Sunday, November 10, 2013

புது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்

வணக்கம் மக்கள்ஸ்!!

சென்ற வாரம் ஸ்ரீநகர் [காஷ்மீர்] செல்லும் வழியில் புது டில்லியில் ஒரு நாள் தங்கினோம், அங்கே சுற்றிப் பார்த்த போது எடுத்த சில படங்களை இங்கே பகிர்கிறோம். புது தில்லி பகுதியில் எங்கு சென்றாலும் தூய்மை, பசுமை, போக்கு வரத்து நெரிசல் இல்லாத சாலைகள், ஆனால் பழைய தில்லி........  ம்ஹூம்........

புதுதில்லி விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பகர் கஞ்ச் செல்லும் போது.  சாதாரணமாக டாக்சியில் சென்றால் ஒரு மணி நேரம் ஆகுமாம், மெட்ரோவில் 20 நிமிடங்களில் சென்று விடலாம்.  டெல்லியின் பல முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மெட்ரோ இணைப்பு உள்ளது.  விமான நிலையத்திற்கு மட்டும் 150 ரூபாய்.  A/C செய்யப்பட்டுள்ளது, சில சமயம் Tunnel உள்ளேயும், சில சமயம் வெளியிலும் மெட்ரோ ரயில் பயணிக்கிறது, சுகமான பயணம்!!  ஜாலிக்காகவாவது ஒரு முறை இதில் பயணம் செய்யலாம்.


பிர்லா மந்திர்.  [பெருமாள் கோவில்!!]


ஜந்தர் மந்தர்: ஜந்தர் மந்தர் வானவியல் சம்பந்தப் பட்ட கட்டிடக் கலை, 1724-ல் மகாராஜா ஜெயசிங் -என்ற மன்னனால் கட்டப் பட்டது.

ஜந்தர் மந்தர் உள்ளே
இதுவும் ஜந்தர் மாந்தரில் உள்ள கட்டிடம் தான், அடுத்த படம் இதன் உள்ளே எடுக்கப் பட்டது.
மேலே உள்ள கட்டிடத்தின் உட்புறம். 
முன்னாள் பாரதப் பிரதமர்கள் இந்திரா, ராஜீவ் வசித்த அரசு வீடு, தற்போது நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டுள்ளது.  வீட்டின் உள்ளே அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய கட்டங்களில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள், அவர்களைப் பற்றி முக்கிய செய்திகள் கொண்ட செய்தித் தாள் பிரதிகள், அவர்களுடைய முக்கிய அறைகள், நூலகங்கள் என பல சங்கதிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.  ராஜீவ் பைலட்டாக சென்ற போது அவர் ட்ரிப் கையொப்பமிட்ட ஷிப்ட் ரெஜிஸ்டர் ஒன்றும் உள்ளது.  இந்த வீட்டின் வாசலில் தான் இந்திரா சுட்டுக் கொல்லப் பட்டார்.  அப்போது அவர் நடந்து சென்ற சில மீட்டர் தூரம் கண்ணாடியால் பாதுக்காக்கப் பட்டு வருகிறது.  அவர் சுடப் பட்டு விழுந்த இடம் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டும், அதன் முன்னர் ஒரு விளக்கு வைத்தும் காவலர்களால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
ராஜீவ் -சோனியா திருமணத்தின் போது .....

இந்திரா வீட்டின் வெளிப்புறம்........ 


பார்லிமென்ட் கட்டிடம் முன்பு.

