Friday, July 4, 2014

இதுக்குத்தான்யா ஹிந்தி கத்துக்கனும்கிறது!!

வணக்கம் மக்கள்ஸ்!!

மோடி அரசு ஹிந்தியை கட்டாயமாக்க முற்பட்டதிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்வது பற்றி அலசி காயப் போட்டுவிட்டார்கள் [கழுவி ஊத்திட்டாங்கன்னும் சொல்லலாம்!!].  "மொழிகள் பல கல்" என்ற தமிழ் பழமொழி உண்டு, அதை ஏன் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று புரியவில்லை.

ஹிந்தியை எப்போது வேண்டுமானாலும் மூன்றே மாதத்தில் புத்தகத்தைப் படித்தே கற்றுக் கொள்ளலாம், தேவைப் பட்டவர்கள் வேண்டியபோது கற்றுக் கொள்ளட்டுமே என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.  அந்த மாதிரி கற்றவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை.  மேலும், வெளிமாநிலங்களில் ஹிந்தி படமோ, ஹிந்தியில் யாராவது பேசினாலோ எல்லோரும் புரிந்துகொள்ளும் போது அங்கே பேந்தப் பேந்த நிற்பவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பார்கள், அவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும்!  அது தான் ஏனென்று புரிய மாட்டேன்கிறது!!

ஹிந்தி காரன் இப்போ நம்மூர்ல வந்து கூலி வேலை செய்யுறானே என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.  பெங்களூர் மென்பொருள் துறையில் முன்னணி நகரம், நம்மூரில் இருந்து எண்ணற்றோர் அங்கே பனி புரிகிறார்கள்.   அதே சமயம் அங்கிருந்து சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பனி புரிபவர்களும் இருக்கிறார்கள்.  ஏன்?  ஆக, ஹிந்தி காரன் எத்தனை பேர் இங்கே வந்து பணிபுரிகிறான் என்பது முக்கியமல்ல, நமக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா என்பதே முக்கியம்.

மொத்தத்தில் தென் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற இந்திய பகுதிகளுக்கு வேலைக்காகவோ, குறுகியகால பயனமாகவோ போனால் ஹிந்தி அவசியம்.  ஏன்னா அங்கே ஒரு பய ஹிந்தியை விட்டா வேறு எதிலும் பேச மாட்டான், ஹிந்தி பற்று காரணமல்ல, அவனுக்கு ஹிந்தியை விட்டா வேறு எதுவும் தெரியாது, வராது!!

எங்க அலுவலகத்தில் இருந்து சுத்த தமிழர்கள் ரெண்டு பேர் ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தனர்.  அவங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு சொல்லத் தேவையில்லை!!  அங்கே ஒரு அறை எடுத்து தங்கினார்கள்.  காலையில் டிபன் பரிமாறப் பட்டது.  அதில் வைக்கப் பட்ட இனிப்பு நன்றாக இருந்ததாம்.  அது முடிந்ததும், ரூம் பாய் ஏதோ ஹிந்தியில் கேட்டிருக்கிறான்.  அவன் சொல்வதை வைத்து அன்றிரவுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறான் என்பது மட்டும் நம்மாளுங்களுக்குப் புரிந்தது.  ஆனால் என்ன என்பது புரியவில்லை.

அதில் ஒரு விவரமான ஆள், "டேய் இன்னிக்கு காலையில் குடுத்தானே ஸ்வீட்டு, அது வேணுமான்னு கேட்கிறான்டா" என்று 'கண்டுபிடித்து' சொல்லியிருக்கிறார்.  இன்னொரு நண்பர், அப்படியா என்று கேட்டுவிட்டு, "சார்  சாஹியே"  என்று சொல்லிவிட்டார்.  [ஆளுக்கு ரெண்டு, மொத்தம் நாலு வேணும்].  அதைக் கேட்ட ரூம் பாய் மிரண்டு போய் இவர்களை பீதியாக பார்த்த படியே அங்கிருந்து கீழே இறங்கி போயிருக்கிறான்.

உடனே லாட்ஜ் மேனேஜர் பதட்டத்தோடுஇவர்கள் அறைக்கு வந்திருக்கிறார்.  "சார், அந்த ரூம் பையன் என்ன கேட்டான், நீங்க அவன் கிட்ட என்ன சொன்னீங்க?"

"அதுவா, காலையில குடுத்தீங்களே ஸ்வீட்டு, அது வேணுமானு கேட்டான் வேணும்னு சொன்னோம், ஆளுக்கு ரெண்டா கொண்டான்னு சொன்னோம்" என்று விளக்கியிருக்கிறார்.

அதற்கு மேனேஜர், "ஐயையோ சார், அவன் ஸ்வீட்டு வேணுமான்னு கேட்கவில்லை சார், நைட்டுக்கு கில்மா வேணுமான்னு கேட்டிருக்கிறான், நீங்க ஒன்னு பத்தாது ரெண்டா கொண்டான்னு சொன்னதும் பய புள்ள மெரண்டு போயிட்டான் சார்" என்று போட்டுடைத்திருக்கிறார்.

இந்த மேட்டரை இங்கே வந்து சொன்னதும் கேட்டவர்களெல்லாம் தரையில் விழுந்து புரண்டு சிரித்தனர்!!  [அதில ஒரு அம்மா பெங்காலி!!]

47 comments:

  1. பாகவதரே,

    //சுத்த தமிழர்கள் ரெண்டு பேர் ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தனர். அவங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு சொல்லத் தேவையில்லை!! அங்கே ஒரு அறை எடுத்து தங்கினார்கள். காலையில் டிபன் பரிமாறப் பட்டது. அதில் வைக்கப் பட்ட இனிப்பு நன்றாக இருந்ததாம். அது முடிந்ததும், ரூம் பாய் ஏதோ ஹிந்தியில் கேட்டிருக்கிறான். //

    ஏன்யா இப்படி மதவெறி,இந்தி வெறிப்புடிச்சு அலையிறீர் ? மேற்கு வங்கத்தில் பெங்காலி தான் பேசுறாங்க இந்தியல்ல அவ்வ்!

    சரி இந்தி தெரிஞ்சா மட்டும் கத்ரினா கைஃப்போ இல்லை சோனாக்‌ஷி சின்காவோ வந்தா பேசப்போகுது?

    எப்பவோ வெளி மாநிலம் போவதற்கு அந்தந்த மாநில மொழி படிக்கணுமா அவ்வ்!

    வெளிநாட்டுக்காரனுங்க இந்தியாவுக்கு வராங்க அவங்கலாம் என்ன எல்லா இந்திய மொழியுமா கத்துக்கிட்டு சுற்றுலா வராங்க அவ்வ்!

    பிற மொழி தேவைப்படுறாங்க கத்துக்கிறாங்க அதுக்காக எல்லாரும் படினு எப்படி சொல்ல முடியும்?

    முதலில் தமிழக அரசு வேலையில் சேர தமிழில் படிச்சவங்களுக்கு தான் வேலைனு சட்டம் போடனும்!

    ReplyDelete
    Replies
    1. \\ஏன்யா இப்படி மதவெறி,இந்தி வெறிப்புடிச்சு அலையிறீர் ? \\ உம்மோட நூறு பதிவில் பிசினோட போட்டோவை போட்டிருக்கீர், என்னைக்காவது நீர் அசின் மேல் வெறி பிடித்து அலைகிறீர் என்று யாராவது சொன்னார்களா? நான் ஒரே ஒரு பதிவு இந்தி பற்றி போட்டதும் இந்தி வெறி என்று சொல்லலாமா?

      \\மேற்கு வங்கத்தில் பெங்காலி தான் பேசுறாங்க இந்தியல்ல அவ்வ்! \\ வெளிமாநிலத்தவர் எல்லோருக்கும் பெங்காலி தெரியாது, எனவே விடுதிகள் போன்ற இடங்களில் பெங்காலி அல்லாதவர்களிடம் இந்தியில் தான் பேசுகிறார்கள்.

      \\சரி இந்தி தெரிஞ்சா மட்டும் கத்ரினா கைஃப்போ இல்லை சோனாக்‌ஷி சின்காவோ வந்தா பேசப்போகுது?\\ சரி மலையாளம் படிச்சிட்டா அசின் கிடைப்பாளா என்ன?

      \\எப்பவோ வெளி மாநிலம் போவதற்கு அந்தந்த மாநில மொழி படிக்கணுமா அவ்வ்! \\ ஹிந்தி தெரிந்திருந்தால் பல மாநிலங்களில் சமாளித்துக் கொள்ளலாம்.

      \\வெளிநாட்டுக்காரனுங்க இந்தியாவுக்கு வராங்க அவங்கலாம் என்ன எல்லா இந்திய மொழியுமா கத்துக்கிட்டு சுற்றுலா வராங்க அவ்வ்! \\ இங்க நீர் ஆங்கிலம் பேசுகிறீர், வடக்கே தமிழ் பேசுவதில்லை.

      \\பிற மொழி தேவைப்படுறாங்க கத்துக்கிறாங்க அதுக்காக எல்லாரும் படினு எப்படி சொல்ல முடியும்? \\யாரும் படிக்காதீங்கன்னும் பிரச்சாரம் பண்ணப் படாது.

      \\ முதலில் தமிழக அரசு வேலையில் சேர தமிழில் படிச்சவங்களுக்கு தான் வேலைனு சட்டம் போடனும்! \\ நீர் முதலமைச்சரா வந்ததும் அதைச் செய்யும்.

      Delete
    2. பாகாதரே,

      //நான் ஒரே ஒரு பதிவு இந்தி பற்றி போட்டதும் இந்தி வெறி என்று சொல்லலாமா?//

      ஊசிப்போன சாம்பார் சாப்பிட்டு மூளையும் ஊசிப்போச்சு அவ்வ்!

      என்னோடது தனி மனித ரசனை , நீர் சொல்வது அனைவருக்குமான அறிவுரை, நீர் இந்தி படிக்க போறேன்னு எழுதிக்கவும் ,ஏன் எல்லாம் இந்தி படிங்கனு சொல்லணும்?

      மேலும் நான் எல்லாம் மலையாளம் படிங்கனா சொல்லுறேன்?

      //\யாரும் படிக்காதீங்கன்னும் பிரச்சாரம் பண்ணப் படாது//

      அப்படி யாரும் சொல்லலையே!

      இந்தி திணிக்க வேண்டாம் என்று தான் சொல்லுறாங்க , திணிப்பு வேற ,படிப்பு வேற , புரியுதா?

      Delete
    3. வவ்வால் பாணியில் சொல்வதானால் யோவ் பாகவதரே உம்மோட ஆத்துக்காரி பெயர் 'இந்தி'ரா என்பதால் "இதுக்குத்தான்யா இந்தி கத்தி தொலைக்கணும்" என்பீரா அவ்வ் :))

      மெய்ப்பொருள்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அய்யா, நீரு வேணும்னா, இந்திமொழி வித்துவானா இருந்துட்டுப் போவும். அதுக்காக, தமிழர்களை, இந்திக்காரன்கிட்ட பேரம்பேசி வித்திடாதீங்க. உம்மள மாரிதி நிறையபேரு, இந்திபடி, இந்திபடின்னு, ஆம்வே கணக்கா, ஆளைப் பிடிச்சிட்டு அலையுறானுங்க.

    இந்தி படிச்சி உடனே, கர்நாடகா காவிரி தண்ணீரை தொறந்து விட்டிடுமா? முல்லைப் பெரியாறுல நம்ம உரிமை கிடைச்சிடுமா? இல்ல, கடல்ல மீன்பிடிக்கிற நம்ம தமிழனுங்களை, பிடிச்சிட்டுப் போற சுண்டைக்காய் இலங்கை வாலை, நம்ம இந்தியா ஓட்ட நறுக்கிடுமா?

    போய், மொதல்ல உலக இலக்கியங்களை நல்லா படியும். அப்பத்தான், உம்ம இந்திவெறி தீரும்.

    இந்தியாவோட மூத்த மொழி தமிழ். இந்த தமிழன், நேத்து பெய்த மழையில இன்னைக்கு முளைச்ச இந்தி மொழிய ஏன் கத்துக்கணும்? அப்படி இந்தில என்ன இலக்கிய வளம் இருக்கு? ஏதாவது தரமான இலக்கிய நூல் இருக்கா சொல்லும்?

