Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, June 10, 2018

மனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன?


தேதி: 14 நவம்பர் 2013
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார். கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம் வரவில்லை!!
உடனே ராஜேஷ் குமார் 24 மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப் படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம் வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க, வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.
பின்னர், எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார் பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள் பெற்றனர்.
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம் எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச் சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று வந்தனா கேட்டிருக்கிறார்.
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும், PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று திருப்பி அடித்திருக்கின்றனர்.
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம் எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள் கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில் அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு காண்பித்திருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா திரும்ப கிடைக்காது.

Thursday, August 11, 2016

ஒலிம்பிக் தங்கப் பதக்கம், வியப்பான தகவல்கள்

ரியோ ஒலிம்பிக் ஆரம்பிச்சிடுச்சு, அமெரிக்காவும் சைனாவும் பதக்கப் பட்டியலில் யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, இந்தியா காரன் ஒரு தங்க மெடலாச்சும் வராதான்னு ஏக்கத்தோடு பார்த்துகிட்டு இருக்கான்.  வருஷம் முழுக்க கிரிக்கெட்டே கதின்னு டிவி முன்னாடி உட்கார்ந்தே இருந்தா எங்கிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்கும், நாச்சியப்பன் கடையில வாங்கினாத்தான் உண்டு!!

பள்ளியில் படிக்கும் போது நான் லண்டன் பிபிசி தமிழ் சேவையை தவறாமல் கேட்பதுண்டு.  ஒருநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பற்றி சொன்னார்கள்.  எனக்கு அது வியப்பாகவும் விந்தையாகவும் இருந்தது!!   அப்படி என்ன சொன்னார்கள்....???  நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஒலிம்பிக்கில் வழங்கப் படும் தங்கப் பதக்கம் என்பது தங்கத்தால் செய்யப் பட்டது இல்லையாம், வெறும் தங்க முலாம் பூசப் பட்டதாம்!!  (இதை நண்பர்களிடம் சொல்லப் போய் அவர்கள் யாரும் நம்பாமல் என்னை உதைக்க வந்தது வேறு கதை!!).

2016 ஆம் கனக்குப் படி ஒரு தங்க மெடலின் மொத்த எடை 500 கிராம், ஒரு ஆளுக்கு அரை கிலோ தங்கமாகவே கொடுக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் தங்க மெடல்களுக்கே சரியாகி விடும்!!  இது தாங்காதுடான்னு யோசிச்ச ஒலிம்பிக் கமிட்டீ 1912-ம் ஆண்டுடன் தங்கப் பதக்கத்தை தங்கமாகவே கொடுப்பதை நிறுத்திவிட்டு, தங்க முலாம் பூசிய மெடல்களையே  பரிசளிக்க பயன்படுத்தி வருகிறதாம்.  இதில் தங்கம் வெறும் 6 கிராம் மட்டுமே, மீதம் 494 கிராம் தூய வெள்ளி !!  



அப்போ முலாம் பூசிய பதக்கத்துக்கா மனுஷன் இந்த அடி அடிச்சிக்கிறான்?  பதக்கத்தின் மதிப்பு அதை செய்யப் பட்ட பொருளால் அல்ல, சொல்லப் போனால் அதன் மதிப்பு கண்ணால் தெரியும் பொருளாக இல்லை, அது அதற்கும் மேலே........!!

Tuesday, February 23, 2016

அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.

அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.
அடுத்து என்ன தி.மு.க தானே ???...
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்"
எது வேண்டும்? என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை.
எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்-
எரிச்சல் தாங்கவே முடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.
அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
நாமேதான்.
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும் தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?


[ஃபேஸ் புக்கில் படித்தது] 



கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான்.  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன்.  இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?  அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!

Friday, July 4, 2014

இதுக்குத்தான்யா ஹிந்தி கத்துக்கனும்கிறது!!

வணக்கம் மக்கள்ஸ்!!

மோடி அரசு ஹிந்தியை கட்டாயமாக்க முற்பட்டதிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்வது பற்றி அலசி காயப் போட்டுவிட்டார்கள் [கழுவி ஊத்திட்டாங்கன்னும் சொல்லலாம்!!].  "மொழிகள் பல கல்" என்ற தமிழ் பழமொழி உண்டு, அதை ஏன் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று புரியவில்லை.

ஹிந்தியை எப்போது வேண்டுமானாலும் மூன்றே மாதத்தில் புத்தகத்தைப் படித்தே கற்றுக் கொள்ளலாம், தேவைப் பட்டவர்கள் வேண்டியபோது கற்றுக் கொள்ளட்டுமே என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.  அந்த மாதிரி கற்றவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை.  மேலும், வெளிமாநிலங்களில் ஹிந்தி படமோ, ஹிந்தியில் யாராவது பேசினாலோ எல்லோரும் புரிந்துகொள்ளும் போது அங்கே பேந்தப் பேந்த நிற்பவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பார்கள், அவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும்!  அது தான் ஏனென்று புரிய மாட்டேன்கிறது!!

ஹிந்தி காரன் இப்போ நம்மூர்ல வந்து கூலி வேலை செய்யுறானே என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.  பெங்களூர் மென்பொருள் துறையில் முன்னணி நகரம், நம்மூரில் இருந்து எண்ணற்றோர் அங்கே பனி புரிகிறார்கள்.   அதே சமயம் அங்கிருந்து சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பனி புரிபவர்களும் இருக்கிறார்கள்.  ஏன்?  ஆக, ஹிந்தி காரன் எத்தனை பேர் இங்கே வந்து பணிபுரிகிறான் என்பது முக்கியமல்ல, நமக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா என்பதே முக்கியம்.

மொத்தத்தில் தென் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற இந்திய பகுதிகளுக்கு வேலைக்காகவோ, குறுகியகால பயனமாகவோ போனால் ஹிந்தி அவசியம்.  ஏன்னா அங்கே ஒரு பய ஹிந்தியை விட்டா வேறு எதிலும் பேச மாட்டான், ஹிந்தி பற்று காரணமல்ல, அவனுக்கு ஹிந்தியை விட்டா வேறு எதுவும் தெரியாது, வராது!!

எங்க அலுவலகத்தில் இருந்து சுத்த தமிழர்கள் ரெண்டு பேர் ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தனர்.  அவங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு சொல்லத் தேவையில்லை!!  அங்கே ஒரு அறை எடுத்து தங்கினார்கள்.  காலையில் டிபன் பரிமாறப் பட்டது.  அதில் வைக்கப் பட்ட இனிப்பு நன்றாக இருந்ததாம்.  அது முடிந்ததும், ரூம் பாய் ஏதோ ஹிந்தியில் கேட்டிருக்கிறான்.  அவன் சொல்வதை வைத்து அன்றிரவுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறான் என்பது மட்டும் நம்மாளுங்களுக்குப் புரிந்தது.  ஆனால் என்ன என்பது புரியவில்லை.

அதில் ஒரு விவரமான ஆள், "டேய் இன்னிக்கு காலையில் குடுத்தானே ஸ்வீட்டு, அது வேணுமான்னு கேட்கிறான்டா" என்று 'கண்டுபிடித்து' சொல்லியிருக்கிறார்.  இன்னொரு நண்பர், அப்படியா என்று கேட்டுவிட்டு, "சார்  சாஹியே"  என்று சொல்லிவிட்டார்.  [ஆளுக்கு ரெண்டு, மொத்தம் நாலு வேணும்].  அதைக் கேட்ட ரூம் பாய் மிரண்டு போய் இவர்களை பீதியாக பார்த்த படியே அங்கிருந்து கீழே இறங்கி போயிருக்கிறான்.

உடனே லாட்ஜ் மேனேஜர் பதட்டத்தோடுஇவர்கள் அறைக்கு வந்திருக்கிறார்.  "சார், அந்த ரூம் பையன் என்ன கேட்டான், நீங்க அவன் கிட்ட என்ன சொன்னீங்க?"

"அதுவா, காலையில குடுத்தீங்களே ஸ்வீட்டு, அது வேணுமானு கேட்டான் வேணும்னு சொன்னோம், ஆளுக்கு ரெண்டா கொண்டான்னு சொன்னோம்" என்று விளக்கியிருக்கிறார்.

அதற்கு மேனேஜர், "ஐயையோ சார், அவன் ஸ்வீட்டு வேணுமான்னு கேட்கவில்லை சார், நைட்டுக்கு கில்மா வேணுமான்னு கேட்டிருக்கிறான், நீங்க ஒன்னு பத்தாது ரெண்டா கொண்டான்னு சொன்னதும் பய புள்ள மெரண்டு போயிட்டான் சார்" என்று போட்டுடைத்திருக்கிறார்.

இந்த மேட்டரை இங்கே வந்து சொன்னதும் கேட்டவர்களெல்லாம் தரையில் விழுந்து புரண்டு சிரித்தனர்!!  [அதில ஒரு அம்மா பெங்காலி!!]

Tuesday, May 6, 2014

பதிவர் வருனுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய்.

வணக்கம் மக்கள்ஸ்!!

