Monday, September 2, 2013

டாக்டர்......... சுவரு அசையுது........!!

வணக்கம் மக்கள்ஸ்,
 இன்று Facebook கில் உலாத்திக் கொண்டிருக்கும் போது சில சுவராஸ்யமான விஷயங்கள் தென்பட்டன.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
 
இந்தப் படத்தைப் பாருங்கள், சுவர் அலை போல அசைகிறதா!! நன்றி: Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
நம்மாளுங்க ஹைக்கூ எழுதுவாங்க, [எழுதி படிக்கிறவங்களை சாகடிப்பாங்க என்பது வேறு விஷயம்].  ஒரே வரியை மூணு வரியாக மடக்கி மடக்கி எழுதினால் அது ஹைக்கூ என்ற ரீதியில் தான் பலர் எழுதுகின்றனர்.  [சிலர் நாலஞ்சு வரியும் கூட எழுதிட்டு இதுவும் ஹைக்கூன்னு கணக்கு கண்பிப்பாங்க!!]  ஹைக்கூ எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும்.  அந்த வகையில் அழகான சில ஹைக்கூக்கள் இதோ:
 
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..

* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
ஹைக்கூக்களுக்கு நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்


என்ன கற்பனை..........!!  
நன்றி:
Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
  இறுதியாக:  சரி தூக்கம் வருது, தூக்கம் பத்திய ஒரு டிப்.
காய்கறிகள்

காய்கறிகளில் ஊட்டசசத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கலாம். ஆனால் இரவில் நன்கு தூங்க நினைத்தால், ஒருசில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். உதாரணமாக, வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.
 மேலும் படிக்க: நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்
மீண்டும் சந்திப்போம்.............!! 
வணக்கம் மக்கள்ஸ்!!



15 comments:

  1. ஹைக்கூ விதிகளை பின்பற்றாவிட்டாலும் சிலர் எழுதுவது நன்றாகவே இருக்கிறது. ஆனால் அப்படி எழுதுவதை ஹைக்கூ என்று சொல்லாமல் இருக்கலாம்

    ReplyDelete
  2. நீங்கள் எழுதிய்ள்ள ஹைக்கூக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன.
    தூக்கம் வராதோர் சங்கம் ஆரம்பித்தால் நான் தலைவியாவேன் என்பதில் சந்தேகமேயில்லை. அதனால் நீங்கள் கொடுத்த சுட்டியை படித்து தூக்கம் வருகிறதா பார்க்கிறேன்>

    ReplyDelete
  3. முதியோர் இல்லத்தில்... மனதை கலங்க வைத்தது...

    என்னவொரு (இது தான்) கற்பனை...!!!

    ReplyDelete
  4. ஹைக்கூ எல்லாமே நல்லாருக்கு ரசித்தேன்! ஆபிஸில் தூக்கம் வராமல் இருக்க பதிவு போட்டால் நல்லாருக்கும்..

    ReplyDelete
  5. தூக்கம் வர டிப்ஸ்களை
    தூங்காமல்
    பதிவேற்றினார்
    ஜெயதேவ்...ஆச்சர்யகுறி

    பேஸ்புக் வச்சி தான் இப்ப வண்டி ஓடுதா? :)))

    ReplyDelete
    Replies
    1. \\பேஸ்புக் வச்சி தான் இப்ப வண்டி ஓடுதா? :)))
      \\
      ஏதாவது ஆட்டோ அது இதுன்னு வண்டி ஓட்டினா காசாவது கிடைக்கும், இந்த வண்டியை ஓட்டி கிடைக்கப் போவது என்ன?!! சில விஷயங்களைப் படிக்கும்போது அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோணும், அதனால் பகிர்ந்தேன்!! எழுதனும்னு தோணினா எழுதுவோம், இல்லைன்னா சும்மனே இருப்போம், நஷ்டம் என்ன??!!

      Delete
  6. சிறப்பான பகிர்வு!ஹைக்கூக்கள் அருமை! இந்த வகை ஹைக்கூக்கள் சென்ரியு என்று சொல்வார்கள்! என்னுடைய ஹைக்கூக்கள் படித்திருக்கிறீர்களா? ஒருமுறை என் தளம் வந்து செல்லலாமே? நன்றி!

    ReplyDelete
  7. அருமையா ஹைக்கூ கவிதைகள், இதை படிக்கும்போது சுஜாதா சொன்னதுதான் யாபகம் வருகிறது..... அப்புறம் அந்த கூழாங்கல் போட்டோ அருமை சார் !

    ReplyDelete
  8. நிம்மதியா தூங்க மாணவர்களுக்கு டிப்ஸ்:
    பிடிக்காத பாட புத்தகத்தை எடுங்கள் ; பத்து நிமிடத்தில் தூக்கம் உத்தரவாதம்.!
    இன்று இரவு நன்றாக தூங்கவேண்டுமேன்றால், நாளை காலை எக்ஸாம் என்று நினைtத்துக் கொள்ளுங்கள். ஆள் வைத்து அடித்து எழுப்பினா தான் உண்டு.

    இது என் அனுபவம்; எங்கம்மா என்ன அடிச்சே [literally ]தான் எழுப்புவார்கள் எக்ஸாம் இருக்கும் நாட்களில்..!

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்! முதுமக்கள் தாழி பற்றி கலாகுமரன் (இனியவை கூறல்) அவர்களின் பதிவு ஒன்றில் தாங்கள் கருத்துரை தெரிவித்து இருந்தீர்கள். அந்த பின்னூட்டக் கருத்தினை எனது இப்போதைய பதிவில் கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும் http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html மேற்கோள் காட்டியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது எனது பதிவிற்கு வந்து கருத்துரை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. சில ஹைகூக்கள் தலைப்பு செய்தி வாசிப்பது மாதிரியே இருக்கு.

    ReplyDelete
  11. // ஹைக்கூ எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும். //

    ஹைக்கூ மூன்று வரிக் கவிதையின் இலக்கணம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  12. // ஹைக்கூ எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும். //

    ஹைக்கூ மூன்று வரிக் கவிதையின் இலக்கணம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  13. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete