Corbyn's Cove Beach
அந்தமான் செல்லுலார் சிறைக்குச் செல்லும் வழியில் கார்பின்ஸ் கோவ் கடற்க்கரை அமைந்துள்ளது. அழகிய நீண்ட கடற்க்கரை. கொஞ்ச தூரம் நடந்து மையதிற்க்குச் சென்று இருபுறமும் படமெடுத்தேன்.
|
கடற்கரைக் காற்றை வாங்கியவண்ணம் கடலை இரசித்தவாரே ஹாயாக ஓய்வெடுக்க மர பெஞ்சுகள். |
|
கார்பின்ஸ் கோவ் கடற்க்கரை மறுபாதி........... |
|
தண்ணீரில் ஓடும் பைக்குகள், அவங்க ஓட்டுவதை நாம் உசிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்ப்போம்!! உங்களுடன் ஒரு பயிற்றுனர் வருவார், உங்களுக்கு மிதவைப் பை [Life Jacket] கொடுக்கப் படும், எனவே தவறி தண்ணீரில் விழுந்தாலும் மூழ்க மாட்டீர்கள். கண்ணா பின்னா வென்று வளைத்து வளைத்து ஓட்டுவார்கள், சில சமயம் உங்களுக்கும் ஓட்ட வாய்ப்பு கிடைக்கும். வண்டி வேகமாக போகும் போது அலைகளை எதிர்கொள்வதால் தத்தி தத்தி வண்டி செல்லும், ஜாலியாக இருக்கும். |
|
அருகே இருந்த அழகிய கட்டிடம். இது மாதிரி நமக்கு வீடு இருந்தா எப்படி இருக்கும்!! [கண்ணா சுனாமி வருமே.... ஐயோ சாமி அப்ப எனக்கு இது வேண்டாம்பா.....] |
|
தொப்பி........ தொப்பி........!! |
|
இந்த கடையில் தொங்குவது வெறும் கிளிஞ்சல்கள் மட்டுமல்ல, முத்து பவள மாலைகளும் தான்!! இவை ஒரிஜினல் தான் என்று என் வீட்டு பாஸ் உறுதி பண்ணி [அவருக்குத் தெரியும்!!] விலை கேட்டார். பவள மாலை 500 ரூபாய் என்றார். பேரம் பேசி அதே விலைக்கு இரண்டு மாலை என முடித்துவிட்டு அப்புறம் வாங்கிக்கலாம் என்று வந்து விட்டார். பின்னர் ஷோக்கா இருக்கும் கடையில் கேட்டா அதே மாலை அதே தரம் விலை மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேல். மற்ற நாட்களில் டைட் புரோகிராம், கடைசி நாள் காலை எட்டு மணிக்கு விமானம், எனவே இந்தக் கடைக்கும் திரும்ப வர முடியவில்லை. வாங்காமல் விட்டுவிட்டோமேன்னு என் வீட்டு பாஸ் இன்னமும் புலம்பிகிட்டு இருக்கார்!! |
அந்தமான் செல்லுலார் சிறை [Cellular Jail, Andaman]
அந்தமான் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் அந்தமான் செல்லுலார் சிறையாகும். 1896-ல் துவங்கிய இதன் கட்டுமானம் 1906-ல் முடிவடைந்தது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட துயர்களுக்கும், செய்த உயிர்த் தியாகங்களுக்கும் சாட்சியாக இந்த சிறை நின்று கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் Cell என்றால் தனியறை, இங்கு கைதிகளை ஒருவரோடு ஒருவர் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் தனித் தனியாக சிறை வைக்க செல்கள் வைத்து கட்டப் பட்டதால் செல்லுலார் சிறை என பெயரிடப் பட்டது. இதன் கட்டுமனத்துக்குத் தேவையான செங்கற்கள் இன்றைய மியான்மார் எனப்படும் பர்மாவில் இருந்து தருவிக்கப் பட்டன. 4.5 மீட்டருக்கு 7.6 மீட்டர் என 698 தனியறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் காற்று வர நுழையும் கம்பிக் கதவைத் தவிர்த்து, பின் சுவற்றில் தரையில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் ஒரு ஜன்னல் மட்டுமே இருக்கும். சிறையைச் சுற்றி 15 அடி உயர சுவர் இருந்ததாம். செல்லுலார் சிறையை கட்டி முடிக்க அந்நாட்களில் ஆன செலவு 5,17,352 ரூபாய்!! [அப்போ பணத்துக்கு
அவ்வளவு மதிப்பு இருந்திருக்கு!! மேலும் கைதிகளின் உழைப்புக்கு மதிப்பு
எவ்வளவோ?].
