தேதி: 14 நவம்பர் 2013
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார். கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம் வரவில்லை!!
உடனே ராஜேஷ் குமார் 24
மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM
ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப்
படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம்
வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க,
வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று
தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.
பின்னர், எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார் பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள் பெற்றனர்.
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம் எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச் சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று வந்தனா கேட்டிருக்கிறார்.
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும், PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று திருப்பி அடித்திருக்கின்றனர்.
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம் எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள் கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில் அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு காண்பித்திருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா திரும்ப கிடைக்காது.

நல்லாவுல இருக்கு கூத்து.... இது நடந்தது 14 நவம்பர் 2013 தேதியா ?
ReplyDeleteஆமாம் கில்லர்ஜி, இத்தனை வருஷனும் கன்சுமர் கோர்ட்டு கச்சேரின்னு அலைஞ்சிருக்காங்க, ரெண்டு பக்கமும் இது ஒரு கவுரவ பிரச்சினை யாரும் கடைசிவரை விட்டுக்கொடுக்கவேயில்லை. விதிமுறைகளை மீறியதால் வாடிக்கையாளருக்கு இழப்பாயிடுச்சு.....
Deleteஇப்படிச் சொன்னா ஆச்சா? அதான் ஏடிஎம் ல பணம் வரலையே? அதையாவது கொடுத்துருக்கணும்ல?
ReplyDeleteநமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்
அனைவரும் அறியவேண்டிய தகவல்.
ReplyDeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News