Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Friday, August 21, 2015

காபி செய்ய அனுமதிக்காத இணைய பக்கங்கள்- உடைப்பது எப்படி?

சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது.  உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது.  ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.

நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது......  ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!

பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன.  அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன.  இந்த ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.

எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும்.  காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும்.  இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.  படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.

How to Bypass Right Click Block on Any Website

இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம்.  இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.
  
"RightToClick" என்ற ADD-ON ஐ Firefox Browse-ல் நிறுவ வேண்டும்.  எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த இணைய பக்கதிற்குச் சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.


சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, "RightToClick" -ஐ நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.


நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும்.  காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம்.  இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.


இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.  நன்றி.............!! 

Wednesday, May 7, 2014

"கொலாப்ஸ்" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........??

வணக்கம் மக்கள்ஸ்!!

இது ஒரு வம்பிழுக்கும் பதிவு, வேண்டாமென்பவர்கள் ஒரு ஸ்டேப் பேக் ஆகிக்கோங்க.  இந்தப் பதிவை படிக்க நீங்க கொஞ்சம் அதிகம் படித்திருக்க வேண்டும்.  எவ்வளவு தெரியுமா?  அது ரொம்ப ஜாஸ்தி!!  எட்டாம் கிளாஸ்!! அதில் வரும் அறிவியலும் கணிதமும் தெரிந்திருக்க வேண்டும்.  ஹி .......ஹி .......ஹி .......  [நம்ம கொலாப்ஸ் இதுக்கே  நாறிப் போய் கிடக்கிறார் என்பது தான் காமடி!!].

பதிவர்கள் வீண் சண்டை போடக்கூடாது என்று நமது நலன் விரும்பும் சில மூத்த பதிவர்களின் ஆதங்கம் நமக்கும் புரிகிறது.  ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது.  அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்.

அந்த வகையில் கொலாப்சின் உண்மையான ரூபத்தை தோலுரித்துக் காட்டுவதில் இறங்கிய நாம் அதை முடிக்காமல் நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,  ஆனால் இது தொடராது நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்போம் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்!!

"கொலாப்ஸ் பிளீஸ்........!!" மாமா வருண் அவர்களுக்கு தமக்கே எல்லாம் தெரியும் மற்றவன் அத்தனை பேரும் மடையர்கள் என்ற எண்ணம் வெகு காலமாகவே இருந்து வருகிறது.  இதை நாட்டு வெடி வைத்து தகர்த்தெறிந்தவர் பதிவர் வவ்வால்.  அதை தொடர்ந்து செய்தும் வருகிறார்.  இதனால் பல வலைப்பூக்களில் கொலப்சின் டவுசர் கிழிக்கப்பட்டது.   வவ்வால் போடுவதில் தனது டவுசரை கிழிக்கும் பின்னூட்டங்களை தடுக்க தன்னுடைய தளத்திற்கு "கமண்டு மாடரேஷன்" வைத்தார், தனது கேனத்தனம் வெளிப்படுத்தும் வவ்வாலின் பின்னூட்டங்களை வெளியிடாமலேயே தவிர்த்தார்.  இப்படியே தினமும் டவுசர் கிழிந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் கூனி குறுகிப் போன "கொலாப்ஸ்" வருண் உள்ளுக்குள்ளயே புழுங்கி புழுங்கி மனோவியாதிக்கு ஆளாகிப்போனார். வவ்வாலை நேரடியாக எதிர்கொள்ள வழியில்லாமல் ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார்.  அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  சுட்டி.

