Monday, March 11, 2019

இளையராஜா 75: சில லாஜிக்கல் கேள்விகள்

# இளையராஜா 75

இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு ஞாயிறாக மாலை 3 மணிக்கு சன் டிவியில காமிச்சானுங்க.


அடுத்த ஞாயிறன்று மூன்றாம் பாகம் வரும், அதில் ரஹ்மான்-இளையராஜா சந்திப்பு இருக்கும். இந்த சுவராஸ்யமான பகுதியை கிட்டத்தட்ட முழுசாவே நம்மாளுங்க வீடியோ எடுத்துப்போட்டு காமிச்சிட்டாங்க.  பார்த்ததில் நமக்கு குழப்பமும் தீராத சந்தேகங்களுமே மிஞ்சியது.  நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் ரஹ்மான் 500 படங்களுக்கும் மேல் தன்னிடம் பணியாற்றியிருக்கிறார்னு ராஜா சொல்றார். அதை ரஹ்மான் ஆமாம்னு ஒப்புக்கொள்ளாமல், உங்களுடன் ஒரு படத்தில் வேலை செய்வதே 500 படங்களுக்கு வேலை செய்ததற்கு சமம்னு வேற மாதிரி பதிலைச்சொல்லி மழுப்புகிறார்.

"நீ எப்போ என்கிட்டே முதலில் வேலைக்கு சேர்ந்தே" ன்னு ராஜா கேட்கிறார்.

அதுக்கு, "மூன்றாம் பிறையில்"ன்னு சொல்லி பத்து பதினஞ்சு செகண்டு ஓடும் ஒரு இசையை  ரஹ்மான் போட்டு காண்பித்து இதுதான் ராஜா சார் முதலில் தனக்கு குடுத்த வேலைன்னும், அதுக்கப்புறம் "நீ ஸ்கூலுக்குப் போயி படி"ன்னு விரட்டி விட்டுட்டார்ன்னும் சொல்றார்.

அதுக்கடுத்து, புன்னகை மன்னன் படத்துக்குத்தான் திரும்ப வந்ததாக ரஹ்மான் சொல்றார்.  அந்த படத்தில் சில இசைக்குறிப்புகளை கம்ப்யூட்டரில் ஃபீடு செய்யும் வேலையை தன்னிடம் தந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.புன்னகை மன்னன் படம் வந்தது 1986, ரோஜா வெளியானது 1992.  அப்படின்னா ராஜா சொன்ன அந்த 500க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காலகட்டத்தில் வந்த படங்களாகத்தான் இருக்க வேண்டும்.  வாரத்துக்கு ஒரு படம்ன்னாலும் 6 வருஷத்துக்கு 500 படங்கள் வராதே?!

சமீபத்தில் ரஹ்மான் பத்தி சின்னக்குயில் சித்ரா வோட இன்டர்வியு ஒன்னு சமீபத்தில் பார்த்தேன்.  இளையராஜாகிட்ட ஒரு சின்னப்பையன் வேலை பார்த்தார், அவர்கிட்ட "திலீப், அந்த கீ போர்டை எடு, இதை அங்கே வை"  ன்னு ராஜா சார் வேலை சொல்லிக்கிட்டு இருப்பார்.  ரோஜா படத்துக்கு பாடப்போகும்போது தான் , அந்தச் சின்னப்பையன் தான் ரோஜாவின் இசையமைப்பாளர் ரஹ்மான் அப்படின்னு தெரியும்னு சித்ரா சொல்றாங்க.சித்ரா ராஜாவோட ஆஸ்தான பாடகி, 50 % பாட்டை அவங்க தான் பாடுறங்க.  500 படத்துக்கு வேலை செஞ்ச ஒரு இசைக்கலைஞரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்கிற அளவுக்குத்தான் ஞாபகம் இருக்குமா?!

