நாம் சிலதினங்களுக்கு முன்னர் சைவ/அசைவ உணவுகளில் மனிதனின் உடலமைப்புக்கு ஏற்றது எது என்ற பதிவை வெளியிட்டிருந்தோம்.
சுட்டி. இதன் பின்னூட்டத்தில் பலர் பல எதிர் கேள்விகளை எழுப்பியிருந்தனர், எல்லாவற்றுக்கும் மேலே நமது நண்பர் ஒருவர் இதுகுறித்து ஒரு பதிவையும் போட்டுள்ளார். நம் மீது சில கேள்விகளைக் கேட்டுள்ளார்கள், அதற்க்கு நம் தரப்பில் இருந்து சில விளக்கங்களைத் தருவது நமது கடமையாகிறது.
எதிர் தரப்பு: சைவ உணவு உண்ணும் வகையில் தான் மனிதன் உடலமைப்பு உள்ளது என்பது உயர் சாதிக்காரர்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்.
நமது பதில்: சைவ உணவுதான் மனிதனுக்கு ஏற்றது என்ற உண்மையை உணர்ந்தோர் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும், மதங்களிலும் மொழிகளும் இனங்களிலும் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் உயர்சாதிக்காரர்களா? தாவர உணவு என்பது உயர்சாதிக்காரனுக்கே நேர்ந்துவிட்ட உரிமையா? மற்றவர்கள் அதை ஆதரிக்கவோ, பின்பற்றவோ கூடவே கூடாதா? அப்படி மீறிச் செய்தால் அவன் உயர்சாதிக்காரன் என்று அவன் மீது தார் பூசுவீர்களா? உயர்சாதியில் பிறக்காத எனக்கு சைவ உணவு முறையைப் பின்பற்றவும், அதன் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உரிமை இல்லையா?
எதிர் தரப்பு: என்னோட குடலில்
Hydrochloric Acid சுரக்குது, மனிதனுக்கு
செல்லுலாக் இல்லை, [இது என்ன புலாசுலாக்கியோ தெரியலை!!], மனிதன் ஒரு பல்லுணவு உண்ணி தான். [நாட்டமை தீர்ப்பை வாசிச்சிட்டாரு.]
நமது பதில்: புலிக்கு உண்டான உணவு மாமிசம் மட்டுமே, அதனால் புல்லை தின்று வாழ முடியாது, பசுவுக்கு உண்டான உணவு புல், இலை தலைகள் தான், அதால் இறைச்சியை உண்டு வாழ முடியாது. இரண்டும் உண்ணும் ஜீவன்களும் இருக்கு. கரடிகள் அந்த வகையைச் சார்ந்தவை. அவை மீனையும் சாப்பிடும், பழங்கள் கொட்டைப் பருப்புகளையும் சாப்பிடும். இப்போ நீர் சொல்ல வருவது, மனிதன் மூன்றாவதாகச் சொன்னது போல ரெண்டும் உண்ணத் தகுந்தவன் என்பதே.
புலி, பசு, கரடி உண்பது என்ன உணவாக இருந்தாலும் சரி அதைத் தயாரிக்க வேண்டிய தகவமைப்பும் அதன் உடலிலேயே இருக்கும், இது மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவன்களும் இன்றைக்கும் பின்பற்றுகின்றன. புலி கசாப்புக் கடைக்குப் போய் எவனாச்சும் ஆட்டை வெட்டி சுத்தம் பண்ணி வச்சிருப்பான் அதை வாங்கி வந்து உண்ணலாம்னு நினைக்காது. அதற்க்கு நகங்கள் இருக்கு, பதுங்கியிருந்து பாஞ்சு மானைப் பிடிக்கும் அதன் பற்களாலேயே கொன்று அப்படியே இரத்தத்தைக் குடிக்கும், மாமிசத்தையும் சாப்பிடும். அதை அதன் ஜீரண உறுப்புகள் ஜீரணிக்கும், ஆரோக்கியமாகவே வாழும். மாடும் அப்படித்தான் புல்லை உண்ணும். ஒரு கரடி மீனை கடையில் வாங்கி உண்ணாது, ஆற்றுக்குப் போகும், ஓடும் தண்ணீரில் குதிக்கும் மீன்களை லாவகமாகப் பிடிக்கும், அப்படியே கடித்து சுவைத்து உண்ணும். அப்புறம் பழங்கள் கொட்டை பருப்புகளையும் தேடிப் பிடித்து உண்ணும். ஒரு வேலை பழங்கள் நாலு நாளைக்கு இல்லாவிட்டால் அது மாண்டுவிடாது, மீனைக் கொண்டே அது போஷாக்கைப் பெற முடியும் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள முடியும். பழங்களை உண்டே பல நாட்களையும் கழிக்க முடியும். இதுதான் கரடி
பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்பதற்கான நிரூபணம். மேற்கண்ட எதுவும் தமக்கு கிடைக்கும் உணவை நெருப்பிலிட்டோ, உப்பு சேர்த்தோ உணவை mutilate செய்வதில்லை, உணவை சேகரிக்க தமது உடலில் உள்ள உறுப்புகளைத் தவிர வேறு ஆயுதங்களைப் பிரயோகிப்பதில்லை. அவை எதுவும் பல் டாக்டரிடம் செல்வதில்லை ஆனாலும் வாய் நாறுவதில்லை கண்ணாடி போடுவதில்லை பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போவதில்லை. ஆகையால் அவை உண்ண வேண்டியதை உண்கின்றன எனபது இதிலிருந்து தெரிகிறது.
மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம். யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம். இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரு மாதத்திற்கு எமக்கு எம் நாட்டில் விளையும் வாழை, கொய்யா போன்ற பழங்களையும், தேங்காய் போன்ற nuts களையும் தினமும் வழங்கட்டும். உமக்கு உயிருடன் உள்ள முழு கோழி, ஆடு, மீன் எல்லாம் அப்படியே வழங்கப் படும். இருவரும் சமைக்காம, உப்பு சேர்க்காம, நமது உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை கொண்டு உணவை தயாரித்து உண்ண வேண்டும். ஏனெனில் புலி, பசு, கரடி மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவன்களும் தங்கள் உணவை அவ்வண்ணமே தயாரித்து உண்கின்றன. மாமிசமும் உமது உணவு என்றால் நீரும் அதே முறையில் உண்டு நிரூபிக்க வேண்டும். பார்த்து விடுவோமா ஒரு மாதத்திற்கு? இதில் நீர் தாக்குப் பிடித்துவிட்டால் மனிதன் தாவரம் + மாமிசம் இரண்டும் உண்ணத் தகுதியானவன், அவன் ஒரு
பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.
லண்டனில் பன்றியின் குடலை வறுத்து பதப் படுத்தி மாட்டுக்கு காட்டயமாக்கி உண்ண வைத்தார்கள், அவை உண்டான, [பின்னர் Mad Cow disease வந்தது.]
அதற்காக பசுவை
பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று சொல்லிவிட முடியுமா? எவனாச்சும் ஆட்டை/கோழியை வெட்டி சுத்தப் படுத்தி வைத்திருப்பான், நோகாமல் நொங்கு சாப்பிடுவது போல காசை கொடுத்து வாங்கி வந்து, நன்றாக வேக வைத்து, நாற்றம் போவதற்கு மசாலாவைத் தூவி, சுவையே இல்லாத அதற்க்கு உப்பைப் போட்டு தின்று விட்டு அது எனக்கான உணவு என்பது சுத்த பேத்தல்.
என் குடலில் ஆசிட் இருக்கு, புலாசுலாக்கி இல்லை என்பதெல்லாம் படித்தவன் என்ற முறையில் செய்யும் மாய்மாலம். அதில் துளியும் உண்மையில்லை. என்னோட உடல் உறுப்புகள், ஜீரண உறுப்புகள் மாமிசத்தையும் deal பண்ணும் என்பதை நீர் நிரூபிக்க வேண்டுமானால் எல்லா ஜீவன்களும் மாமிசத்தை உண்பது போலவே நீரும் உன்ன வேண்டும். அது உம்மால் முடியுமா? முடியாவிட்டால் உமக்கு மாமிசம் தின்னும் ஆசையை, மற்றவர்கள் மேல் திணிக்கலாமா? அதற்க்கு உம்முடைய படித்த அறிவை துஷ் பிரயோகம் செய்யலாமா? அதற்க்கு சாதிச் சாயம் பூசும் தார் டப்பாவை கையில் எடுக்கலாமா? புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதிய திருவள்ளுவர் என்ன முட்டாளா? நீர் ஒருத்தர் மட்டுமே அறிவாளியா?
எதிர் தரப்பு: எஸ்கிமோக்கள் வாழும் சூழ்நிலையில் அசைவம் தின்னாம வாழ முடியாது. அதனால நானும் தின்பேன்.