    ஆறாண்டு, ஏழாண்டு இந்தி படிச்சு, வீணாக்குற நேரத்தை, ஏதாவது தொழில்நுட்பத்தைக் கத்துக்கங்க. வெறும் மட்டமான மொழியைப் படிச்சு, வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி. மூத்த மொழிஎது, பீத்த மொழி எதுன்னு தெரிஞ்சா மட்டும் போதாது, மரியாதையாக பேசவும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அதை கற்றுக் கொண்டு வாரும்,அப்புறம் பேசுவோம்.

      Delete
    2. மூத்த மொழி தெரியும்? அது என்னங்க பீத்த மொழி? பொழுது போகல. கொஞ்சம் புளி போட்டு விளக்கவும்.

      Delete
    3. @ ஜோதிஜி திருப்பூர்

      கவுண்டமணி ரசிகனாயிருப்பதால் அவருடைய சாயல் ஆங்கங்கே வரும் சார்!!

      Delete
  5. முதல் தமிழரைத் தமிழ் படிக்க வைப்போம்.
    பின் இந்தி,சமஸ்கிருதம், உருது,குஜாரத்தி, வங்காளி, சிங்களம், அரபு, சீனம் .....
    //அவனுக்கு ஹிந்தியை விட்டா வேறு எதுவும் தெரியாது, வராது!!//
    ஆனால் இந்தி பேசும் மாநிலத்தில் பிழைக்க முடியாமல் ஏனைய மாநிலமெங்கும் இந்தி தவிர எந்த மொழியும் தெரியாமல் ஜோராகப் பிழைத்து வாழ்கிறான்.
    ஆனால் தமிழும்,ஆங்கிலமும் தெரிந்த தமிழன் இந்தி படித்தே ஆகவேண்டுமென சக தமிழன் கருதுகிறான்.

    ReplyDelete
    Replies
    1. @ யோகன் பாரிஸ்(Johan-Paris)

      ஹிந்தி கற்றே ஆகணும்னு சொல்லவில்லை, கத்துகிட்டா நல்லதுன்னு தான் சொல்றேன்.

      Delete
  6. இம்மாதிரி தனிப்பட்டவர்கள் தங்கள் சௌகரியத்துக்காக வேண்டுமெனில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு போகட்டும். அதற்காக அந்த மொழியை இந்தியாவில் இருக்கும் அத்தனைக்கோடி மக்கள் மீதும் திணிப்பது என்பது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.

    கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை எல்லாரும் துபாய்க்கும் அரபு நாடுகளுக்கும்தாம் அதிகமாகப் பிழைக்கப்போய்க்கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்களெல்லாரும் அரபு மொழியா சின்ன வயதிலிருந்தே படித்து வந்தார்கள்?
    ஒரு பத்து சதவிகிதம் பேர் வட மாநிலங்களுக்குப் போய் மொழி தெரியாமல் சிர மப்படுவார்கள் என்பதற்காக மீதி தொண்ணூறு சதவிகிதம் பேரையும் பிரயோசனமேயில்லாத ஒரு மொழியை ஆதியோடு அந்தமாகப் படிக்கச்சொல்லி வற்புறுத்துவது என்ன நியாயம்?

    அதுகூட பேசத்தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு மொழியை எதற்காகப் 'படிக்கச்சொல்ல' வேண்டும்?

    தேவைப்படுபவன் பேசத்தெரிந்துகொண்டு போகட்டும். சிலபேருக்காக அத்தனை மக்களும் படிக்கவேண்டுமென்பது சர்வாதிகாரத்தனம்தான்.

    ReplyDelete
    Replies
    1. @ Amudhavan

      சிலருக்காக எல்லோரும் படிக்க வேண்டுமா என்ற கேள்வி நியாயமாகத்தான் படுகிறது, ஆனாலும் ஹிந்தி என்பதே அருவருக்கத் தக்கது என்ற தோற்றம் இங்கே உருவாக்கப் பட்டுள்ளதால், விரும்புபவர்களும் படிக்க முடியாது என்ற சூழல் இங்கே உள்ளது என்பதே நிதர்சனம்.

      Delete
    2. பாகவதரே,

      //ஹிந்தி என்பதே அருவருக்கத் தக்கது என்ற தோற்றம் இங்கே உருவாக்கப் பட்டுள்ளதால், விரும்புபவர்களும் படிக்க முடியாது என்ற சூழல் இங்கே உள்ளது என்பதே நிதர்சனம்.//

      விரும்புறவங்க படிக்க முடியாத சூழல் நிலவுவதை பார்த்தீரா? ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

      நீர் என்ன மஞ்சத்துண்டு காலத்து ஆசாமியா இன்னும் அதே நெனைப்பில் இருக்கீர் அவ்வ்.

      தமிழ் நாட்டுல ஏகப்பட்ட தனியார் ஆங்கிலப்பள்ளிகள் உருவாகிடுச்சு ,அவற்றில் எல்லாம் இந்தி முதல் ஃபிரஞ்ச், சமஸ்கிருதம் என எல்லா மொழியும் சொல்லி தராங்க , இன்னும் சொல்லப்போனால் "தமிழ் வழியில் படிக்கணும், தமிழ் படிக்கணும்" என இணையத்தில் கோஷம் போடும் நபர்கள் எல்லாம் அவங்க வாரிசுங்களை ஆங்கில வழியில் , அதுவும் இந்தியும் படிக்க வச்சுட்டு தான் இருக்காங்க , இந்தி எதிர்ப்பெல்லாம் "காகித அறிக்கை" கழுதை கூட திங்காது அவ்வ்!

      தனியார் பள்ளிகள் பத்தாதுனு "இந்தி பிரச்சார சபா" என ஒன்னு இயங்குது அதன் மூலமும் ஊருக்கு ஊரு "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தா(த்)தானு இந்தி சொல்லிக்கொடுத்துக்கிட்டு தான் இருக்காங்க , எனவே இந்தீயில பேச நினைக்கிறவங்க தாரளமா கத்துக்கலாம் யாரும் தடுக்கலையே ,ஆனால் எல்லாரும் படினு ஏன் சொல்லணும் ?

      ஆனால் மலையாளம் கத்துக்கொடுக்க இப்படிலாம் வசதியே இல்லை ,நாயர் கடையில் டீ குடிச்சி தான் கத்துக்கணும்ம் போல அவ்வ்!