கொலாப்ஸ் பிளீஸ்.................  வலைப்பூவை நடத்தி வரும் பதிவர், மாமா, கொலாப்ஸ் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப் படும் திரு. வருன் [நல்லா கவனிங்க நான் போட்டிருப்பது வருன், கடைசி எழுத்து "ன்", உச்சரிப்பில் இதே பெயரை வச்சிக்கிட்டு கொள்ளை பேரு நாட்டில் இருக்கலாம், அதற்கு நான் பொறுப்பல்ல!!] அவர்களுக்கு ஏதாவது மன வியாதி இருக்கலாம் என நாம் யூகித்தோம், அது உண்மைதான் என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

கொலப்சுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய். இதை வேலூரைச் சார்ந்த டாக்டர். கியூட்டி பிகாசோ [Dr.Cutie Picasso] என்ற மனோதத்துவ நிபுணர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.  இது என்ன நோய், என்ற விவரங்கள் குறித்து நாம் டாக்டர். கியூட்டி பிகாசோஅவர்களைக் கேட்டு புரிந்து கொண்டோம்.  அதை இங்கே உங்களுக்குத் தருகிறோம்.


நீங்கள் அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் மெல்லிய மனம் படைத்த அம்பியாக விக்ரம் இருப்பார்.  சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து அந்நியனாக உருவெடுப்பார்.  ஆனால் இங்கே கொலப்சுக்கு அப்படியே தலை கீழ்.

நடைமுறையில் அவர் அந்நியன் போல கொடூரமான கேரக்டர்.  தளிர் சுரேஷில் இருந்து, தமிழ் இளங்கோ, வீடு திரும்பல் மோகன் குமார் வரைக்கும்  எல்லோரையும் காரணமேயில்லாமல் இம்சை பண்ணுவார், ஆனால் மனதுக்குள் நாமும் நல்லவனாக வாழக் கூடாதா என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது.

இதுதான் கொலாப்ஸ் பிளீஸ்........ வருனின் நிஜ கேரக்டர்...................

இந்த கேரக்டரா ஆகனும்னு மனசுக்குள் ஆசை...............

ஆனால் அவரால் நல்ல கேரக்டராக மாற முடியவில்லை.  இருந்தும் அவரது ஆள் மனதுக்குள் அந்த ஆசை தீவிரமாக வளர்ந்து மென்மையான "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" ஆக மாறுகிறார்.  இதன் விளைவாக அந்த மென்மையான குணம் வரும்போது அனானி பெயரில் அவரது வலைப்பூவிலேயே பின்னூட்டங்கள் போடுவார்.  அப்புறம் அடாவடி வருனாக வந்து பதிலும் போட்டுக் கொள்வார்.  ஆனால் படிப்பவர்களுக்கு ரெண்டு பின்னூட்டமும் ஒருத்தருடையது மாதிரியே இருப்பதாகத் தோன்ற, இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா என்று காரி உமிழ ஆரம்பித்தனர்.  உடனே அனானி ஆப்ஷனையே தனது பதிவில் இருந்து நீக்குகிறார் அடாவடி கேரக்டரில் இருந்த கொலாப்ஸ்.

ஆனாலும், நல்ல கேரக்டராக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவே இல்லை.  அதன் விளைவாக புது கேரக்டர் ஒன்று உருவானது.  அதன் பெயர்தான் அனந்து ராமகிருஷ்ணன்!!  இந்த சாப்ட் கேரக்டர் என்ன பண்ணும் தெரியுமா?  கொலப்சுக்கு எதிராக  பதிவு போட்டால் அங்கே போய் அனானி பெயரில் லந்து பண்ணும், ஆனால் சொந்தப் பதிவில் அனந்து ராமகிருஷ்ணன் என்ற பெயரிலேயே பின்னூட்டம்  போடும்.  அதில், ஐயா நீங்க நேர்மையானவர், வல்லவர், நல்லவர் என்று கொலாப்சை புகழும், எதிரியாகக் கருதுபவர்களை வசை பாடும்.  அதற்கு அடாவடி கேரக்டர் ஒரிஜினல் ஐ.டி யிலேயே வந்து, "ஆமாம் பாத்தியா?"  என்று பதிலும் போடும். 

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, அனந்து ராமகிருஷ்ணன் என்ற ஒரு  "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" கேரக்டர் இருப்பதே கொலப்சுக்குத் தெரியாது, ஆனால் அனந்து ராமகிருஷ்ணனுக்கு கொலாப்ஸ் கேரக்டர் இருப்பது தெரியும்.  இதனால், கொலாப்ஸ் "நான் அனானி பெயரிலோ, சாப்டு கேரக்டர் அனந்து ராமகிருஷ்ணன் பெயரிலோ எங்கும் பின்னூட்டம் போடுவதில்லை" என்றே சொல்லிக் கொண்டிருக்கும்.  அது பொய் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும்.  ஆனால் அது உண்மையே.  அப்படி ஒரு கேரக்டர் இருப்பதே அவருக்குத் தெரியாது, ஆகையால் அவரைத் தெரியாமலேயே இதெல்லாம் நடப்பதால் அவர் மறுக்கிறார்.  எனவே அவர் மீது தப்பேயில்லை, யாரும் சந்தேகப் படாதீர்கள்.

இந்த வியாதிக்கு தீர்வுதான் என்ன என்பதையும் டாக்டர். கியூட்டி பிகாசோ விடம் கேட்டோம்.  அதற்கு சக பதிவர்களாகிய நாம் தான் உதவ வேண்டுமாம்.  என்ன செய்ய வேண்டும்?  அந்த அடாவடி கொலாப்ஸ் கேரக்டர் எல்லோரையும் வம்பிக்கிழுக்கும்,  திட்டி பின்னூட்டம் போடும்.  நாம் ஐயோ பாவம், மனோ வியாதி என்று விட்டு விட்டால் அது ஆபத்து [நமக்கில்லைங்க, அவருக்கு!!].  வியாதி இன்னும் முத்திப் போகும்.  பதிலுக்கு லூசு, மெண்டல்...........   என்று என்னென்ன மட்டமான வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கொண்டு அவரைத் திட்ட வேண்டும்.  ஆள் குஷியாயிடுவார், வியாதியும் படிப்படியாகக் குறையும்!!  எல்லோரும் இதைக் கடை படித்தால் கொலாப்சிடம் அவர் விரும்பும் மென்மையான பண்பு வளர்ந்துவிடும்!!

பின் குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் இன்னொரு பதிவில் வெளியான பின்னூட்டங்களுக்கும் [சுட்டி] எந்த சம்பந்தமுமில்லை.  அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Friday, April 25, 2014

தமிழகத்தில் 73% வாக்குப் பதிவு, சூட்சுமம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்!!


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.  வழக்கமா 58% அல்லது 65% என்று தான் வாக்குகள் பதிவு ஆகும்.  தற்போது ஏன் இந்த மாற்றம்?  தேர்தலுக்கு முன்னர் பணம் யார் எடுத்துச் சென்றாலும் விரட்டி விரட்டி கண்டுபிடித்து பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன் கடைசி ரெண்டு நாள் எந்த கெடுபிடியும் காட்டவில்லையாம்!!  அந்த ரெண்டு நாட்களில் இரவு மின்வெட்டு வேறு.  போக வேண்டிய தொகை போய்ச் சேரவேண்டியவங்களுக்கு போயிடுச்சு, அவங்க வந்து தங்களது "ஜனநாயக" கடமையை ஆத்து ......... ஆத்து ......... என்று ஆற்றிவிட்டார்கள்.

நன்றி: தினமலர்
 ஓட்டு போடுறேன்னு காசு வாங்குபவர்கள் மாற்றி ஓட்டுப் போடுவதில்லை.  அதற்கு காரணம் அவர்கள் நேர்மையானவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், அரசியவாதிங்க மாதிரி சொல்வது ஒன்று செய்வது வேறு என்று செயல்படத் தெரியாத அப்பிராணிகள் என்று இது நாள் வரை தப்புக் கணக்கு போட்டிருந்தேன்.  அதற்க்கு காரணமே வேறு என்று நண்பர் ஒருத்தர் சொல்கிறார்!!

முகநூலில் பார்த்தது:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பணம் வாங்கியவர்கள் ஏன் வாக்களிப்பதில் ஏமாற்றுவதில்லை ? இதன் சைக்காலஜி சுவையானது . நேர்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை . ஒரு சிஸ்டத்தை குலைக்க யாரும் விரும்புவதில்லை . காசு வாங்கிவிட்டு மாற்றி வாக்களித்தால் , காசு கொடுப்பது என்ற சிஸ்டமே அழிந்து விடும் அல்லவா ? இந்த முறை அழிவதை எதிர்கட்சியும் விரும்புவதில்லை . அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோதும் அவர்கள் மொண்ணையாகவை எதிர்ப்பு தெரிவித்தனர் . இப்ப திமுகவும் ஃபார்மலாக எதிர்க்கும் .
 ++++++++++++++++++++++++++++++++


ஆஹா........  நம்மாளுங்களும் வெவரமாத்தான்யா இருக்கிறாய்ங்க!!  ஆனா, எல்லாமே திருமங்கலம்  ஆயிபோச்சே..............!!

பத்திரிகைகளில் பார்த்த வேடிக்கையான சில செய்திகள்:

தேர்தல் பிரச்சாரத்தின் போது, குஷ்பு ஒரு உண்மையை போட்டு உடைச்சிருக்காங்க.

