இன்று
நியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா?
இதில் நியூட்டன் கார் ஓட்டிக் கொண்டு சென்றதாக சொல்லப் படுகிறது. இதே கதையை ஐன்ஸ்டீனை வைத்தும் பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இது நிஜமாகவே நடந்ததா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏதோ சுவராஸ்யமான கற்பனை கதை தோன்றினால் அதை வரலாற்றில் புகழ் பெற்றவர்கள் பெயரைப் போட்டு கதையாக்குவதை பலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது!! அப்படி யோசித்த போது கருணின் கதையில் நமக்கு ஒரே ஒரு லாஜிக் ஓட்டை மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நியூட்டன் வாழ்ந்த காலம் 1642-1727. ஆனால், வணிக ரீதியான கார்கள் 1888-ல் தான் பென்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகவும், அதற்க்கு முன்னர் நியூட்டன் மறைந்து 50 வருடங்கள் ஆன பின்னர் 1700 களின் பிற்பாதியில் தான் நீராவி வண்டிகளே இருந்ததாகவும் வரலாற்றுப் பக்கங்கள் சொல்கின்றன. அப்புறம் எப்படி நியூட்டன் காரில் போயிருப்பாரு?
ஆனால் கருண் கொஞ்சம் ஜாக்கிரதையாவே எழுதியிருக்கார். கார் என்று ஆங்கிலத்தில் எழுதினாலும், ட்ரைவரை கடைசி வரை சாரதி என்றே குறிப்பிட்டிருக்கிறார். கேட்டால் குதிரை வண்டியில் போனார் என்று சொல்லிவிடலாம். அதுவும் கார் தானே!! ஹா..........ஹா..........ஹா..........
முழு கதை:
நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் ...! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.
ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும்
தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது
கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார். தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை
ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார்.
பல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் .. விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க .. நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் .... அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார்.
பல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் .. விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க .. நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் .... அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார்.
பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...
ரெடி ஸ்டார்ட் சண்டை. எங்களுக்கும் பொழுது போகனும்ல
ReplyDelete@ ராஜி
Deleteஅங்க உட்கார்திகிட்டு எந்த செம்பு எப்படா அடி வாங்கும்னு பார்த்துகிட்டே இருப்பீங்க போலிருக்கு!!
வருகைக்கு நன்றி ராஜி!!
இந்தக் கதை ஐன்ஸ்டீனை மையமாக வைத்துத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் அதை என் பதிவில் எழுதி இருக்கிறேன். இவருடைய காலத்தில் நடந்திருக்கக் கூடும். என்றாலும் இது போன்ற கதைகள் சுவாரசியத்திற்காக புனையப்பட்டவையாகத் தான் இருக்கும்
ReplyDeleteஎன்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்
சம்பவம் உண்மை.. ஆனால் நடந்தது நீயுட்டனுக்கு அல்ல. விஞ்ஞானி அல்பேர் ஐயன்டின் அவர்களுக்கு தான்.. இப்படி கூட வரலாற்றை மாற்ற துணிந்து விட்டார்கள் இவர்கள்...
ReplyDeleteஇதைவிட புளுகுகளை என் பள்ளியில் கேட்டு இருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் தாத்தா இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்றாராம்; அவர் (surname; இங்கே last name) பெயர் மருவித்ததான் ஷேக்ஸ்பியர் என்று ஆனதாம்.
ReplyDeleteஷேக்ஸ்பியரின் தத்தா பெயர்: சிகப்பு ஐயர்:
சிகப்பு ஐயர் -- சிகப்பையர் ---ஷேக்ஸ்பியர்...!
புளுகுவதர்க்கும் பீத்த பெருமை பேசவும் சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன?
இது எப்பூடி இருக்கு!
ஆட்டோமொபைல்களின் வரலாறு 1769 இல் ஆரம்பிக்கின்றது.அந்த ஆண்டில் தான் நீராவியால் இயஙுங்கும் wagon கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது நியூட்டன் இறந்து 42 ஆண்டுகள் கழித்துத் தான் மேற்கூறிய வண்டிகள் உருவாக்கப்பட்டன.எனவே நியூட்டனின் காலத்தில் கார்கள் என்பதற்கு சாத்தியமில்லை
ReplyDeleteஏதாவது ஒரு முடிவு செய்யுங்க...!
ReplyDeleteஐன்ஸ்டீனை வைத்து இந்த கதையை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சுவையான கதை! லாஜிக் மறந்து சிரிப்போம்! நன்றி!
ReplyDeleteஉங்களுடைய தளத்தில் physics எளிதாக விளக்கும் you tube URL ஒன்று கொடுத்திருந்தீர்கள். இப்பொழுது உங்கள் தளத்தில் பார்த்தால் எனக்குத் தெரியவில்லை. ஆட்சேபனை இல்லையென்றால் என்றால் எனக்கு மெயிலில் அனுப்புவீர்களா? (rajisivam51@gmail.com)
ReplyDeleteஎன் பேரனுக்கு விளக்குவதற்காகத்தான் கேட்கிறேன்.நன்றி.