\\சிறார்களின் தண்டனை வயது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பு
#அப்ப 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா....\\ ன்னு நண்பர்கள் கேட்கிறார்கள்.
தப்பு
செய்பவர்கள் ஒருபுறம், மறுபுறம் குற்றம் சுமத்துபவர்கள். டெல்லியில் அந்த
பெண்ணை கொலை செய்தவனை நினைத்தால் இன்னமும் வயதை குறைத்து விடலாம் என்று
தோன்றினாலும் நம்ம போலீஸை நினைத்தால் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது.
ஐந்து வயது குழந்தை மீது கஞ்சா வழக்கு பதிந்தனராம். இன்னொரு வழக்கில் ஒரு
வயது குழந்தை மீது ஏதோ குற்றச் சாட்டு, கைது செய்து வழக்கு பதிவு செய்ததாக செய்தித் தாட்களில் படித்தேன். இந்த மாதிரி செய்திகளைப் படித்த
போது பல நாட்கள் மன நிம்மதியின்றி தவித்தேன். ஒரு வயது, ஐந்து வயது குழந்தைகளுக்கெல்லாம் என்ன
தெரியும், அவர்களை அவ்வாறு செய்ய ஒருத்தருக்கு எப்படிப் பட்ட கல் நெஞ்சமாக இருக்கும்? #அப்ப 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா....\\ ன்னு நண்பர்கள் கேட்கிறார்கள்.
எனவே எதற்கும் ஒரு எல்லை கோடு அல்லது வரையறை உண்டு. அவ்வாறு வரையறுத்த பின்னர் அதை மீற முடியாது, அது தான் சட்டம். மன்னர்கள் காலத்தில் சட்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும் மன்னனே விசாரித்து காலம், இடம், குற்றவாளி என பல கோணங்களில் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினான். தற்போது அது சாத்தியமில்லை. 16 வயதுக்கு ஒரு நாள் முன்னாடி அவன் கற்பழித்தாலும் தையல் மெஷீனும், 10 000 ரூபாயும் கிடைக்கும்!!
இது யோசிக்க வேண்டிய விடயம்தான் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 2
குற்றங்களின் தன்மையைப் பொறுத்துத்தான் தண்டனையோ விடுதலையோ இருக்கவேண்டுமே தவிர வயதைப் பொறுத்து அல்ல என்ற முடிவுக்கு நாடும் சட்டங்களும் வருமா என்ன?
ReplyDeleteஒரு கொடூர மிருகம் தான் வயசில குறைந்தவன் என்று சொல்லி வெளியே வருகிறது.
ReplyDeleteஇளையராஜாவை மற்றவங்க கண்டித்து கொண்டிருக்க,ஒரு மிருகத்தின் விடுதலையை கண்டித்த உங்களுக்கு நன்றி.