நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட விதம் விதமான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன.
இவை எப்படி உருவாயின? இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் படைத்தான் என்றே
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் எண்ணி வந்தனர். 1859 ஆம் ஆண்டு ஒரு
ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப்
போட்டார். உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும்
இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார். அதாவது, கடவுள் ஒன்றும்
மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதக் குரங்கு போன்ற மற்ற
சிறிய விலங்கினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவானான் என்றார்.
150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி
நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக
விளங்கி வருகிறது.
இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பரிணாமக் கொள்கை வெறும் உயிரற்ற கல்லும் மண்ணுமாக இருந்த உலகில் முதல் உயிருள்ள செல் எவ்வாறு தோன்றியது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, ஒருசெல் உயிரி முதலில் இருந்தது, பின்னர் பலசெல் உயிரிகள் தோன்றின அவைற்றில் இருந்து பல்வேறு உயிரினங்கள் பரிணமித்துத் தோன்றின என்பதே பரிணாமக் கொள்கை. முதன் முதலாக ஒன்று அல்லது சில உயிர்களுக்கு கடவுள் மூச்சைக் கொடுத்து
உயிரை உண்டு பண்ணியிருக்கலாம் என்று டார்வின் சொன்னார். டார்வின் கடவுள்
இருப்பதை இதன் மூலம் ஒப்புக் கொண்டாலும், பின்னர் வந்த பரிணாம வாதிகள்
அதையும் நிராகரித்து படைப்பில் இருந்து கடவுளை மொத்தமாகவே நீக்கிவிட்டனர்.
இவ்வாறு 150 வருஷமா குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த பரிணாமக் கொள்கை அறிவியல்பூர்வமானதுதானா என்று நாம் இங்கே அலசப் போகிறோம். இதற்கு காரணமும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில் பொதுமக்களிடையே
"பரிணாமக் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?" என்று வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப் படுவதை நீங்கள் பலமுறை செய்திகளில் படித்திருக்கலாம். நாய் போன்ற விலங்கொன்று தான் தண்ணீருக்குள் சென்று திமிங்கலமா மாறியது, டைனோசர்கள் தான் பறவைகளாக மாறியது என ஒரு அறிவியல் கொள்கை விநோதமாக இருக்கிறதே என்று மக்கள் நம்ப மறுப்பதால் தான் இவ்வாறு வாக்கெடுப்பு எடுக்கப் படுவதாக நீங்கள் நினைத்தால் அங்கே தான் தப்பு செய்கிறீர்கள்!! வினோதம் என்று பார்த்தால், குவாண்டம் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையும் பரிணாமக் கொள்கையை விட பலமடங்கு விநோதமானவை. நம் நடைமுறை வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் மண்டையை பீய்த்துக் கொள்ள வைக்கக் கூடிய கொள்கைகள் அவை. ஆனாலும், அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று யாரும் வாக்கெடுப்பு நடத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் பரிணாமக் கொள்கைக்கு அது நடக்கிறது. காரணம் என்ன? வேறொன்றுமில்லை, முன்னவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டவை, பரிணாமக் கொள்கை கற்பனையாகத் திரிக்கப் பட்டது, சல்லி ஆதாரம் கூட இதுவரையிலும் காட்டப் படாதது, கட்டுக் கதைகளையும், பொய்யையும் புனைசுருட்டுகளையும் வைத்தே 150 வருடங்களாக ஓட்டப் படும் ஒரே கற்பனை சினிமா இந்த பரிணாமக் கொள்கை. இதனால் தான், பெரும்பாலான மக்களுக்கு
டார்வினின் கொள்கையில் நம்பிக்கை இல்லை, அதில் நம்பிக்கை உள்ளதா என்று வாக்கெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.