"பித்தலாட்டத்தில் திமுகவை மிஞ்சிவிட்டது அதிமுக " என்று பேசியிருக்கிறார்.   இவர் என்னதான் சொல்ல வருகிறார்?  பித்தலாட்டம் செய்வதில் திமுக சாம்பியன்,  அப்பேர்பட்டவர்களையே அதிமுக மிஞ்சி விட்டது என்கிறாரா?  ஆக மொத்தத்தில் திமுக பித்தலாட்டம் செய்கிறது என்பது மட்டும் இவரது பேச்சில் இருந்து தெரிகிறது!!  

விஜயகாந்த் ஓட்டுப் போடத் தடுமாறியதாகவும் அவரது மனைவி உதவியதாகவும் செய்தி!!  ஓட்டுப் போடவே தடுமாற்றமா?  ஒன்னும் புரியலை.  எங்கேயோ இடிக்குதே..........


நல்ல வேலையா ஆள்காட்டி விரலில் மை வச்சாங்க, நடுவிரலில் வச்சிருந்தா மேலே இருக்கும் படம் எந்த மாதிரி வந்திருக்கும்?  நம்ம பொழப்பு நாறியிருக்கும் போலிருக்கே!!

ஓகே...... மக்கள்ஸ், இப்போ எனக்கு ஒரு டவுட்டு .....  இது ரொம்ப நாளைய டவுட்டு......

வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளைச் சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன?  தெரிந்தால் சொல்லுங்களேன்!!

Friday, April 4, 2014

மான் கராத்தே...... படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனம்!!

வணக்கம் மக்கள்ஸ்!!


சற்று முன்னர் தான் கவிதை வீதி சௌந்தர் எழுதிய மான் கராத்தே சினிமா விமர்சனம் 

படித்தேன்.  அவர் கதை என்ன என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நூறு வருஷத்துக்கு முன்னாடி சார்ளி சாப்ளின் நடித்த "சிட்டி லைட்ஸ்" என்ற படத்தின் ஞாபகம் தான் ப்ளாஷ் ஆகியது. 





அந்தப் படத்தில் கண் பார்வையற்ற தனது காதலியின் ஆபரேஷன் செலவுக்கான பணத்தை சம்பாதிக்க குத்துச் சண்டையில் பங்கேற்க சார்ளி சாப்ளின் ஒப்புக் கொண்டு முரட்டு வீரர்களுடன் அந்த உடம்போடே போட்டியிட்டு சிலரைத் தோற்கடிப்பார். ஆனால் இறுதியில் ஒருவரிடம் தோற்றுப் போவார்.
 



இருப்பினும் இரவில் குடிபோதையில் மட்டுமே இவரை நினைவு கொண்டும், பகலில் மறந்து விட்டும் இருக்கும் ஒரு பணக்கார நண்பர் மூலம் பணத்தை பெற்று காதலிக்குத் தந்து விட்டு, அதே நண்பரின் கொலைக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குச் சென்று விடுவார்.  காதலிக்கு இவர் முகம் தெரியாது. கிளைமேக்சில் இவர் தான் தனக்கு கண் பார்வை கிடைக்கச் செய்தவர் என்று தெரிய வரும் காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாதவர் யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தின் கண்ணு தெரியாத காட்சி கன்சப்டை எடுத்து  இயக்குனர் எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தை எடுத்தாரு.

கிளைமாக்ஸ்

இப்போ குத்துச் சண்டை காட்சிகள் "மான் கராத்தே" ஆகியிருக்கு!!

 ஏ.ஆர். முருகதாஸ் அப்படின்னாலே ஆங்கிலப் பட காப்பிதானே!!  ஹி ...........ஹி ...........ஹி ...........

சிட்டி லைட்ஸ் முழுப் படம் 

Tuesday, April 1, 2014

இதை எந்த மெய்ஞானி சொன்னார்? சொல்லுங்க ஜோதிஜி...........!!

வணக்கம் மக்கள்ஸ், 

திரு.ஜோதிஜி, திருப்பூர்  ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? என்ற பெயரில் தனது ஆன்மீகப் பயண தொடரின்  இறுதிக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.   "ஆத்தீகம், நாத்தீகம் ஆகிய ரெண்டு டீமும் வேணாம், கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாதா?" என்று முன்னர் கேட்ட இவர் இதில் நாத்தீகம், நவீன அறிவியல், திருமூலர் அப்படின்னு எல்லா டீமுக்கும் விளையாடி கோல் போட்டிருக்கார், கட்டுரையை முழுசா படிச்சும் இவர் எந்த டீமுக்குத்தான்யா ஒரிஜினலா விளையாடுராருன்னு கண்டுபிடிக்க முடியலை!!

இவர் இக்கட்டுரையில் சொன்னது யாவும் பொதுவாக தி.க.வினர் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து வீசும்  குற்றச் சாட்டுகளே, புதிது ஏதும் இல்லை.


அறிவியலால் கிடைத்த சாதனங்களால் தான் 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதே  புரிந்தது என்கிறார்.  ஐயா, அறிவியல் சில வசதிகளைக் கொடுத்துள்ளது, ஆனால் அதற்கான விலையோ எக்கச் சக்கம்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவது புத்திசாலித் தனமோ?  கேரளத்திலிருந்து   தமிழகம் வழியாக கர்நாடகம்  செல்லும் எரிவாயுக்  குழாய் நம்மை எப்பாடு படுத்தும், கர்நாடகத்தில் தூய்மையாக வரும்  காவிரி தமிழகம் வந்தததும் எப்படி சின்னா பின்னமாகிறது என்பது குறித்தெல்லாம் அவர் அலசி ஆராய்ந்து தள்ளியுள்ள ஜோதிஜி அவர்களே, அறிவியல் கண்டுபிடிப்புகள் சுற்றுப் புறச் சூழலை எந்த அளவுக்கு நாசப் படுத்தியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

கணினி வந்த பின்னர் தான் நாம் எழுதுவது காக்கப் படுகிறதா?  எப்படி திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் நமக்குக் கிடைத்தன?

பகுத்தறிவுவாதி என்று தங்களை சொல்லிக் கொண்டு திரியும் கூட்டத்தை வைத்து அவர்கள் சொன்னது தான் பகுத்தறிவு என்று யாராவது நினைத்தால் மன்னிக்கணும்.  இவர்கள் போல ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் வேறு யாரும் இல்லை, பகுத்தறிவு என்ன சாதா அறிவு கூட இவர்களுக்கு குறைவு, கேள்வி கேட்காமல் ஓடும்  ஆட்டு மந்தைகள்,  போலிச் சாமியார்களுக்கு எப்படி அடிப்படை இல்லையே அதே போல இவர்கள் கொள்கைக்கும் அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ எந்த அடிப்படையும் கிடையாது. பகுத்தறிவுக்கும் இந்த கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகுத்தறிவு என்பதை  கெட்ட வார்த்தையாக்கிய பெருமை இந்த பகுத்தறியாவதிகளையே சாரும்.

ஒருவர் இறை நம்பியாளராக வேண்டுமா இல்லையா என்பது அவரவரது விருப்பம், யாரும் திணிக்க முடியாது.  கடவுள் உங்களை யூனிபார்ம்  போடச் சொல்லாவிட்டாலும், சடங்குகளைப் பின்பற்றச் சொல்லா விட்டாலும், எதாவது ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வதும், சில சடங்குகளைப் பின் பற்றுவதும் யாராலும் தவிர்க்க இயலாது.


அடுத்து தன் கட்டுரையில் ஆங்காங்கே முத்து முத்தா தத்துவத்தையும் பொழிஞ்சிருக்காரு!!


"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.

நம் கேள்வி:  இதற்க்கு ஆதாரம் என்ன?  எந்தெந்த மதங்களில் எங்கே இவை சொல்லப் பட்டுள்ளன?

"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட.  

 நம் கேள்வி: இந்த சூத்திரத்தை எழுதியது யார்?  ஆதாரம் என்ன?


"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். 



எந்த சித்தர் சொன்னார், எந்த ஞானி சொன்னார், எங்கே சொன்னார்? மனது தெய்வமா?  [மண்டையை பிச்சிக்க வைக்குதே!].  அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை என்ன?  பொய் என்ன?


மேற்கண்ட தத்துவங்களைப் படித்ததும் ஏனோ எனக்கு நீயா ....... நானா.......  வில் பார்த்த காட்சி ஒன்று நினைவில் வந்தோடியது!!   நானும் அதில் வருவது மாதிரி, "எந்த மதத் தத்துவம் சொல்லிச்சு,  எந்த நூல் சொல்லிச்சு?" என்று திரும்பத் திரும்ப கேட்டாலும் ஜோதிஜியிடமிருந்து பதில் வருமா என்று தெரியவில்லை!!   இது பொதுவாக காணப் படுவதுதான்.  தத்துவமாகப் பொழிவார்கள், ஐயா இதை எங்கே படித்தீர்கள், சொன்னது யார்? என்று  கேட்டால் பதில்  கிடைக்காது. எல்லாம் அந்தரத்தில் காற்றிலேயே தொங்கிக் கொண்டிருக்கும், எதற்கும் அடிப்படையே இருக்காது.


Wednesday, March 26, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்? -திருப்பூர் ஜோதிஜிக்குப் பதில்........

வணக்கம் மக்கள்ஸ்!!

