வணக்கம் மக்கள்ஸ்!!
நாமும் தமிழ் திரைப்படம் ஒன்றுக்காவது ஆஸ்கார் விருது வராதா? தமிழராய் பிறந்ததற்காக பெருமை பட்டுக் கொள்ள முடியாதா என்று வெகு வருடங்களாய் ஏங்கிக் கிடந்தோம். ஆஸ்கார் எப்படியும் வாங்கி சாதிப்பாரு என்று சிலருக்கு ஆஸ்கார் நாயகன் என்றெல்லாம் பட்டம் கொடுத்து பார்த்து மகிழ்ந்தோம். சப்தமில்லாமல் அதைச் சாதித்து நம்மை ஏ ஆர் ரஹ்மான் திக்குமுக்காடச் செய்து விட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏன் நேரடித் தமிழ்ப் படத்திற்கு இன்னமும் ஆஸ்கார் கிடைக்கவில்லை என்ற கேள்வி இன்னமும் நம்மை தூங்கவிடாமல் செய்து கொண்டிருப்பதும் உண்மை. அதற்கான விடை கிடைத்துள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு முக்கியமாக வேண்டிய தகுதி அந்தப் படத்தின் வேலைகள் அனைத்திலும் ஆங்கிலத்தில் Originality எனப்படும் சுயத் தன்மை இருக்க வேண்டும். அதாவது ஊரைச் சுத்தி எடுக்கப் படும் படங்களின் கதைகளை எடுத்து தன் ஊருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் டிங்கரிங் வேலை பண்ணி அதையே ஆஸ்காருக்கு அனுப்பினால் பருப்பு வேகாது. மூஞ்சி மேல காறித் துப்பி, திரும்பி நில்லுடா என்று சொல்லி பம்ஸ் மேல எட்டி உதச்சு விரட்டி விட்டு விடுவான் வெள்ளைக் காரன்!! The God Father படத்தை அந்த மாதிரி எடுத்து கொண்டு போய் காமிச்சவனுக்கு அதுதான் நடந்தது. வில்லனை அடித்து கீழே தள்ளி, பின்னர் சுத்தியலால் அவனைத் தாக்கும் சமயத்தில் ஒரு தண்ணீர் குழாய் உடைத்து தண்ணீர் வெகு உயரத்துக்கு பீச்சியடிக்கும் காட்சியைப் பார்த்த வெள்ளைக்காரன், இது தான் The God Fatherபடத்திலே பார்த்திட்டோமே இன்னொரு தடைவையா? -என்று கேட்டு காறித் துப்ப அதையும் வாங்கிக் கொண்டு வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி இன்னமும் ஊரை ஏமாத்திகிட்டு இருக்கான் ஒரு மானங் கெட்டவன்.
அப்படியானால் நம்மாளுங்களுக்கு ஒரிஜினாலிட்டி இல்லை என சொல்ல வருவதாக நீங்கள் நினைத்தால் அது தவறு!! சொல்லப் போனால், கதையை யோசித்து மூளையை செலவு செய்து [அங்க யாருப்பா களிமண்ணிலா படத்தை எடுப்பாங்கன்னு பேசுறது? சும்மா இருக்க மாட்டீங்களா?] படத்தை எடுக்கிறார்கள். இதன் கதைகளை அதன் பின்னர் வெள்ளைக்காரனும் உலகில் உள்ள எல்லா பயலுவலும் சுட்டு இங்கிலீஷில் படத்தை எடுத்து எல்லா அவார்டுகளையும் வாங்கிடறானுங்க. ஆனா, அதெப்படி நம்மாளுங்க படம் ரிலீஸ் பண்றதுக்கு ரெண்டு வருஷம், அஞ்சு வருஷம், பத்து வருஷம், இருவது வருஷம்ன்னு முன்னாடியே அவனுங்க வெளியில உட்டுடுறானுங்கன்னு தான் புரியல.
