அந்தமான் டூர்
பகுதி 1 ,
பகுதி 2,
பகுதி 3
அந்தமானில் நான்காம் நாள் நாங்கள் சென்ற இடம் ஹேவ்லாக் [Havelock] கடற்கரை. இது போர்ட் பிளேரில் இருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தீவு. இதற்க்கு படகில் செல்ல இரண்டு மணி நேரம் பிடிக்கும். இங்கு செல்ல காலை ஐந்து மணிக்கே புறப்பட வேண்டும். இங்கே சென்று வர டிக்கெட் ஏஜென்டே தயார் செய்துவிடுவார், நம்மால் முடியாது!! போய்வர 250 ரூபாய், ஆனால் அது இது என்று நம்மிடம் ரூ.600 -800 வாங்குகிறார்கள்.
|
ஹேவ்லாக் செல்லும் படகுகள் இங்கிருந்துதான் புறப்படுகின்றன. |
|
ஹேவ்லாக் செல்லும் வழியில் தொலைவில் நார்த் பே [North Bay] தீவு. இதன்
படம் தான் 20 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ளது என டூர் பகுதி 1-ல்
சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். |
|
அரசுப் படகு என்பதால் சுதந்திரமாக நீங்கள் மேல் தளத்திற்க்குச் செல்லலாம். மையத்தில் உள்ள கதவு வழியாகச் சென்றால் கேப்டனையும் அவரது குழுவையும் சந்திக்கலாம், கப்பல் எப்படி செலுத்துவது என்று முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்துவிட்டும் வரலாம்!! |
|
இவர்தான் நாங்கள் சென்ற படகின் கேப்டன். இங்கிருந்து சற்று முன்னாள் சென்று டைட்டானிக் படத்தில் வருவது போல ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்!! |
|
ஹேவ்லாக் படகுத் துறையை அடைந்த பின்னர் எங்களுக்கு பின்னால் வந்த இன்னொரு படகு. |
|
ஹேவ்லாக் தீவு தங்களை அன்புடன் வரவேற்கிறது. |
|
ஹேவ்லாக் படகுத் துறையில் காலை உணவை முடித்துக் கொண்டு கார்கள் மூலம் ஹேவ்லாக் ராதாநகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். இது தான் கடற்கரையின் நுழையும் பகுதி. அடர்ந்த மரங்கள் நிறைந்துள்ளது, வெயில் ஊடுருவ இயலாத அளவுக்கு மர நிழலே முற்றிலும் சூழ்ந்த ரம்மியமான இடம்!! |
|
ராதாநகர் கடற்க்கரை....!! இதன் அழகைப் பார்த்தவுடன் என்னால் ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. |
|
கொஞ்சம் கொஞ்சமாக கடைகரையை நெருங்கும் போது .......... |
|
நீரைத் தொட்டபோது...... முதலில் தெளிந்த நீர்...[Transparent], அப்படியே சற்று நிறம் மாறி பச்சை வண்ணம், இன்னமும் தூரத்தில் பார்த்தால் நீல வண்ணம்!! |
இந்தக் கடற்கரையில் தூய்மையான நீர் என்பது மட்டுமல்ல, அலைகள் மிகவும் மென்மையாக உள்ளன. நீச்சலே தெரியாவிட்டாலும் உங்கள் கழுத்துவரை நீர் இருக்கும் ஆழம்வரை கூட நீங்கள் சென்று நின்று கொண்டு விளையாடலாம், ஒன்றும் செய்யாது!! இந்தப் பகுதிகளில் இரண்டு நாள் முதல் வாரக்கணக்கில் கூட சிலர் தங்கி என்ஜாய் செய்கிறார்கள். தோலைக் கருப்பாக்க [Tanning] Sun Bath செய்யும் வெளிநாட்டவர்களையும் காண முடிந்தது.
இராதாநகர் கடற்கரையில் நான் எடுத்த காணொளி.
|
அதற்க்கு முதல் நாள் ஜர்வா ஆதிவாசிகளைப் பார்த்த விளைவு!! இங்கு பீச் மணல் வெண்மை என்பதும் சிறப்பு!! |
NDTV ஒரு கில்மாவை அழைத்துப் போய் இந்த பீச்சில் Scuba Diving போக வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளோடு பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டுமாம். பார்க்கும்போது பெரிய துணியை கையில் வைத்துக் கொண்டேன். [வேறெதற்கு அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளத் தான்!!]