|
அந்தமான் சிறையின் லே அவுட். |
|
செல்லுலார் சிறை மாடல்: மையத்தில் உள்ள கூம்பு வடிவ கூரை கண்காணிப்பு கோபுரமாகும், இதிலிருந்து வண்டிச் சக்கரத்தின் ஆரம் போல ஏழு கட்டிடங்கள் இணைந்துள்ளன. ஆனால் அவை நீளத்தால் வேறு பட்டவை. ஒவ்வொன்றும் மூன்று தளங்களைக் கொண்டது. ஒரு கட்டிடத்தின் சிறையறையின் கதவில் இருந்து அடுத்த கட்டிடத்தின் பின் புரத்தை மட்டுமே பார்க்க முடியும். எனவே யாருடனும் பேசவோ பழகவோ இயலாது. பக்கத்து அறையில் இருப்பவரிடம் கூட பேச முடியாது. |
This photo of
Cellular Jail is courtesy of TripAdvisor
பாபா ராவ் சவார்கர், வினையால் தமோதர் சவார்கர், பரிந்திர குமார் கோஷ், பதுகேஷ்வர் தத் என பல முக்கிய தலைவர்கள் இங்கே சிறை வைக்கப் பட்டனர்.
|
1943 ல் ஜப்பானியர்கள் பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்தமானைக் கைப்பற்றிய போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இங்கே ஒரு முறை வந்து தாய்நாட்டின் மூவர்ணக் கோடியை ஏற்றியிருக்கிறார். இந்தச் சிறையின் இரண்டு கிளைகளை ஜப்பானியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த போது இடித்துத் தள்ளினர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தச் சிறை பிரிடிஷ்காரர்கள் ஏகாதிபத்தியத்தின் அவமானச் சின்னம் எனக் கருதி ஆத்திரத்தால் மேலும் இரண்டு கிளைகள் இடித்துத் தள்ளப் பட்டன. இதைக் கண்டு கொதித்தெழுந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள், எங்கள் கஷ்டங்களை எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல இருக்கும் ஒரே சான்றையும் சுவடு தெரியாமல் அழிக்க நினைக்காதீர்கள், அவர்களுக்கு நாங்கள் பட்ட துன்பமும் தியாகமும் தெரிய இவை பாதுகாக்கப் பட வேண்டுமென்று குரலெழுப்பியதால் மீதமிருந்த மூன்று கட்டிடங்கள் இன்று வரை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. |
|
|
|
சிறையின் நுழைவாயில். |
|
உள்ளே நுழைந்ததும் காண்பது: சிவப்பு வண்ண கூரையின் கீழ் தான் கைதிகள் வேலை வாங்கும் இடம் அமைந்துள்ளது. தேங்காய் உரித்தல், மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுத்து தேங்காய் எண்ணெய் பிழிதல், கடுகு எண்ணெய் எடுத்தல் போன்ற கடினமான வேலைகள் வாங்கப் படும். ஒரு நாளைக்கு 15 லிட்டர் எண்ணெய் பிழிய வேண்டும். செய்யாவிட்டால் சவுக்கடி கிடைக்கும். |
|
இரண்டு கட்டிடங்கள், இணையுமிடத்தில் கண்காணிப்புக் கோபுரம். |
|
இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் கடைசி அறையில் தான் வீர் சவார்கர் சிறை வைக்கப் பட்டிருந்தார். |
|
வீர் சவார்க்கர் அறைக்கு முன்னர்.......... |
|
சிறைக்கதவின் பூட்டு. |
|
வீர் சவார்க்கரின் அரை. |
|
சிறையின் மொட்டை மாடியில்.......... |
|
ஏழு கிளைக் கட்டிடங்களையும் [இன்றைக்கு மூன்று மட்டுமே!!] இணைக்கும் கண்காணிப்புக் கோபுரம், இதன் கூரை கூம்பு வடிவிலானது.