படித்தவன் சூதும் வாதும் செய்யலாமா?  செய்தால் அவன் கதி .......  என்னவாகும் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

"எதற்கெடுத்தாலும் விக்கிபீடியாவைப் படித்து அதைப் புரிந்து கொள்ளாமலேயே சும்மா அடித்து விடுகிறவர்" என வவ்வாலை இவர் குற்றம் சுமத்துகிறார்.   வவ்வாலை "விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார்.  ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


கொலாப்ஸ் தன்னை விஞ்ஞானத்தில் எக்ஸ்பெர்ட் என்று சொல்லிக் கொள்கிறார்.   அப்பேற்பட்டவர்,

உயிர் வாழ எது முக்கியம்?  ஹைட்ரஜனா,  ஆக்சிஜனா இல்லை தங்கமா?

என்று கேள்வி கேட்டு பதிவு போட்டிருக்கிறார்.  இதை வச்சு ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்கப் போறாராமாம்.

"ஏன்யா முதலில் ஆக்சிஜன் இல்லாம உயிரினம் தோன்றியிருக்குமா?  வெறும் ஹைட்ரஜன் Gas ஐ மட்டும் வச்சிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா?  அதே மாதிரி ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு பயன்பாடு இருக்கிறதல்லவா?  எனவே, எந்த மடையனாச்சும் இப்படி ஒரு ஒப்பீடு செய்வானா?"  என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.  ஆனால்  இப்படி கேனத் தனமாக சிந்திப்பது தான் கொலாப்ஸ் வருணின் ஸ்பெஷலே!!  அதையும் படிச்சிட்டு ஆஹா....... என் அறிவுக்கண்ணை திறந்து உட்டுட்டீங்கன்னு சொல்லி பின்னூட்டம் போடும் மாங்கா மடையனுங்களும் இருக்கானுங்க என்பது தான் உச்சகட்ட காமடி.

சரி ஒரு கருத்தை விளக்குவதற்கு கற்பனை கதைகள் தேவை தான், அவை லாஜிக்குக்கு அப்பாற்பட்டவை என்றே எடுத்துக் கொள்வோம்.  ஆனால் அடுத்து எது பெரிசுன்னு தீர்ப்பை சொல்ல ஒரு அறிவியல் பாடம் எடுத்திருக்காரே, அதை ஒரு எட்டாம் கிளாஸ் பையனை கூப்பிட்டு காண்பித்தாலும் கைகொட்டி சிரிப்பான், காரி துப்புவான்.  சுட்டி.

சரி இதுக்கு அப்படி என்னதான் தீர்ப்பு என்ன சொல்ல வருகிறார்?  ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே முக்கியமாம்.  காரணம்?  ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து Atomic Fusion ஆவதால் தான் சூரியனில் இருந்து வெளிச்சம் வருதாம். அதனால் தான்.  நமக்கு தூக்கிவாரிப் போட்டுடிச்சு.  என்னடா இது ஹைட்ரஜன் ஹீலியமா மாறுவதால் தானே சூரியன் போன்ற நட்சத்திரங்களில் வெளிச்சம் உருவாகுதுன்னு எட்டாம் கிளாசில் படிச்சோம்,  வெறும் ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்தா எப்படி ஹீலியமா மாறும், எதை வச்சு இந்த எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் இந்த அடி அடிக்கிறாருன்னு குழம்பிடுச்சு.

அவரு அதுக்கு போட்டிருந்த படத்தை பார்த்த அப்புறமா விளங்குச்சு. அதை  விக்கிபீடியாவில இருந்து எடுத்திருக்கார் !!  சரி எடுத்தாரு போட்டாரு, அங்கே சொல்லியிருப்பதை இவரு புரிஞ்சிகிட்டாரா என்றால் அங்கதான் இடிக்குது.   ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் சுழற்சிக்குப் பெயர், proton–proton chain reaction.

The proton–proton chain reaction is one of several fusion reactions by which stars convert hydrogen to helium.

இதில் proton–proton என்ற வார்த்தையை படித்த இந்த மாங்கா ரெண்டு புரோட்டான் சேர்ந்து ஹீலியமா மாறுதுன்னு அதுவாவே அர்த்தம் பண்ணிகிச்சு, அப்படியே பதிவும் போட்டுடுச்சு. 




