Thursday, July 31, 2014

சத்யராஜ் தத்தெடுத்த நாய்- தொழில் இரகசியம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்,

தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ், "தகடு........தகடு.........", "என்னம்மா கண்ணு, சவுக்யமா?", "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே!!"  போன்ற பஞ்ச் வசனங்களால் புகழின் உச்சிக்குச் சென்றவர்.  வில்லன்களும் கதாநாயகனாகி வெற்றி பெற முடியும் என்று ரஜினிக்கப்புறம் மீண்டும் நிரூபித்தவர்.


அவரு இப்போ ஊரே மெச்சும்படி ஒரு வேலையை பண்ணியிருக்காரு.  என்ன அது?  ஒரு தெரு நாயை தத்தெடுத்திருக்கார்.  நாய்ன்னா சாதாரண நாயில்ல, அது சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 அடுக்காக இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய ஒரு நாய்.  அதை தற்போது இவர் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சத்யராஜ் பெரியார் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்,  அவற்றை ஏற்றுக் கொண்டவர்.   "மனிதனை சிங்கம் என்று ஒப்பிடுவது முட்டாள் தனம், ஒரு காளை என்றால் ஏர் பூட்டியாவது ஓட்டலாம், சிங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும், அதனால் என்ன பிரயோஜனம்?" என்றெல்லாம் பகுத்தறிவோடு சிந்திப்பவர். 

கட்டிடத்தில் இடிந்து விழுந்ததில் தொழிலாளிகள் பலர் 72 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கூட காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.  அவர்களில் யாராவது ஒருத்தரை தத்தெடுத்திருக்கலாம்.  ஆனால் அவர் தத்தெடுக்கத் தேர்ந்தெடுத்ததென்னவோ ஒரு நாய்.   அதற்க்குக் காரணம் இல்லாமலா இருக்கும். அதில் ஒளிந்திருக்கும் பகுத்தறிவு என்ன என்பதைத்தான் இங்கே நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

தேடிப் பார்த்ததில் தமிழகத்தில் 58 பேருக்கு ஒரு தெரு நாய் தான் இருக்காம்.  இவர்களில் ஒருத்தர் ஒரு நாயை தத்தெடுத்தாலும் தெருநாயே இல்லாம போயிடும்னு ஒரு புளு கிராஸ் காரர் புள்ளி விவரம் கொடுத்திருக்கார்.  நாய்ப் பிரச்சினையைத் தீர்க்க இவங்க கிளம்பிட்டாங்கைய்யா..............கிளம்பிட்டாங்க!!

ஆக ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கணும், தமிழகத்தில் உணவின்றி தவிப்பது நாய்கள் மட்டும் தான்.  மனுஷனுங்க எல்லாம் ஈமு கோழி வளர்த்ததில் கிடைத்த லாபத்தை வைத்து கல்யாண் ஜுவல்லரி நகைக் கடையில் தங்கம் வாங்கி சுகபோகமா இருக்காங்க.  எனவே மனிதர்களைப் பற்றி கவலையே படத் தேவையில்லை.  நாய்கள் நன்றாக இருந்தாலே போதும், மனிதன் தெருவில் படுத்துக் கிடந்தாலும் பரவாயில்லை.

அதுசரி நாய் ஒரு உயிர் அது கஷ்டப்படுவதைப் பார்த்து இறக்கம் கொள்வது வரவேற்கத் தக்கதே.   அதே மாதிரி கோழி, ஆடு இதுங்களை வெட்டும் பொது கூட வலிக்கத் தான் செய்யும், நாய் படும் துன்பத்துக்கு இணையாக அவையும் துன்பப் படும், அதற்கு ஏதாவது வழியுண்டா?  உங்கள் வீட்டு சமையல் கட்டில் இனி காய்கறிகளோடு நிறுத்துவீர்களா?


Friday, July 4, 2014

இதுக்குத்தான்யா ஹிந்தி கத்துக்கனும்கிறது!!

வணக்கம் மக்கள்ஸ்!!

மோடி அரசு ஹிந்தியை கட்டாயமாக்க முற்பட்டதிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்வது பற்றி அலசி காயப் போட்டுவிட்டார்கள் [கழுவி ஊத்திட்டாங்கன்னும் சொல்லலாம்!!].  "மொழிகள் பல கல்" என்ற தமிழ் பழமொழி உண்டு, அதை ஏன் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று புரியவில்லை.