வாழ்க்கையில் நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறோம், சிலவற்றை  நாமே தீர்கிறோம், அதே சமயம் பல பிரச்சினைகளுக்கு இது சாத்தியமாக இருப்பதில்லை.  ஒரு வாராமா  நெஞ்சில வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால், "காலம் தாமதிக்காமல் போய் நல்ல டாக்டரா பாரு" என்று தான் சொல்கிறோமே தவிர நாமே மருந்து கடைக்குப் போய் ஏதாவது ரெண்டு மாத்திரைகளை வாங்கி உள்ளே தள்ளிவிட்டால் சரியாகிவிடும் என விட்டு விடுவதில்லை.  வீடு கட்ட நிலம் வாங்க வேண்டுமென்றால் இடத்துக்குரிய ஆவணங்களை ஒரு தேர்ந்த வழக்கறிஞரிடம் காட்டி அவரது கருத்தை கேட்டறிந்தே முடிவெடுக்கிறோம்.  இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அது நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை, நமக்குத் தெரியாத நாம் அறிந்திராத விஷயங்கள் எண்ணற்றவை உண்டு, மேலும் ஒரு துறை பற்றிய தகவல்களைப் பெற வேண்டுமானால் அந்தத் துறையில் தேர்ந்த வல்லுனர்களை அணுக வேண்டும்.



இதை நாம் எல்லா இடத்திலும் பின்பற்றித்தான் வருகிறோம்.  ஆனால் ஆன்மிகம், இறைவன் என்று வந்து விட்டால் மட்டும் நாம் மனதுக்குள் நினைப்பது இவைதான்:  ஆன்மிகம் குறித்து எனக்கே எல்லாம் தெரியும், வேறு யாரையும் நான் யோசனை கேட்க வேண்டியதில்லை,  வேண்டுமென்றால் மற்ற எல்லோரும் என்னிடம் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.  இப்படியெல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை, நாம் ஒவ்வொருவருமே நினைக்கிறோம்,  அதன் விளைவு பின்வரும் கேள்விகள் எழுகின்றன!!  இவற்றை திரு.ஜோதிஜி, திருப்பூர் தனது ஆன்மீகம் என்பது யாதெனில்?  என்ற பதிவில் கேட்டிருக்கிறார்.  ஜோதிஜி அடக்கமானவர் என்றாலும், மனித இயல்பு வேறு ஆயிற்றே!!


ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 



மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 



கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 



மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, இறைவன் என்று ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கான விடையை அறிவியல் கூட இன்னமும் கூறா விட்டாலும்,  தாங்களாகவே "கடவுள் இல்லை" என்று முந்திரி கொட்டையாக  நாத்தீகர்கள் வழங்கிய நாட்டமை தீர்ப்பிற்கும் அடிப்படை நாம் மேலே சொன்ன அதே காரணங்கள் தான்!!

இன்னும் சிலர், இந்த நினைப்பை தம்மோடு நிறுத்திக் கொள்வதில்லை, மற்றவர்களிடமும் போய், "நீ யாரிடமும் ஆன்மிகம் குறித்து எதையும் கேட்கத் தேவையில்லை, நீயே ரூம் போட்டு யோசி, எல்லாம் புரிந்துவிடும்"  என்று போதிக்க ஆரம்பித்து விடுவதும் நடக்கிறது.  அப்படியே ஒருவேளை எனக்கே எல்லாம் தெரியும் என்றால் "நான் யோசித்தாலே எல்லாம் புரியும்" என்பது மட்டும் ஏன் எனக்குத் தெரியாமல் போனது?!!   அதை இன்னொருவர் வந்து எனக்கு சொல்லி புரிய  வைக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?  அது மட்டுமல்ல, இன்னொருவருக்கு நாம் யோசனை சொல்லும் போதே அவருக்கு அந்த விஷயம் குறித்து தெரியவில்லை என்று நாமே ஒப்புக் கொள்கிறோம் என்று தானே அர்த்தம்.  பின்னர், உனக்கே எல்லாம் தெரியும் என்பது எப்படி சரியாகும்?  இவையெல்லாம் லாஜிக் ஓட்டைகள்.  சரி இப்போது ஜோதிஜியின் கேள்விகளுக்கு வருவோம்.

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

ஏன் முடியாது?  நிச்சயம் முடியும், ஆடு, மாடுகள் அப்படித்தான் வாழ்கின்றன, மேலும் 99.99% மனிதன் அப்படித்தான் வாழ்ந்து முடிக்கிறான்.

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

 
அடையாளங்கள் சம்பிரதாயங்கள் இல்லாமல் உலகில் எதுவுமே  நடப்பதில்லை.   பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சீருடை எதற்கு?  ஏன் ஒரு வக்கீல் கோவணம் கட்டிக் கொண்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது?  போலீசுக்கு காக்கிச் சட்டை எதற்கு?  நர்ஸ் ஏன் வெள்ளை நிற உடை அணிய வேண்டும்?  அடையாளங்களே கூடாது என்று சொல்லும் நாத்தீகர்கள் கூட கறுப்புச் சொக்காயைப் போட்டுக் கொண்டு கூட்டமாக நிற்ப்பது எதற்கு? ஒரு ஆண் சேலை கட்டிக் கொண்டு போனால் தான் என்ன?  இந்தக் கேள்விகள்  எதற்காவது பதில் தர முடியுமா?   ஆக அடையாளங்கள் என்பவை தவிர்க்க இயலாதவை.
 
"உனக்கு ஏன்டா குடுமி, உனக்கு ஏன்டா பூணூல், உனக்கு ஏன்டா தொப்பி, லுங்கி" என்று எங்க கூட்டத்துக்கு கேள்விதான் கேட்கத் தெரியும், பதிலுக்கு "உங்களுக்கு எதுக்கு கறுப்புச் சொக்கா, வெயிலில் போனா குளு குளுன்னு இருக்குமுன்னா?"- ன்னு பதிலுக்கு கேள்வி கேட்டுடாதீங்க தம்பி, ஏன்னா எங்களுக்கு கேட்க மட்டும் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது!!

ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழா என்றால் கூட அங்கே சம்பிரதாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பட்டம் வாங்குபவர்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து சென்று எங்கு நின்று வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்து பட்டம் பெற்று வெளியே வரும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்று அதற்கு முதல் நாளே தனி பயிற்சியளிக்கப் படும்.  செனட் தலைவர், "இந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதை நீங்கள் அமோதிக்கிறீர்களா" என்று செனட் குழுவைப் பார்த்து கேட்பார், "ஆம் அமோதிக்கிறோம்"  என்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  இதெல்லாம் அங்கே உட்கார்ந்து பார்க்கும் போது கோமாளித் தனமாகத் தோன்றும்.  ஆனாலும் சம்பிரதாயங்களை நீக்க முடியுமா?  



நம் நாட்டில் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்கும் போதும் சம்பிரதாயங்கள் இருக்கத் தானே செய்கிறது?  சம்பிரதாயங்கள் கூடாது என்று சொல்லும் நாத்தீகன்,  மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல் என சம்பிரதாயம் எதுவும் இல்லாமல், நேராக பெண்ணை அவள் வீட்டிலிருந்து அழைத்துப் போய் குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவாரா என்ன?
ஆக எந்த செயலிலும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சம்பிரதாயங்கள் சடங்குகள் இருக்கத்தான் செய்கின்றன, இவற்றைத் தவிர்க்க இயலாது. 


கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 


இங்கதான் நாம் பதிவின் ஆரம்பித்தில் சொன்ன விஷயங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது. 
முதலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.   எல்லா பிரச்சினைகளுக்கும் வல்லுனர்களை நாடிய நீங்கள் இதற்கும் வல்லுனர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை நாடி கேள்விகள் கேட்டு பதிலை அறிந்து கொள்ள வேண்டும்.


மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

நாத்தீகனை எடுத்துக் கொண்டால் பிரியாணியும் அதற்க்கு தயிர் பச்சடியும் நன்றாக இருக்கும் இதற்கும் மேல் வேறு எதுவும் இல்லை என்பான். [இதை நான் சொல்லலீங்க, கண்ணதாசன் சொல்லியிருக்கார்!!].  நாட்டிலுள்ள ஒவ்வொரு கள்ளச் சாமியாருடைய சீடர்களுக்கும் அந்தந்த  சாமியார் தான் கடவுள்.  அதற்கும் மேல் எதையாச்சும் சொன்னால் நம்மை அவரது சீடர்கள் காலி செய்து விடுவார்கள்.  இதைத் தவிர்த்து ஊர் ஊருக்கு ஒரு சாமி மீசை அரிவாளோட நின்னுகிட்டு இருக்கும்.  இவற்றில் எந்த கும்பலோட அளவுகோளைச் சொல்வது?  எனவே இன்னொரு மனிதன் என்ன அளவுகோல் வைத்திருக்கிறான் என்று ஆராய்வதில் பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையான ஆன்மீகத்திற்கு என்றென்றைக்குமான அளவுகோல் என்ன என்று கேட்பதே சரியான கேள்வியாக இருக்கும் என்பது எனது கருத்து!!

Thursday, March 13, 2014

இது குதிர்வேலன் மோதல்-சினிமா விமர்சனமல்ல!!