இந்த படத்தில் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் [சிவப்பு வண்ணம்] ஈடுபட்டுள்ளன, வினையின் முடிவில் அவற்றில் நான்கு ஹீலியம் அணு உருவாவதற்கு போக  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் மீதம் உள்ளது.   எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் உண்மையில் ஒன்னு ரெண்டு எண்ணுவதிலேயே ஃ பெயில்!!  எதையும் யோசிப்பதில்லை, அல்லது பொறுமையாகப் படிப்பதும் இல்லை.  சும்மா அடித்து விடுவது.  இத்தனையும்  செய்துவிட்டு தான் எழுதுவதை படிக்க வரும் இளிச்சவா பயல்களை [Gullible] தான் எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் என்று நம்ப வைப்பதில் கைதேர்ந்தவர் கொலாப்ஸ்!!



விக்கிபீடியாவில் படிச்சிட்டு அந்த படத்தை அப்படியே எடுத்து பதிவில் போட்டுவிட்டு, அவன் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ளாமல் கேனத்தனமாக அர்த்தம் செய்துகொண்டு, தன்னுடைய முட்டாள் மண்டையில் பட்டதை எழுதும் மாமா கொலாப்ஸ் பிளீஸ்.......  வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அடுத்தவர்களை விக்கிபீடியாவை மட்டும் படித்தவன் என்று ஏளனம் செய்வது சரியா? ஆனால், கொலாப்ஸ் வருண் அதையும் செய்வார், அதுமட்டுமல்ல தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார், தான் சொன்னது அத்தனையும் சரிதான்..... சரிதான்.........  என்று சப்பை கட்டும் கட்டுவார்.  அதுசரி, நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........?? எல்லாம் ஒன்னு தானே!!

Saturday, March 1, 2014

1, 2, 3...........எண்கள் நிஜத்தில் உள்ளனவா?

வணக்கம் மக்கள்ஸ்!!

ஒரு கற்பனை, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் ஸ்கோர் போர்டே இருக்காது, அதாவது எத்தனை ரன்கள், விக்கட்டுகள் என்று எதுவும் ஒரு போதும் காட்டப் பட மாட்டாது, என வைத்துக் கொள்வோம்.  நம்மில் எத்தனை பேர் அந்த ஆட்டங்களை பார்த்து ரசிப்போம்?!!  ஆட்டத்தை ரசிக்கிறோம் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை சுவராஸ்யமக்குவது எது? 9 விக்கட்டுகள் விழுந்த பின்னர் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 15 ரன்கள் வேண்டும், தோனி என்ன செய்யப் போகிறார் என்று மூச்சை கையில் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது 6, 4, 6 என மூன்றே பந்துகளில் ரன்கள் வர வர அதில் நமக்குக் கிடைக்கும் த்ரில் வெறுமனே பந்து வீச்சும், மட்டையாட்டமும் உள்ள ஒரு போட்டியில் கிடைக்குமா?  பந்து வேச்சாளர்கள், மட்டையாளர்கள், ஃ பீல்டிங் செய்பவர்கள் பற்றி ஆட்ட நேரம் முழுவதும் தொலைக்காட்சித் திரையில்  காட்டப் படும் விதம் விதமான புள்ளி விவரங்கள் தானே நம் கவனத்தை  எங்கும் சிதறாமல் விடாமல் ஆட்டத்தின் மேலேயே கட்டிப் போடுகிறது?!  இது கிரிகெட்டிற்கு மட்டுமல்ல டென்னிஸ், கால்பந்து, ஓட்டம் என எல்லா விளையாட்டிற்கும் பொருந்தும்.  ஏன் சீட்டாட்டம் கேரமுக்கும் கூடப் பொருந்தும்.  நடால்-ஜோகோவிச் ஆடும் விம்பிள்டன் ஆட்டம் ஸ்கோர் இல்லாமல் போனால் அது இனிப்பில்லாத தேனாகிப் போகாதா?!!