பரிணாமத்தில் பல வகை உண்டு. அவையாவன:
Chemical Evolution: [வேதிப் பொருட்கள் இணைந்து உயிர் உருவானதாக கருதுதல்]. இதன்படி முதலில் தனிமங்கள் [ஹைட்ரஜென், கார்பன் போன்றவை] இருந்தன, அவை சேர்ந்து மூலக்கூறுகளாயின, பின்னர் DNA, புரோட்டீன் தோன்றி ஒரு செல் உயிர் தோன்றின என்று சொல்கின்றனர்.
Biological Evolution: [உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சி] இதன் பொருள், முதலில் தோன்றிய ஒரு செல் உயிர்களில் இருந்து பலசெல் உயிர்கள் என படிப்படியாக பரிணாமம் அடைந்து மீன்கள், தவளை, ஆமை, குரங்குகள் இறுதியாக மனிதன் என இன்றைக்கு நாம் காணும் அனைத்து உயிரினங்களும் தோன்றின என்பதாகும்.
Biological Evolution-னிலும் இரண்டு வகைகள் உண்டு அவை:
1.
Micro Evolution & 2.Macro Evolution.
Micro Evolution: மைக்ரோ பரிணாமம் என்றால் ஒரு இனத்திற்குள்ளாக நடைபெறும் பரிணாமம். உதாரணத்திற்கு, நாய்களை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன. சிலது மிகச் சிறியதாக உள்ளது, சிலது கன்றுகுட்டி சைசுக்கு வளர்கின்றன. இது ஒரு இனத்தினுள் காணப்படும் மாறுபாடு.
Macro Evolution: ஒரு உயிரினம் பரிணாமமடைந்து வேறொன்றாக மாறுவதாகச் சொல்வது. இதில் மிகவும் பிரபலமானது மனிதக் குரங்கு மனிதனாக மாறியதாகச் சொல்லப்படும் கதை. இதோடு நில்லாமல், நிலத்தில் திரிந்து கொண்டிருந்த கரடியைப் போல மாமிச உண்ணி ஏதோ ஒன்றுதான் திமிங்கலமாக மாறியது என்பது போன்ற அதிரடியான பல கோட்பாடுகளும் இதனுள் அடக்கம்!!
இத்தனை விதமான பரிணாமக் கோட்பாடுகள் இருந்தாலும், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக
பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் ப ட்டு பின்னர் ஏற்கப் பட்டவைதானா என்பதே அலசுவதே நமது இந்தப் பதிவின் நோக்கமாகும்.
விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?
ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.
முதலில் Observation:
முதலில் கல்லும் மண்ணும் தான் இருந்தது, அதிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உயிர்கள் தோன்றின. இதற்க்கு ஏதாவது சான்றாக உள்ளதா என நாம் தற்போது வாழும் உலகைப் பார்க்கவேண்டும். எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா? பாதி தவளை-பாதி மீன்? பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்? இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!! எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைந்த உயிரினங்கள் என்று எதுவும் இல்லை.
அப்படியானால் பரிணாமம் எப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்? முன்னொருகாலத்தில்!! அப்போ அதற்க்கு ஆதாரம் என்ன? கற்படிவம் எனப்படும் Fossils. பல்லாயிரம்/மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உடல்கள் Fossil களாக பூமிக்கடியில் பாதுக்காக்கப் பட்டுள்ளன. இதைக் குறித்த படிப்பிற்கு பெயர் Paleontology எனப்படும்.
உலகில் இவ்வகையான கற்ப்படிவங்கள் [Fossils] 20 கோடி சேகரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் பாக்டீரியாக்கள், புழுக்கள், பூக்கள் எல்லாமும் அடங்கும்.
10 கோடி முதுகெலும்பற்ற உயிரினங்கள். நத்தை, நட்சத்திர மீன் போன்றவை.
10 லட்சம் பூச்சியினங்கள்.
5 லட்சம் மீன்கள்
2 லட்சம் பறவைகள்.
1 லட்சம் டைனசோர்கள்
4000 திமிங்கலம்.
1000 வவ்வால்கள்.
இந்த எண்ணிக்கைகளில் சேகரிக்கப் பட்ட இத்தனை கற்படிவங்களை ஆராய்ந்த பின்னரும் கிடைத்த முடிவுகள் ஒன்று கூட பரிணாமத்துக்கு ஆதரவாக இல்லை. எந்த
உயிரினத்தை எடுத்தாலும் அவை முழுமையாக வளர்ச்சியடைந்த வடிவமைப்பையே பெற்றுள்ளன, இரண்டுங் கெட்டான் நிலையில்
[Intermediary] எந்த கற்படிவமும் இல்லை. மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை. மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.
எதை வச்சு டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனச் சொன்னார்? இதுக்கு அவர் பெரிய ஆராய்ச்சிகள் எதையும் செய்திருக்கவில்லை. மனிதனையும், மனிதக் குரங்கையும் பார்த்தார் தோற்றம் கிட்டத் தட்ட மனிதளைப் போலவே ஒரே மாதிரியாக இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என அடிச்சு விட்டார். மேலும், இதைப் போல ஒரு உயிரினம் இன்னொன்றாக பரிணாமம் அடைந்தது என்பதில் பெரிய லாஜிக்கல் ஓட்டை உள்ளது. உதாரணத்திற்க்கு, மனிதக் குரங்கு மனிதனாக மாறியதை எடுத்துக் கொள்வோம்.
Ape [ஆரம்பம் குரங்கு] ------ Ape-Man [மனிதனுக்கும், குரங்குக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள உயிரினம்] ------------- Man [இறுதியாக மனிதன்].
டார்வின் ஏன் பரிணாம வளர்ச்சி யடைகிறது என்பதற்கு Survival of the Fittest என்ற ஒரு விளக்கத்தைச் சொன்னார். அதாவது கால சூழ்நிலைகளில் ஏற்ப்படும் மாற்றத்தை தாங்கி நிற்கும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே வாழும். அப்படிப் பார்த்தால் மேலே Ape என்ற இனம் Ape -man என்ற நிலைக்கு மாறக் காரணமே, மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ள Ape வடிவம் லாயக்கற்றது, அதனால்தானே?! அப்படியானால் Ape -man என்ற இரண்டுங் கெட்டன் நிலை Ape ஐ விடச் சிறந்ததாகவே இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வாழத் தகுதி குறைந்த Ape இருக்கிறது, முழுமையாக மாறிய மனிதனும் இருக்கிறான், ஆனால் Ape ஐ விட அதிக வாழும் தகுதி படைத்த Ape -Man மட்டும் ஏன் இல்லை??!! என்ன கொடுமை டார்வின் இது?
இப்படியெல்லாம் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்டதும், பரிணாமவாதிகள் உட்கார்ந்து ரூம்போட்டு யோசித்தனர். நல்லா கவனிங்க, இவனுங்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இன்னமும் செய்யவில்லை, கதை எப்படி கட்டுவது என்று தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!! ஒரு வழியா முடிவு பண்ணி, இன்னொரு கப்சாவை அவிழ்த்து விட்டனர். குரங்கு மனிதனாக ஆகவில்லை, குரங்கும், மனிதனும் ஒரே பொது முன்னோரில் இருந்து தோன்றினர் என்று தோசையை திருப்பிப் போட்டனர்!! அது யாரப்பா இருவருக்கும் பொதுவான முன்னோர் உயிரினம் எனக்கேட்டால், "அதான் அழிந்து போன இனத்தில ஒன்னு" என்றனர். அதற்க்கும் எந்த ஆதாரமும் எதிலும் கிடையாது!!
மேலும் கிடைத்த கற்படிவங்களில் தோன்றும் வடிவங்கள், கொசு, தலை பிரட்டை தவளை என எதைஎடுத்தாலும் இன்றைக்கு அவை எவ்வாறு உள்ளனவோ அதே மாதிரிதான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் இருக்கின்றனவே அன்றி பரிணாமம் அடைந்து மாறுபட்டதாக இல்லை.