உண்மையில் ரஹ்மான் ராஜாவுக்கு எத்தனை படங்கள் பணியாற்றினார், அது எந்த காலகட்டம்?! மேலும் வைரமுத்துவுக்கு செய்த அதே கொடுமையை ரஹ்மானுக்கும் இளையராஜா செய்தார் என்றும்,  அவர் சில வருடங்கள் யாரிடமும் பணியாற்ற முடியாமல் தவித்தார் என்றும் அரசல் புரசலாக வதந்திகளும் இல்லாமலில்லை.

இது அத்தனைக்கும் ரஹ்மான் வாயை திறக்காமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து விட்டுச் செல்கிறார்.  மொத்தத்தில் இளையராஜாவுக்கு ரஹ்மான் மீது மனதளவில் நல்லபிப்பிராயம் கிடையாது, ரஹ்மானுக்கோ அது ஒரு பொருட்டே கிடையாது, நான் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு செல்கிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கடந்து செல்கிறார்.

உண்மை தான் என்ன?! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

13 comments:

 1. இளையராஜா இசையில் ஞானியே இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

  ஆனால் தலைக்கனமானவர் என்பதும் உண்மையே...

  தன்னிடம் வேலை செய்த பொடியன் குறுகில காலத்தில் ஆஸ்கார் வாங்கி விட்டானே ஆயிரம் படங்கள் செய்தும், நம்மால் இயலவில்லையே என்ற பொறாமை அவருக்கு நிச்சயமாக உண்டு நண்பரே

  எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும் ஆனால் நான் அவருக்கு அடிமை இல்லை.

  எனக்கு ரஹ்மானின் இசை பிடிக்காது அதற்காக இவர் எனக்கு எதிரி இல்லை.
  அவரது எளிமை பிடிக்கும் பலரையும் அறிமுகப்படுத்திய அவரது உயர்ந்த மனது பிடிக்கும்.

  தங்களது அலசல் ஐயங்கள் மிகச் சரியானவையே...

  ReplyDelete
 2. ஒன்றுமில்லை...

  எல்லா புகழும் இசைக்கே...!

  ReplyDelete
 3. ஜோதிஜி திருப்பூர் இது நீங்க எழுதுனதா? இல்லை பெயர் போடாமல் வாட்ஸ் அப் ல் வந்ததா? உண்மையை அப்படியே சொல்லி உள்ளார்கள். இளையராஜாவிடம் முதல் படத்தில் இசையமைக்க ஒப்புதல் ஆனவுடன் ரகுமான் போய் மரியாதை செய்ய சென்றுள்ளார். இளையராஜா வீட்டுக்குள் இருந்தவர் இவரைப் பார்த்து விட்டு மேலே மாடிக்குச் சென்றவர் அப்படியே தான். கண்டு கொள்ளவே இல்லை. அப்புறம் வேறொரு வந்து சொல்லி (இவர் கீழே வருவார் என்ற காத்துக் கொண்டிருந்தாராம்) ரகுமான் கிளம்பி வந்துள்ளார். இதில் ஒரு அற்புதமான வரி ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. காரணம் மனதில் நினைத்து வைத்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. திருவிளையாடல் தருமி ரேஞ்சுக்கு என்னை கொண்டாந்து விட்டுட்டீங்களே ஜோதிஜி.....😏. இது எதுவும் கற்பனை இல்லை, நீங்களே கூட வெரிஃபை செஞ்சுக்கலாம். நடுவில லாஜிக்கல் இல்லாத விஷயங்கள் சிலதை நாம கேள்வி கேட்டிருக்கோம் அவ்வளவு தான்.