      Delete
    3. I agree with Amudhavan Sir.

      ஒரு குழந்தை தினமும் ஒரு மணி நேரம் (30 min period in school + 30 min study at home) வாரத்தில் 5 நாள் ஹிந்தியை படிக்க செலவழித்தால், ஒரு வருடத்தில் அந்த குழந்தை approx. 220 hours ஹிந்தியை கற்றுக்கொள்ள செலவழிக்கிறது. பத்தாம் வகுப்பு வரை அந்த குழந்தை 2200 hours செலவழித்திருக்கும். 10% பேருக்காக 90% பேர் தன் வாழ்க்கையில் 2200 hours -ஐ ஏன் waste பண்ண வேண்டும்? தமிழ் நாட்டு சிஸ்டம் தான் கரெக்ட். வேண்டும் என்கிறவர்கள் மட்டும் கற்றுக்கொள்ளட்டும்.

      Delete
  7. இந்தி அவசியம் என்றால் கற்பதில் தவறில்லை. ஆனால் கொல்கத்தா அனுபவம் என்று ஒன்றை பகிர்ந்ததில் எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை இங்கு பகிர்கின்றேன்.

    முதல்: எனது உறவினர்களோடு 2002-யில் வட இந்திய யாத்திரை போயிருந்தோம், முதற்கட்டமாக ஒரிசா, மேற்கு வங்கம், நேபாளம், உத்தரகாண்ட், தில்லி வரை சென்றோம். மேற்கு வங்கத்துக்கு ஜார்க்கண்டின் டாடா நகரில் இருந்து புறப்பட்டோம். மொத்தம் இருபது அடங்கிய குழுவில் பஷீர் என்ற தமிழர் அவருக்கு இந்தி நன்கு பேச வரும். அத்தோடு இக் குழுவில் 4 பேர் தமிழர்கள் அவர்கள் இந்தியை ஏட்டுச் சுரக்காய் அளவில் படித்து பிரதமிக் பிரவேசிகா அளவில் தேர்வு எழுதி வெற்றி பெற்றோர் ஆவார். அதைத் தவிர வேறு யாருக்கும் இந்தி தெரியாது. பஷீர் பல காலமாய் உத்தரபிரதேசத்தின் கொராக்ப்பூரில் வசித்து வருபவர், எங்கள் யாருக்கும் இந்தி தெரியாது என்பதால் வழித்துணைக்கு எங்களோடு பயணித்தார். இந்தி என்பது எந்தளவுக்கு மேற்கு வங்கத்தில் பயன்படும் என்றால், கடுகளவு தான். கொல்கத்தாவில் இறங்கியதில் இருந்து மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறும் வரை, பல இடங்களில் இந்தி யாருமே பேசவில்லை. ஒரு சில ஓட்டல் பணியாளர்கள், ஜார்க்கண்டில் இருந்து வந்து வேலை செய்பவர்கள் மட்டுமே பேசினார்கள். ஒரு சில டாக்சி ட்ரைவர்களும் அவ்வாறே. அதைத் தவிர கோவில், கடை வீதி என எங்கும் வங்காளமே. கொடுமை என்னவென்றால் வங்காள எழுத்து தேவநகரியில் கூட கிடையாது, அதைக் கூட வாசிக்க முடியவில்லை. பஷீர் ஏற்கனவே சொன்னது போல வங்காளத்தில் இந்தி மட்டும் தெரிந்து கொண்டு ரசமலாய் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்பது மிகச் சரி என்பதை உணர்ந்தோம். இந்தியாவின் வடக்கில் பல இடங்களில் இந்தி பேசப்படுவது உண்மை, பலருக்கும் ஓரளவு இந்தி புரிந்து கொள்ளும் அளவில் கூட உள்ளனர். ஆனால் இந்தியை புத்தகத்தில் மட்டும் படித்து விட்டு அங்கு போய் வாழலாம், புழங்கலாம் என்பது பிழையான கருத்தாகும்.

    என்ன தான் இந்தி படித்தாலும் பிகார், ஜார்க்கண்ட், கிழக்கு உபி பகுதியில் பேசும் இந்தி என்ன இழவு என்றே புரியாத சூழல் இருக்கின்றது. அங்கு தங்கி அவற்றை பரிச்சயப் படுத்தி கற்றுக் கொண்டால் ஒழிய, மண்டை குழம்புவது மிச்சம். ஒரே ஒரு லாபம், தேவநகரியில் ரயில்வே டிக்கெட் மற்றும் டீக்கடை எங்கே உள்ளது போன்ற போர்டுகளை வாசித்து அறியலாம்.

    உதாரணம் 2: இந்தியை சுலபமாக படிக்க முடியும் என்பது மற்றொரு உண்மை. எனது நண்பன் ஒருத்தன் பி.இ படித்து விட்டு கொஞ்ச காலம் சத்தீஸ்கர் மற்றும் உபியில் வேலை செய்தான். அவனுக்கு தமிழகத்தில் இருந்த வரை தமிழைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆங்கிலம் கூட அரைகுறை தான். ஆனால் அவன் சத்தீஸ்கரில் பணியாற்றிய மூன்றே மாதங்களில் இந்தி கற்றுக் கொண்டான். பெரும்பாலும் வட இந்தியர் கிண்டலடிக்கும் மதராசி இந்தி அல்ல, சுதி சுத்தமான இந்தி. அவனை பார்ப்பதற்கு ராய்பூர் சென்றிருந்த வேளை, அவனது அறையில் தங்கி இருந்தோம். எங்களை அழைத்துக் கொண்டு ஊரைச் சுற்றிக் காட்டிய அவன் சரளமாக இந்தி பேசுவதோடு, பலரும் அவன் ஒரு மதராசி என்பதை ஏற்கவே மறுத்துவிட்டனர். அந்தளவுக்கு இந்தி பேசினான்.