|
சிறையின் மேல் தளத்தில் இருந்து ROSS தீவு!! |
|
|
ஒலி, ஒளிக்காட்சி [Light & Sound show] இங்கே அமர்ந்து காணலாம். இங்கு வருபவர்கள் யாரும் இதைத் தவற விடுவதில்லை. இங்கே சிறைவைக்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சரியான உணவு கொடுக்கப் படுவதில்லை. உண்ணவே லாயக்கில்லை என்று கெட்டுப் போன ரொட்டித் துண்டுகளையும், புழுத்த அரிசியையும் அதுவும் குறைந்த அளவில் கொடுப்பார்களாம். காய்கறிகளுக்குப் பதில் காட்டில் விளையும் புல்லை சாம்பாரில் போடுவார்களாம், குடிக்க மழை நீர், புழுக்கள் தோன்றிய பின்னர் தருவார்களாம். ஆனாலும் வேலையும் எக்கச் சக்கமாகப் பிழிந்தெடுப்பார்களாம். சொந்த பந்தங்களைப் பிரிந்து இத்தனைக் கொடுமையையும் ஏற்கும் பொது போதுமடா சாமி, இந்த சுதந்திரம் என்ற நினைப்பே வேண்டாமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப் பட வேண்டுமென்பது ஆங்கிலேயர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் நம் வீரர்கள் எதற்கும் அசையாமல் உறுதியாக நின்றனர் என்பது நாம் பெருமிதமடைய வேண்டிய ஒன்று. நம் சுதந்திரத்துக்காக தங்கள் சுகங்களையும், உயிரையும் ஈந்த வீரர்களில் கண்ணீர்க்கதையை கேட்கும் போது நம் கண்ணில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும். |
|
ஒலி, ஒளிக்காட்சி [Light & Sound show] |
அந்தமான் சிறையில் விடுதலைப் போராட்ட வீர்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள், அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகம்- இவற்றின் அடிப்படையில் எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் சிறைச்சாலை.
அடுத்த பதிவில் வர இருப்பவை:
அந்தமானின் ஜராவா ஆதிவாசிகள்
Limestone Caves, Bara Tang
Mud Valcano, Bara Tang
வணக்கம் நண்பா,
ReplyDeleteநல்ல புகைப்படங்கள்.நீர் எடுத்ததா?? வாழ்த்துக்கள்.அருமை.
சிறைச்சாலை படம் ஞாபகம் வருகிறது. யார் யாரோ கஷ்டப் பட்டு சுதந்திரம் வாங்கி அது படும் பாடு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இபோது போல் சிறைக்கு பெரிய த்லைகள் சிரித்துக் கொண்டு செல்வது போல் அல்ல,இந்த அந்த்மான் சிறை சென்று வந்தால் கதை முடிவது போல்தான். வீர் சாவர்கார் 1911 ல் இருந்து 1924 வரை அங்கே இருந்தார்.வெளியில் வர மன்னிப்பு
கடிதம் எழுதினார் எனவும் சொல்கிறார்கள்[விக்கிபிடியா].
http://en.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar
அக்கால சூழலுக்கு அது சரிதான்!!.
வீர் சாவர்கர் ஒரு இறை மறுப்பாளர் .சிறையில் இருந்து வந்த பின் இந்துத்வ தேசியம் பக்கம் அதிக கவனம் செலுத்தினார் என்பதும் வரலாறு!!!
A self-described atheist,[1] Savarkar regards being Hindu as a cultural and political identity. While often stressing social and community unity between Hindus, Sikhs, Buddhists and Jains, Savarkar's notions of loyalty to the fatherland are seen as an implicit criticism of Muslims and Christians who regard Mecca, Medina and Jerusalem as their holiest places.
சிறையைப் பார்த்தாலேம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி!!
\\நல்ல புகைப்படங்கள்.நீர் எடுத்ததா??\\ திருவிளையாடல் நாகேஷைப் பார்த்து நக்கீரன் கேட்ட மாதிரி கேட்டுபுட்டீங்களே பாஸ்!! ஆதிவாசிகள் தவிர்த்து மற்றவற்றில் ஒன்றிரண்டைத் தவிர நான் எடுத்ததுதான்!!
Deleteபயண அனுபவங்கள், படங்கள் சுவாரஸ்யம்!
ReplyDeleteGood coverage. Photoes are excellent & too good.
ReplyDeleteபீச்சில் உள்ள மர பெஞ்சுகளுக்கு காவல் கிடையாதா? எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்?
ReplyDeleteசார் அது அந்தமான், ஒரு வேலை நம்மூரா இருந்தா இராவோட ராவா பெயர்த்து எடுத்துகிட்டு போயிருப்பாங்க!! இரவு நேரங்களில் ஒன்றிரண்டு வாட்ச்மேன்கள் காவல் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
Deleteஅந்தமான் இந்தியா தானே/
ReplyDeleteஹை இதுவும் சோக்காகிது மாமே
ReplyDelete@அஜீம்பாஷா
Deleteஅப்படியே தெரிஞ்சவங்களுக்கெல்லாம் \\சோக்காகிது\\ இந்த மேட்டரைச் சொல்லி நாலு சனத்தை நம்ம கடைக்கு அனுப்புங்க மச்சி!!
பீச் நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteசிறை வாழ்க்கை படிக்கும்போது நெஞ்சைப் பிழிகிறது.
