Friday, July 3, 2015

பாபநாசம்-பெரிய லாஜிக் ஓட்டை..........

த்ரிஷ்யம் மோகன்லால், மீனா நடித்து சக்கை போடு போட்ட மலையாளப் படம்.   தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ன்னு  ரீமேக் ஆகியிருக்கு, இப்போ தமிழில் பாபநாசம்.

ஒரிஜினல் படத்தில் மோகன்லால், படத்தோட கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருந்தார், கூடவே ஜோடி மீனா பிரமாதமான நடிப்பு.   தற்போதைய தமிழ் படத்தின் டீசர் பார்க்க நேர்ந்தது.  அதைப் பார்த்தால், மலையாளப் படத்தின் ஜெராக்சை எடுத்து கேரக்டர்களின் தலையை வெட்டிப் போட்டு விட்டு தமிழ் காரர்களின் தலையை ஒட்டிய மாதிரி இருக்கிறது.  இதுக்கு பேசாமல் படத்தை டப்பிங் செய்தே போட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும் போது படத்தை மலையாளத்தில் முன்னரே பார்த்திருந்தால் தமிழில் பார்க்கவே தேவையில்லை, ஒரு சுவராஸ்யமும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.




போன மூன்று படங்களாக எதுக்குன்னே தெரியாம பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கூடவே இழுத்துக்கொண்டு திரிஞ்ச மனுஷன் இந்த படத்தில் இன்னொரு குளறுபடியும் பண்ணியிருக்காரு.  மீனாவுக்குப் பதில் தன்னுடன் வசித்து வரும் கௌதமியைப் போட்டிருக்காரு.  படம் மற்ற அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதால், எந்த கழுதையைப் போட்டாலும் ஓடிடும் என்ற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வருவது நியாயம் தான் என்றாலும் மீனா அளவுக்கு இவர் ஜொலிப்பாரா  என்பது  சந்தேகமே.

படத்தின் கதையில் பெரிய லாஜிக் விரிசல் என்று ஒரு விஷயம் எனக்குப் பட்டது.  ஒரு குற்றம் நடந்து விட்டால், காவல் துறை மயிலே மயிலே இறகு போடு என்ற முறையில் அணுகாது,  சந்தேகப் படும்படி எவனும் கிடைக்கவில்லையென்றாலும் அப்பாவி, இளிச்சவாயன் எவனையாவது ஜீப்பில் அள்ளிப் போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நோண்டி நொங்கெடுடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் தான் தன்னுடைய மகனுடைய சாவுக்குக் காரணம் என்று வழுவாக சந்தேகிக்கும் உயர்நிலை அதிகாரி  வெறும் கேள்வி பதில் லெவலிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக காட்டுவது நடைமுறைக்கு ஒவ்வாத லாஜிக் மீறல் என்பது நமது கருத்து.   கொடுமைப் படுத்துவது பின்னால் வருகிறது என்பது வேறு விஷயம்!!

படம் பார்க்கலாமா?  மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம், அப்புறம் உங்க இஷ்டம்!!


7 comments:

  1. //மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம்// yes. agree...

    ReplyDelete
  2. லாஜிக் ஓட்டைகள் இல்லாத படம் ஏது?
    டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளலாம்

    ReplyDelete
  3. இந்த படம் நான் பர்க்கல. பார்க்க போவதும் இல்லை, நேரம் ஆர்வமும் இல்லை. வசதி கிடைச்சா காக்கா முட்டை ஒருக்கா பார்க்கணும்.தெரிஞ்சவங்க புகழ்கிறபடியா.
    ஆனா நீங்க எழுதிய நம்பர் ஒன் பெரிய ஓட்டை பதிவு
    ஹெல்மெட் வாழ்க்கை ஒரு வட்டம்............!!

    ReplyDelete
  4. எல்லாம் சரிதான்.. ஆனால் இங்கு இறந்து போன ஆண், காவல் துறை உயர் அதிகாரியின் மகன், "கான்ஸ்டபிளுக்கு, சுயம்புவைப் பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும் என்பதால்தான் போலீசே தானகச்சென்று மயிலே இறகு போடு என்கிறது" - இது லாஜிக்தான். திரைக்கதையின் நேர்த்தி எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவ்வளவு காலம் அவரை அழைத்து அடித்த விசாரித்த போலீஸ் மோப்ப நாய்களை நாயகன் வீட்டிற்கு அனுப்பத் தவறியதாக இருக்குற காட்சிதான் பெரிய ஓட்டை! தமிழ் வெர்ஷன் வொர்ஸ்ட்.... எந்தக் கழுதையும் அவர் போடுவார்.

    ReplyDelete