ஆக மொத்தத்தில், எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த கற்படிவங்களை பார்த்தாலும் அவற்றுக்கு முன்னோர்கள் இவைதான் என்பது போல எவையும் இதுவரை இல்லை, எனவே எந்த உயிரினமும் படிப்படியாக பரிணாமம் அடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதற்குப் பின்னரும் இன்று வரை எந்த மாற்றமும் அடைந்ததாகவும் சான்றுகள் இல்லை. பரிணாமம் நிகழ்ந்தது என நிரூபிக்க இவையிரண்டும் முக்கியம், ஆனால் எந்த சான்றுகளும் இவற்றுக்கு ஆதரவாக இல்லை.
ஆனாலும் பரிணாம வாதிகள் அசரவில்லை. ஒவ்வொரு பித்தலாட்டமாக அரங்கேற்ற ஆரம்பித்தனர். அதிலில் முதலில் வருவதுதான் பாதி குரங்கு, பாதி மனிதன் மண்டையோடு கதை. [
The Piltdown Man Hoax சுட்டி] 1912 ஆண்டு ஹிண்டன் மற்றும் சார்லஸ் டாசன் என்று இரண்டு பேர் இங்கிலாந்தில் பில்ட்டவுன் என்னுமிடத்தில் 5 லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மண்டையோட்டு படிவம் கிடைத்ததாகவும் அதன் தாடை குரங்கைப் போலவும், கடைவாய்ப் பற்கள், மண்டையோடு மனிதனைப் போல இருப்பதாகவும் கதைகட்டி நம்பவைத்தனர். இது குரங்குக்கும் மனிதனுக்கும் சேர்த்த பொதுவான மூதாதையர் இனம் என்றும், பரிணாமம் நடந்தது என்பதற்கான சான்று என்றும் கூறி, இப்படிவம் உலகின் பல முன்னணி அருங்காட்சியகங்களில் வைக்கப் பட்டது. இதைப் பார்வையிட்ட பெரிய பெரிய விஞ்ஞானிகள் கண்களுக்கும் எதுவும் தவறாகப் புலப்படவில்லை, கோடிக் கணக்கான அப்பாவி மக்களும் உண்மை என்றே நம்பினார். அடுத்த 40 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 500 Ph.D ஆய்வுக்கட்டுரைகள் இதை வைத்தே கயிறு திரிக்கப் பட்டன. இறுதியாக பிரிட்டிஷ் அருங் காட்சியகம் ஒன்றில் இப்படிவம் வைக்கப் பட்டது. 1949 ஆண்டு, கென்னத் ஓக்லி என்ற படிவ ஆய்வாளர், படிவங்களின் வயதைக் கண்டுபிடிக்கும் ஃபுளோரைடு பரிசோதனை என்னும் புதிய முறையை உருவாக்கியிருந்தார், அவர் தனது முறையை இதற்க்கு பயன்படுத்த எண்ணி இப்படிவத்தை ஆராய்ந்த போதுதான் இது போலி என்று தெரிய வந்தது. இதன் தாடை சமீபத்திய உராங்குட்டான் குரங்கினுடையது என்றும், மண்டையோடு சில நூறு வருடங்களுக்கு முன்னர் வந்த மனிதனுடையதே என்றும் தெரியவந்ததது. மேலும், இதன் தாடையை ரம்பம் போட்டு அறுத்த கோடுகள் கூட தெரிந்தது. இரண்டையும் ஒட்டி இத்தனை வருடங்களும் ஏமாற்றி இருக்கிறார்கள் அந்தப் புண்ணியவான்கள். [
Popular Science சுட்டி]
இவர்கள் செய்த அடுத்த பித்தலாட்டம், ஆப்பிரிக்க காங்கோ காடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்த ஒடா பெங்கா [OTA BENGA] என்ற ஒரு மனிதனை பிடித்து வற்புறுத்தி கை கால்களுக்கு விலங்கிட்டு கூண்டில் ஒரு மிருகத்தை அடைப்பது போல அடைத்து அமரிக்காவுக்குக் கொண்டு சென்று பல வருடங்கள் Zoo வில் மற்ற மிருகங்களைப் போலவே வைத்து கொடுமைப் படுத்தியதாகும். அங்கே ஒரு உறங்குட்டான் குரங்கை தன்னோடு வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு போஸ் குடுக்க வேண்டுமென்று துன்புறுத்தப் பட்டிருக்கிறார். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டாலும் தனது கூட்டத்தோடு சேர்க்கப் படமாட்டார் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். [