எண்கள் நம் வாழ்வில் இல்லாத இடமேது?  படிக்கும் போது வகுப்பில் நமது ரேன்க், பரீட்சையில் நாம் வாங்கும் மதிப்பெண்கள் எனத் துவங்கி நாம் வாங்கும் சம்பளம் வரை எண்கள் முக்கியம்!!   நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் 15.0 13. g/dL எனப் பார்க்கும் போது நிம்மதி, இரத்த அழுத்தம் 120/80 என்றால் சரி, அதுவே 150 என்றால் பதறிப் போவோம்!!  கொழுப்பு 450 என்றால் பக்கத்தில் இருப்பவருக்கே ஹார்ட் அட்டாக் வந்துவிடும்!!


எண்கள் இத்தோடு நின்று போவதில்லை,  நியூமராலாஜி என்ற புதிய விஞ்ஞானத் துறையை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்து, தொலைகாட்சி, ஊடகங்களில் அதைப் பற்றி பேசிப் பேசி நமது பெயரோடு கடைசியில் ஒரு x அல்லது z சேர்த்து விட்டால் ஓஹோ...... என்று ஆகிவிடுவோம் என்று புளுகு மூட்டையை விற்று கல்லா கட்டவும் ஆரம்பித்துள்ளனர் என்பதும் தமாஷ்!!

அறிவியலில், தொழில்நுட்பத்தில், பொறியியலில், வியாபாரத்தில் என எல்லா இடங்களிலும் எண்கள் இல்லா விட்டால் ஏதேனும் நகருமா?  இப்படி நம் வாழ்வில் எல்லா துறைகளிலும் நீக்கமற எங்கும் நிறைந்து நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் எண்களைப் பற்றித்தான் ஒரு ஷாக்கடிக்கும் தகவல் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அது எனக்குத் தான் புதுசே தவிர அது குறித்த சர்ச்சை ஆரம்பித்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது!!  அரதப் பழசு!!  அது சரி, என்ன சர்ச்சை?  எண்கள் (Numbers) அப்படின்னா இது தான் என்று வரையறுக்க வேண்டும்.  இது தான் போட்டி, சரியான போட்டி.  ஆனால், இதில் இதுவரை ஒருத்தரும் ஜெயிக்கவில்லை என்பது தான் வியப்பு!! இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக தத்துவஞானிகள் இந்த முயற்சியில் இறங்கி தோற்றுப் போய் விட்டனர் இன்னமும் ஒரு முடிவை எட்ட வில்லை.  [வேண்டுமானால் நீங்களும் கூகுலாரிடம் போய் "Philosophy of numbers"  "what are Numbers" என்று போட்டு தேடிப் பாருங்கள்!!]

சரி இப்போ இன்னமும் கொஞ்சம் விரிவா பார்ப்போம்.  உங்களிடம்

1    2    3   4...........

இவை என்ன என்று கேட்டால், நீங்கள் நகைப்பீர்கள்!!  என்ன இது கூடத் தெரியாதா இவை தான் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்னும் நம்பர்கள் என்று தடாலடியாகப் பதில் சொல்வீர்கள்.  உண்மையில் இவை தான் ஒன்னு ரெண்டு மூன்றா?  அப்படியானால், 

I    II     III   IV..................







  ௪ [தமிழன்டா !!]

இவையெல்லாம் என்ன?  இவையும் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்பீர்கள் தானே?   அப்படியானால் எது நிஜமான ஒன்னு ரெண்டு மூணு?!!  சரி இவை தான் எண்கள் என்றே வைத்துக் கொள்வோம்.  இப்போ

2< 3

என்றால் அது உண்மையாகுமா?  ஏனெனில் பார்ப்பதற்கு 2 தான் 3 ஐ பெரியதாகத் தோன்றுகிறது, ஆகையால்  3 ஐக் காட்டிலும் 2 பெரியது என்று சொல்ல முடியுமா?!!  முடியாதல்லவா!!   இது ஒரு புறமிருக்கட்டும்.