சில வருடங்களுக்கு முன்னாடி வந்த ஜக்குபாய் என்ற அமர காவியத்தைக் கூட ஒரு பாவி பய சுட்டிருக்கான். எப்பேர்பட்ட படம் அது? அந்த படம் ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே முப்பதாயிரம் திருட்டு சி.டி க்களை ஒருத்தன் போட்டு விற்கப் பார்த்திருக்கான். படத்தின் கதி இப்படி ஆயிடுச்சேன்னு பத்திரிகையாளர்களை கூப்பிட்டு வச்சு படத் தயாரிப்பாளர் அம்மா ஒப்பாரி வைக்க, இன்னொரு பக்கம் திருட்டு சி.டி யை ஒரு பயலும் வாங்காமல் விட அதை எடுக்க போட்ட பணம் கூட எடுக்க முடியலையேன்னு அவன் தலை மேல துண்டு போட்டுக் கொண்டு அழுத ஒப்பற்ற படம். அந்தப் படத்தின் கதையைக் கூட ஒருத்தன் ஆட்டைய பொட்டிருக்கன்னா பார்த்துக்கோங்க, நம்மாளுங்க எவ்வளவு ஏமாளிங்களா இருந்திருக்காங்கன்னு!!
முதலில் இந்த மாதிரி கதைத் திருட்டு நடக்காமல் நம்மாளுங்க தடுக்க வேண்டும். நம்மாளுங்க உழைப்பை வேற எவனோ லவட்டிகிட்டு போய் வருஷா வருஷம் ஆஸ்கார் வாங்கிகிட்டு இருக்கான். அதைத் தடுக்க வேண்டும். இப்போ இங்கே 1949 ஆம் ஆண்டு வந்த நல்ல தம்பி படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியான தெய்வத் திருட்டுமகள் ............ சாரி....... தெய்வத் திருமகள் படம் வரைக்கும் வெள்ளைக்காரனுங்க ஆட்டையப் போட்ட படங்களின் லிஸ்டு இருக்கு. இது முழுசுன்னு சொல்லறதுக்கில்ல, தெரிஞ்சு இம்புட்டுன்னா தெரியாம இன்னும் எம்புட்டோ, யாரு கண்டது?
கதை மட்டுமல்ல, திரையிசை என்று பார்த்தாலும் இந்த கூத்து தொடர்கிறது. மெல்லிசை மன்னர் MSV யில் துவங்கி, இளையராஜா, தேவா, ரஹ்மான் வரைக்கும் ........... எல்லாம் ஒன்னேதான்!!
இந்த யோக்யதையில் இருந்தா ஆஸ்கார் எங்கேயிருந்து வரும்? எவனாச்சும் உள்ளூர்க்காரன் "பத்மா புருஷன்", வீரன், சூரன் என்று விருது குடுத்து, மவனே அதை பேருக்கு முன்னாடி, பின்னாடி, மேலே, கீழேன்னு எங்கேயாச்சும் தெரிஞ்சோ தெரியாமலோ போட்டா நீ தொலைஞ்சே, திரும்ப பிடுங்கிக்குவோம்னு சொன்னாலும், ஒரு ரயில்வே டிக்கட்டு புக் பண்ணக் கூட உதாவாத அந்த வெங்காய விருதையே வாங்கி வச்சுகிட்டு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான். இதை உணர்ந்த ஆஸ்காருக்குன்னே பிறந்த நாயகன் சொன்னார், "நாம் ஆஸ்கார் எதற்கு வாங்கணும்? நாம் விருது வழங்க ஆரம்பிப்போம் வெள்ளைக்காரன் இங்கே வந்து அந்த விருதை வாங்கி பெருமையடையும்படி செய்வோம்" -என்று போகாத ஊருக்கு வழி சொல்லிவிட்டு அமுங்கி விட்டார்.