   Delete
 4. Murali Dharan Commented: இந்தத் தகவல் புதியது. ஆனால் வதந்திஆக இருக்கும் என்றே நினைக்கிறேன். இளையராஜா எப்போதுமே இங்கிதம் இல்லாமல் நடந்து கொள்வார். அது அவருக்குமிகப் பெரிய மைனஸ்தான். ஆனால் ரகுமான்் பிறரிடம் பணியாற்ற முடியாமல் செய்தார் என்பது உண்மையக இருக்க் வாய்ப்பில்லை. விளம்பரத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தார். ரகுமான். திரைப்படங்களில் பணியாற்றியதை விட் அதிகமாகவே அவருக்கு கிடைத்து வந்தது நாளொன்றுக்கு 25000 ரூபாய். மணிரத்தினம் அழைத்த போது ரகுமான் அவ்வளவாக விருப்பமில்லாமல்தான் இருந்ததாக அவரே சொன்னதாக படித்திருக்கிறேன். பின்னர் அரைகுறை மனதுடன்தான் இசை அமைப்பாளரானார். அது அவரது வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. ரகுமான் புத்திசாலி. எதையாவது பேசி தன் பெய்ரைக் கெடுத்துக் கொள்ள மாட்டார். இளையாராஜா தன் பேச்சின்மூலம் ரசிகர்களுக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்துவார். ராஜா மேடை ஏறினாலே ரசிகர்கள் பதைப்புடன் காணப்படுவார்கள். ஆனால் அவர் என்ன உளறினாலும் அவருக்கு எதிராக பேசமுடியாத அளவுக்கு அவர்மீது அன்பு வைத்திருக்கற ரசிகர்கள்தான் அவருக்கு மிகப் பெரிய பலம் . அதை உணர்ந்தாவது அவர் இனிமேல் மேடையில் பேசாமல் இருப்பது நலம்.

  ReplyDelete
  Replies
  1. ஜோதிஜி திருப்பூர் Replied Murali Dharan: இளையராஜா உள்ளே வெளியே என்று இரண்டு உருவங்கள் உண்டு. சிலவற்றை எழுத விரும்பவில்லை.

   Delete
 5. சிவா சலுப்புலியார் Commented: ரகுமானுக்காக நீங்கள் எவ்வளவு தான் பேசினாலும் ரகுமானுக்கு குரு இளையராஜா தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

  ReplyDelete
 6. Jagannath Srinivasan commented: 1992 ஆம் ஆண்டு வாக்கிலேயே ரஹ்மான் ஒரு விளம்பரத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமளவிற்கு இருந்தார். அவர் திரைப்படத் துறைக்கு வருவதற்கு மிகவும் யோசித்தார் என்று அவரோடு இருந்த பாடலாசிரியர் பிறைசூடன் கூறியுள்ளார். ஆகவே இளையராஜாவால் ரஹ்மான் பாதிக்கப்பட்டார் என்பது பொய். ஐநூறு படங்கள் என்பது அதீதமாக இருக்கலாம். வயது காரணமாக ஏற்பட்ட ஞாபக மறதியில் சொல்லி இருக்கலாம்.

  ReplyDelete
 7. இளையராஜாவுக்கு ரஹ்மான் செய்த கடைசி படம் வேலைக்காரன்
  இளையராஜாவின் 500 வது படம் அஞ்சலி

  எதோ நினைவில் அப்படி சொல்லி இருக்கலாம்

  வேலை செய்யும் நேரத்தில் ராஜாவுக்கும் ரஹ்மானுக்கு நேரடி தொடர்பு இல்லை .

  விஜி மனுவில் மூலமே வேலை ரஹ்மானுக்கு போகும் .

  வைமுத்து பாடகிகளுக்கு செய்த கொடுமை எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா ?

  ReplyDelete
 8. A.R Rahman, The Musical Storm, by Kamini mathai.

  இந்த நூலில் ரஹ்மான் இளையராஜா பற்றி சொல்லும் கருத்து வருகின்றது

  இளையராஜா ஒரு அட்டகாசமான நபர். நீங்கள் இசையைப் பயிலவேண்டும் என்றால் அவருடன் வேலை செய்தாலே போதுமானது. ஆனால் இசையைப் பயின்றதும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதும் முக்கியம். சுதந்திரமாக, தனியாக உங்கள் வழியில் செல்லப்போகிறீர்களா, அல்லது ஒரு இசைக்கலைஞனாகவே அவருடன் இருக்கப் போகிறீர்களா?