பத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், 2-ஐ அடிப்படையாகக் கொண்ட Binary முறையில் 1 க்கு அப்புறம் வருவது 2 அல்ல, 10  !!    1+1+1=11   !!  அது மட்டுமல்ல, ஆரம்பத்தில் 1,2,3.......என்று சொல்லாமல் 1,3,4,  என்று கூட எழுதியிருந்தால் இன்றைக்கு 1+1=3 என்று தான் சொல்லிக் கொண்டிருந்திருப்போம்!!      

எனவே, அடிப்படையில் 1,2,3..........  அல்லது  I, II, III ........என்று எழுதுபவை அத்தனையும் உண்மையில் எண்கள் அல்ல, எண்களுக்கான குறியீடுகள் மட்டுமே. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு தாளில் ஆப்பிள் படம் அச்சாகியிருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.
 



படத்தில் உள்ளது நிஜமான  ஆப்பிள் அல்ல, வெறும் குறியீடு மட்டுமே, அதை சாப்பிட முடியாது, நிஜமான ஆப்பிள் வேறு.   அதைப் போல 1,2, 3 ......போன்றவை குறியீடுகள் மட்டுமே.   உதாரணத்துக்கு ஒரு மாங்காய் இருக்கிறது, அதனுடன் இன்னொற்றைச் சேர்த்தால் இரண்டாகும்.  ஆனால், 1+1=2 என்று சொல்ல முடியுமா?  மாங்காய் உதாரணத்தில் நிஜமான மாங்காய் இரண்டை கொண்டு வந்து சேர்த்துப் பார்த்து இரண்டு மாங்காய் ஆகிறதா சரி பார்க்க முடியும், ஆனால் 1+1=2 என்பதைச் சரிபார்க்க முதலில் ஒன்று என்ற எண் இரண்டைக் கொண்டுவர வேண்டும்.  அது எங்கே இருந்து கொண்டு வர முடியும்?!!  எனவே, உண்மையில் எண்கள்  எனப்படும் ஒன்னு ரெண்டு மூன்று என்றால் அர்த்தம் தான் என்ன?  இந்த வரையறையைக் கொடுக்க முடியாமல் தான் இரண்டாயிரத்துக்கும் மேலான வருடங்களாக தத்துவஞானிகள்  தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

எண்கள் குறித்து மூன்று முக்கிய கொள்கைகள் நிலவுகின்றன.  [இன்னும் எத்தனை இருக்கோ தெரியலீங்கோவ்.......!!].  அது குறித்த காணொளி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.  அந்த கொள்கைகள் இவை தான்.



1.  பிலாட்டோனிஸம் [Platonism]  2.  Nominalism  மற்றும்  3.  Fictionalism 

பிலாட்டோனிஸம்:  டேபிள், சேர் போன்றவை போல நம்பர்களும் இருக்கின்றன ஆனால் அவை காலம்-இடம் இவற்றிற்கெல்லாம்  அப்பாற் பட்டவை,  கோட்பாட்டளவில் மட்டுமே இருக்கின்றன.  அதாவது வெயில் காலத்தில் தமிழகத்தில் மாம்பழம் பார்க்கலாம், செப்டம்பரில் காஷ்மீரில் ஆப்பிளைப் பார்க்கலாம் என்பது போல இந்த நம்பர்களை இந்த சமயத்தில் இந்த இடத்தில் இருக்கும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போதும் காட்ட முடியாது.  நம்பர்கள் இருக்கின்றன ஆனால் அவை புலனாகாதவை [Abstract Objects].