ஹிந்தியை எப்போது வேண்டுமானாலும் மூன்றே மாதத்தில் புத்தகத்தைப் படித்தே கற்றுக் கொள்ளலாம், தேவைப் பட்டவர்கள் வேண்டியபோது கற்றுக் கொள்ளட்டுமே என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.  அந்த மாதிரி கற்றவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை.  மேலும், வெளிமாநிலங்களில் ஹிந்தி படமோ, ஹிந்தியில் யாராவது பேசினாலோ எல்லோரும் புரிந்துகொள்ளும் போது அங்கே பேந்தப் பேந்த நிற்பவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பார்கள், அவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும்!  அது தான் ஏனென்று புரிய மாட்டேன்கிறது!!

ஹிந்தி காரன் இப்போ நம்மூர்ல வந்து கூலி வேலை செய்யுறானே என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.  பெங்களூர் மென்பொருள் துறையில் முன்னணி நகரம், நம்மூரில் இருந்து எண்ணற்றோர் அங்கே பனி புரிகிறார்கள்.   அதே சமயம் அங்கிருந்து சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பனி புரிபவர்களும் இருக்கிறார்கள்.  ஏன்?  ஆக, ஹிந்தி காரன் எத்தனை பேர் இங்கே வந்து பணிபுரிகிறான் என்பது முக்கியமல்ல, நமக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா என்பதே முக்கியம்.

மொத்தத்தில் தென் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற இந்திய பகுதிகளுக்கு வேலைக்காகவோ, குறுகியகால பயனமாகவோ போனால் ஹிந்தி அவசியம்.  ஏன்னா அங்கே ஒரு பய ஹிந்தியை விட்டா வேறு எதிலும் பேச மாட்டான், ஹிந்தி பற்று காரணமல்ல, அவனுக்கு ஹிந்தியை விட்டா வேறு எதுவும் தெரியாது, வராது!!

எங்க அலுவலகத்தில் இருந்து சுத்த தமிழர்கள் ரெண்டு பேர் ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தனர்.  அவங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு சொல்லத் தேவையில்லை!!  அங்கே ஒரு அறை எடுத்து தங்கினார்கள்.  காலையில் டிபன் பரிமாறப் பட்டது.  அதில் வைக்கப் பட்ட இனிப்பு நன்றாக இருந்ததாம்.  அது முடிந்ததும், ரூம் பாய் ஏதோ ஹிந்தியில் கேட்டிருக்கிறான்.  அவன் சொல்வதை வைத்து அன்றிரவுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறான் என்பது மட்டும் நம்மாளுங்களுக்குப் புரிந்தது.  ஆனால் என்ன என்பது புரியவில்லை.

அதில் ஒரு விவரமான ஆள், "டேய் இன்னிக்கு காலையில் குடுத்தானே ஸ்வீட்டு, அது வேணுமான்னு கேட்கிறான்டா" என்று 'கண்டுபிடித்து' சொல்லியிருக்கிறார்.  இன்னொரு நண்பர், அப்படியா என்று கேட்டுவிட்டு, "சார்  சாஹியே"  என்று சொல்லிவிட்டார்.  [ஆளுக்கு ரெண்டு, மொத்தம் நாலு வேணும்].  அதைக் கேட்ட ரூம் பாய் மிரண்டு போய் இவர்களை பீதியாக பார்த்த படியே அங்கிருந்து கீழே இறங்கி போயிருக்கிறான்.

உடனே லாட்ஜ் மேனேஜர் பதட்டத்தோடுஇவர்கள் அறைக்கு வந்திருக்கிறார்.  "சார், அந்த ரூம் பையன் என்ன கேட்டான், நீங்க அவன் கிட்ட என்ன சொன்னீங்க?"

"அதுவா, காலையில குடுத்தீங்களே ஸ்வீட்டு, அது வேணுமானு கேட்டான் வேணும்னு சொன்னோம், ஆளுக்கு ரெண்டா கொண்டான்னு சொன்னோம்" என்று விளக்கியிருக்கிறார்.

அதற்கு மேனேஜர், "ஐயையோ சார், அவன் ஸ்வீட்டு வேணுமான்னு கேட்கவில்லை சார், நைட்டுக்கு கில்மா வேணுமான்னு கேட்டிருக்கிறான், நீங்க ஒன்னு பத்தாது ரெண்டா கொண்டான்னு சொன்னதும் பய புள்ள மெரண்டு போயிட்டான் சார்" என்று போட்டுடைத்திருக்கிறார்.

இந்த மேட்டரை இங்கே வந்து சொன்னதும் கேட்டவர்களெல்லாம் தரையில் விழுந்து புரண்டு சிரித்தனர்!!  [அதில ஒரு அம்மா பெங்காலி!!]