வணக்கம் மக்கள்ஸ்!!!
அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் விடுதி அறிவிப்பு பலகையில் ஒரு தகவல். அது கீழ்க் கண்டவாறு இருந்தது:
Who are you?
Where are you coming from before birth?
Where will you go after death?
Who is God? what is your relationship with Him?
What is your duty in Life?
To answer to these questions please attend a lecture @ Ganesh Temple!!
சுவராஸ்யமான தலைப்பு, ஞானிகள் பலர் இந்த கேள்விகளுக்கு பதில் தேடிகிட்டு இருக்காங்கன்னு பல இடங்களில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது, செத்த பின்னாடி என்ன ஆகும் என்பது போல கேள்விகளை பற்றி நாமும் யோசித்ததுண்டு!! சரி யாரு பேசுறாங்கன்னு பார்த்தா ஒரு இஸ்லாமியரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது!! பேசும் இடம் கல்லூரி வளாகத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோவில்!! கொஞ்சம் குழப்பத்துடனே தான் அங்கே சென்றேன், பின்னர் தான் புரிந்தது நடப்பது பகவத் கீதை உபன்யாசம், சொற்பொழிவாற்றியவர் பகவத் கீதையை பயின்ற பின்னர் அதன் பால் ஈர்க்கப் பட்டு கிருஷ்ணா பக்தரான ஒரு இஸ்லாமியர்!!
அதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெவ்வேறு பக்தர்கள் வந்து கீதை பற்றி பேசுவார்கள், இறுதியில் சுவையான பிரசாதமும் உண்டு. என்னுடைய ஈடுபாடு வார வாரம் அதிகமானது, இதை நண்பர்கள் கவனிக்கத் தவறவில்லை!! இச்சூழ்நிலையில் ஒரு நாள் தி.நகருக்கு சக மாணவருடன் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு கால் சற்றே வலுவற்றது. பேருந்தில் ஏறிய பின்னர் ஒரு இடம் உட்காரக் கிடைத்தது. அதில் அவர் என்னை அமரச் சொன்னார், ஆனால் நான் மறுத்தேன், அவர் இரண்டு முறை பிடிவாதமாய் சொல்லியும் நான் ஏற்காமல் அவரையே அமர வைத்தேன். வேண்டா வெறுப்பாய் வாயில் ஏதோ முனகிக் கொண்டே உட்கார்ந்தார். அவர் முகத்தில் எதற்காக வெறுப்பு? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறங்கிய பின்னர் கல்லூரியில் நுழைவாயிலில் அவருடைய மிதிவண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே இரட்டையராய் செல்ல வேண்டும். அவர் பின்னால் உட்காருங்கள் நான் மிதிக்கிறேன் என்றார், அதற்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை, நான் தான் ஓட்டுவேன், நீங்கள் அமர்ந்து வாருங்கள் என்றேன். இப்போது அவர் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. நீங்கள் செய்வது கொஞ்சமும் சரியில்லை என்றார். எனக்கோ மேலும் குழப்பம். என்ன என்று புரியாமல் கேட்டேன். அதற்கு அவர் "என்னை வைத்து நீங்கள் சொர்க்கம் போகப் பார்க்கிறீர்களா?" என்று வெடித்தார். இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் என வினவினேன். பேருந்தில் நீங்கள் என்னையே அமர வைத்தீர்கள், இங்கும் என்னை உட்கார வைத்து சைக்கிளை நானே செலுத்துவேன் என்கிறீர்கள். உங்கள் எண்ணம் எனக்குத் தெரியும், இந்த மாதிரி புண்ணியத்தை வாழ்நாள் முழுவதும் சேர்த்து செத்த பின் சொர்க்கம் போகலாம் என்று தானே செய்கிறீர்கள்? இது சரியில்லை என்று பொரிந்து தள்ளினார். அன்று அவரது ஆத்திரத்துக்கு காரணம் புரிந்தாலும், அவர் சொல்வதெல்லாம் விந்தையாகப் பட்டது!! இப்படியெல்லாம் கூட பிளான் பண்ணி சொர்க்கத்து போக முடியுமா? என்ற கேள்வியும் எனக்குள் அன்று எழுந்தது. எனது உண்மையான நோக்கம் கால் வலுவற்றவரை நாம் சித்தரவதை செய்யலாமா என்ற எண்ணம் மட்டுமே, அதை அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை, போகட்டும் என்று அந்த நிகழ்வை அதற்கும் மேல் பெரிது படுத்தாமல் விட்டு விட்டேன்.
இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, திருமணமான புதிதில் நான் அவ்வப்போது ஜப மாலையில் கிருஷ்ணா நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன். இதைக் கவனித்த எனது மாமனார் ஒருமுறை, "நீ சொர்க்கத்துக்கு போவதற்கு இவ்வளவு பாடு படுகிறாயா?" என்று நக்கலாக கேட்டார். இது மட்டுமல்ல பதிவுலகிலும் சில அன்பர்கள் அதே குற்றச் சாட்டை வைத்தனர். சிலர் நீ மன அமைதி தேடித்தானே கோவில் செல்கிறாய், அதை வீட்டிலேயே தியானம் செய்து பெறலாமே?- என்றும் கேட்க ஆரம்பித்தனர். ஆனாலும் எனக்கு ஒவ்வொரு முறையும் சொர்க்கம், Peace of Mind என்று எதற்காக இவர்கள் சொல்கிறார்கள், ஆன்மீகத்துக்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் என் பின்புலமே. அப்பா கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும் என்ற வகையில் அமைந்தது எனது மாணவ பருவம். [அப்பா கஷ்டம் எனக்கு அப்போது தெரியாது!!]. வாழ்வில் கஷ்டத்தைப் பார்க்காமல், கல்வியிலும் தோல்வி என்பதே என்னவென்று தெரியாது வளர்ந்தேன். நினைச்சதெல்லாம் நடந்தது ஆனாலும் வாழ்வில் இனம் புரியாத வெறுமையே மிஞ்சியது. இந்த வெறுமை பலருக்கு வயதன பின்னர் வரலாம், சிலருக்கு இளமையிலேயே வரலாம், எனக்கு பின்னது நடந்தது. பள்ளியில் படிக்கும்போதே ஒரு சிந்தனை அடிக்கடி என்னைத் தாக்கும். "தாய் தந்தை, சகோதரிகள் மற்றும் எந்த உறவுகளும் நிலையானது அல்ல, மரணம் நம்மை நிச்சயம் ஒரு நாள் அவர்களிடமிருந்து நம்மை பிரிக்கப் போகிறது, இது தவிர்க்க முடியாதது" என்ற உண்மை ஒரு நாள் என்னைச் சுட்டது. அப்படியானால் வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் தான் உண்டா என்ற கேள்வி எழ விடையை பல வழிகளில் தேட ஆரம்பித்தேன். தினமணியில் வரும் ஆன்மீக பகுதி சற்று ஆறுதல் தந்தது. இறைவனின் நாமத்தை ஜபம் செய்வது கலி யுகத்தின் ஒரே ஆன்மீக வழி என்பது பல்வேறு கட்டங்களில் தினமணியில் படித்திருந்தேன். ஆனாலும் மனம் மட்டும் நிலைகொள்ளாத படியே இருந்தது.
அதைத் தொடர்ந்து ஒரு திரைப் படப் பாடகரின் அர்த்தமுள்ள....... தொடர் புத்தகங்களின் பகுதிகள் சிலது கிடைக்க அவற்றை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவையோ அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை. அதன் பின்னர் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் சேர அட்மிஷன் கிடைத்தது. ஒருவேளையாக கல்லூரியில் சேர்ந்தாயிற்று, ஆனால் இன்னொரு புறம் விரக்தி........விரக்தி........விரக்தி..... அந்த சமயத்தில் தான் மேலே சொன்ன தகவல் பலகையில் பகவத் கீதை உபன்யாசம் பற்றி செய்தி வந்தது. தேடலுக்கான பதில் அங்கே கிடைத்தது, மனம் நிம்மதியானது. அன்று ஆரம்பித்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றும் தொடர்கிறது!! நமக்குள் எழுந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் போகையில் அது கீதையில் கிடைக்கிறது என கண்டுணர்ந்து நாம் கீதையை பின்பற்றுகிறோம் அவ்வளவே. சொர்க்கம், நரகம் நமது செயல்திட்டதில் இல்லவேயில்லை!!
இணையத்திற்குள் வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பித்தன. சில மத போதகர்கள், "நீ என் மதத்திற்கு வந்தால் சொர்க்கம் உனக்கு கியாரண்டி இல்லா விட்டால் உனக்கு மீளா நரகம் நிச்சயம்" என்றும், வேறு சிலர், "கடவுள் சொல் படி வாழ்ந்து விட்டால், செத்த பின்னர் சொர்க்கம் என்ற ஒரு இடத்திற்குப் போவோம் அங்கே 40 கன்னிப் பெண்களும், குடிக்கக் குடிக்க தீராத சோம பான பீப்பாய்களும் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன, ஒருவேளை இதை நீ ஏற்க்கா விட்டால், உன்னை நரகத்தில் நிரந்தரமாக தள்ளி விட்டு பூட்டு போட்டு விடுவார்கள், நீ எக்காலத்திலும் மீள முடியாத துன்பத்தில் அங்கேயே உழலுவாய், ஒருபோதும் வெளியில் வரவே முடியாது" என்றெல்லாம் பல மேடைகளிலும், இணைய தளங்களிலும் நடக்கும் பிரசாரமே இறை வழிபாட்டில் ஈடுபடுவது சொர்க்கம் செல்வதற்கே என்ற தோற்றத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது மெல்லப் புரிய வந்தது!! துன்பங்களில் இருந்து விடுபட வழி தேடும்போது இறைவனை நாடுகிறோம், ஆனால் அது துவக்கம் மட்டுமே, ஆனால் அதற்கும் மேலே, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவன் மீது வைக்கும் அன்பே பக்தி!!