நமது பதில்: ஏன் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர் சிலர் பிணத்தை வேகவச்சி சுத்தியும்
உட்கார்ந்துகிட்டு பிச்சு பிச்சு தின்றாங்க, ஆகையால் நீரும் தின்னலாமே? எஸ்கிமோக்கள் வாழும் சூழ் நிலையிலா நீர் இருக்கிறீர்? அவர்கள் மாமிசம் உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் தின்ன வேண்டுமென்று சட்டமா? அப்படியே எஸ்கிமோக்கள் தின்னுவதால் அது மனித உடலுக்கு ஏற்றதாகிவிடுமா? எஸ்கிமோக்கள் உண்ணுகிறார்கள் என்றாலும் அவர்கள் மனிதன் உடலுக்கு ஒவ்வாத ஒன்றை உண்ணுகிறார்கள் என்று அர்த்தமே தவிர அது மனிதன் உடலமைப்புக்கு ஏற்றதென்று ஆகிவிடாது.
[இந்தக் காணொளியை ஒரு முறை எங்கோ பார்த்தேன், இன்னொரு முறை பார்க்க வில்லை மெல்லிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம். ]
எதிர் தரப்பு: என்னோட உடம்பில B 12 விட்டமின் குறைச்சு போச்சு, மினரல் காலி, உடல் ஆரோக்கியப் பிரச்சினை பல வருது. எங்க பரம்பரை மாமிசம் சாப்பிடாததால் தான் இத்தனை பிரச்சினையும்.
அதனால நான் இப்போ மாமிசம் சாப்பிட்டு தெம்பா இருக்கேன்.
நமது பதில்: உம்மோட உடம்பில எங்கோ ஒரு மினாராலும், விட்டமினும் காணாம போனதுக்கே இப்படி பதருகிறாயே, அவற்றை ஈடுகட்ட நீர் போட்டுத்தள்ளிய மீனு, ஆடு, கோழி , நாயி இன்னும் என்னன்னவோ யாருக்குத் தெரியும், அத்தனையும் தங்கள் வாழ்நாளை பாதியில் முடித்துக் கொண்டனவே அது குறித்து நீர் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீரா? உலகில் நீர் ஒருத்தர் மட்டும்தான் வாழ வேண்டும் மற்றவை உமக்காகச் சாக வேண்டுமா? என்ன சுய நலம் இது...........?? அதாவது மனுஷன் எல்லோரும் ஆரோக்கியமா வாழ்ந்தா போதும்னு நீராக ஒரு வட்டம் போட்டு முடிவுகட்டிவிட்டீர். இன்னொரு உயிர் வாழ வேண்டுமா சாக வேண்டுமா எனத் தீர்மானிக்க நீர் யார்? உம்மைப்போலவே அவையும் வாழ்ந்து இயற்கையாக மடியக் கூடாதா?
உமக்கு எந்தெந்த ஜீவன்களையெல்லாம் கட்டுப் படுத்த முடியுமோ, எதிர்த்து கேள்வி கேட்காதோ, கையாலாகாத நிலையில் உள்ளனவோ அவை அத்தனையையும் உம்மோட சுகத்துக்காக, நலனுக்காக கொல்லலாம் என்று அர்த்தமாகிறது. இதை நானும் தாவரங்களைக் கொல்வதால் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நீர் மனிதன் எல்லோரும் நலமுடன் வாழ்ந்தால் போதும், மற்ற உயிர்கள் உம் நலனுக்காக செத்தாலும் பரவாயில்லை என்று ஒரு வட்டம் போட்டு நினைக்கும்போது, ஒருத்தன் தன்னுடைய சாதி என்ற வட்டம் போட்டு அது மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் அதை நீர் ஏற்றுக் கொள்வீரா? ஒரு நாட்டில் ஒரு இனத்தை அரசே கொன்று தீர்த்தது, அவர்கள் செத்தால் தான் என்னுடைய இனம் வாழும் என வட்டம் போட்டு நினைத்தது சரியா? அமரிக்கா தான் நலமாக இருந்தால் போதும் என அமரிக்க மக்கள் என்ற வட்டத்தைப் போட்டு மற்ற நாடுகளை அடிக்கிறதே அதை எற்ப்பீரா? அப்படியானால் நீர் போட்ட வட்டம் சரி, மற்றவர்கள் போடும் வட்டம் தவறு என்று நீர் எப்படி சொல்கிறீர்? மனிதனுடைய உயிர் மாத்திரமே முக்கியம் மற்றவை வாழவே தேவையில்லையா? இன்பம், துன்பம் என்பது உமக்கு இருப்பது போலவே அவற்றுக்கும் இருக்காதா? உணவுக்காக இன்னொரு உயிரை கொல்லுவது என்பது தவிர்க்க முடியாதது, ஒரு ஜீவன்தான் இன்னொரு ஜீவனுக்கு உணவு என்பது இயற்க்கை நியதி, என்னுடைய உடலுக்கு தாவர உணவு மட்டுமே பொருந்துவதால், அதைக் கொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்கிறேன். மாமிசத்தை உண்டு ஜீரணிக்கும் தகுதி வாய்ந்த ஜீவன்கள் அவற்றைக் கொன்று உண்ணட்டும் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை, இதிலென்ன தவறு?