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில "இது கதிர்வேலன் காதல்" படம் தியேட்டருக்குப் போயி பார்த்தோம்.  ["அத சொல்லனுமாக்கும், தியேட்டருக்குப் போயி பாக்காம கிரிக்கெட் கிரௌன்டில போயா பார்க்க முடியும்?"   என்று நீங்க கேட்பது எனக்குப் புரிகிறது!!].  படம் பார்த்துகிட்டே இருந்தோம், ஓரு சீன்ல சந்தானத்துக்கு ஹீரோ கட்டிங் ஊத்தி குடுக்குறாரு.  உடனே நான், "அடேய்....  இதே சீனை OK.........OK......... படத்தில கூட பார்ததோமேடா?  இடம் கூட அதே மாதிரியே இருக்கே?!!"  என கத்தினேன்.




அதுக்கு எங்க பையன் சொன்னான், அட அதுமட்டுமில்லேப்பா...........


அம்மா கூட அதே அம்மா..........




அதே சந்தானம் ஃ பிரண்டு................




அவன் கூட நடிக்குதே அந்தப்  பொண்ணு மட்டும் மாத்திட்டாங்க, மிச்சம் எல்லாம் அதே தான்பா...........!!  என்று அத்தனையும் அடுக்கித் தள்ளினான.



 அட ஆமான்யா.............!!


முன்பெல்லாம் பாக்கியராஜ் படங்களில் அவர் போட்டிருப்பது போலவே பெரிய சைசு கண்ணாடியை அவரோட ஐஞ்சு வயசு மகன் உட்பட படத்தில் வரும் கதாநாயகி, அவருடைய தோழிகள், உறவினர், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை பேருக்கும் வாங்கி மாட்டி விட்டுவிடுவார்.  அதே வேலையை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் கதா நாயகன்!!

அண்ணா, நமக்குத்தான் எக்ஸ்பிரஷன் வராது, கூலிங் கிளாஸ் வேணும்.............

ஆனா படத்துல பாட்டுக்கு கூட ஆடும் துணை நடிக நடிகைகளுக்கும் அது தேவையா!!



அதேன்னேமோ தெரியல, ஒரு பாட்டு முதல்வன் படத்தை ஞாபகப் படுத்தியது!



முதல்வனில் அழகான இராட்சசியே .............

காதல விட பெத்தவங்கதான் முக்கியம்................  இதென்ன காதலுக்கு மரியாதையா?


எம்ஜிஆர் படமா........??  ரெண்டு ஹீரோயின்கள், கடைசியில் ஒருத்தர் காதலி, இன்னொரு அம்மணி தங்கச்சி. [அது கனவு சீனில் இவரோட கட்டிப் பிடிச்சு உருண்டு பொரண்டிருக்கும், அதெல்லாம் கணக்கில வைக்கப் படாது........கடைசி சீன்ல அதுவாவே அண்ணா.........அப்படின்னு கத்திகிட்டே ஓடி வந்து இன்னொரு தடவையும் கட்டிப் பிடிக்கும்].

ரஜினி படமா........?  ஒரு பணக்காரன் வீட்டிற்கு இவரு வேலைக்காரனா இருப்பாரு, கொஞ்ச காலம் கழிச்சு அந்த சொத்துக்கு உண்மையான வாரிசே இவருதான்னு தெரியவரும்.

ஷங்கர் படங்களில் கதையா?  வேறென்ன நாட்டில் சட்டத்தை ஏமாத்தி பணம் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து ஹீரோ காலி பண்ணுவார்.  அநியாயமா சேர்த்த பணத்தையெல்லாம் என்னென்னமோ ஜகஜால வேலையெல்லாம் பண்ணி ஏழைகளுக்கு போய்ச் சேருமாறு பண்ணிவிடுவார்.    இவர் பட ஹீரோக்களுக்கு சட்டத்தை மதிக்காதவங்கன்னாலே ஆகாது!!   [அங்க யாருப்பா இவரு வருஷா வருஷம் வரி பாக்கியில்லாம கட்டிட்டாரான்னு கமண்டு அடிக்கிறது?  சும்மா இருக்க மாட்டீங்களா?]

இந்த வரிசயில, ஒரு பொண்ணு, அவரை சந்தானத்து உதவியோட கரெக்டு பண்ணு, கூட ஒரு அம்மா...............  இது தான் ஓகே ....ஓகே..............வா...........??!!  [வடிவேலு பாணியில்]  ஐயோ..........ஐயோ.............. 


Wednesday, March 5, 2014

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா? -தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு பதில்

வணக்கம் மக்கள்ஸ்!!!

அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் விடுதி அறிவிப்பு பலகையில் ஒரு தகவல்.  அது கீழ்க் கண்டவாறு இருந்தது:

Who are you?
Where are you coming from before birth?
Where will you go after death?
Who is God?  what is your relationship with Him?
What is your duty in Life?

To answer to these questions please attend a lecture @ Ganesh Temple!!

சுவராஸ்யமான தலைப்பு, ஞானிகள் பலர் இந்த கேள்விகளுக்கு பதில் தேடிகிட்டு இருக்காங்கன்னு பல இடங்களில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது, செத்த பின்னாடி என்ன ஆகும் என்பது போல கேள்விகளை பற்றி நாமும் யோசித்ததுண்டு!! சரி யாரு பேசுறாங்கன்னு பார்த்தா ஒரு இஸ்லாமியரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது!!  பேசும் இடம் கல்லூரி வளாகத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோவில்!! கொஞ்சம் குழப்பத்துடனே தான் அங்கே சென்றேன், பின்னர் தான் புரிந்தது நடப்பது பகவத் கீதை உபன்யாசம், சொற்பொழிவாற்றியவர் பகவத் கீதையை பயின்ற பின்னர் அதன் பால் ஈர்க்கப் பட்டு கிருஷ்ணா பக்தரான ஒரு இஸ்லாமியர்!!

அதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெவ்வேறு பக்தர்கள் வந்து கீதை பற்றி பேசுவார்கள், இறுதியில் சுவையான பிரசாதமும் உண்டு.   என்னுடைய ஈடுபாடு வார வாரம் அதிகமானது, இதை நண்பர்கள் கவனிக்கத் தவறவில்லை!!  இச்சூழ்நிலையில் ஒரு நாள் தி.நகருக்கு சக மாணவருடன் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன்.  அவருக்கு ஒரு கால் சற்றே வலுவற்றது.  பேருந்தில் ஏறிய பின்னர் ஒரு இடம் உட்காரக் கிடைத்தது.  அதில் அவர் என்னை அமரச் சொன்னார், ஆனால் நான் மறுத்தேன், அவர் இரண்டு முறை பிடிவாதமாய் சொல்லியும் நான் ஏற்காமல் அவரையே அமர வைத்தேன்.  வேண்டா வெறுப்பாய் வாயில் ஏதோ முனகிக் கொண்டே உட்கார்ந்தார்.  அவர் முகத்தில் எதற்காக வெறுப்பு?  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  இறங்கிய பின்னர் கல்லூரியில் நுழைவாயிலில் அவருடைய மிதிவண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே இரட்டையராய் செல்ல வேண்டும்.  அவர் பின்னால் உட்காருங்கள் நான் மிதிக்கிறேன் என்றார், அதற்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை, நான் தான்  ஓட்டுவேன், நீங்கள் அமர்ந்து வாருங்கள் என்றேன்.  இப்போது அவர் முகத்தில்  கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.  நீங்கள் செய்வது கொஞ்சமும் சரியில்லை என்றார்.  எனக்கோ மேலும் குழப்பம்.  என்ன என்று புரியாமல் கேட்டேன்.  அதற்கு அவர் "என்னை வைத்து நீங்கள் சொர்க்கம் போகப் பார்க்கிறீர்களா?" என்று  வெடித்தார்.  இதைக் கேட்டதும்  எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.   என்ன சொல்கிறீர்கள் என வினவினேன்.  பேருந்தில் நீங்கள் என்னையே அமர  வைத்தீர்கள், இங்கும் என்னை உட்கார வைத்து சைக்கிளை நானே செலுத்துவேன் என்கிறீர்கள்.  உங்கள் எண்ணம் எனக்குத்  தெரியும், இந்த மாதிரி புண்ணியத்தை வாழ்நாள் முழுவதும் சேர்த்து செத்த பின் சொர்க்கம் போகலாம் என்று தானே செய்கிறீர்கள்? இது சரியில்லை என்று பொரிந்து தள்ளினார்.  அன்று அவரது ஆத்திரத்துக்கு காரணம் புரிந்தாலும், அவர்  சொல்வதெல்லாம் விந்தையாகப் பட்டது!!  இப்படியெல்லாம் கூட பிளான் பண்ணி சொர்க்கத்து போக முடியுமா?  என்ற கேள்வியும் எனக்குள் அன்று எழுந்தது.   எனது உண்மையான நோக்கம் கால் வலுவற்றவரை நாம் சித்தரவதை செய்யலாமா என்ற எண்ணம் மட்டுமே, அதை அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை, போகட்டும் என்று அந்த நிகழ்வை அதற்கும் மேல் பெரிது படுத்தாமல் விட்டு விட்டேன்.

இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, திருமணமான புதிதில் நான் அவ்வப்போது ஜப மாலையில் கிருஷ்ணா நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன்.  இதைக் கவனித்த எனது மாமனார் ஒருமுறை, "நீ  சொர்க்கத்துக்கு போவதற்கு இவ்வளவு பாடு படுகிறாயா?" என்று நக்கலாக கேட்டார்.  இது மட்டுமல்ல பதிவுலகிலும் சில அன்பர்கள் அதே  குற்றச் சாட்டை வைத்தனர்.  சிலர் நீ மன அமைதி தேடித்தானே கோவில் செல்கிறாய், அதை வீட்டிலேயே தியானம் செய்து பெறலாமே?- என்றும் கேட்க ஆரம்பித்தனர்.  ஆனாலும் எனக்கு ஒவ்வொரு முறையும் சொர்க்கம், Peace of Mind என்று எதற்காக இவர்கள் சொல்கிறார்கள், ஆன்மீகத்துக்கும்  இவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.  அதற்கு காரணம் என் பின்புலமே.  அப்பா கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும் என்ற வகையில் அமைந்தது எனது மாணவ பருவம்.  [அப்பா கஷ்டம் எனக்கு அப்போது தெரியாது!!].  வாழ்வில் கஷ்டத்தைப் பார்க்காமல், கல்வியிலும் தோல்வி என்பதே என்னவென்று தெரியாது வளர்ந்தேன்.  நினைச்சதெல்லாம் நடந்தது ஆனாலும் வாழ்வில் இனம் புரியாத வெறுமையே மிஞ்சியது.  இந்த வெறுமை பலருக்கு வயதன பின்னர் வரலாம், சிலருக்கு இளமையிலேயே வரலாம், எனக்கு பின்னது நடந்தது.  பள்ளியில் படிக்கும்போதே ஒரு சிந்தனை அடிக்கடி என்னைத் தாக்கும்.   "தாய் தந்தை, சகோதரிகள் மற்றும் எந்த உறவுகளும் நிலையானது அல்ல, மரணம் நம்மை நிச்சயம் ஒரு நாள் அவர்களிடமிருந்து நம்மை பிரிக்கப் போகிறது, இது தவிர்க்க முடியாதது" என்ற உண்மை  ஒரு நாள் என்னைச் சுட்டது.  அப்படியானால் வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் தான் உண்டா என்ற கேள்வி எழ விடையை பல வழிகளில் தேட ஆரம்பித்தேன்.  தினமணியில் வரும் ஆன்மீக பகுதி சற்று ஆறுதல் தந்தது.  இறைவனின் நாமத்தை ஜபம் செய்வது கலி யுகத்தின் ஒரே ஆன்மீக வழி என்பது பல்வேறு கட்டங்களில் தினமணியில் படித்திருந்தேன்.  ஆனாலும் மனம் மட்டும்  நிலைகொள்ளாத படியே  இருந்தது.

அதைத் தொடர்ந்து ஒரு திரைப் படப் பாடகரின் அர்த்தமுள்ள....... தொடர் புத்தகங்களின் பகுதிகள் சிலது கிடைக்க அவற்றை படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் அவையோ அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை.  அதன் பின்னர் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் சேர அட்மிஷன்   கிடைத்தது.   ஒருவேளையாக கல்லூரியில் சேர்ந்தாயிற்று, ஆனால் இன்னொரு புறம் விரக்தி........விரக்தி........விரக்தி.....  அந்த சமயத்தில் தான் மேலே சொன்ன தகவல் பலகையில் பகவத் கீதை உபன்யாசம் பற்றி செய்தி வந்தது.  தேடலுக்கான பதில் அங்கே கிடைத்தது, மனம் நிம்மதியானது.  அன்று ஆரம்பித்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றும் தொடர்கிறது!!  நமக்குள் எழுந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் போகையில் அது கீதையில் கிடைக்கிறது என கண்டுணர்ந்து நாம் கீதையை பின்பற்றுகிறோம் அவ்வளவே.  சொர்க்கம், நரகம் நமது செயல்திட்டதில் இல்லவேயில்லை!!

இணையத்திற்குள் வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்கள்  தெளிவாக ஆரம்பித்தன.   சில மத போதகர்கள், "நீ என் மதத்திற்கு வந்தால் சொர்க்கம் உனக்கு கியாரண்டி இல்லா விட்டால் உனக்கு மீளா நரகம் நிச்சயம்" என்றும், வேறு சிலர், "கடவுள் சொல் படி வாழ்ந்து விட்டால், செத்த பின்னர் சொர்க்கம் என்ற ஒரு இடத்திற்குப் போவோம் அங்கே 40 கன்னிப் பெண்களும், குடிக்கக் குடிக்க தீராத சோம  பான பீப்பாய்களும் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன, ஒருவேளை இதை நீ ஏற்க்கா விட்டால், உன்னை நரகத்தில் நிரந்தரமாக தள்ளி விட்டு  பூட்டு போட்டு விடுவார்கள், நீ எக்காலத்திலும் மீள முடியாத துன்பத்தில் அங்கேயே உழலுவாய், ஒருபோதும் வெளியில் வரவே முடியாது"  என்றெல்லாம் பல மேடைகளிலும், இணைய தளங்களிலும் நடக்கும் பிரசாரமே இறை வழிபாட்டில் ஈடுபடுவது சொர்க்கம் செல்வதற்கே என்ற தோற்றத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது மெல்லப் புரிய வந்தது!!  துன்பங்களில் இருந்து விடுபட வழி தேடும்போது இறைவனை நாடுகிறோம், ஆனால் அது துவக்கம் மட்டுமே, ஆனால் அதற்கும் மேலே, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவன் மீது வைக்கும் அன்பே பக்தி!!

சரி தற்போது திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுடைய கேள்விக்கு வருவோம்.  செல்லப் பிராணிகள் சொர்க்கம் செல்லுமா?  [இதற்க்கு பதில் தனக்குக் கிடைக்க வில்லை என்கிறார்!!].  இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகர என்று தெரியவில்லை.  சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம். இறை நம்பிக்கை உடையவர்கள் ஏதாவது இறைநூலில் இருந்தே விடையைத் தேட வேண்டும்.   நாம் இங்கு தரவிருக்கும் பதில்கள் அனைத்தும் சனாதன தர்மத்தின் வேத இலக்கியங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கும்.  [இந்து மதம் என்பது சரியான சொல்லாக்கம் அல்ல, சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள்  மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில்  மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில்  வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]

கேள்வி 1:  சொர்க்கம் நரகம் என்பது உள்ளதா?

பதில்:  ஆம், இருக்கிறது.  ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல, பல!!  [கீழே குறிப்பு 1-ஐ  பார்க்கவும்]

 கேள்வி 2:  சொர்க்கம்/நரகம் நிரந்தரமானதா?

 பதில்: இல்லை, தற்காலிகமானதே. [கீழே குறிப்பு 2-ஐ  பார்க்கவும்]

 கேள்வி 3: பிராணிகள் சொர்க்கம்/நரகம் செல்லுமா?

பதில்: சொர்க்கம்/நரகம்  எது கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பது நமது செயல்களால் விளையும் கர்ம பலன்களே.   மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை.  அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்.[கீழே குறிப்பு 3-ஐ  பார்க்கவும்]

கேள்வி 4: சொர்க்கம்/நரகம் தற்காலிகமானது என்றால், வாழ்வின் குறிக்கோள் தான் என்ன?


பதில்: இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும்.  இறைவன் மீது பிரியம் வந்துவிட்டால் எந்நேரமும் அவனையே நினைத்திருப்போம்.  கலி யுகத்தில் அதற்க்கான வழி  [நமது அதிர்ஷ்டம் எழிய வழி!!] அவனது திருநாமங்களை எந்நேரமும் உச்சரித்து வருவதே. அவ்வாறு செய்து வந்தால் 14 லோகங்களில் மேலும் கீழுமாக பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து வெளியில் வந்து என்னை அடைவாய் என பகவான் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், பக்தன் அதை பொருட்டாக நினைப்பதில்லை.  நான் உனது சேவகன், உன்னை நேசிப்பதையன்றி வேறொன்றும்  தேவையில்லை என்ற நிலையே மிக உன்னதமான நிலை.
[கீழே குறிப்பு 4-ஐ  பார்க்கவும்].

முதலாளி ஒருவன் மட்டுமே மற்ற எல்லோரும் தொழிலாளிகளே!!


குறிப்பு 1:


பிரபஞ்சத்தில் மொத்தம் 14 லோகங்கள் [Planetary Systems] உள்ளன. அவையாவன:

1) சத்ய லோகம்
2) தப  லோகம்
3) ஜன  லோகம்
4) மஹர்  லோகம்
5) ஸ்வர்  லோகம்
6) புவர்  லோகம்
7) பூலோகம் [இங்கதாங்க நாம் இருக்கோம்!!]
8) அதல  லோகம்
9)  விதல லோகம்
10)  சுதல லோகம்
11) தலாதல  லோகம்
12) மகத  லோகம்
13) ரசாத்தள  லோகம்
14) பாதாள லோகம்



குறிப்பு 2:


இந்த பதினான்கு லோகங்களில் நாம் மத்தியில் பூலோகத்தில் உள்ளோம்.  சத்ய லோகத்தில் சுகபோகம் இருப்பதிலேயே அதிகம், அங்கிருந்து கீழே வர வர குறைந்து கொண்டே வரும், பூலோகம் மையப் பகுதி,இன்ப துன்பம் இரண்டுமே மிதமான இடம்.  அதற்கும் கீழே உள்ள அனைத்தும் நரக லோகங்கள்.  பூலோகத்தில் செய்யும் செயல்களின் பாவ புண்ணிய கணக்குப் படி மேலுள்ள லோகங்களுக்கோ, கீழேயுள்ள நரகங்களுக்கோ அனுப்பப் படுவோம்.  ஆனாலும் இரண்டுமே நிரந்தரமில்லை.  சொர்க்க லோகங்களுக்குச் செல்பவனும் புண்ணிய கணக்கு தீர்ந்த பின்னர் கீழே வருவான், நரக லோகங்களுக்கு போனவனும் தண்டனையை அனுபவித்த பின்னர் மேலே வருவான். 

