையை ருசித்து சாப்பிடும்போது பல்லில் கல் சிக்கினாற் போல இருக்கிறது.
@ பழனி. கந்தசாமி
Deleteபிழையைச் சரி செய்துவிட்டேன், இன்னும் பல பிழைகள் உள்ளன, அதன் சரியான வார்த்தையை எளிதில் ஊகிக்க முடியும், அப்படியே விட்டு விடுகிறேன், நன்றி...............
ரொம்ப நாள் கழித்து... ம்... மறுபடியும் ஆரம்பம்...
ReplyDeleteதொடரட்டும்...
//அரைவேக்காடுகள் எல்லோருக்கும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை ஒருபோதும் உணரவே முடியாது.//
ReplyDeleteகொஞ்சம் கூட அறிவில்லாத கால்வேக்காடுகள் எல்லோரும் இறைவன் இல்லை என்ற உண்மையை ஒருபோதும் உணரவே முடியாது.
//எப்போதெல்லாம் ஜடம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன், உயிர் இருந்தே தீரும். //
ReplyDeleteஒரு முறை நிலநடுக்கம் வந்து உம் குடும்பத்தினரும் உமக்கு நெருக்கமானவர்களும் அதில் பலியாயிருந்தால் இந்த வார்த்தைகளை நீர் கூறியிருக்க மாட்டீர். ம்ம்..ஒழுங்கு முறையில் இயங்குகிறதாம் ஒழுங்கு முறையில்!!!!!. நல்ல ஒழுங்கு முறை. கொஞ்சம் கூட உலக அறிவே இல்லாமல் இருக்கிறீர். டெய்லி கொஞ்சம் news paper படியுங்கள்.
ஒரு முட்டாள் இந்த பூமியை டிசைன் செய்திருந்தால் கூட இதை விட better ஆக design செய்திருப்பான்.
சரி, உம்முடைய வழிக்கே வருகிறேன்.
ReplyDeleteஇந்த அழகான ஒழுங்கு முறையில் இயங்கிகொண்டிருக்கிற பூமியை இறைவன் படைத்தான் என்றே வைத்துக்கொள்வோம்.
எந்த இறைவன் படைத்தான் என்பதை நீர் கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும்?
Choose the Best answer?
1. இந்துக்களின் இறைவனா?
2. கிறிஸ்தவர்களின் இறைவனா?
3. முஸ்லிம்களின் இறைவனா?
இதற்கு நேரடி தேவை. பதிலை நீர் கூறாவிட்டால் இந்த பதிவை delete செய்துவிடும்.
நீங்கள் உங்கள் பக்க கருத்தை நன்கு விளக்கமாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteஆத்திகம் – நாத்திகம் கருத்து மோதல்கள் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கின்றன.
நான் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவன் நம்மை மீறி ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்ந்தவன். வேறு விளக்கம் சொல்ல விரும்பவில்லை. N பக்கிரிசாமி அவர்களின் ஊக்கமது கைவிடேல் http://packirisamy.blogspot.com/2013/11/16.html என்ற பதிவில் இன்று, நான் சொன்ன கருத்துரையை இங்கு தருகிறேன்.
ReplyDelete// சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப ஒரு முனைக்குத் தள்ளப்பட்டவர்கள் தீவிரமாக எதிர் நிலைக்கு மாறிவிடவும் வாய்ப்புள்ளது. //
தீவிர ஆத்திகன் பின்னாளில் நாத்திகனாக மாறுவதும், தீவிர நாத்திகன் பின்னாளில் ஆத்திகனாக மாறுவதற்கும் இதுவே காரணம்.
Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_28.html
ReplyDeleteகருத்து மோதல்கள் நன்கு உள்ளன. தற்போதய நிலவரப்படி தாங்கள் மிக முன்னணியில் உள்ளீர்கள் என்பது புரிகிறது. பரமசிவம்
ReplyDelete@ Paramasivam
Deleteசத்தியம் ஜெயிக்கணும் நிச்சயம் ஜெயிக்கும். நான் ஜெயிப்பது தோற்பது பற்றி கவலையே இல்லை, வருகைக்கு நன்றி சார்....................!!