 ஜனாதிபதி மாளிகை முன்னர்.
அதே இடத்தில் விளக்கு.........
குதுப்மினார்..........
குதுப் மினார்- பின்புறத்தில் இருந்து........
குதுப்மினார் உள்ளே உள்ள ஒரு வரலாற்று சின்னம் .........
தாமரை வடிவ வழிபாட்டுத் தளம் [Lotus Temple]..........எந்தவித சப்தமும் இல்லாமல் இரு...... இதுதான் இவர்கள் தத்துவமாம்..........!!
வெளியில் வரும்போது சட்டென திரும்பிப் பார்க்கையில் கண்ட காட்சி, அவசரம் அவசரமாக கேமராவை கொண்டு வா என கத்தி உடனடியாக படம் பிடித்தேன், முதல் படம் சரியாக வரவில்லை இது இரண்டாவது படம்.........
காந்தியடிகளின் சமாதியின் முன்பாக.........  அணையா விளக்கு ஆர்பாட்டமில்லாமல்................  மற்ற இடங்களைப் போல் அல்லாது அமைதியாக உள்ளது.   அதிக மக்களும் இல்லை,  பராமரிப்பும் மிக எளிமையாகவே உள்ளது.


இறுதியாக செங்கோட்டைக்குச் செல்லும்போது மணி ஏழு ஆகி விட்டது, பேருந்துக் காரர், "வேண்டுமானால் இறங்கி பார்த்துவிட்டு நீங்களாகவே ரூம் போய்ச் சேருங்கள்" என்றார்.   வேண்டாம்டா சாமி இன்னொரு முறை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டோம்........!!.

தில்லியில் எங்கு தங்கலாம்?

IRCTC இணைய தளத்தில் Ginger என்னும் தாங்கும் விடுதி உள்ளது, இது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. வசதிகள் அருமை, செலவும் குறைவு.  பட்ஜெட் விடுதிகள் வேண்டுமென்றால் அரகாஷன் சாலையில் பல உள்ளன.  அவற்றில் ஒன்றின் முகவரி கார்டு கீழே............

டெல்லியை சுற்றிப் பார்க்க பேருந்து சீட்டுகளுக்கு [நியாயமான விலையில் ].........இவர்களிடம் டேக்சியும்கிடைக்கிறது, ஃ போன் செய்தாலே போதும்.
இவர்களிடம் டேக்ஸி கட்டணம் மற்ற எல்லோரையும் விட குறைவு.  பயண டிக்கட்டுகள், தங்கும் விடுதிகள், பேக்கேஜ் டூர்கள் இன்னும் பலவற்றுக்கும்...........

27 comments :

 1. வணக்கம் மாப்ளே ,
  நலமா?

  காஷ்மீருக்கு எதுக்கு போகிறீர்? பெரிய ரோஜா பட அர்விந்த் சாமி போல சீன் போடவா? உம்மை ஒருத்தனும் கண்டுக்க மாட்டான் ஹி ஹி!!தீவிரவாதி கூட உம்மைக் கண்டால் ஓடி விடுவான்.

  புகைப்படம் எடுப்பது உமக்கு கை வந்த கலை!! வாழ்த்துகள்(நீரே எடுத்தீரா இல்லை மண்டபத்தில் யாரும் பிடித்துக் கொடுத்தாரா?? ஹி ஹி!)

  1. மெட்ரோ இரெயில் அருமை.முக்கியமான விடயம் சொல்லாமல் விட்டீரே! டிக்கெட் எடுக்காவிட்டால் எவ்வளவு அபராதம் ??ஹி ஹி

  2.பிர்லா மந்திர்( பெருமாள் கோயில்!!)சரி வேறு எங்கு போவீர்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! பிரசாதம் என்ன கொடுத்தார்கள்?

  3.வானவியலில் நம் பாட்டன் ஆர்யபட்டா காலத்தில் இருந்தே நாம் திறமைசாலிகள்தான்.இந்த ஜந்தர் மந்தர், அதன் வானவியல் கணக்கீடுகள் பற்றியே ஒரு பதிவு விளக்கமாக எழுத வேண்டுகோள். நீர் எழுதவில்லை என்றால் நான் எழுதுவேன் என் மிரட்டல் விடுக்கிறேன்.தற்போது நம்மிடம் தகவல் இல்லை.

  4.அப்புறம் காங்கிரஸ் குடும்பம் நமக்கு ஒத்துவராத விடயம். அதை விட்டு விடுவோம்.

