Saturday, December 26, 2015

பீப்........ வந்தது வெள்ளச் சேதம் போச்சு.......டும்......டும்......டும்......


நம்ம வீட்டு சுவற்றில் திரியும் பல்லிகளின் வாலுக்கு ஒரு சிறப்பு குணம் உண்டு.  வேணும் போது பல்லியே கட் பண்ணி போட்டுடும், கொஞ்ச நாளில் திரும்பவும் அது வளர்ந்திடும்!!


அது சரி,  அந்த மாதிரி கட் பண்ணி போடும்அவசியம் பல்லிக்கு எப்போது வரும்?  பூனை மாதிரி அதை பிடிச்சு சாப்பிடும் பிராணிகள் மூலமா வரும்.  




பூனைகள் அவற்றை துரத்தினால், அந்த நேரத்தில தன்னோட வாலை  பல்லி கட் பண்ணி போட்டுட்டு ஓடிடும்.  அந்த வால் கொஞ்ச நேரம் துள்ளிக்கிட்டு கிடக்கும்.  அங்க வரும் பூனை அந்த வாலை காலால் சீண்டி விளையாடிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பல்லி எஸ்கேப்!!



இந்த பதிவுக்கும்,  ஊடகங்களும், மக்களும்  மழையால் வந்த பிரச்சினைகள் அத்தனையும் மறந்துவிட்டு பீப் சாங் பற்றியே பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!  ஜெயலலிதா பல்லி என்றும், பீப் சாங் பல்லி வால் என்றும்,  அரசு மழைப் பிரச்சினையை கையாண்ட விதத்தால் மக்களின் கோபம் பூனை என்றும் சம்பந்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.







4 comments:

  1. நீங்கள் கேட்டுக்கொண்டபடியே ஒன்றுக்கொன்றை சம்பந்தப்படுத்திப் பார்க்கமாட்டோம்.

    ReplyDelete
  2. சரியான கோணத்தில் கொண்டு வந்தீர்கள் நண்பரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. புரிஞ்சிடுச்சு .அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  4. புரிஞ்சிருச்சு! புரிஞ்சிருச்சு!

    ReplyDelete