சரி தற்போது திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுடைய கேள்விக்கு வருவோம். செல்லப் பிராணிகள் சொர்க்கம் செல்லுமா? [இதற்க்கு பதில் தனக்குக் கிடைக்க வில்லை என்கிறார்!!]. இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகர என்று தெரியவில்லை. சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம். இறை நம்பிக்கை உடையவர்கள் ஏதாவது இறைநூலில் இருந்தே விடையைத் தேட வேண்டும். நாம் இங்கு தரவிருக்கும் பதில்கள் அனைத்தும் சனாதன தர்மத்தின் வேத இலக்கியங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கும். [இந்து மதம் என்பது சரியான சொல்லாக்கம் அல்ல, சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள் மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில் வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]
கேள்வி 1: சொர்க்கம் நரகம் என்பது உள்ளதா?
பதில்: ஆம், இருக்கிறது. ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல, பல!! [கீழே குறிப்பு 1-ஐ பார்க்கவும்]
கேள்வி 2: சொர்க்கம்/நரகம் நிரந்தரமானதா?
பதில்: இல்லை, தற்காலிகமானதே. [கீழே குறிப்பு 2-ஐ பார்க்கவும்]
கேள்வி 3: பிராணிகள் சொர்க்கம்/நரகம் செல்லுமா?
பதில்: சொர்க்கம்/நரகம் எது கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பது நமது செயல்களால் விளையும் கர்ம பலன்களே. மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை. அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்.[கீழே குறிப்பு 3-ஐ பார்க்கவும்]
கேள்வி 4: சொர்க்கம்/நரகம் தற்காலிகமானது என்றால், வாழ்வின் குறிக்கோள் தான் என்ன?
பதில்: இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும். இறைவன் மீது பிரியம் வந்துவிட்டால் எந்நேரமும் அவனையே நினைத்திருப்போம். கலி யுகத்தில் அதற்க்கான வழி [நமது அதிர்ஷ்டம் எழிய வழி!!] அவனது திருநாமங்களை எந்நேரமும் உச்சரித்து வருவதே. அவ்வாறு செய்து வந்தால் 14 லோகங்களில் மேலும் கீழுமாக பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து வெளியில் வந்து என்னை அடைவாய் என பகவான் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், பக்தன் அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் உனது சேவகன், உன்னை நேசிப்பதையன்றி வேறொன்றும் தேவையில்லை என்ற நிலையே மிக உன்னதமான நிலை.
[கீழே குறிப்பு 4-ஐ பார்க்கவும்].
முதலாளி ஒருவன் மட்டுமே மற்ற எல்லோரும் தொழிலாளிகளே!!
குறிப்பு 1:
பிரபஞ்சத்தில் மொத்தம் 14 லோகங்கள் [Planetary Systems] உள்ளன. அவையாவன:
1) சத்ய லோகம்
2) தப லோகம்
3) ஜன லோகம்
4) மஹர் லோகம்
5) ஸ்வர் லோகம்
6) புவர் லோகம்
7) பூலோகம் [இங்கதாங்க நாம் இருக்கோம்!!]
8) அதல லோகம்
9) விதல லோகம்
10) சுதல லோகம்
11) தலாதல லோகம்
12) மகத லோகம்
13) ரசாத்தள லோகம்
14) பாதாள லோகம்
குறிப்பு 2:
இந்த பதினான்கு லோகங்களில் நாம் மத்தியில் பூலோகத்தில் உள்ளோம். சத்ய லோகத்தில் சுகபோகம் இருப்பதிலேயே அதிகம், அங்கிருந்து கீழே வர வர குறைந்து கொண்டே வரும், பூலோகம் மையப் பகுதி,இன்ப துன்பம் இரண்டுமே மிதமான இடம். அதற்கும் கீழே உள்ள அனைத்தும் நரக லோகங்கள். பூலோகத்தில் செய்யும் செயல்களின் பாவ புண்ணிய கணக்குப் படி மேலுள்ள லோகங்களுக்கோ, கீழேயுள்ள நரகங்களுக்கோ அனுப்பப் படுவோம். ஆனாலும் இரண்டுமே நிரந்தரமில்லை. சொர்க்க லோகங்களுக்குச் செல்பவனும்
புண்ணிய கணக்கு தீர்ந்த பின்னர் கீழே வருவான், நரக லோகங்களுக்கு போனவனும்
தண்டனையை அனுபவித்த பின்னர் மேலே வருவான்.
