Sunday, July 14, 2013

பாம்புகள் பின்னிப் பிணைந்து ஆடுவது எதற்கு?

வணக்கம் மக்கள்ஸ்!!

இன்றைய  தினமலரில் ஒரு படத்துடனான செய்தியைப் படித்தேன்.  அது பாம்புகளைப் பற்றியது.  கீழே படமும் செய்தியும்.

விளையாடிய பாம்புகள்:
திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஜம்மனை பள்ளத்தில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி, பிணைந்து விளையாடிய காட்சியை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்தச் செய்தியில் பாம்புகள் "விளையாடி"யாதகச் சொல்லியுள்ளார்கள். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அவை இரண்டும் காதல் போதையில் களிநடனம் செய்து கொண்டிருக்கின்றன என்றுதான் நினைக்கிறோம்!!  காரணம் அவை ஒன்றோடொன்று சுற்றி பிணைதல், அப்படியே உயரே எழுப்புதல் பின்னர் தரையில் விழுதல் என ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருக்கும்.  இதை எங்கள் ஊரில் நாங்கள் நேரில் காண வாய்ப்பு கிடைத்தது.  இருபது பேருக்கும் மேல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தாலும் அவை தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கண்டுகொள்ளவேயில்லை.  இதையெல்லாம் வைத்து அவை சல்சா செய்து கொண்டிருக்கின்றன என தப்புக் கணக்கு போடுகிறோம்.  அது நிஜம்தானா?


இல்லவே  இல்லை!! உண்மையில் அந்த இரண்டு பாம்புகளில் ஒன்று கூட பெண் பாம்பு இல்லை, இரண்டுமே ஆண் பாம்புகள்தான்!! அடக் கருமமே......  அப்போ....  அவனா நீயி.... வேலையிலா அவை ஈடுபட்டிருக்கின்றன?  அதுவும் இல்லை!!  அவை இரண்டும் ஒரு பெண் பாம்புடன் யார் இணைவது என்று தீர்மானிப்பதற்கான வீர விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.  அதுசரி, இதில் வெற்றி தோல்வி எப்படி தீர்மானிக்கப் படும்?  இவ்வாறு உடலை பிணைத்து உயரே எழும்பும் போது எந்தப் பாம்பின் தலை மேலே இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாகும்.  இது பல ரவுண்டுகளுக்கப்புரம் தீர்மானிக்கப் படுமோ என்னவோ!!  பின்னர் தோல்வியடைந்த பாம்பு, நேர்மையாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இடத்தை காலி செய்யும், வெற்றி பெற்ற பாம்பு ஒளிந்திருக்கும் பெண் பாம்பை சொந்தம் கொண்டாடி அதனுடன் இணைந்து இனவிருத்தியில் ஈடுபடும்.  சிங்கம், யானை, மான், ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகத்தில் இருந்து அலிகேட்டர் [மனிதன்.......  ஹி........ஹி........ஹி........] வரை இதே கதை தான் போல!!



மேலும் படிக்க:

1. Rat snakes' combat dance

2. Male snakes' charming 'mating ritual'


10 comments:

  1. ஓஹோ...!

    பாம்பின் "நேர்மை" பிடிச்சிருக்கு...!

    ReplyDelete
  2. என்னது வீரவிளையாட்டா....

    ரைட்டு... அப்படி பார்த்தா ஆண் நல்லபாம்பு இருக்குக்குதானே போட்டி வரனும்...

    ஏன் ஆண் சாராப்பாம்பு போட்டிக்கு வருது...

    ReplyDelete
    Replies
    1. சகோ சவுந்தர் சாதிப் பிரச்சினை பாம்புகளிடன் கிடையாது!!!
      நன்றி!!

      Delete
  3. //திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஜம்மனை பள்ளத்தில் இரண்டு பாம்புகள் //

    பஸ்ஸ்டான்ட் அருகேயே இப்படி பெரிய பாம்புகள் இருக்குதா? திருப்பூர் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டேன்.

    ReplyDelete
  4. மாப்ளே நீர் கில்லாடிதான்!!

    /அவனா நீ//

    ஹீ ஹி

    நல்ல பதிவு.

    வாழ்க வளமுடன்!!

    நன்றி!!!

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்குத்தான் கோப்பை.

    ReplyDelete
  6. என்னாது அவனா நீ மேட்டர் இல்லையா? இருந்தாலும் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அறியாத தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. பாம்பு நடனத்தை வேடிக்கை பார்க்கிறோம்னு ரொம்ப கிட்ட போயிட்டா , பக்கத்துல ஒளிஞ்சுக்கிட்டுஇருக்குற பெண்பாம்பு போட்டுத்தள்ளிடும்......ஜாக்கிரதை.......

    ReplyDelete
  9. தகவல்கள் மற்றும் படங்கள் அருமை...

    ReplyDelete