Nominalism:  இதன் படி நம்பர்கள் நிஜத்தில் இருப்பவை, அவற்றை பொருட்களோடு சேர்த்து வைத்து பொருள் படுத்திக் கொள்ளலாம்.  அதாவது என்னுடை ஒரு கையில் எட்டு ஆரஞ்சு இருக்கிறது, இன்னொரு கையில் பத்து ஆரஞ்சு இருக்கிறது எனில் மொத்தத்தில் என்னிடம் என்ன இருக்கிறது என்றால் [அங்க யாருப்பா  பெரிசா ரெண்டு கை இருக்குதுன்னு சொல்றது?!!  சும்மா இருங்கப்பா!!]  பதினெட்டு ஆரஞ்சு இருக்கிறது என்று தொடர்பு படுத்தி அர்த்தம் பண்ணிக்கலாம்.  ஆனால் இங்கே ஒரு சிக்கல்.  இந்த முறையில் கற்பனை எண் i   [Squre root of -1:  மைனஸ் ஒன்றின் வர்க்க மூலம்] அப்படின்னா என்னன்னு காட்ட முடியாது,  ஆனால் அது இல்லாட்டி எலக்டிரிகல் என்ஜினீயரிங் துறையையே மூட வேண்டி வரும்.  கோவிலை பத்து முறை சுத்தினேன் என்றால் அர்த்தம் இருக்கு, ஆனால் Square root (-1) தடவை சுத்தினேன் என்று சொல்ல முடியுமா?   அதே மாதிரி வட்டத்தின் விட்டத்திற்கும், சுற்றளவுக்கும் உள்ள விகிதாச்சாரமான பை [Pi =22/7]  என்ற எண்ணை எதனோடும் சேர்த்துக் காட்ட முடியாது.  3 ஆப்பிள், நாலு ஆப்பிள் எனலாம்,  அது மாதிரி இது தான் Pi ஆப்பிள் என்று காட்ட முடியாது [ஆப்பிள் பை வேண்டுமானால் இருக்கலாம்].  ஏன்னா, பை யின் மதிப்பை கணக்கிட்டால்

3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679 ...

என ஆயிரம், இலட்சம், கோடி இலக்கங்களுக்கும் மேல் எல்லையற்று போய்க் கொண்டே இருக்கும்.  நம் சக்திக்கேற்றவாறு எத்தனை இலக்கங்கள் வேண்டுமானாலும் கணக்கிடலாம் ஆனாலும் முடிவே இல்லை.  நாலு பென்சில், இரண்டு ஆப்பிள் என்பது போல எந்தப் பொருளை காட்டி இதுதான் பை அளவு என்று சொல்ல முடியும்?!

ஆனால் பிளட்டோனிசத்தில் இந்தப் பிரச்சினையே இல்லை, ஏன்னா அங்கதான் நம்பர்கள் இருக்கு ஆனால் அவை புலனாகாதவை என்று சொல்லியாச்சே!!  இவையும் அதே மாதிரி  புலனாகாதவைன்னு சொல்லிட்டுப் போயிடலாம் !!


3.  Fictionalism:   இந்த கொள்கைப் படி நிஜத்தில் நம்பர்ன்னு ஒன்னு இல்லவே இல்லை!!   "அடப்பாவி, அப்புறம் எப்படிடா விஞ்ஞானிகள் கண்டுபுடிச்ச கம்பியூட்டர் செல்போன், ராக்கெட்டு எல்லாம்  வேலை செய்யுது" என்று கேட்டால், "ஆமாம், மதப் புத்தகங்களில் வரும் அற்புதங்கள் பற்றிய கதைகளைப் படித்து சமுதாயத்தில் ஒழுக்கம் மேம்பட்டு மகிழ்ச்சி நிலவினால் வரவேற்கலாம், அதற்காக மதப் புத்தகத்தில் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கணிதம் உதவுகிறதா, பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதற்கும் மேல் அதை நம்ப வேண்டியதில்லை "  என்று ஒரே போடாகப் போட்டு ஊத்தி மூடி விட்டனர்.

அதுசரி, இப்போ நீங்க தெளிவா குழம்பியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், முடிஞ்சா உங்களுக்கு இது பத்தி தெரிஞ்சதை வச்சு என்னையும் கொஞ்சம் குழப்பி விடுங்க நன்றி!!