சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது. உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது. ரைட் கிளிக், லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.
நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது...... ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!
பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன. அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன. இந்த ரைட் கிளிக், லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.
எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும். காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும். இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள். படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.
How to Bypass Right Click Block on Any Website
இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம். இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.
"RightToClick" என்ற ADD-ON ஐ Firefox Browse-ல் நிறுவ வேண்டும். எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த இணைய பக்கதிற்குச் சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.
சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, "RightToClick" -ஐ நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.
நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும். காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம். இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.
இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும். நன்றி.............!!

வணக்கம் சகோ நலமா ? பானையை போட்டு உடைச்சீட்டீங்க போலயே.. நல்ல காரியம் கடைசியில் சொன்னீர்களே... பிறர் படைப்பை காஃபி செய்யாதீர்கள் என்று அதைத்தான் செய்வார்கள் சிலர்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி - கில்லர்ஜி
தமிழ் மணம் 2
வாங்க கில்லர்ஜி. உங்க பதிவில் பின்னூட்டம் போட நான் இந்த டெக்னிக்கை பயன்படுத்தவில்லை, அது இன்னமும் சீக்ரெட் தான்!!
Deleteதொழில்நுட்பத்தகவல் என்றாலும் சிலருக்கு ரொம்ப உதவும்!
ReplyDeleteஆதரவுக்கு நன்றி ‘தளிர்’ சுரேஷ்!!
Deleteசெம வாத்யாரே:)
ReplyDeleteநன்றி ராஜ நடராஜன். எங்கே உங்க நண்பர்......? அதான் அந்த பிசினோட ரசிகர்? பிசினையே வேற எவனோ ஓட்டிகிட்டு போகப் போறான் இவரு இன்னமும் ஆளையே காணோம்?!!
Deleteகில்லர்ஜி வருத்தப் பட காரணம் இருக்கிறது ,அவர் தளத்தில் ,ஒரு வரியை எடுத்து ,அதை கமெண்ட் செய்ய முடியாது !இனி கவலையில்லை ....
ReplyDeleteகோடு கிழிச்சீட்டீங்க ,நான் ரோடு போட்டுக்கிறேன் :)
@ Bagawanjee KA
Deleteதொழில் இரகசியத்தை எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கக் கூடாது!!
//இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோருவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.//
ReplyDeleteஇதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கருத்துகள் எப்படி ஒருவரின் தனி உடமையாகும்? பிறக்கும்போதே அவர்கள் அந்தக் கருத்துகளுடன்தான் பிறந்தார்களா? வளரும்போது அவர்கள் பிறருடைய கருத்துக்களைக் காப்பி அடித்துத்தானே வளர்ந்தார்கள். அப்பறம் ஏன் அவர்கள் வளர்ந்த பிறகு என் கருத்துகளைக் காப்பி அடிக்காதே என்று சொல்வது? இது சரியாகப் படவில்லையே? :)
@ பழனி. கந்தசாமி
Deleteஅருமையான கேள்வி, ஆனா இதை நான் உங்களுக்கு சொல்லித் தருனுமாங்கிறது தான் சற்றே உறுத்துது!!
இப்போ ஒரு விவசாயி வருடம் முழுவதும் நிலத்தை பண்படுத்தி அதில் பழங்கள், காய்கறிகள்னு விளைய வச்சிருக்காரு. நீங்க பாட்டுக்கு அவரு வயலுக்குள்ள நுழைஞ்சு பழங்கள் எல்லாம் பறிச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்கும் ஒரு பை நிறைய காய்கறியைப் பறிச்சிட்டு கிளம்பறீங்க. அப்போ அந்த விவசாயி வந்துடறாரு. என்னய்யா இப்படி பன்றீங்களேன்னு பரிதாபமா ஒரு கேள்வி எழுப்புறார். அவரைப் பார்த்து, "ஏன்யா சூரியனும், மண்ணும் நீ பிறக்கறதுக்கு முன்னாடியே இருந்துச்சு, மழை பெய்ய நீ ஒன்னும் காசு குடுக்கல. அதனால இதெல்லாம் யாரு வேணுமின்னாலும் பறிச்சு தின்னலாம், தப்பென்ன?" அப்படின்னு அவர் தலையில இடி விழுவது போல ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டிங்கன்னு வையுங்க, அவர் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?!!
சரி இப்போ மேட்டருக்கு வருவோம். ஒரு சினிமா பாட்டையே எடுத்துக்குவோம். கண்ணதாசன், வைரமுத்து பாடல்கள் எல்லாத்தையுமே எடுத்துக்குங்க. அதிலிருக்கும் வார்த்தைகள் எதுவுமே நமக்குத் தெரியாதது இல்லை, அவற்றை அவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. சொல்லப் போனால் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளே. "மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி" இதில் எந்த வார்த்தை நாமக்குத் தெரியாதது? எதுவும் இல்லை. அதே மாதிரி, "அழகான ராட்சசியே, அடி நெஞ்சில் குதிக்கிறியே, முட்டாசு வார்த்தையிலேயே பட்டாசு வெடிக்கிறியே, அடி மனசை அருவாமனையில் அறுக்கிறியே" இதுல எந்த வார்த்தையை ஐயா வைரமுத்து கண்டுபுடிச்சாரு? எல்லாமே முன்னரே இருந்த + நமக்குத் தெரிஞ்ச வார்த்தைகள்தான். ஆனாலும் எதற்காக கண்ணதாசனுக்கும், வைரமுத்துவுக்கும் அவ்வளவு பெயரும் புகழும் கிடைக்கிறது? தெரிந்த வார்த்தைகள் என்றாலும் நாம் ஏன் இந்தப் பாடல்களை இரசித்துக் கேட்கிறோம், ஆஹா என்ன அருமையாக எழுதியிருக்காங்க என்று புகழ்கிறோம்? ஒரு இசையமைப்பாளர் டியூனை குடுத்து வார்த்தைகளைப் போடுங்கன்னு சொல்லும்போது இவ்வளவு அழகா நீங்களோ நானோ இந்த பாடல்களை கொடுத்திருப்போமா? எனவே தெரிந்த வார்த்தைகள் என்றாலும் அவற்றை எவ்வாறு கோர்ப்பது என்பது அந்த கவிஞனின் தனித் திறமையே, அது அவனது சொந்த உழைப்பு. அதை அவன் அனுமதியின்றி இன்னொருத்தர் எடுத்து கையாளக் கூடாது.
பதிவுகளை காப்பியடிப்பதற்கும் இதே லாஜிக் பொருந்தும்!!
பயனுள்ள பதிவு
ReplyDelete//இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம்//
உண்மைதான் ஒரு பதிவின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட முனையும்போது ரைட் க்ளிக் disable, selection disable செயப்பட்டிருந்தால் java script ஐ disable செய்து காப்பி செய்து விட்டு பின்னர் enable செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் பல இடங்களில் கருத்திடாமலேயே சென்றுவிட நேர்கிறது காப்பி அடிக்க நினைத்து விட்டால் அதை தடுக்க முடியாது.
கில்லர் ஜி யைப் பொறுத்தவரை செலக்ஷன் disable க்ரோமில் மட்டுமே . Interner Explorer லும் FireFoxஐயும் பயன்படுத்தி அவரது பதிவை காப்பி அடித்து விடலாம்.
நான் firefox தான் use பண்றேன், கில்லர் ஜி யை சாதாரணமா காபி செய்ய முடிலையே? இப்போதான் காபியாகுது. In firefox also Killergee disabled it.........!!
Deleteplease explain some ways sir by which we hot tricks of how to hack whatsapp and we know about how to hack whatsapp.
ReplyDelete