வணக்கம் மக்கள்ஸ்!!
தமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது. பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது. ஆனால் அது உண்மையல்ல.
உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த "தெய்வத் திரு(ட்டு)மகள்" என்ற படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை. எப்படி தெரியுமா? கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.
ராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம். அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு!!
அதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான் தோணும்,அது வெறும் மனப் பிராந்தி. தெளிவா இருங்க, ரெண்டும் வேற!!
என்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க. அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம். உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, "ஏக் துஜே கே லியே" மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா? அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே!! அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன ? [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........!!].
அப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம்? ஒரிஜினல் கதை தான் என்று எப்படிச் சொல்வது?
எந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்?
இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி. என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!! பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!! ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா? கிடையாது!! சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ? ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான். இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம்? [இதையே ரிவர்சிலும் சொல்லலாம். தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும். எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார்? இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]
அப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை!! காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது. அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம்? எதுவரை காப்பி இல்லை?
சரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். வடிவேலு, "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள். "ஸ்டோரி டிஸ்க ஷன்" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும்? ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்!!] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள். அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும். இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், "நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா?" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.
இதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு. இதற்கு வேறு பெயர் இருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்கள்-மாற்றுத் திறனாளிகள்
விபச்சாரம் செய்வோர்-பாலியல் தொழிலாளிகள்
இலவசம்-விலையில்லா பொருள்
இரண்டு இனத்துமல்லாதவர்கள்-திருநங்கைகள்
புட்டுகிட்டான்-வைகுண்டப் பதவியை அடைந்தார்.
இப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா?
காப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.
எங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் !! God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்!!
தொடர்புடைய பதிவுகள்:

அதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள். குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது. |
இது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம். சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே!! மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா? அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க?
சிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர். அவை அனைத்துமே தவறு.
இந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம். அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா? ரெண்டும் வேற வேறப்பா!!