வணக்கம் மக்காஸ். பிரபல பதிவரைக் கவிழ்க்க நாம் பகீரத பிரயத்தனங்கள் செய்து வருகிறோம் என்று முன்னர் ஒரு
பதிவில் சொல்லியிருந்தோம்.
திராட்சைப் பழத்திற்கு தாவிய நரி அதன் முயற்சியைக் கைவிட்டிருக்கலாம், கஜினி முகமது போதும்டா என ஒரு கட்டத்தில் நினைத்திருக்கலாம், ஏன் கடல் அலைகளே கூட சலிப்படைந்து நின்று போகலாம், ஆனால் நாம் கவிழ்க்காமல் ஓய்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறோம் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறோம்.
அவரைக்
கவிழ்க்க ஒரே வழி பல இடங்களுக்குச் சுற்றுலா சென்று வந்து பதிவு போடுவது தான் என்று நாம் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறோம்.
அந்த வகையில், முன்பு ஊட்டி பயணம் மேற்கொண்ட நாம் இப்போது அந்தமான் சென்று
வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைக் கவிழ்க்க நீ எடுத்துக் கொண்ட உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா என்று அன்பு உள்ளங்கள் நம்மை பரிவுடன் கேட்பது நம் காதுகளில் மணியாக ஒலிக்கிறது, கடலுக்கு எல்லை உண்டு நம் கடமை உணர்ச்சிக்கு அது இல்லை என அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை/கொல்கத்தாவில் இருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் அமைந்துள்ள அந்தமான், 572 தீவுகளைக் கொண்டது. அவற்றில் 23 தீவுகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்தாலும் ஐந்து நாட்களில் சில முக்கிய இடங்களையே தேர்ந்தெடுத்து பார்ப்பது சிறந்தது. நமது நான்கு நாள் பயணத்தில் கண்டுகளித்த இடங்கள்.
நாள் 1. Corbyn's Cove Beach, அந்தமான் செல்லுலார் ஜெயில்.
நாள் 2. North Bay Island., ROSS Island., Viper Island.
நாள் 3. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, Limestone Caves , Mud Volcano
நாள் 4. Havelock கடற்க்கரை, Shopping,
இதை இறைவன் விரும்பினால் நான்கு பதிவுகளாக வெளியிடலாம் என நினைத்துள்ளோம். நான்காவது பதிவில் எங்கே தங்குவது, பயணத்திற்கு சில டிப்ஸ்களையும் தரவிருக்கிறோம். முதல் பதிவில் இரண்டாம் நாள் சுற்றிப் பார்த்த இடங்களை பற்றி எழுதலாம் என முடிவெடுத்தோம், காரணம் அன்று தான் ROSS தீவில் மான்களைப் பார்த்தோம்!!
|
அந்தமான், போர்ட் பிளேரில் விமானம் தரையிறங்கும் போது.... |
1. North Bay Island
|
North Bay தீவுக்குச் செல்லும் படகுத் துறை அமைந்துள்ள ராஜீவ் காந்தி நீர் வீரவிளையாட்டு மையம். |
|
North Bay செல்லும் படகு [இடதுபுறமிருந்து இரண்டாவது] |
|
North Bay தீவு. அதுசரி இந்தப் படத்தை இதுக்கு முன்னாடி எங்கோ பார்த்த மாதிரி இருக்கா? இல்லையா..?? :(( இருபது ரூபாய் நோட்டை எத்தனை முறை பயன்படுத்தி இருப்பீங்க? ஒரு தடவை கூட அதில் என்ன படம் போட்டிருக்குன்னு பார்க்கவே இல்லையா? இப்போ பாருங்க நோட்டின் பின்னால் இந்த படம் இருக்கும்!! |
|
North Bay: இது நீரில் கும்மாளம் போட நிறைய வசதிகளைக் கொண்டது. மேலே காண்பது வாட்டர் ஸ்கூட்டர்கள். North Bay பவளப் பாறைகள், மற்றும் அதுசார்ந்த உயிரினங்கள் நிறைந்த இடம். |
|
ஸ்கியூபா டைவிங் செல்பவர்கள். ஆக்சிஜன் சிலின்டர்களுடன் உங்களை நீரில் சில
மீட்டர் ஆழத்திற்க்குக் கொண்டு சென்று பவளப் பாறைகள், மற்றும் பலவித
மீன்கள், ஆமைகள் என கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றைக் காட்டுவார்கள்.
கட்டணம் நாலாயிரம் ரூபாய். |
அந்தமானில் பல இடங்களில் Scuba Diving, Snorkeling, Glass Boats View என பல பெயர்களில் கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள். இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க இருப்பது ஒன்றேதான். அதை இந்த காணொளி காட்டுகிறது.