|
கடற்கரையில் அழகிய கொட்டகை. |
|
இம்மாதிரி கொட்டகைகளின் கூரை இப்படித்தான் உட்புறத்தில் இருக்கும். |
|
இந்த மாதிரி செடிகள் அந்தமானில் திரும்பிய புறமெல்லாம் உள்ளன. இவற்றைக் கொண்டே அவர்கள் கொட்டகைகள் வேய்கிறார்கள். |
|
ஹேவ்லாக் இராதாநகர் கடற்கரையில் இருந்து திரும்பும்போது......... |
|
படகுக்காக ஹேவ்லாக் படகுத் துறையில் காத்திருக்கும்போது......... இந்தச் செடிதான் சேப்பங்கிழங்கு செடியாம் அந்தமானில் இதுவும் நிறைய காணப் படுகின்றன. |
|
ஹேவ்லாக்கில் இருந்து போர்ட் பிளேருக்கு படகில் ஏறும் போது சூரியன் அஸ்தமனம். அப்போது மணி 5 தான் இருக்கும்!! |
|
போர்ட் பிளேர் படகுத் துறை. |
|
அடுத்த நாள் விமானத்தில் அந்தமானில் இருந்து புறப்பட்ட போது. |
|
சென்னையில் தரையிறங்கும் முன்னர். |
|
சென்னை விமான நிலையம். |
|
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது!! |
இத்தோடு அந்தமான் பயணக் கட்டுரை முடிகிறது. இந்தப் பதிவுடன் ஷாப்பிங் பற்றிய படங்களையும் சேர்க்கலாம் என நினைத்திருந்தேன், பதிவின் நீளம் கருதி அதை அடுத்த பதிவில் வெளியிட நினைத்துள்ளேன். சற்றே பொறுத்துக் கொள்ளவும்!!
பயணக்கட்டுரை எங்களையும் அங்கு அழைத்துச்செல்கிறது..
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அற்புதம்...
இனிமேல் இது போல ஊருக்கு போனால் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது சென்று வரவும், புகைப்படங்கள் அருமை, உங்கள் போட்டோ இல்லையே, அதான் வருத்தம், அடுத்து எந்த ஊர்?
ReplyDelete@mubarak kuwait
Deleteஎன்னோட படத்தைப் போட்டிருப்பேன், அதைப் பார்த்ததும், இதுக்கு போடாமலே இருந்திருக்கலாம்னு சொல்லிடுவீங்க, அதான்!!
படங்கள் கொள்ளை அழகு!நமக்கு சென்னைக் கடற்கரையே ரொம்பத் தொலைவாத் தெரியுது!
ReplyDeleteபார்க்கும்போது பெரிய துணியை கையில் வைத்துக் கொண்டேன். [வேறெதற்கு அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளத் தான்!!]
ReplyDelete>>>
நான் கூட அந்த புள்ளைக்கு போர்த்தி விடத்தானோன்னு நினைச்சேன்
ஹா....ஹா...ஹா........ உங்க நக்கலுக்கு யாரும் தப்ப முடியாதுன்னு கேள்விப் பட்டேன்!! வருகைக்கு மிக்க நன்றி ராஜி!!
Deleteசிறப்பான கட்டுரை நண்பரே! நிறைய செய்திகளை கொடுத்தீர்கள். மிக்க நன்றி, எங்களுக்கு அங்கு போகவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
ReplyDeleteஒரு சந்தேகம். இங்கு என்ன என்ன மொழிகள் பேசுகிறார்கள். அதையும் கொஞ்சம் சொல்லவும்.
அங்கே ஹிந்தி தான் பேசுகிறார்கள் ஆகாஷ், சிலர் தமிழும் பேசுகின்றனர்.
Deleteதூள் மாமே,நீ வெல்ல சொக்கா போட்டுகினு சோக்ககிரே, உனிக்கி இன்னா சோலி கப்பல் டிரைவரா, ஊர் சுத்திகினே கீரே.பூவாக்கு இன்னா பண்ணுவே.
ReplyDelete
Delete@ அஜீம்பாஷா
மச்சி நானு நாலு தபா பூட்டு வந்திருக்கலாம், ஒரே தபா தான் பூட்டு வந்தேன், அதுக்கே பேஜார் ஆவுரியேம்மா...... அவனவன் டெய்லி ஒரு கில்மாவை புது புது ஐலண்டுக்கு தள்ளிக்கினு போறான், நான் ஏதோ ஃபேமிலியோட நாலு நாள் போனதுக்கே பூவா மேட்டரை இசுத்து உட்டு செண்டிமெண்டை டச் பண்ணிட்டியேம்மா.... நம்ம மாதிரி இருக்கிறவன் எந்த ஊருக்கும் போகவே கூடாதா??!! அதெல்லாம் பணக்கார பயலுவளுக்கே நேர்ந்து உட்டதா............
This comment has been removed by the author.
Deleteஅப்போ டெய்லி கில்மாவோட ஐலண்ட் போக ஆசையிருக்கிறது (மனசுலே இருக்குது , ஆனா சான்ஸ் கிடைக்கக் மாட்டேன்கிதுதானே ) இருங்க உங்க வீட்டுகாரம்மகிட்டே சொல்கிறேன்.
Deleteஉங்கள் பதிவைப் படித்ததும் அந்தமான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்ததும் அந்தமான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபயண கட்டுரை சுவாரஸ்யமா சொன்னிங்க! இன்று வலைச்சரத்தில் உங்களைப் பற்றீ ரீல்.. ஓட்டியாச்சு. போய் பாருங்க!
ReplyDeleteபதிவைப் படித்ததும் அந்தமான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது,படங்கள் அத்தனையும் அற்புதம்.
ReplyDelete@ Ravi Xavier
Deleteமிக்க நன்றி நண்பரே!!
Super
ReplyDeleteSuper
ReplyDelete