சுட்டி] தாங்கள் எடுத்துக் கொண்ட போலிக் கொள்கையை உண்மையாக்க எல்லா அயோக்கியத் தனகளையும் செய்யத் துணிந்தவர்கள் இந்த பரிணாம வாதிகள் எனபதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இதற்க்கடுத்தார் போல வருவது பித்தாலாடத்துக்கே பெயர் பெற்ற நம்ம சீனாக் காரனுங்க செய்த வேலை. இவனுங்க ஒரு டைனோசரின் படிவத்தை எடுத்து அதை பறவை போல செய்து பார்த்துக்கோங்க டைனோசர்தான் பறவைகளாக மாறியது என்று ஏமாற்றினார். இந்தப் படிவம் ஆராயப் பட்டு போலி என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும், இதற்க்கு செவிசாய்க்காத நேஷனல் ஜியோகிராபிக் சேனல் இதை உண்மை என்றே ஒளிபரப்பியது.
அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் இன்னொரு கொள்கையும் வலம் வந்து கொண்டிருந்தது. உறுப்பை பயன்படுத்தும் விதத்தில் அது எவ்வாறு பரிணாமம் அடையும் என்பது குறித்த கொள்கை இது. உதாரணத்திற்க்கு ஒட்டகச் சிவிங்கி, அது மான் மாதிரி ஒரு இனம், அதன் கழுத்து முதலில் குட்டையாத்தான் இருந்துச்சு. இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கீழே இருந்த இலைகள் தீர்ந்து போச்சு, அதனால மரத்தின் மேலேயுள்ள இலைகளைப் பறிக்க எம்பி எம்பி கழுத்து நீண்டு பல தலைமுறைகளுக்குப் பின்னர் இப்போது உள்ள நிலையை அடைந்தன என்று ஒரு கதையுண்டு. இது ஒரு உறுப்பை அதிகமாக உபயோகிப்பதால் வந்த வினை. ஆனால், இது உண்மையா? ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளம், அவ்வளவு உயரத்துக்கு இரத்தத்தை ஏற்றுவதற்கு இதயம் அதீத அழுத்தத்தை செலுத்தும். [280/180mm Hg]. ஆனால் அது தண்ணீர் குடிக்க குனிய வேண்டியிருக்கும். அப்போது இதே அழுத்தத்தோடு இரத்தம் போனால் இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதறிவிடும். அப்போது குறைந்த அழுத்தமே இருக்க வேண்டும், இதை இரத்தக் குழாய்கள் விரிவடைதல், இரத்தம் தலைக்குச் செல்லாமல் திசை திருப்புதல் போன்ற அமைப்புகள் மூலம் சரி செய்யப் படுகிறது. குனிந்திருக்கும் தலை மேலே எழும்பும் பொது அதே குறைந்த அழுத்தம் இருக்குமானால் மயக்கம் போட்டு விழுந்து சாக வேண்டி வரும், அப்போது இரத்தத்தை தடுத்த அதே தகவமைப்பு இரத்தத்தை வழங்கி காக்கிறது. இந்த மாதிரி ஒரு தகவமைப்பு குட்டையாக உள்ள மான்கள் போன்ற என்ற ஒரு உயிரினத்துக்கும் இல்லை. அப்புறம் எப்படி ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும் அது வந்தது? ஒரு வேலை கழுத்து நீளும் பரிணாமம் நிகழும் போது அத்தகவமைப்பு இல்லாமல் இருந்து, பின்னர் உருவாக வேண்டுமென்றால் உருவாகும் காலம் வரை அது கீழே குனியவே முடியாதே?!! தண்ணீரே குடிக்காமல் செத்திருக்குமே?