2. ROSS ISLAND
|
அடுத்து நாங்கள் சென்றது ROSS தீவு. இது பிரிட்டிஷ் காரர்கள் அந்தமானை ஆட்சி புரிந்தபோது தலைநகரமாக இருந்திருக்கிறது. |
|
படகில் கொடுத்த சாப்பாடு சாப்பிட முடியவில்லை என எங்கள் பையன் அவற்றை மீனுக்குப் போட்டான், ஓடி வந்து விட்டார்கள். குஷியாகி என்னை அழைத்து காண்பித்ததும் நான் கிளிக்கினேன். |
|
கட்டிடம் முழுவதும் மரத்தின் விழுதுகள் பிடியில்!! |
|
மயில்கள் இங்கே நிறைய இருக்கின்றன. |
|
கூட்டம் கூட்டமாக மான்களும் சுற்றித் திரிகின்றன. |
|
அந்தமானில் நான் பார்த்த மான். |
|
அந்தமானைப் பாருங்கள் அழகு!! |
|
அந்த மான் எந்தன் சொந்த மான்!! |
|
இந்த மான் அந்த மானுக்குத் தான் சொந்தம். |
3. Viper Island
|
போர்ட் பிளேர் துறைமுகம், இதைக் கடந்துதான் வைப்பர் தீவுக்குச் செல்ல வேண்டும். |
|
வைப்பர் தீவுக்குச் செல்லும் வழியில் அழகிய படகு. |
|
Viper தீவுக்குச் செல்லும் வழியில், கப்பல்களை பழுது பார்க்கும் இடம். |
|
வைப்பர் தீவில் பிரிட்டிஷ் காரர்கள் எழுப்பிய சிறைச் சாலை.
|
வைப்பர் என்பது 1789 ஆம் ஆண்டு லெப். ஆர்ச்சிபால்ட் பிளேர் அந்தமானுக்கு வரப் பயன்படுத்திய கப்பல் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இன்னொரு சாரார், முன்னர் இங்கே Viper இனப் பாம்புகள் எக்கச் சக்கமாக இருந்ததால் அந்தப் பெயர் வந்ததாக ஒரு கதையும் கூறுகின்றனர்!! பிறை வடிவில் அமைந்த இந்தத் தீவு 69 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுனாமியால் இது மிகவும் பாதிக்கப் பட்டு, தற்போது மக்கள் யாரும் வாழ்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது அரசு விட்டுள்ள பசுக்கள் அங்காங்கே சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன.
பிரிஷ்கரர்கள் ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அடைத்து வைக்கும் சிறைச் சாலை இங்கே இருந்திருக்கிறது. அந்தமானுக்கு பேர்போன முக்கிய சிறையான செல்லுலார் ஜெயில் கட்டப் படும்வரை இதுவே பிரதான சிறைச்சாலையாக இருந்து வந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்களின் உயிர்கள் இங்கே காவு வாங்கப் பட்டிருக்கின்றன. 1867 ஆம் ஆண்டு கட்டப் பட்ட சிறைச்சாலை இடிந்து போன நிலையில் இன்றும் அதற்க்குச் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
|
இந்தச் சிறையில் முக்கியமாக பெண்களை தூக்கிலிடுவார்கள் என்று கைடு சொன்னார், இணையத்தில் தேடித் பார்த்ததில் அப்படித் தகவல்கள் எதுவும் இல்லை. |
பார்த்தோம், எழுதினோம் அப்படிங்குரீங்களே, ஒரு குருப்பா தான் கெளம்பிட்டீன்களோ :)
ReplyDeleteபடங்கள் அழகு. நான் போகாத ஊர். என்னை முந்திகிட்டீங்க நற நற !
மோகன், நாம் எப்பவும், நம்மளை நாமோன்னு தாங்க சொல்றது!! நீங்க போகாது இடம் போட்டதில நமக்கும் குஷி!! ஊட்டி நீங்க போயும் பதிவில் போடலை, ஹா....ஹா....ஹா....
Deleteஆஹா, எனக்கு பாக்கனும்னு மனசுல சமீப காலமா தோனிகிட்டு இருக்கும் ஊர்! நீங்க போய் பாத்துட்டு வந்து பதிவிட்டதுல மகிழ்ச்சி! அடுத்த பகுதிகளையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்!
ReplyDeleteநன்றி சுடர்விழி!!
Deleteபடங்கள் அருமை பிரபல பதிவரே!!
ReplyDeleteநானும் குடும்பத்தோடு அந்தமான ஒரு முறை போக ஆசை. உங்கள் பதிவின் தகவல்கள் உதவியாக இருக்கலாம்.
நன்றி சுவனம்!!
Deleteநல்ல இயற்கை வளம் உள்ள இடங்களை கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டீர்கள். அருமை நண்பா... இடையில் ஒரு கிளுகிளுப்பும் சேர்த்திருக்கிங்க.... :-))))))) ம்ம்ம்ம் புரியுது நண்பா புரியுது.
ReplyDeleteசோக்காகிது மாமே.
ReplyDelete@அஜீம்பாஷா
Deleteநன்றி மச்சி, மற்ற மூன்று பதிவுகளுக்கும் மறக்காம வாங்க.
வாருங்கள் நண்பரே !
ReplyDeleteபயணம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?
உங்கள் கடைசி படம் சிறைச்சாலை தானே ? தெளிவா சொல்லுங்க இல்லாட்டி கொட்டு விழுகபோகுது. ஹஹா
நன்றி
அடுத்த பதிவுகளையும் ஆவலோடு எதிரி பார்க்கிறேன். நன்றி
ReplyDeleteநிச்சயம் கலாகுமரன்!!
DeleteVery good post beautiful photos!
ReplyDeleteThanks Riyas!!
Delete