  இளையராஜாவின் வேகம் அசாத்தியமானது. ஒரு பாடலை ஐந்தே மணி நேரங்களில், மிக்ஸிங், ஆர்க்கெஸ்ட்ராவோடு அத்தனை வேலைகளையும் முடித்துவிடுவார். ஒவ்வொரு நொடியும் ப்ரோக்ராம் செய்யப்பட்டதைப்போல், அவ்வளவு துல்லியமாக நகரும். இளையராஜாவின் மனதில் இருந்த ட்யூன், இசைக்கருவிகளின் வழியாக எப்படி வெளிப்படவேண்டும் என்பதில் ராணுவ ஒழுங்கோடு அவர் செயல்படுவார். எனவே, எதையுமே இம்ப்ரூவ் செய்ய முடியாது. ஒரு இசைக்கலைஞராக, உங்கள் திறமையை முழுவீச்சில் இளையராஜாவின் இசையில் காட்ட முடியாது. அவர் நினைத்தபடிதான் நீங்கள் வாசிக்கவோ பாடவோ இயலும். காலையில் ஒரு பாடல், மதியம் ஒரு பாடல் என்று இயங்கும்போது அப்படித்தான் நடக்கவும் செய்யும். அதில் தப்பும் இல்லை.

  ஆனால், எனக்குப் படிப்படியாக அது அலுக்க ஆரம்பித்தது. எனக்கு இம்ப்ரொவைஸேஷன் தான் எல்லாமே. இசைக்கலைஞர்களை அவர்களின் இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவர்கள் தரும் இசை விலைமதிக்க இயலாதது. எனவே, ஒருநாள் சிங்கப்பூர் சென்று, எனது சொந்த இசைக்கருவிகள் வாங்கிவந்தபோது, இளையராஜாவிடம் சென்று, இனி என்னால் உங்களுக்காக வேலை செய்ய இயலாது என்று சொல்லவேண்டி வந்தது. அவரும் அதை இயல்பாகவே எடுத்துக்கொண்டார். அவருடன் கடைசியாக நான் வேலை செய்த படம், வேலைக்காரன்’ - ரஹ்மான்.

  ReplyDelete
 9. நீண்ட நாட்கள் கழித்து உங்களின் பதிவு படித்தேன். இரா மேடை ஏறினாலே நல்ல தமாஷா நிறைய பேசுவார். தனையே புகழ்ந்து கொண்டு சிரித்துக்கொள்வார். திடீரென யார் மீதோ கோபப்படுவார். அப்பறம் நிறைய "தன்னடக்கத்தோட" சபை நாகரிகம் கருதி தனது இசை அறிவு குறித்து கருத்துக்கள் வெளிப்படுத்துவார். இதையெல்லாம் ஒரு கும்பல் கைதட்டி ஆராவாரம் செய்யும். தெரிஞ்சதுதானே?

  ரஹ்மான் 500 படங்களுக்கு தன்னிடம் பணியாற்றியது என்று இரா சொல்வது அபத்தம். இரா ரஹ்மானை எதோ ஒரு சின்னப்பையன் அளவுக்குத்தான் நினைத்திருக்கிறார். ஒருவேளை ரஹ்மானின் திறமை குறித்த பொறாமையாக கூட இருக்கலாம். தன் வாரிசுகளுக்கு இல்லாத திறமை எப்படி இவனிடம் இருக்கிறது என்ற எண்ணியிருக்கலாம். ஆனால் ரோஜா படத்தில் ரஹ்மான் இராவின் விலாசத்தை அழித்து விட்டது நாம் கண்ட உண்மை. அதன் பிறகு இராவுக்கு இறங்கு முகம் தான். என்னதான் இரா ரசிகர்கள் நா வறண்டு கத்தினாலும் நடந்தது மாறப்போவதில்லை.

  வைரமுத்து பாட்டு, எஸ் பி பி பாட்டு என்று இரா தன்னுடைய பல நல்ல பாடல்களை அவராகவே தடை செய்துகொண்டு கேட்க சகிக்காத சில பாடல்களை வைத்துக்கொண்டுதான் இனி மேடை கச்சேரிகள் செய்யவேண்டும் போல. பாவம்.

  ReplyDelete
 10. https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/03/blog-post_85.html?showComment=1552392837407#c8048469400409982833

  well written.

  ReplyDelete