    So Called இந்தி அபிமானிகள் பலரும் தென்னகத்தில் பிரதிமா முதல் ராஷ்ட்ரபாஷா தேவுகளை எழுதி விட்டு, பள்ளிகளில் கூட தமிழுக்கு பதிலாக இந்தி, சமஸ்கிருதம் என எடுத்து படித்து பேற்றிக் கொண்ட பலரும் வட இந்தியாவுக்கு போனவுடன் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகி விடுகின்றனர், எவ்வளவு முயன்றும் தென்னிந்திய மதராசி Slang இந்தி விட முடிவதில்லை. ஆனால் மழைக்கும் இந்தி பக்கம் ஒதுங்காத பலரும் வடக்கில் போய் நல்ல சுத்தமான இந்தியை கற்று விடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஒரு மொழியை அதன் சூழலில் சென்று அதன் Native Speakers யிடம் இருந்து முதன் முறையாக நேரடியாக கற்கும் போது சுத்தமான முறையில் கற்றுக் கொள்கிறோம், மாறாக Non-native ஆசிரியர்கள் ஊடாக அம் மொழி புழங்காத சூழல் உள்ள இடத்தில் இருந்து கொண்டு என்ன தான் கற்றாலும் அதன் originality கிடைப்பதில்லை. முதலில் நாம் கற்றுக் கொள்வது பசுமரத்தாணி போல பதிந்துவிடுவதால் அவற்றை அழித்து விட்டு Re-learn செய்வது மிகக் கடுமையான விடயம். இந்தி என்றல்ல, நம்மவர்கள் இங்கு ஆங்கில MA முடித்தவர்கள் கூட, சாப்ட்வேர் கம்பெனிகளில் வண்டி வண்டியாக பீட்டர் விட்டவர்கள் கூட அமெரிக்கா, கனடா பக்கம் போய் அங்கு பேசப்படும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள திணறுகின்றனர். ஆனால் எங்கோ காணாடுகாத்தானில் தமிழ் மீடியத்தில் படித்து விட்டு சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் ஒருவர் முதல் முறையாக அமெரிக்க மண்ணில் வந்தே ஆங்கிலம் கற்றவருக்கு ஒரு சில ஆண்டுகளில் அச்சு வெள்ளைக்கார துரைக்கு இணையாக ஆங்கிலம் பேசுவது வியப்பான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. @ மாநகரன்

      உங்க கருத்துக்கள் அத்தனையும் ஏற்கத் தக்கவையே, அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். எனினும் ஹிந்தியை கற்றுக் கொள்வது தவறில்லை, விரும்புபவர்கள் கற்றுக் கொள்ள இங்கே ஏது செய்யப் பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

      \\ஆனால் கொல்கத்தா அனுபவம் என்று ஒன்றை பகிர்ந்ததில் எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.\\ இது சென்று வந்த நம்பர்கள் சொன்னது, உண்மைக்கு புறம்பானது என்று தெரிந்தால் அதை நாம் ஒருபோதும் இங்கே எழுதுவதில்லை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. மற்றொரு விடயம் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வாதம் , எனக்குத் தெரிந்து தற்சமயம் இந்தி மாநிலங்களை விட தென்னகத்திலேயே வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, கட்டுமானத் தொழிலாளி முதல் மென்பொருள் முதலாளி வரை இதுவே நிலைமை. இந்தி பேசும் மாநிலங்களில் பணி எடுக்க விரும்புவோர் அங்கு போய் இந்தி கற்றுக் கொள்வதில் தவறில்லை. தில்லியில் வாழும் ஒரு லட்சம் தமிழர்களாக இருக்கட்டும், மும்பையில் வாழும் 5 லட்சம் தமிழர்களாக இருக்கட்டும், யாரும் இந்தி கற்றுக் கொண்டு அங்கு போகவில்லை. எப்படி மார்வாடிகள், குஜராத்திகள், தமிழே தெரியாமல் இங்கு வந்து தமிழ் கற்று தொழில் வாய்ப்புகளில் முன்னேறினார்களே. அதே போல நாடார்கள், முதற்கொண்டு பல தமிழர்கள் வடக்குக்கு போய் இந்தி முதல் பல மொழிகளைக் கற்றுக் கொண்டு அங்கும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    இந்தி பேசும் மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்பதற்காக இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்றால், ஏன் ரசியாவில், ஜப்பானில் அடுத்த பத்தாண்டுகளில் லட்சக் கணக்கான வேலை இடங்கள் காலியாக உள்ளதோடு, அப் பணிகளை நிரப்ப ஆள் இல்லாமலும் இருக்கப் போகின்றது. அவற்றை நிரப்ப நாம் ஏன் ரசியன், ஜப்பானிய மொழிகளை கற்றுக் கொள்ள கூடாது என்ற வினாவுடன் எனது கருத்தை நிறைவு செய்கின்றேன். நன்றிகள் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. மாநகரன் கானாடுகாத்தான் என்று வேறு எழுதியிருக்கீங்களே? காரைக்குடி பக்கமோ? மிக மிக சிறப்பான விமரசனம். எதார்த்தமான தெளிவான பார்வையும் கூட. 19 ஆண்டுகளுக்குமுன்பு கல்கத்தா சென்று இருந்த போது நான் கற்று வைத்திருந்த கொஞ்சம் மனப்பாடம் செய்து கொண்டு சென்ற ஹிந்தி என்னைப் பார்த்துபெப்பே என்றது.

      Delete
    2. வங்காளத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் வங்காளிகளின் மொழிவெறியினால் விளைந்த ஒன்று. தமிழகத்தை போலவே வங்காளிகளுக்கும் இந்தி எதிர்ப்புணர்வு அதிகம். ஆனால் இந்தி தெரிந்து கொண்டே வந்தவர்களை வெறுக்கடிப்பது மொழிவெறி என்றுதான் கருதுகிறேன்.

      இந்திக்கும் வங்கமொழிக்கும் சுமார் 30% சொற்கள் ஒன்றுதான். இரண்டுமே ஒரே மொழி குடும்பம். இந்தி பேசுபவருக்கு வங்கம் புரியாது, ஆனால் பெரும்பாலான வங்காளிகளுக்கு இந்தி தெரியும். இதற்கு காரணம் இந்தி மொழி டிவியும் சினிமாவும் பார்த்து கற்றுக்கொள்ளுவதேயாகும். புழங்கும் சொற்கள் ஒன்று என்பதினால் இந்தி சுலமாக புரிந்து இந்தி சினிமா பார்க்கிறார்கள் (வங்க மொழி சினிமாவை ஒருத்தனும் பார்ப்பது இல்லையாம், டிவி சீரியல் ரேஞ்சுக்குதான் அதற்கு மதிப்பு).