சுதந்திரம் வாங்கி கொடுக்க இவ்வளவு கஷ்டப்பட்டவர்கள் இன்றைய இந்தியாவை பார்த்தால் , இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள்.
Deleteஎன்ன பாஸ் என் கிட்ட ஒரு வார்த்த சொல்லாம அந்தமான் போயிட்டு வந்துடீங்க? உங்க மேல எனக்கு ரொம்ப கோபம் கோபமா வருது, வரும் பிப்ரவரி மாதம் நான் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் படை சூழ போகலாமுன்னு இருக்கேன், உங்கள் பயண அனுபவம் எனக்கு உதவியாக இருக்கும், போகும்போது கப்பலில் வரும்போது விமானத்தில், இதை பற்றியும் கொஞ்சம் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும்
ReplyDelete@ mubarak kuwait
Deleteநான் டூர் போறதுக்கும் முக்கியத்துவம் குடுப்பீங்கன்னு எனக்குத் தெரியாது பாஸ்!! மகிழ்ச்சி!! அடுத்த முறை டூர் செல்லும்போது முன்னரே சொல்றேன் பாஸ்!! நீங்க இருப்பது சென்னையிலா? கப்பல் பயணம் பற்றி முன்னரே கேள்விப் பட்டிருக்கீங்களா? வயதானவர்கள் ரொம்ப கஷ்டப் பட்டுவிடுகிரார்களாம், அது பற்றி நன்றாகத் தெரியும் என்றால் மட்டும் செல்லவும். விமான டிக்கட்டுகளை கொஞ்சம் முன்னரே புக் செய்தால் விலை குறைவாக முடித்துவிடலாம். கப்பலில் போகும் அனுபவம் மட்டும் வேண்டும் என்றால் போர்ட் பிளேரில் இருந்து Havelock செல்லும்போது இரண்டு மணி நேரம் கப்பலில் [To & Fro மொத்தம் நான்கு மணி நேரம்] செல்வீர்கள். ஆகையால், இங்கேயிருந்தே கப்பலில் தான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது [ஐந்து பகல்] அங்கே தங்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், ஆறு நாட்கள் என்றால் இன்னமும் நல்லது. அங்கே சென்ற பின்னர், டாட்டா சுமோ, குவாலிஸ் அல்லது கார் போன்ற நல்ல வாகனங்களில் செல்லுங்கள், பதினைந்து பேர் மட்டும் செல்லும் வேன்கள் ஆயில் நாற்றம் நாறும் தவிர்க்கவும். தங்குமிடம் வேண்டுமென்றால் தெரிவிக்கவும் நம்பகமான பட்ஜெட் லாட்ஜுகள் உள்ளன. மேலும் தகவல்கள் என்னுடைய அடுத்த இரண்டு பதிவுகளில் தெரிவிக்கிறேன்.
நான் இருப்பது குவைதில் வரும் ஜனவரி ஊருக்கு வருகிறேன், சொந்த ஊர் புதுவை, நீண்ட நாட்களாக கப்பல் பயணம் செய்ய ஆசை, அதனால்தான் போகும்போது கப்பலில் செல்ல ஆசைபடுகிறேன், எட்டு நாட்கள் தங்கலாமென்று இருக்கிறோம், ரயில் பயணத்தில் இருக்கும் சுகம் விமான பயணத்தில் இல்லை
ReplyDeleteஇதுவரை நீங்கள் டிக்கட் புக் செய்யவில்லை என்றால் கப்பல் பயணத்தை கேன்சல் செய்துவிடுவதே நல்லது, விமானப் பயணம் இரண்டு மணி நேரம் தானே, அதை போர் என்றாலும் கப்பலில் செலவிடும் மூன்று நாட்களை நீங்கள் அந்தமானில் செலவிடலாம்!! கப்பலில் செல்லும்போது சுற்றிலும் தண்ணீர் வேறென்ன என்ஜாய் பண்ண இருக்கு?!! என் வீட்டுக்காரி Haveloack பீச் சென்ற நான்கு மணி நேர பயனுத்துக்கே வீட்டுக்கு வந்த பின்னர் கட்டில் அப்படியும் இப்படியும் அசைவது போலவே இருக்குங்க என்கிறாள். மேலும், ship-ல வயதானவர்கள் ஏறி இறங்க மிகவும் சிரமப் பட்டு போனதாகவும் சொல்கிறார்கள்!! பார்த்துக் கொள்ளுங்கள்.!!
Deleteகப்பலில் செல்லும் அந்த மூன்று நாட்களும் ஒரு அமைதி, சுவாசிக்க மாசற்ற காற்று, என்னுடன் வயதானவர்கள் யாரும் வர வில்லை
ReplyDelete