"te tam bhuktva svarga-lokam visalam
ksine punye martya-lokam vishanti
 evam trayi-dharmam anuprapanna
gatagatam kama-kama labhante"  



"Lord Sri Krishna said: When they have thus enjoyed vast heavenly sense pleasures and the results of their pious activities are exhausted, they return to this mortal planet (earth) again. Thus those who seek sense enjoyments by adhering to the principles of the three Vedas achieve only repeated birth and death."


 ஆக ஈரேழு பதினான்கு லோகங்களுக்குள் எங்கே போனாலும் பிறப்பு, வயோதிகம், நோய்நொடி, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து தப்பவே இயலாது.

From the highest planet in the material world down to the lowest, all are places of misery wherein repeated birth and death take place. But one who attains to My abode, O son of Kuntī, never takes birth again. [B.G. 8.16]

குறிப்பு 3:

          jalaja nava-laksani sthavara laksa-vimsati
          krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
          trimsal-laksani pasavah catur-laksani manusah

நீரில் 9 லட்சம் உயரினங்கள், 20 லட்சம் மரங்கள் செடி வகைகள், 11 லட்சம் வகை பூச்சிகள்,  10 லட்சம் வகை பறவைகள், முப்பது லட்சம் விலங்கு வகைகள் மற்றும் 4 லட்சம் வகை மனிதர்கள் என 84 லட்சம் வகை உயரினங்கள் உண்டு.[பத்ம புராணம்]

சனாதன தர்ம நூல்களின் படி தாவரங்கள்,  விலங்குகள்,பறவைகள், விலங்குகள் மனிதன் என எல்லோருக்கும் உயிர் உள்ளது, ஆன்மா உண்டு.  ஆனாலும்  சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே வழக்கப் பட்டிருக்கிறது.  இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு.  மனித பிறவி என்பது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.  கோடான கோடி பிறவிகள் மற்ற ஜீவன்களாகப் பிறந்து மடிந்த பின்னரே மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு அமைகிறது.  [மற்ற உயிரினங்களும் பின்னர் மனிதனாகும் வாய்ப்பு உண்டு!!].  மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு பவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை.  ஏனெனில் அவற்றுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவில்லை.  அவற்றின் உள்ளுணர்வின் உந்துதலாலேயே அவை செயல்படுகின்றன.  NGC, Animal Planet போன்ற தொலைக் காட்சி நிகழ்சிகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்.  ஆகாரம், தூக்கம், ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளல் மற்றும் இனப்பெருக்கம் - எந்த மிருகத்தை எடுத்துக் கொண்டாலும் கூர்ந்து கவனித்தால் இந்த நான்கு செயல்களைத் தவிர வேறு எதிலும் அவை ஈடுபடுவதில்லை.   மனிதனைப் பிறந்து ஆறறிவு படைத்து நீயும் அவ்வாறே வாழ்ந்து மடியாதே என்று சனாதன தர்மம் கூறுகிறது.

āhāra-nidrā-bhaya-maithunaṁ ca
sāmānyam etat paśubhir narāṇām
dharmo hi teṣām adhiko viśeṣo
dharmeṇa hīnāḥ paśubhiḥ samānāḥ


Eating, sleeping, sex, and defense—these four principles are common to both human beings and animals. The distinction between human life and animal life is that a man can search after God but an animal cannot. That is the difference. Therefore a man without that urge for searching after God is no better than an animal.-From Hitopadesha.

குறிப்பு 4:

 

man-mana bhava mad-bhakto
mam evaishyasi yuktvaivam

Engage your mind always in thinking of Me, become My devotee, offer obeisances to Me and worship Me. Being completely absorbed in Me, surely you will come to Me. [பகவத் கீதை 9.34]

 

 

[ஸ்ரீமத் பாகவதம் 12.3.51] மகாராஜா பரீக்ஷிதிடம்  சுகமுனி கூறுகிறார்:

kaler dosha-nidhe rajann
kirtanad eva krishnasya

 கலியுகத்தில் தோஷங்கள் கடலென இருந்தாலும், இந்த யுகதிற்க்கென்று மற்ற யுகங்களில் இல்லாத ஒரு சிறப்பியல்பும் உண்டு.  அது,  ஸ்ரீ கிருஷ்ணனின் நாமங்களை சொல்லி வந்தாலே போதும் இந்த எளிய வழியாலேயே பௌதீக விலங்கிலிருந்து விடுபட்டு இறைவனை அடையலாம். 

 

 


Saturday, March 1, 2014

1, 2, 3...........எண்கள் நிஜத்தில் உள்ளனவா?

வணக்கம் மக்கள்ஸ்!!

ஒரு கற்பனை, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் ஸ்கோர் போர்டே இருக்காது, அதாவது எத்தனை ரன்கள், விக்கட்டுகள் என்று எதுவும் ஒரு போதும் காட்டப் பட மாட்டாது, என வைத்துக் கொள்வோம்.  நம்மில் எத்தனை பேர் அந்த ஆட்டங்களை பார்த்து ரசிப்போம்?!!  ஆட்டத்தை ரசிக்கிறோம் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை சுவராஸ்யமக்குவது எது? 9 விக்கட்டுகள் விழுந்த பின்னர் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 15 ரன்கள் வேண்டும், தோனி என்ன செய்யப் போகிறார் என்று மூச்சை கையில் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது 6, 4, 6 என மூன்றே பந்துகளில் ரன்கள் வர வர அதில் நமக்குக் கிடைக்கும் த்ரில் வெறுமனே பந்து வீச்சும், மட்டையாட்டமும் உள்ள ஒரு போட்டியில் கிடைக்குமா?  பந்து வேச்சாளர்கள், மட்டையாளர்கள், ஃ பீல்டிங் செய்பவர்கள் பற்றி ஆட்ட நேரம் முழுவதும் தொலைக்காட்சித் திரையில்  காட்டப் படும் விதம் விதமான புள்ளி விவரங்கள் தானே நம் கவனத்தை  எங்கும் சிதறாமல் விடாமல் ஆட்டத்தின் மேலேயே கட்டிப் போடுகிறது?!  இது கிரிகெட்டிற்கு மட்டுமல்ல டென்னிஸ், கால்பந்து, ஓட்டம் என எல்லா விளையாட்டிற்கும் பொருந்தும்.  ஏன் சீட்டாட்டம் கேரமுக்கும் கூடப் பொருந்தும்.  நடால்-ஜோகோவிச் ஆடும் விம்பிள்டன் ஆட்டம் ஸ்கோர் இல்லாமல் போனால் அது இனிப்பில்லாத தேனாகிப் போகாதா?!!


எண்கள் நம் வாழ்வில் இல்லாத இடமேது?  படிக்கும் போது வகுப்பில் நமது ரேன்க், பரீட்சையில் நாம் வாங்கும் மதிப்பெண்கள் எனத் துவங்கி நாம் வாங்கும் சம்பளம் வரை எண்கள் முக்கியம்!!   நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் 15.0 13. g/dL எனப் பார்க்கும் போது நிம்மதி, இரத்த அழுத்தம் 120/80 என்றால் சரி, அதுவே 150 என்றால் பதறிப் போவோம்!!  கொழுப்பு 450 என்றால் பக்கத்தில் இருப்பவருக்கே ஹார்ட் அட்டாக் வந்துவிடும்!!


எண்கள் இத்தோடு நின்று போவதில்லை,  நியூமராலாஜி என்ற புதிய விஞ்ஞானத் துறையை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்து, தொலைகாட்சி, ஊடகங்களில் அதைப் பற்றி பேசிப் பேசி நமது பெயரோடு கடைசியில் ஒரு x அல்லது z சேர்த்து விட்டால் ஓஹோ...... என்று ஆகிவிடுவோம் என்று புளுகு மூட்டையை விற்று கல்லா கட்டவும் ஆரம்பித்துள்ளனர் என்பதும் தமாஷ்!!

அறிவியலில், தொழில்நுட்பத்தில், பொறியியலில், வியாபாரத்தில் என எல்லா இடங்களிலும் எண்கள் இல்லா விட்டால் ஏதேனும் நகருமா?  இப்படி நம் வாழ்வில் எல்லா துறைகளிலும் நீக்கமற எங்கும் நிறைந்து நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் எண்களைப் பற்றித்தான் ஒரு ஷாக்கடிக்கும் தகவல் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அது எனக்குத் தான் புதுசே தவிர அது குறித்த சர்ச்சை ஆரம்பித்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது!!  அரதப் பழசு!!  அது சரி, என்ன சர்ச்சை?  எண்கள் (Numbers) அப்படின்னா இது தான் என்று வரையறுக்க வேண்டும்.  இது தான் போட்டி, சரியான போட்டி.  ஆனால், இதில் இதுவரை ஒருத்தரும் ஜெயிக்கவில்லை என்பது தான் வியப்பு!! இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக தத்துவஞானிகள் இந்த முயற்சியில் இறங்கி தோற்றுப் போய் விட்டனர் இன்னமும் ஒரு முடிவை எட்ட வில்லை.  [வேண்டுமானால் நீங்களும் கூகுலாரிடம் போய் "Philosophy of numbers"  "what are Numbers" என்று போட்டு தேடிப் பாருங்கள்!!]