      உதாரணமாக இந்தியில் "துமாரா நாம் கியா ஹை?" வங்கமொழியில் "துமார் நாம் கீ?" எம்புட்டு ஒற்றுமை பார்த்தீர்களா? ஆகவே சுலபமாக வங்காளி இந்தியை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது இன்னொரு விடயம். இரு மொழிகளின் இலக்கணம் வேறு. அதேபோல் இந்தி போல வங்காளியில் உயிரற்ற பொருட்களுக்கு பால் குறிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் நம்மைப் போல் அரைகுறை இந்தி தெரிந்த ஆசாமியிடமும் வங்காளிகள் இந்தி பேச மறுப்பது சரியானதல்ல.

      சுமாராக இந்தி தெரிந்தால் தெலுங்கானாவையும் அதற்கு மேல் உள்ள பகுதிகளில் சுலபமாக சமாளித்து விட முடியும் என்பது எனது அனுபவம்.ஆனால் இந்தியை திணிப்பது என்பது வேறுவிடயம். தமிழுக்கு முக்கிய ஆபத்து இந்தி அல்ல...ஆங்கிலம்தான். ஆனால் ஆங்கிலத்தை அரசு திணிப்பதை ஏன் ஒருவரும் எதிர்ப்பதில்லை? தமிழகத்திலேயே வாழப்போகிறேன் எனக்கு ஆங்கிலம் வேண்டாம் என சொல்லும் ஒருவர் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடமே போக இயலாது.... இது மட்டும் சரியா? ஆங்கிலம் கற்காமல் ஒரு வாழவே முடியாதா?

      Delete
    3. @ நந்தவனத்தான்

      நான் சொல்ல வருவதும் இதையே தான் நண்பரே!!

      Delete
    4. நந்தவனம், ஹிந்தியை ஏற்கனவே எல்லா இடங்களிலும் திணித்தாகி விட்டது. ஒரு நாதாரிங்க கூட அதுக்கு எதிர்ப்பை காட்டலை. இப்ப மட்டு கூவுறானுங்க. அதென்ன தமிழ்நாட்டில் உள்ள வங்கியில் ஆங்கிலம் ஹிந்தியில் விண்ணப்ப படிவங்கள். அதுவே கர்நாடக வங்கி கன்னடம் மற்றும் ஆங்கிலம். கேரள வங்கியில் மலையாளம் மற்றும் ஆங்கிலம். எத்தனை மொழிகள் கற்க வாய்ப்பு இருக்கோ படிக்கலாம். ஆனால் என்ன தான் குழந்தைகள் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படித்தாலும் பத்து காசுக்கு பிரயோஜனமில்லை என்பது தான் என் கருத்து. மேற்கொண்டு எங்கே வாழ நினைக்கின்றார்களோ அப்போது வேண்டுமானால் பள்ளியில் படித்தது கொஞ்சம் உதவக்கூடும். படிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

      ஹிந்தியை பள்ளியில் கட்டாயப்படுத்தும் போது இன்னும் மொழிக்குழப்பம் அதிகமாகும். பாதிப்பேர்கள் பள்ளிக்கூடத்திற்கு வராமல் இருக்கக்கூடிய வாய்ப்பும் அதிகம்.

      Delete
    5. @ஜோதிஜி திருப்பூர்

      \\அதென்ன தமிழ்நாட்டில் உள்ள வங்கியில் ஆங்கிலம் ஹிந்தியில் விண்ணப்ப படிவங்கள். \\ இதனால நம்மாளுங்க ஹிந்தி கத்துகிட்டு தமிழை மறந்திடுவாங்களாக்கும்!! காமடி பண்ணாதீங்க சார்.

      Delete
    6. @ஜோதிஜி,

      தமிழ்நாட்டில் விண்ணப்பபடிவங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கு என சொல்லிவிட்டு அதை இந்தி திணிப்பு மட்டும் என அழைப்பது எப்படி பொருந்தும்? அதை ஆங்கில & இந்தி திணிப்பு / தமிழ் புறக்கணிப்பு என அல்லவா சொல்லனும்? இதைத்தான் முன்பும் சொன்னேன் - ஆங்கிலத் திணிப்பு தமிழரின் கண்ணிலேயே படுவதில்லையென

      பள்ளிகளை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் இந்தி ஒரு போதும் கட்டாயமாக இருந்ததே கிடையாது. தேவையென்றால் படிக்கும் வாய்ப்பு இருந்தது, அதைத்தான் கெடுத்துவிட்டார்கள். இந்திய அரசு இந்தியை வளர்க்க பெரும் செலவு செய்கிறது (டிஆர் பாலு மத்திய அமைச்சராக இருந்த போது இந்தி ஏன் வளரவேண்டும் என உரையாற்றி இருக்கக்கிறார், கொடுமை!). அந்த நிதியை வாங்கி அரசு பள்ளிகளில் இந்தி ஆசிரியரை நியமித்து இந்தியை ஆப்ஃஷனல் மொழியாக கற்றுத் தருவதில் எந்த தவறுமில்லை. ஆங்கில கல்வி மற்றும் இந்தியை எதிர்க்கும் பலரின் குழந்தைகள் ஆங்கில மீடியத்தில் இந்தியை தேர்தெடுத்து படிப்பதுதான் உண்மை - கருணாநிதி, ராமதாஸ் குடும்பங்கள் போல. இதற்கு பலி ஆவது சாதாரண குடும்பங்களின் பிள்ளைகள்.

      கட்டாயப்படுத்தினால் மாணவர்கள் ஒடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் நம் பாடத்திட்டத்தில் உள்ள தேவையற்ற சமாச்சாரங்கள் குறைத்து பிற மொழி கற்றல் போன்ற விடயங்களை ஊக்கப்படுத்தலாம். தமிழ் பாடத்தில் அண்ணா எழுதிய கட்டுரை, புறநானூறு பாடல் இவற்றை மனப்பாடம் செய்வது (இப்போது படித்தால் அர்த்தமே புரியாது)போன்ற கிறுக்குத்தனங்கள் பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் தமிழில் பிழையின்றி ஒரு பத்தி எழுத தெரிவதில்லை இல்லை. நான் படித்த போது புவியியல் பாடத்தில் மிசிசிப்பி ஆற்றை குறித்திருக்கிறேன். ஆனால் அமெரிக்ககாரனுக்கு இந்தியாவை மேப்பில் காட்டவே தெரிவதில்லை. ஆனால் அவனுக்கு பள்ளியில் நுழைந்ததும் ஒன்றாம் வகுப்பில் சாலை விதிகளை கற்று தருகிறார்கள்.