அதே மாதிரி ஒரு உறுப்பை உபயோகப் படுத்தாவிட்டாலும் அது வீக் ஆகி காலப் போக்கில் காணாமல் போய்விடும். இதற்க்கு உதராணமாக அவர்கள் காட்டுவது மனிதனுக்கு உள்ள குடல் வால்!! முதலில் மனிதனும் வாலோடதான் சுத்திகிட்டு இருந்தான், அப்புறம் காலப் போக்கில் அவன் அதை சரியாப் பயன்படுத்தவில்லை, அதனால் அது அது காணமல் போய் உடம்புக்குள் இன்றைக்கு இருக்கும் குடல்வாலாக மாறிவிட்டது என்றும் கதை சொல்கிறார்கள். [ நாங்க சொல்லுவோம், நீங்க தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்ட மட்டும்தான் வேண்டும்!! அதற்கும் படிவம், அது இதுன்னு ஆதாரமெல்லாம் கேட்கப் படாது!! ஆதாரம் கேட்க இதென்ன அறிவியலா?].
அதுசரி, முதலில் வால் வரவேண்டியதற்க்கான அவசியம் என்ன என்று ஒரு கேள்வி
எழுகிறது. ஏதோ தேவை இருப்பதால் தானே வால் பரிணாமத்தில் [அவங்க கணக்குப் படி] உருவானது, பின்னர் அது எப்படி தேவையில்லாமல் போகும்? உண்மையில் குடல்வால் பச்சைக் காய்கறிகள் பழங்களை செரிப்பதில் உடலுக்கு
உதவி புரிகிறது, இப்போது நாம் அவற்றை அவ்வளவாக உண்ணாததால் அது பயனற்றது,
நீக்கினாலும் பிரச்சினையில்லை என நினைத்தார்கள். உண்மையில் குடல்வால்
நீக்கப் படுபவர்கள் பல உடல்நலக் கோளாறுக்கு ஆளாவது தற்போது கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது. எனவே உடலுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் இருக்கிறது
ஆனால் நமக்கு அது தெரியவில்லை. அவ்வாறு தெரியாமல் போவதால் அது தேவையே இல்லாதது என்று அர்த்தமாகாது.
மேலே சொன்ன, இது மாதிரியான உதாரணங்களில் பெரிய ஓட்டை இருக்கிறது. இனபெருக்க செல்களில் உள்ள ஜீன்கள் தான் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்தும் வேலையைச் செய்கின்றன. ஆனால், அவற்றில் உங்கள் உடல் உறுப்புகளை எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் எதை குறைவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் பதியப் படுவதில்லை, எனவே அத்தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் பட வாய்ப்பேயில்லை. டார்வினும் உபயோகம் குறைந்த உடலுறுப்பு அந்த உயிரினத்திடம் இருந்து காலப்
போக்கில் காணமல் போய்விடும் என்ற சிந்தனையைத்தான் கொண்டிருந்தார். ஆனால்
இது ஜெனட்டிகலாக சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீதேவி ஜப்பானுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை வெட்டியிருக்கலாம், ஆனாலும் அவருடைய மகள் 16 வயதினிலே ஸ்ரீதேவியை அச்சில் வார்த்த மாதிரியே தான் பிறந்துள்ளார்.