"te tam bhuktva svarga-lokam visalam
ksine punye martya-lokam vishanti
evam trayi-dharmam anuprapanna
gatagatam kama-kama labhante"
"Lord Sri Krishna said: When they have thus enjoyed vast
heavenly sense pleasures and the results of their pious activities are
exhausted, they return to this mortal planet (earth) again. Thus those
who seek sense enjoyments by adhering to the principles of the three
Vedas achieve only repeated birth and death."
ஆக ஈரேழு பதினான்கு
லோகங்களுக்குள் எங்கே போனாலும் பிறப்பு, வயோதிகம், நோய்நொடி, இறப்பு என்ற
சுழற்சியில் இருந்து தப்பவே இயலாது.
 |
| From the highest planet in the material world down to the lowest, all
are places of misery wherein repeated birth and death take place. But
one who attains to My abode, O son of Kuntī, never takes birth again. [B.G. 8.16] |
குறிப்பு 3:
jalaja nava-laksani sthavara laksa-vimsati
krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
trimsal-laksani pasavah catur-laksani manusah
நீரில் 9 லட்சம் உயரினங்கள், 20 லட்சம் மரங்கள் செடி வகைகள், 11 லட்சம் வகை பூச்சிகள், 10 லட்சம் வகை பறவைகள், முப்பது லட்சம் விலங்கு வகைகள் மற்றும் 4 லட்சம் வகை மனிதர்கள் என 84 லட்சம் வகை உயரினங்கள் உண்டு.[பத்ம புராணம்]
சனாதன தர்ம நூல்களின் படி தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், விலங்குகள் மனிதன் என எல்லோருக்கும் உயிர் உள்ளது, ஆன்மா உண்டு. ஆனாலும் சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே வழக்கப் பட்டிருக்கிறது. இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. மனித பிறவி என்பது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. கோடான கோடி பிறவிகள் மற்ற ஜீவன்களாகப் பிறந்து மடிந்த பின்னரே மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு அமைகிறது. [மற்ற உயிரினங்களும் பின்னர் மனிதனாகும் வாய்ப்பு உண்டு!!]. மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு பவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் அவற்றுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவில்லை. அவற்றின் உள்ளுணர்வின் உந்துதலாலேயே அவை செயல்படுகின்றன. NGC, Animal Planet போன்ற தொலைக் காட்சி நிகழ்சிகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். ஆகாரம், தூக்கம், ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளல் மற்றும் இனப்பெருக்கம் - எந்த மிருகத்தை எடுத்துக் கொண்டாலும் கூர்ந்து கவனித்தால் இந்த நான்கு செயல்களைத் தவிர வேறு எதிலும் அவை ஈடுபடுவதில்லை. மனிதனைப் பிறந்து ஆறறிவு படைத்து நீயும் அவ்வாறே வாழ்ந்து மடியாதே என்று சனாதன தர்மம் கூறுகிறது.
Eating, sleeping, sex, and defense—these four
principles are common to both human beings and animals. The distinction
between human life and animal life is that a man can search after God
but an animal cannot. That is the difference. Therefore a man without
that urge for searching after God is no better than an animal.
-From Hitopadesha.
குறிப்பு 4:
mam evaishyasi yuktvaivam
Engage your mind always in thinking of Me, become My devotee, offer
obeisances to Me and worship Me. Being completely absorbed in Me, surely
you will come to Me. [பகவத் கீதை 9.34]
[ஸ்ரீமத் பாகவதம் 12.3.51] மகாராஜா பரீக்ஷிதிடம் சுகமுனி கூறுகிறார்:
கலியுகத்தில் தோஷங்கள் கடலென இருந்தாலும், இந்த யுகதிற்க்கென்று மற்ற யுகங்களில் இல்லாத ஒரு சிறப்பியல்பும் உண்டு. அது, ஸ்ரீ கிருஷ்ணனின் நாமங்களை சொல்லி வந்தாலே போதும் இந்த எளிய வழியாலேயே பௌதீக விலங்கிலிருந்து விடுபட்டு இறைவனை அடையலாம்.