  5.பாராளுமன்றம் மாளிகை, அதிபர் மாளிகை,குதுப்மினாருக்கு எலிவேச‌ன் ,சைட் வியு இருக்கு (மேலிருந்து) ப்ளான் ஏன் எடுக்கவில்லை. ஹி ஹி!!!

  6.தாமரை மூலமும்,அதனுள் சூரியன் அஸ்தமிப்பதையும் காட்டி என்ன அரசியல் சொல்ல வருகிறீர்? கூட்டணி வருமா?

  7.காந்தி சமாதி அமைதியாகத்தான் இருக்கும். காந்தி என்ன சாதிக் கட்சி த்லைவரா!!! பாதுகாப்பு போட்டு குருபூசை எல்லாம் நடத்த!! வெறும் தேசத்தந்தை அவ்வளவுதான் !!!

  குழந்தைகள் அழகு,துருதுரு !!!

  தொடர்ந்து எழுதும் !!!!

  வாழ்த்துக்கள்
  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. \\காஷ்மீருக்கு எதுக்கு போகிறீர்? பெரிய ரோஜா பட அர்விந்த் சாமி போல சீன் போடவா? உம்மை ஒருத்தனும் கண்டுக்க மாட்டான் ஹி ஹி!!தீவிரவாதி கூட உம்மைக் கண்டால் ஓடி விடுவான்.\\ போயிட்டு வரும் வரை மனதில் கிலி தான் மாமு. கடத்தல் சீன் படத்தில் தான் நல்லாயிருக்கும், நிஜத்தில் தாங்க முடியாது..........

   \\புகைப்படம் எடுப்பது உமக்கு கை வந்த கலை!! வாழ்த்துகள்(நீரே எடுத்தீரா இல்லை மண்டபத்தில் யாரும் பிடித்துக் கொடுத்தாரா?? ஹி ஹி!)\\ ஏதோ என்னை சந்தோஷப் படுத்த சொல்றீங்கன்னு மட்டும் புரியுது, நன்றி............

   \\1. மெட்ரோ இரெயில் அருமை.முக்கியமான விடயம் சொல்லாமல் விட்டீரே! டிக்கெட் எடுக்காவிட்டால் எவ்வளவு அபராதம் ??ஹி ஹி\\ டிக்கட்டோட ஒரு பிளாஸ்டிக் டோக்கனும் குடுக்கறாங்க, அதை போட்டாதான் வெளியிலே வர முடியும். நாங்க குழந்தையை தூக்கிகிட்டு மூணு டோக்கனை மட்டும் போட்டுட்டு வரப் பார்த்தோம், அங்கே இருந்த காவலர், நாலாவது டோக்கனையும் கண்டிப்பா போடச் சொல்லி பிடுங்கிகிட்டார்.

   \\2.பிர்லா மந்திர்( பெருமாள் கோயில்!!)சரி வேறு எங்கு போவீர்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! பிரசாதம் என்ன கொடுத்தார்கள்?\\ பஸ்சிலேயே உட்கார்ந்துகிட்டேன், போகவேயில்லை, குழந்தைகள் தங்கமணியோட போனாங்க.

   \\3.வானவியலில் நம் பாட்டன் ஆர்யபட்டா காலத்தில் இருந்தே நாம் திறமைசாலிகள்தான்.இந்த ஜந்தர் மந்தர், அதன் வானவியல் கணக்கீடுகள் பற்றியே ஒரு பதிவு விளக்கமாக எழுத வேண்டுகோள். நீர் எழுதவில்லை என்றால் நான் எழுதுவேன் என் மிரட்டல் விடுக்கிறேன்.தற்போது நம்மிடம் தகவல் இல்லை.\\ அய்யய்யோ, என்னால ஆவாது மாமு...........