|
பெரிய மூக்கு வச்சிருந்த ஸ்ரீதேவி........... |
|
ஜப்பானுக்குப் போயி ஆபரே ஷன் பண்ணிய விஷயம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படவில்லை. |
|
அவங்க பொண்ணு எங்கம்மா மூக்கு இப்படித்தான் இருந்துச்சுன்னு நிரூபிச்சுட்டாங்க!! இது எப்படி இருக்கு!! |
ஒரு உடலுறுப்பு பயன்படுத்தப் படவில்லை
என்பது அடுத்த தலைமுறையை எந்தவிதத்திலும் பாதிப்பதேயில்லை. இதை நிரூபிக்க, 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில்
ஆகஸ்ட் வைஸ்மன் August Weismann என்ற விஞ்ஞானி, வெள்ளை எலிகள் மீது சில பரிசோதனைகளைச் செய்தார். ஏனெனில் இவற்றின் இனப்பெருக்க வேகம் அதிகம், ஆகையால் குறுகிய காலத்திலேயே பல தலைமுறைகளைக் காணமுடியும். வெள்ளை எலிகளைப் பிடித்து கிட்டத்தட்ட 20 தலைமுறைகளுக்கு அவற்றின் வால்களை வெட்டித் தள்ளினார். ஆனாலும், இவ்வாறு உருவான எலிகளில் வால் இல்லாமலோ அல்லது சிறிய வாலுடனோ ஒரு எலி கூட பிறக்கவில்லை. முதல் தலைமுறை எலிகளைப் போலவே நீண்ட வாலுடனேயே அனைத்தும் பிறந்தன!! எனவே உறுப்புகளை பயன்படுத்தாமல் விடுவது/மூலி செய்வது [mutation] பின்வரும் தலைமுறைகளில் உறுப்புகளை இழக்கச் செய்யும் என்ற கொள்கை தோற்கடிக்கப் பட்டது. உடலில் உள்ள செல்களில் ஏற்ப்படும் மாற்றம் பற்றிய தகவல் இனப்பெருக்க செல்களில் உள்ள DNA வை எவ்விதத்திலும் பாதிக்காது, எனவே அடுத்த தலைமுறைக்கு அத்தகவல் கடத்தப் படாது!! எனவே இந்த முறையில் எந்த பரிணாமமும் நடக்காது.
அதை அடுத்து Survival of the Fittest [வலியவனே வாழ்வான்] என்ற ஒரு கொள்கையை தனது பரிணாமத்திற்கு ஆதரவாக டார்வின் கொண்டுவந்தார். பெண்ணினத்துடன் யார் இணைவது என்பதை மான் முதல், சிங்கம், புலி, காண்டாமிருகம், யானை வரை, சண்டையிட்டு யார் ஜெயிகிறார்கள் என்பதை வைத்தே அவை தீர்மானிக்கின்றன. இதை பல இயற்கைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த முறையில் பரிணாமம் நடக்குமா? ஒரு புதிய இனம் உருவாகுமா? நடக்காது. ரெண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானைக்கு அடித்துக் கொண்டாலும் இறுதியில் ஜெயிக்கப் போவது ஒரு யானைதானே!! எனவே பிறக்கப் போகும் குட்டி சிறந்த குணங்களுடன் இருக்கலாம் ஆனால் அதுவே பரிணாமம் ஆகி புதுசா வேற ஒரு ஜீவன் உருவாகாது!!
|
ஒருவகை உயிரினத்தில் சைசில் சிறியது பெரியதாக இருந்தாலும் இனம் அதே இனம்தான், அதை பரிணாமம் என்று சொல்ல முடியாது. |
|
புலி + சிங்கம் |
|
கழுதை + வரிக்குதிரை |
|
சிங்கம் + புலி |
|
குதிரை + வரிக்குதிரை. |
மேற்கண்ட கலப்பினத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளை பரிணாமம் எனக் கூற முடியாது. ஏனெனில் பெற்றோருக்கு இல்லாத ஒரு பண்பு அடுத்த தலை முறையில் தோன்றாது. சிங்கமும் புலியும் இணையலாம் அதே சிங்கமும் வரிக்குதிரையும் இணைய முடியுமா? முடியாது.
தொடரும்......................