நல்ல தம்பி-Mr.Dead goes to Town
சாந்தி நிலையம்- The Sound of Music
சிவகாமியின் செல்வன்- To Each of His own
ஆஸ்கார் நாயகன்:
ராஜபார்வை -Butterflies are Free (1972) [கதை]-‘The Graduate’ (1967) [கிளைமேக்ஸ்]
எனக்குள் ஒருவன் -’The Reincarnation of Peter Proud (1975)’
இந்திரன் சந்திரன் – ’Moon Over Parador (1988)’ & The Magnificent Fraud
வெற்றிவிழா – ‘Bourne Identity’ என்ற நாவல்
குணா- ‘Tie me up tie me down ! [Spanish] & Rain Man [1988]
நம்மவர்- Class of 1984 & To Sir with Love (1967)’
மகளிர் மட்டும் -‘Nine to Five (1980)’
சதி லீலாவதி – She – Devil (1989)’
அவ்வை சண்முகி – Mrs. doubtfire & ‘Tootsie (1982)’
பஞ்ச தந்திரம் –’Very bad things (1988)’
தெனாலி –‘What about Bob’
ஹே ராம்- ‘Barabbas (1961)’
விருமாண்டி -Life of David gale
நாயகன், தேவர் மகன்- The God Father
சூரசம்ஹாரம்- Witness
மகாநதி-Hardcore
மன்மதன் அம்பு- Romance on the High Seas
நளதமயந்தி- Green Card
வசூல் ராஜா MBBS -Patch Adams
அன்பே சிவம்- Planes, Trains & Automobiles
பம்மல் K சம்பந்தம் - The Bachelor
கெளதம் வாசுதேவ் மேனன்
காக்க காக்க - The Untouchables
வேட்டையாடு விளையாடு- (1) 15 Minutes, (2) The Bone Collector and (3) Mystic River
வானரம் ஆயிரம்- Forest Gump
விண்ணைத் தாண்டி வருவாயா- 500 days of Summer
பச்சைக் கிளி முத்துச் சரம்- Derailed
மணி ரத்னம்
ரோஜா- Sun Flower
நாயகன் - The God Father
திருடா ...திருடா.......- Butch Cassidy & the Sundance KID
அலைபாயுதே- Bare Foot in the Park
ஆய்த எழுத்து - Amores Perros
ஷங்கர்
எந்திரன் - Bicentennial Man & iRobot
அந்நியன் -Se7en
வெங்கட் பிரபு
சரோஜா- Judgement Night
கோவா- Road Train
K V ஆனந்த்
கோ-State of Play
அயன்- Maria Full of Grace
மற்றவை:
வாமணன்- Enemy of the State
யோகி- Tsotsi
அருணாச்சலம்- Brewsters Millioners
மைனா- Dog bite Dog
கஜினி- Memnto
12B-Sliding Doors
கண்டுகொண்டேன்...........கண்டுகொண்டேன்...........- Sense and Sensibility
பொல்லாதவன் -Bicycle Thieves
மே மாதம் -Roman Holiday
விருத்தகிரி -Taken
காதல் கொண்டேன்- Fear
வானம் -Crash
3 ரோசாஸ்-Charles Angles
கண்களால் கைது செய்- The Thomas Crown Affair
அவள் வருவாளா- Sleeping with enemy
நியூ- Big
பந்தயம்- Good bye Lover
ஜே.........ஜே.......- Serendipity
பேராண்மை- The dawns here are quiet
ரிஷி-The Killer
வேகம்- Cellular
இந்திரவிழா- Disclosure
வல்லவன்-Swim Fan
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது-Addicted to Love
காதல் கிறுக்கன்- Primal Fear
ஆணை- Man on Fire
செங்கோட்டை- Commando
எவனோ ஒருவன்- Falling Down
காதல் கோட்டை-The Shop around the corner
நாம் இருவர் நமக்கு இருவர்- Too Much
எனக்கு 20 உனக்கு 18- On the Line
தாம் தூம்- Red Corner
லண்டன்- A Fish Called Wanda
ஏகன்-Back to School
சர்வம்- 21 Grams
மொழி- Children of a Lesser God
விசில்- Urban Legend
ஜக்குபாய்-Wasabi
சிக்கு புக்கு- The Classic
ஜன்ம நட்சத்திரம்- The Omen
மை டியர் மார்த்தாண்டன் -Coming to America
வா அருகில் வா-Child's Play
ரெட்டை வால் குருவி-Mickiie Maude
ஜூலி கணபதி-Misery
நாளைய மனிதன்-Silent Rage
அதிசய மனிதன்- Friday 13th
பன்னீர் புஷ்பங்கள்- Little Romance
நந்தலாலா- Kikijuro
தெய்வத் திருட்டுமகள் - I am Sam