   \\4.அப்புறம் காங்கிரஸ் குடும்பம் நமக்கு ஒத்துவராத விடயம். அதை விட்டு விடுவோம்.\\ எனக்கும் தான். இருந்தாலும் அங்க போனதும், பழைய சம்பவங்களோடு ஒப்பிட்டு, அந்த வீட்டைப் பார்க்கையில் ஒரு பிரமிப்பு வரவே செய்கிறது!!

   \\5.பாராளுமன்றம் மாளிகை, அதிபர் மாளிகை,குதுப்மினாருக்கு எலிவேச‌ன் ,சைட் வியு இருக்கு (மேலிருந்து) ப்ளான் ஏன் எடுக்கவில்லை. ஹி ஹி!!!\\ அங்கே போக நேரமில்லை மாமு, பஸ் காரன் 20 நிமிஷம் தான் குடுத்தான், துணிக்கடைக்கு ஒரு மணி நேரம் விட்டான், ஏன்னா கமிஷன் வருமே!!

   \\6.தாமரை மூலமும்,அதனுள் சூரியன் அஸ்தமிப்பதையும் காட்டி என்ன அரசியல் சொல்ல வருகிறீர்? கூட்டணி வருமா?\\ மாமு இது நானே யோசிக்கலையே!! எப்படித்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் ஐடியா வருது!! [கூட்டநிவந்த இந்த படத்தை நல்ல விலைக்கு வித்துடலாம்!!

   \\7.காந்தி சமாதி அமைதியாகத்தான் இருக்கும். காந்தி என்ன சாதிக் கட்சி த்லைவரா!!! பாதுகாப்பு போட்டு குருபூசை எல்லாம் நடத்த!! வெறும் தேசத்தந்தை அவ்வளவுதான் !!!\\ நிஜம் தான்.........

   \\குழந்தைகள் அழகு,துருதுரு !!!\\ நன்றி...........!!

   Delete
  2. பாகவதரே,

   என்ன திடிர்னு சிம்லா ஸ்பெஷல்?

   இப்ப குளிர்காலம் ஆச்சே , போய் கை,கால் உதறிக்கிட்டு என்ன செய்தீர்?

   பசங்க எல்லாம் உம்மை போல இல்லாமல் நல்ல சூட்டிகையா இருப்பாங்க போல தெரியுது, நன்று!

   பையன விட பொண்ணு ரொம்ப ஷார்ப்னு நினைக்கிறேன்,குறும்பு தெரியுது!

   படம் புடிக்க ரொம்ப மெனக்கெட்டு இருப்பீர்னு நினைக்கிறேன், குதுப்மினார் ஃபிரெம்ல முழுசா சிக்கலைனு அதுக்கிட்டக்க நின்னுக்கிட்டு நிறைய பேரு முக்குறத பார்த்து இருக்கேன் அவ்வ்.

   பார்லிமெண்டுக்கு ரொம்ப தூரமா இருந்து எடுத்தப்படம் போல தெரியுது, விட்டா நிலா தெரியிறா போலப்படம் எடுத்துட்டு நிலவுக்கு முன்னால்னு சொல்லுவீர் போல அவ்வ்!

   # பசங்களுக்கு வெஜிடேரியன் போடுறேன்னு வயித்த காய வச்சிட்டு இருக்கீர் போல சிக்கன் ,மட்டன் என தெம்பான உணவா வாங்கிக்கொடுத்து உடம்பு தேர்த்தும் , பையன் ரொம்ப மெல்லிசா உடைஞ்சிடுறாப்போல இருக்காப்படி!

   Delete
  3. \\என்ன திடிர்னு சிம்லா ஸ்பெஷல்?\\ நாங்க போனது சிம்லா இல்லை, ஸ்ரீநகர்..........திடீர்னு இல்லை, பல வருட கனவு, பயந்த கனவு, நிறைவேறியுள்ளது!! அது குறித்த பதிவு விரைவில்.......... [ உமது தலையெழுத்து எதையெல்லாம் படிக்க வேண்டியிருக்கு!!]