சரி இப்போ இன்னமும் கொஞ்சம் விரிவா பார்ப்போம்.  உங்களிடம்

1    2    3   4...........

இவை என்ன என்று கேட்டால், நீங்கள் நகைப்பீர்கள்!!  என்ன இது கூடத் தெரியாதா இவை தான் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்னும் நம்பர்கள் என்று தடாலடியாகப் பதில் சொல்வீர்கள்.  உண்மையில் இவை தான் ஒன்னு ரெண்டு மூன்றா?  அப்படியானால், 

I    II     III   IV..................



௧

௨

௩  ௪ [தமிழன்டா !!]

இவையெல்லாம் என்ன?  இவையும் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்பீர்கள் தானே?   அப்படியானால் எது நிஜமான ஒன்னு ரெண்டு மூணு?!!  சரி இவை தான் எண்கள் என்றே வைத்துக் கொள்வோம்.  இப்போ

2< 3

என்றால் அது உண்மையாகுமா?  ஏனெனில் பார்ப்பதற்கு 2 தான் 3 ஐ பெரியதாகத் தோன்றுகிறது, ஆகையால்  3 ஐக் காட்டிலும் 2 பெரியது என்று சொல்ல முடியுமா?!!  முடியாதல்லவா!!   இது ஒரு புறமிருக்கட்டும்.

பத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், 2-ஐ அடிப்படையாகக் கொண்ட Binary முறையில் 1 க்கு அப்புறம் வருவது 2 அல்ல, 10  !!    1+1+1=11   !!  அது மட்டுமல்ல, ஆரம்பத்தில் 1,2,3.......என்று சொல்லாமல் 1,3,4,  என்று கூட எழுதியிருந்தால் இன்றைக்கு 1+1=3 என்று தான் சொல்லிக் கொண்டிருந்திருப்போம்!!      

எனவே, அடிப்படையில் 1,2,3..........  அல்லது  I, II, III ........என்று எழுதுபவை அத்தனையும் உண்மையில் எண்கள் அல்ல, எண்களுக்கான குறியீடுகள் மட்டுமே. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு தாளில் ஆப்பிள் படம் அச்சாகியிருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.
 



படத்தில் உள்ளது நிஜமான  ஆப்பிள் அல்ல, வெறும் குறியீடு மட்டுமே, அதை சாப்பிட முடியாது, நிஜமான ஆப்பிள் வேறு.   அதைப் போல 1,2, 3 ......போன்றவை குறியீடுகள் மட்டுமே.   உதாரணத்துக்கு ஒரு மாங்காய் இருக்கிறது, அதனுடன் இன்னொற்றைச் சேர்த்தால் இரண்டாகும்.  ஆனால், 1+1=2 என்று சொல்ல முடியுமா?  மாங்காய் உதாரணத்தில் நிஜமான மாங்காய் இரண்டை கொண்டு வந்து சேர்த்துப் பார்த்து இரண்டு மாங்காய் ஆகிறதா சரி பார்க்க முடியும், ஆனால் 1+1=2 என்பதைச் சரிபார்க்க முதலில் ஒன்று என்ற எண் இரண்டைக் கொண்டுவர வேண்டும்.  அது எங்கே இருந்து கொண்டு வர முடியும்?!!  எனவே, உண்மையில் எண்கள்  எனப்படும் ஒன்னு ரெண்டு மூன்று என்றால் அர்த்தம் தான் என்ன?  இந்த வரையறையைக் கொடுக்க முடியாமல் தான் இரண்டாயிரத்துக்கும் மேலான வருடங்களாக தத்துவஞானிகள்  தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

எண்கள் குறித்து மூன்று முக்கிய கொள்கைகள் நிலவுகின்றன.  [இன்னும் எத்தனை இருக்கோ தெரியலீங்கோவ்.......!!].  அது குறித்த காணொளி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.  அந்த கொள்கைகள் இவை தான்.



1.  பிலாட்டோனிஸம் [Platonism]  2.  Nominalism  மற்றும்  3.  Fictionalism 

பிலாட்டோனிஸம்:  டேபிள், சேர் போன்றவை போல நம்பர்களும் இருக்கின்றன ஆனால் அவை காலம்-இடம் இவற்றிற்கெல்லாம்  அப்பாற் பட்டவை,  கோட்பாட்டளவில் மட்டுமே இருக்கின்றன.  அதாவது வெயில் காலத்தில் தமிழகத்தில் மாம்பழம் பார்க்கலாம், செப்டம்பரில் காஷ்மீரில் ஆப்பிளைப் பார்க்கலாம் என்பது போல இந்த நம்பர்களை இந்த சமயத்தில் இந்த இடத்தில் இருக்கும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போதும் காட்ட முடியாது.  நம்பர்கள் இருக்கின்றன ஆனால் அவை புலனாகாதவை [Abstract Objects].

Nominalism:  இதன் படி நம்பர்கள் நிஜத்தில் இருப்பவை, அவற்றை பொருட்களோடு சேர்த்து வைத்து பொருள் படுத்திக் கொள்ளலாம்.  அதாவது என்னுடை ஒரு கையில் எட்டு ஆரஞ்சு இருக்கிறது, இன்னொரு கையில் பத்து ஆரஞ்சு இருக்கிறது எனில் மொத்தத்தில் என்னிடம் என்ன இருக்கிறது என்றால் [அங்க யாருப்பா  பெரிசா ரெண்டு கை இருக்குதுன்னு சொல்றது?!!  சும்மா இருங்கப்பா!!]  பதினெட்டு ஆரஞ்சு இருக்கிறது என்று தொடர்பு படுத்தி அர்த்தம் பண்ணிக்கலாம்.  ஆனால் இங்கே ஒரு சிக்கல்.  இந்த முறையில் கற்பனை எண் i   [Squre root of -1:  மைனஸ் ஒன்றின் வர்க்க மூலம்] அப்படின்னா என்னன்னு காட்ட முடியாது,  ஆனால் அது இல்லாட்டி எலக்டிரிகல் என்ஜினீயரிங் துறையையே மூட வேண்டி வரும்.  கோவிலை பத்து முறை சுத்தினேன் என்றால் அர்த்தம் இருக்கு, ஆனால் Square root (-1) தடவை சுத்தினேன் என்று சொல்ல முடியுமா?   அதே மாதிரி வட்டத்தின் விட்டத்திற்கும், சுற்றளவுக்கும் உள்ள விகிதாச்சாரமான பை [Pi =22/7]  என்ற எண்ணை எதனோடும் சேர்த்துக் காட்ட முடியாது.  3 ஆப்பிள், நாலு ஆப்பிள் எனலாம்,  அது மாதிரி இது தான் Pi ஆப்பிள் என்று காட்ட முடியாது [ஆப்பிள் பை வேண்டுமானால் இருக்கலாம்].  ஏன்னா, பை யின் மதிப்பை கணக்கிட்டால்

3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679 ...

என ஆயிரம், இலட்சம், கோடி இலக்கங்களுக்கும் மேல் எல்லையற்று போய்க் கொண்டே இருக்கும்.  நம் சக்திக்கேற்றவாறு எத்தனை இலக்கங்கள் வேண்டுமானாலும் கணக்கிடலாம் ஆனாலும் முடிவே இல்லை.  நாலு பென்சில், இரண்டு ஆப்பிள் என்பது போல எந்தப் பொருளை காட்டி இதுதான் பை அளவு என்று சொல்ல முடியும்?!

ஆனால் பிளட்டோனிசத்தில் இந்தப் பிரச்சினையே இல்லை, ஏன்னா அங்கதான் நம்பர்கள் இருக்கு ஆனால் அவை புலனாகாதவை என்று சொல்லியாச்சே!!  இவையும் அதே மாதிரி  புலனாகாதவைன்னு சொல்லிட்டுப் போயிடலாம் !!


3.  Fictionalism:   இந்த கொள்கைப் படி நிஜத்தில் நம்பர்ன்னு ஒன்னு இல்லவே இல்லை!!   "அடப்பாவி, அப்புறம் எப்படிடா விஞ்ஞானிகள் கண்டுபுடிச்ச கம்பியூட்டர் செல்போன், ராக்கெட்டு எல்லாம்  வேலை செய்யுது" என்று கேட்டால், "ஆமாம், மதப் புத்தகங்களில் வரும் அற்புதங்கள் பற்றிய கதைகளைப் படித்து சமுதாயத்தில் ஒழுக்கம் மேம்பட்டு மகிழ்ச்சி நிலவினால் வரவேற்கலாம், அதற்காக மதப் புத்தகத்தில் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கணிதம் உதவுகிறதா, பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதற்கும் மேல் அதை நம்ப வேண்டியதில்லை "  என்று ஒரே போடாகப் போட்டு ஊத்தி மூடி விட்டனர்.

அதுசரி, இப்போ நீங்க தெளிவா குழம்பியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், முடிஞ்சா உங்களுக்கு இது பத்தி தெரிஞ்சதை வச்சு என்னையும் கொஞ்சம் குழப்பி விடுங்க நன்றி!!