      Delete
    7. ஏமாற்றவில்லை நீண்டநாளைக்குப்பிறகு காலையில் வாசித்த அற்புதமான விமர்சனம். டி.ஆர்.பாலு குறித்து நிறைய எழுதலாம். தாஸ் நான் எழுதியதை தப்பாக புரிந்து கொண்டு விட்டார். சரியாக நீங்க புள்ளி எடுத்து கொடுத்துட்டீங்க.

      குழந்தைகள் படிக்கும் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளைக்கு என்று திருக்குறள் பேச்சுப்போட்டி வைத்து உள்ளார்கள். நான் உசப்பேத்த மூவரும் விழுந்து விழுந்து 30 திருக்குறள் படித்து மேடையேறி சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பிட்ட திறக்குறள் ( இது தான் கொடுமை) மட்டுமே. ஒருவர் 30ம் ஓ.கே. மற்றொருவர் 15 ஓ.கே. ஒருவர் ஓடியே போய்விட்டார். என்னடா பிரச்சனை என்றால் பல வார்த்தைகள் (சேர்த்து வருவது, பிரித்து வருவது என்று வரும் வார்த்தைகள்) உச்சரிக்க மற்றும் அதைச் சொல்ல கஷ்டப்படுகின்றார்.

      நான் சொல்லிக் கொடுக்க தம் கட்டுகின்றார்கள். ஆசிரியரிடம் சென்று எந்த 30 திருக்குறள் என்று வேண்டுமானாலும் மாற்றலாமே என்று கேட்டு விட்டு ஒரு முறை வகுப்பில் தமிழாசிரியர் வார்த்தைகளை வாசிக்க கற்றுக் கொடுங்க என்றால் அவர்களும் எஸ்கேப்பூ.

      ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு செக்சன் உள்ளது. 130 மாணவர்களில் 8 பேர்கள் தான் போட்டியில் கலந்துள்ளனர். 90 சதவிகித மாணவ மாணவியருக்கு தமிழ் வாசிக்கவே, எழுதவே தெரியவில்லை. பிறகெப்படி?

      பாடத்திட்டங்களை வடிவமைப்பர் தான் தற்போதைய சூழலைகவனத்தில் கொண்டு நீங்க சொல்வது போலபாடங்களை திட்டமிடத் தெரிய வேண்டும். சரி ஆங்கிலப் பயிற்சி எப்படி இருக்கின்றது என்றால் மொன்னைக்கத்தியை வைத்து வயிற்றை கிழிப்பது போலத்தான் உள்ளது.

      நாம் தான் எல்லாநிலையிலும் போராட வேண்டியுள்ளது.

      Delete
  9. ஒரு நல்ல விவாதத்தை தொடங்கி வைத்தமைக்கு நன்றி! இந்தியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்தி படித்தால்தான் வேலை என்று சொல்லும்போதுதான் பிரச்சினை எழுகிறது. கர்நாடகாவில் ஒரு சர்வீஸ் கமிஷன் தேர்வின் போது பீகாரிகளுக்கு இங்கு வேலை கொடுக்கக் கூடாது என்று தேர்வு நடக்கும் இடத்தில் கன்னடர்கள் கலவரம் செய்தனர். அதேபோல வடக்கிலும் மற்ற மொழிக்காரர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று தகராறு செய்தனர்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. @ தி.தமிழ் இளங்கோ

      ஹிந்தி தெரியாததால் பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள், பதவி உயர்வில் புறக்கணிக்கப் படுத்தல் என்ற கோணத்தில் மட்டுமே நான் இதைப் பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

      Delete
  10. இனிமேல் ஆங்கிலமே படிக்கக்கூடாது. நூறு சதவிகிதம் இந்தியாவில் ஹிந்தி மட்டுமே வேண்டும் என்று சொல்லிப்பாருங்கள். அப்பொழுது தெரியும் அவர்களிடம் எவ்வளவு ஹிந்தி பற்று உள்ளதென்று.

    ReplyDelete
    Replies
    1. @ Packirisamy N

      ஏதோ சொல்றீங்க, ஆனா சரியா புரியலை!!

      Delete
  11. இந்தியாவில் மிக பெரும்பான்மை மக்கள் பேசும் ஹிந்தியை ஒரு மேலதிக பாஷையாக கற்று கொள்வதில் இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை என்பது புரியவில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. @ வேகநரி

      அப்பாடா, இந்த விஷயத்தில் என் கருத்தை ஆதரிச்சு ஒரு பின்னூட்டம்..!! நன்றி நண்பரே.

      Delete
    2. என்ன மறுபடியும் மொதல்லே இருந்தா? அதென்ன பெரும்பான்மை மொழி ஹிந்தி. ஜெயதேவ் நீங்களுமா இதை நம்புறீங்க?

      Delete
    3. இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி தான் என்பதை கருணாநிதியே ஒப்புக் கொள்வார் சார்!!

      Delete
    4. //இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி தான் என்பதை கருணாநிதியே ஒப்புக் கொள்வார்//
      கருணாநிதி மட்டுமா :) ராமதாசு, அம்மா கூட ஒப்புகொள்வாங்க.ஆனா ஹிந்தி எதிர்பு அவங்க வியாபாரம்.ஆனா இங்கே அப்பாவிங்களும் தங்க புள்ளை குட்டிகளுக்கு ஹிந்தி படிபிக்காம எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் :(
      தமிழே எங்கள் பிள்ளைக்கு வேண்டாம் ஆங்கில மீடியம் மட்டுமே வேண்டும் என்று பிள்ளைகளை ஆங்கிலத்திலேயே பேச வைத்து பெருமையடையும் பெரும்பான்மையினர் ஹிந்தியை எதிர்ப்பது தான் செம காமெடி.