   \\இப்ப குளிர்காலம் ஆச்சே , போய் கை,கால் உதறிக்கிட்டு என்ன செய்தீர்?\\ இது தான் சரியான தருணம், ஆப்பிள்களும் இருந்தன, ஐஸும் உருவாக ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 11 -ம் தேதி சென்ற எங்கள் நண்பர்களால் ஐஸ் பார்க்க முடியவில்லை.

   \\பசங்க எல்லாம் உம்மை போல இல்லாமல் நல்ல சூட்டிகையா இருப்பாங்க போல தெரியுது, நன்று!

   பையன விட பொண்ணு ரொம்ப ஷார்ப்னு நினைக்கிறேன்,குறும்பு தெரியுது!\\ நன்றி.

   \\படம் புடிக்க ரொம்ப மெனக்கெட்டு இருப்பீர்னு நினைக்கிறேன், \\ அதெல்லாம் ஒண்ணுமில்லை ,நல்ல கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நன்றாக வரும்.

   \\குதுப்மினார் ஃபிரெம்ல முழுசா சிக்கலைனு அதுக்கிட்டக்க நின்னுக்கிட்டு நிறைய பேரு முக்குறத பார்த்து இருக்கேன் அவ்வ்.\\ இப்போ வரும் கேமராக்களில் Wide Angle கவர் ஆகுது, பிரச்சினையில்லை.

   \\பார்லிமெண்டுக்கு ரொம்ப தூரமா இருந்து எடுத்தப்படம் போல தெரியுது, விட்டா நிலா தெரியிறா போலப்படம் எடுத்துட்டு நிலவுக்கு முன்னால்னு சொல்லுவீர் போல அவ்வ்!\\ பஸ் காரன் விட்ட இடத்தில் இது தான் முடிந்தது, அது பக்கமா இருக்கணும்னு பார்த்திருந்தா, மீதி டூர் அம்பேல்.................!!

   \\# பசங்களுக்கு வெஜிடேரியன் போடுறேன்னு வயித்த காய வச்சிட்டு இருக்கீர் போல சிக்கன் ,மட்டன் என தெம்பான உணவா வாங்கிக்கொடுத்து உடம்பு தேர்த்தும் , பையன் ரொம்ப மெல்லிசா உடைஞ்சிடுறாப்போல இருக்காப்படி!\\ அதுங்க நொறுக்கு சாப்பிடுவது போல சாப்பாடு சாப்பிடுவது இல்லை. சாப்பிடறதுக்கே லஞ்சம் கேட்குதுகள், அதுவும் நொறுக்கு, என்னத்த சொல்ல.............!!

   Delete
 2. தகவல்களுக்கு நன்றி.லோட்டஸ் டெம்பிள் படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. @வடுவூர் குமார்

   Thanks Kumar!!

   Delete
 3. இப்போதுதான் பார்த்தேன். படங்கள் மிகவும் நன்றாக உள்ளன. குழந்தைகளும் நன்றாக உள்ளனர். நன்கு ரசித்து டெல்லியையும் சுற்றுப்புறங்களையும் சுற்றிப்பார்த்து அதன் அனுபவங்களை ஏந்தி வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாய்ப் பந்தி வைக்கப்போகிறீர்களா அல்லது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய்க் கசியவிடப் போகிறீர்களா?
  இனிய பயணத்தைப் பகிருங்கள்......

  \\இந்த வீட்டின் வாசலில் தான் இந்திரா சுட்டுக் கொள்ளப் பட்டார்.\\
  'சுட்டுக் கொல்லப்பட்டார்' என்று இருக்கவேண்டும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. டெல்லி குறித்து இது ஒரு பதிவு தான் சார், [அதுக்கும் மேல போனா நம்ம ஆளுங்க பொறுமை இழந்துடுவாங்க!!] தவறை திருத்தி விடுகிறேன்!!

   Delete
 4. [இந்த] சூரியன் தாமரையை மலர விடாது!

  ReplyDelete
  Replies
  1. @ நம்பள்கி

   தாமரை கட்சியுடன் கூட்டணி வைத்து பெரிசா லாபம் ஒன்னும் பார்க்க முடியாது..............

   Delete
 5. புது தில்லி -அழகான படங்கள் சென்றுபார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள். பிள்ளைகள் அழகு. Lotus Temple படத்தை பார்த்தால் ஆஸ்திரேலியா சிட்னி ஓபரா ஹவுசின் சாயல் தெரியுது.
  http://en.wikipedia.org/wiki/File:Sydney_Opera_House_Sails.jpg

  ReplyDelete
  Replies
  1. தங்கமணி இது ஆஸ்திரேலியாவில் உள்ள கட்டிடத்தின் மாடல் என்று சொல்லிக் கொண்டே வந்தார், பின்னர் தான் அது புரிந்தது, வேகநரி..............!!

   Delete
 6. நான் ஒரேயொரு முறை டெல்லி சென்றிருக்கிறேன்... ஆனால் சுற்றிப்பார்க்க முடியவில்லை... விமான நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரயில் ரூட் மட்டும் தனியார் வசமிருப்பதால் அதிக விலை...

  ReplyDelete
  Replies
  1. Thanks for the clarification Philosophy!!

   Delete
 7. படங்கள் எல்லாம் நல்லா எடுத்திருக்கிங்க...! குழந்தைகள் அழகா இருக்காங்க!

  ReplyDelete
 8. நான் சென்ற வருடம் டெல்லி வந்து இருதேன் . மீண்டும் டெல்லி சுற்றி பார்த்த திருப்தி . நன்றி

  படங்கள் எல்லாம் நல்லா எடுத்திருக்கிங்க...! குழந்தைகள் அழகா இருக்காங்க!

  ReplyDelete
  Replies
  1. Thanks for visiting my page Gunasekaran!!

   Delete
 9. டெல்லி சுற்றுப் பயணம் அருமை.

  ReplyDelete
 10. டெல்லி சுத்தி காட்டியது படங்கள் அருமை.

  ReplyDelete
 11. பெயரிலி பதிவில் நீங்க போட்டுள்ள விமர்சனத்தைப் படித்து இன்னமும் சிரித்துக் கொண்டேயிருக்கின்றேன். நினைவில் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் !............ஜோதிஜி.!! அதென்னது .விநோதமா எதைஎதையோ .எழுதுறாரு, ஒன்னும் விளங்க மாட்டேங்குது.......... அது மாதிரி வார்த்தைகளை யாரும் கையாள்வதில்லை, அதான்!! இப்போ தான் உங்க சத்து மாவு பதிவு பாத்துகிட்டு இருக்கேன்!!

   Delete
  2. Please wait a minute, I will give you the link!!

   Delete
  3. http://wandererwaves.blogspot.in/2013/11/blog-post_6272.html

   Delete
 12. இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லி சென்று வந்தேன். அனைத்தும் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்.டெல்லியில் அஷ்ரதன் டெம்பிள் பார்த்தீர்களா? பிரமாதமாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அக்ஷர்தாம் கோவில் காட்டுறோம்னு சொல்லி ஏமாத்திட்டானுங்க முரளி. 26 இடம் காட்டுறோம்னு சொன்னானுங்க, ஏழு எட்டு இடம் தான் காமிச்சானுங்க. இந்தியாகேட் கிட்ட கூட நிறுத்தவில்லை, பஸ் ஓடும்போதே இது தான் பார்த்துகோன்னுட்டானுங்க pakki pasanga :(. ரெட் ஃ போர்ட்க்கு night ஏழு மணிக்கு கொண்டு போய் விட்டுட்டு பாத்துட்டு நீயா வீடு போய்ச் சேருன்னானுங்க,வேணாம்டா இன்னொரு தடம் பார்த்துக்குறோம்னு சொல்லிட்டு விட்டுட்டோம்.............:((

   Delete