வெள்ளை பேக் கிரவுண்டில், கருப்பு எழுத்துகளில் கண்ணை உறுத்தாமல் பதிவு எழுதினால் மட்டும் போதாது, அதில் விஷத்தையும், விஷமத்தையும் கலக்காமல் எழுதவு ம் வேண்டும். பொய்யை, இல்லாதததை, சொல்லாததை சொன்னதாக பித்தலாட்டம் செய்ய உன்னை போல படித்தவன் தேவை இல்லை. பஸ்ஸில் பிக் பாக்கெட் அடிப்பவன் செய்வான். நீர் படித்தவர் அதற்கேற்ற தரத்தோடு நடந்து கொள்ளும்.
எதிர் தரப்பு: தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாயிட்டான்.
நமது பதில்: உன் உடலுக்கு ஏற்றதை உண்ணுங்க, மற்ற ஜீவன்களை அனாவசியமா கொல்லாதீங்க என்று சொல்பவன் தடிஎடுத்தவனாக ஆயிட்டானா? என்ன கொடுமை சார் இது? மனிதன் வாயில் சுரக்கும் உமிழ்நீர், குடலில் சுரக்கும் அமிலம், குடலின் நீளம் அரைக்கும் வகையில் இயங்கும் தாடைகள், தோலில் உள்ள ஆயிரமாயிரம் வியர்வைத் துளைகள் என்று இத்தனை ஆதாரத்தோடு, இவை அத்தனையும் மனிதன் தாவர உணவை உண்ணுபவன் என்று சொல்லும்போது, இல்லை இல்லை மாமிசத்தையும் தின்னலாம் என்ற பித்தலாட்டம் செய்யும் நீர் தான் தடியை கையில் எடுத்த தண்டல் காரன், கருத்தை திணித்தவன், படித்த கல்வியை துஷ்பிரயோகம் செய்தவன். நாம் இல்லை.
எதிர் தரப்பு: யாரோ ஒருவர் எமக்கு அறிவியல் தெரியாது என்று எல்லாம் உளறி வருகின்றார்.
நமது பதில்: \\அரைவேற்காடுகள் எல்லாம் இணையத்தில் அறிவியல் ( உயிரியல் ) பேச வந்துவிட்டன .. !\\ இது நமக்கு வந்த ஒரு நண்பரது பின்னூட்டம். ஆனாலும் நாம் யாரையும் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படிச் சொன்னவர்கள் இருந்தால் அவர்கள் பதிலளிக்கட்டும். மேலும், ஒரு விஷயம் தெரியவில்லை என்பதை இழிநிலையாக நாம் கருதவில்லை.
சைவ உணவு சிறந்ததா, அசைவ உணவு சிறந்ததா என்பதை தீர்மானிக்க நீர் ஒன்றும் நாட்டமை இல்லை, உன்னால் கொல்லப் படும் உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
மொத்தத்தில், ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவு
என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. உம்முடைய உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக்
கொண்டு மற்ற உயிர்களை வாழ விடு என்பது நமது பாலிசி. ஜீவகாருண்யம் என்ற
பெயரில் புலிகளை பிஸ்கட் தின்னச் சொல்லப் போவதில்லை. மானை புலி அடித்துத்
தின்னட்டும் ஆட்டை ஓநாய் அடித்துத் தின்னட்டும், அவற்றின் உடல் அதற்க்கு
ஏற்றது. நீ மனிதன் ஆறறிவு படைத்தவன் நாகரீகம் தெரிந்தவன், அப்படி
இருந்தும் நாய், ஓநாய் இவற்றுக்கு தகுதியான உணவை நீ பிடுங்கித்
தின்னலாமா?
இறுதியாக நாம் சொல்ல வருவது: மாமிச உணவு மனித உடலுக்கு ஏற்றது இல்லை. இதையேதான் திருவள்ளுவரும் பத்து குறள்களில் சொல்லுகிறார். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. இது கட்டாயம் இல்லை. முடிவு செய்ய வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே.