என் அலுவலக நண்பர், அவர் ஒரு கன்னடர், ஒரு நாள் என்னிடம் பரபரப்பாக ஓடி வந்தார். [அவர் எப்பவுமே அப்படித்தாங்க!!]. என்கிட்ட ஓடி வந்ததுக்கு ஒரு காரணமிருக்கு, ஏன்னா தமிழ் நல்லா தெரிஞ்சவன் என்பதோடு பிரியமான நண்பன் என்ற முறையில் அவர் என்னிடம் வந்தார். தான் ஒரு அற்புதமான தமிழ் வைத்தியர் ஒருவரை பற்றி கேள்விப் பட்டதாகவும், அவர் பேசிய வீடியோக்கள் சிலவும் எனக்குத் தந்தார். பின்னர் அவை எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்று YouTube லும் பகிர்ந்தார். அந்தத் தமிழ் வைத்தியர் பெயர் Healer பாஸ்கர். தற்போது இவரை என் கன்னட நண்பர் வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார் இவர் சொல்வது ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்ற வேண்டியவை என்றும் சொல்கிறார். முடிந்தால் இவரை பெங்களூருக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்று திட்டமும் வைத்துள்ளார்.
இவற்றில் சிலவற்றை நானும் பார்த்தேன். குழந்தைகளுக்கு தடுப்பூசி என்று போடுகிறார்களே, அது மருந்து இல்லையாம், எதற்கு தடுப்பூசி போடுகிறார்களோ அந்த நோயை உருவாக்கும் கிருமிகளாம். குழந்தை உடல் அதை எதிர்த்து போராடி அந்தக் கிருமிகளுக்கான எதிர்ப்பு மருந்தை/சக்தியை உடலில் உற்பத்தி செய்து வாழ்நாளில் மீண்டும் எப்போது வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறதாம். வயது ஆக ஆக இந்த திறனை நமது உடல் இழக்கிறதாம். நம் உடலை குழந்தையின் உடலைப் போலவே மாற்றவேண்டும், மீண்டும் அந்தத் திறனை கொண்டு வரவேண்டும் என்கிறார்.
நாம் உண்ணும் உணவை பல பிரிவுகளாகப் பிரிக்கிறார்.
1. உயிருள்ள உணவு. -பச்சைக் காய்கறிகள் பழங்கள்.
2.உயிரூட்டப் பட்ட உணவு.- முளைவிட்ட தானியங்கள், பயறுகள்.
3. செத்த உணவு. -சமைக்கப் பட்டது.
4. லாபமும் இல்லாத நஷ்டமும் இல்லாத உணவு - மாமிச உணவுகள்.
5. உடலைக் கெடுப்பவை. -டீ , காபி, சாராயம், பாண் பராக், புகையிலை போன்றவை.
இவற்றில் முதல் இரண்டும் லாபமாம், மூன்றாவது குறைந்த லாபம், நான்காவது பூஜ்யம் 5 வது நஷ்டமாம். லாபம்-உடலுக்கு நல்லது!!
இன்னும் இது போல பல சுவராஷ்யமான தகவல்களை இவர் கூறுகின்றார், காசா, பணமா சும்மா பாருங்க, முடிஞ்சதை ஏற்றுக் கொள்ளுங்கள்!!
நண்பர்களே, கீழே இரண்டு காணொளிகள் பாஸ்கர் அவர்களின் தொலைகாட்சி பேட்டிகள், அடுத்த மூன்று என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள். பாருங்கள், இவரை நேரிலும் சந்திக்கலாம், காணொளிகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லலாம். இது மட்டுமல்லாது YouTube-ல் Healer பாஸ்கர் என்று தேடினால் மேலும் பல காணொளிகள் கிடைக்கின்றன பார்த்து பயன் பெறுங்கள்.
Jaya TV
Makkal TV
என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள்.
வீடியோ-1
வீடியோ-2
வீடியோ-3
மேலும் சில வீடியோக்கள்:
உணவுகள், எத்தனை வகை, அவற்றை எப்படி உன்ன வேண்டும்? சுட்டி
மேலும், தொடர் வீடியோ சுட்டிகள்
அட, எங்க ஊரு வைத்தியரு! கொல்லைப் பச்சிலைக்கு வீர்யம் இல்லா! இந்த மாதிரி ஆசாமிகளுக்கு உள்ளூர்ல மதிப்பு இருக்காது. இங்க யாரும் இவரைப் பற்றி பேசுவாரைக் காணோம். தவிர அவர் இருக்கும் ஏரியா அவ்வளவு பிரபலமான ஏரியா இல்லை.
ReplyDeleteஇவர் எல்.கே.ஜி படிக்கவில்லைபோலும்
ReplyDeleteஇது ரொம்ப பழைய மேட்டர் ஆச்சே... பல வருடங்கள் முன்பே VCD வந்து விட்டது...!
ReplyDeleteஎன்னுடைய தளத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே ! தவிர்க்க வேண்டிய உணவு -பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டது ! நீங்களும் அதில் பங்கெடுத்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது !
ReplyDelete