      Delete
  12. விருப்பம் உள்ளவர்கள் கற்கலாம்! திணிப்பு எனப்படும்போதுதான் எதிர்ப்பு எழுகிறது. மாநகரன் அவர்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  13. விருப்பம் உள்ளவர்களும், அவசியமுள்ளவர்களும் கற்றுக்கொள்ளட்டும், ஆனால் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள சொல்லி வழிய திணிப்பது ஏற்கக்கூடியது அல்ல.

    வடநாட்டில் இந்தி திணிப்பால் எத்தனை பிராந்திய மொழிகள் அழிந்தன என்பது வரலாறு.

    ReplyDelete
  14. இந்திகாரவுங்கள யாரும் தமிழ் படிங்கன்னு ஏஞ் சொல்ல மாட்டீங்கராங்க. எந்த மொழியையும் விரும்பினா யாரும் கத்துக்கலாம். ஆனா திணிப்பு தான் பிரச்சனையே

    ReplyDelete
  15. @ ‘தளிர்’ சுரேஷ்
    @ கும்மாச்சி
    @ கலாகுமரன்

    விரும்பியவர்கள் வேண்டிய போது ஹிந்தி படிக்கட்டுமே என்ற உங்கள் வாதம் நடைமுறைக்கு ஒவ்வானதாக இருப்பதில்லை. எங்கள் அலுவலகத்தில் தெலுங்கு, பெங்காலி, பஞ்சாபி, கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் ஹிந்தி பெல்டைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரிகிறாது, நான்கு தமிழர்களுக்கு மட்டும் ஹிந்தி தெரியவில்லை. தடுமாறுகிறோம். ஏன்? யோசியுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தேவையிருந்தால் பக்கத்தில் யாராவது சொல்லிக்கொடுக்க தயாராக இருப்பார்கள். அவர்களிடம் போய் டியூசன் படிக்க வேண்டியது தானே? புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? தனி மனிதர்களின் தேவை என்பது வேறு. மொத்த சமூக தேவை என்பதும் வேறு. மொத்த சமூகத்தில் அத்தனை பேர்களும் மெத்தப்படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஜெயதேவ்.

      Delete
    2. @ ஜோதிஜி திருப்பூர்

      எல்லோரும் ஆங்கிலத்தில்/தமிழில் பேசி விடுவதால் கொள்ள முடியவில்லை சார். மொழி பள்ளி காலத்திலேயே கற்றிருக்க வேண்டும், இப்போது கடினம். தற்போதும் வட இந்திய சுற்றுலா ஒருபோதும் தனியே செல்வதில்லை. யாராவது தமிழரல்லாத நண்பர்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. டூர் மட்டுமல்ல, அங்கே செல்லும் இடங்கள், கடைகளுக்கு கூட மற்றவர்கலுடனேயே செல்ல வேண்டியிருக்கு. ஒரு முறை தனியாகச் சென்று திரும்பும் போது, இரயில் நிலைய உயரதிகாரி ஒருத்தரிடம் எந்த பிளாட்பார்மிர்க்கு வரும் என்று கேட்டேன், அவன் ஹிந்தியில் சொன்னேன், நான் ஆங்கிலத்தில் சொல்லச் சொன்னேன், திட்டினான் நான் வேறு பிளட்பாரம் சென்றேன். டிரெயினை கோட்டை விட்டுவிட்டு 12 மணி நேர காத்திருத்தலுக்குப் பின்னர் அடுத்த இரயிலில் வந்தேன். ஹிந்தி தேவை, இந்தியவிற்க்குள் சுற்ற வேண்டுமானால்.................

      Delete
    3. //எல்லோரும் ஆங்கிலத்தில்/தமிழில் பேசி விடுவதால் கொள்ள முடியவில்லை//

      படித்த ஆசாமிகளுக்கு இதுதான் பிரச்சனை. அலுவலகங்களில் ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விடலாம் எனபதும், நமக்கும் இந்தி தெரியாதால் மற்றவர்களும் ஆங்கிலத்திலேயே உரையாடுவதும் இந்தி கற்பதை இயலாத ஒன்றாக்குகிறது. ஆனால் தமிழகத்திலிருந்து ஆழ்துளை கிணறு போடும் லாரி தொழிலாளிகள் ஆறு மாத வட இந்திய டிரிப்பில் இந்தி பேச ஆரம்பித்து விடுவதை கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு வேறுவழி இல்லை. சாதாரண மக்களுடன் புழங்கி விரைவில் கற்றுவிடுகிறார்கள்.

      Delete
    4. நாம் வாழும் சூழ்நிலை நம்மை நிர்ப்பந்தத்திற்குள் உள்ளாகி நீ இதை கற்றுத்தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை வரும் போது ஹிந்தி மட்டுமல்ல ஒடிசா பழங்குடி மக்கள் பேசும் மொழியைக்கூட கற்று விட முடியும். ரொம்பவும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆந்திராகாரனுடன் தொழில் செய்யும் திருப்பூர் மக்கள் எளிதாக 3 மாதத்திற்குள் தெலுங்கு கற்றுக் கொண்டு விடுகின்றார்கள்.

      Delete
  16. படித்ததில் மனதைத் தொட்டது

    நன்றாக உள்ளது. குறிப்பாக சௌசௌ காய் குறித்து இன்று தான் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. @ ஜோதிஜி திருப்பூர்

      Thanks, Jothiji........

      Delete
  17. வவ்வால் பாணியில் சொல்வதானால் யோவ் பாகவதரே உம்மோட ஆத்துக்காரி பெயர் 'இந்தி'ரா என்பதால் "இதுக்குத்தான்யா இந்தி கத்தி தொலைக்கணும்" என்பீரா அவ்வ் :))

    மெய்ப்பொருள்

    ReplyDelete
  18. தமாசான விசயமானாலும் வெட்கப்படக்கூடிய காரியமாகிபோய்விட்டதே..
    நண்பர் ஜெயதேவ் அவர்களுக்கு நான் தற்போது வெளியிட்டுள்ள ''ஹிந்தமிழ்'' படிக்கவும் அதில் ஹிந்தி அவசியம் என்பதை வழியுறுத்தியிருக்கிறேன். நன்றி

    ReplyDelete