வணக்கம் மக்கள்ஸ்!!
கிராமங்களில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு பெண் எப்போதும் ஒரு கூடையை தலையில் சுமந்து செல்வாளாம். அதில் என்ன விசே ஷமாக இருக்கும்? ஒரு விளக்குமாறும் ஒரு முறமும் இருக்கும். எதுக்கு இதெல்லாம்? அவருக்கு வம்பு சண்டை போடுவதென்றால் ரொம்ப விருப்பம். சண்டை போடத் தேவையான "ஆயுதங்களை" எந்த நேரமும் அவருடைய கூடையிலே தயாராக வைத்திருப்பார். சண்டை போடாவிட்டால் தலையே வெடித்துவிடும். இதையறிந்து அவ்வூர் பெண்கள் அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர். அந்நிலையில் ஒரு நாள் அவருக்கு யாரும் சண்டைபோட கிடைக்கவில்லை. அன்றைக்கு யாரோ ஒரு அம்மா, ஊருக்கு புதியவர், தெரியாமல் அவரைப் பார்த்து, "ஏம்மா எப்போ பார்த்தாலும் அந்த கூடையை தலையிலேயே சுமந்துகிட்டு இருக்கீங்க, இறக்கி வச்சிட்டு கொஞ்ச நேரம் உட்காருங்களேன்?" என்று தெரியாமல் சொல்லிவிட்டார்களாம். "ஆஹா..... வந்துதடி சண்டை, இறக்கடி கூடையை" என்று கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, "என்னைப் பார்த்து கூடையை எதுக்கு சுமக்கிறாய்ன்னு நீ எப்படிடீ கேட்கலாம்?" என்று ஆரம்பித்து கூச்சல் போட்டு வீதியில் உருண்டு புரண்டு சண்டையை போட்ட பின்னர் தான் அன்றைக்கு தூக்கமே வந்ததாம்!!
இப்படி ஒரு பதிவர் இருந்தா எப்படி இருக்கும்?!! அவர் தான் கொலாப்ஸ் பிளீஸ்........... என்ற வலைப்பூவின் ஓனர், எல்லோரையும் ரிலாக்ஸ் பிளீஸ்........ன்னு சொல்லிட்டு இவரு எப்ப பாத்தாலும் டெண்ஷானவே திரியறாரு. சில தினங்களுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்காரு. அதுக்கு பதிவர் வவ்வால் வந்து வேண்டிய குடைச்சலை குடுத்திட்டு போயிருக்காரு, அதிலேயே ஆள் ஒரு வழியாயிட்டாரு. ஏன்னா எழுதியது அவ்வளவு மரண மொக்கை அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை. சரி நம்ம பங்குக்கு எதாச்சும் பண்ணணுமில்லையா, அதான் இந்த பதிவு.
இவரு ஒரு படத்தை போட்டிருக்காரு. சூரியனின் வெளிச்சம் உண்டாவது எப்படி என்பதுதான் இவரு விளக்கியிருக்காரு. இதோ அந்த படம்.
படத்துக்கு கீழே எழுதியிருப்பது நானில்லைங்க, அவரேதான். [சூரியனில் இருந்து ஒளி எவ்வாறு உருவாகிறது என்பதை இந்தப் படத்தை வச்சு இவரு விளக்குகிறாராம்!! ] இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ரியாக்சன் நடக்குதாம். ஆனால் சரியாக கவனித்தால் இரண்டுக்கும் மேலே ஹைட்ரஜன்அணுக்கள் உள்ளன என்பது புரியும். சிவப்பு வண்ணத்தில் உள்ளவை ஹைட்ரஜன் அணுக்கள் என்றால் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் மேற்கண்ட வினையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்த முண்டம் ரெண்டு என்று சொல்கிறது.
சூரியனில் வெளிச்சம் உருவாவது ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுவாக மாறுவதால் தான் என்று எடுத்துக் கொண்டால் கூட நான்கு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியமாக மாறுகிறது என்று தான் பொருள்படும். எதை வச்சு இந்த முண்டம் ரெண்டுன்னு சொல்லுதுன்னுதான் புரியலை.
சரி அது போகட்டும், அடுத்து ஹைட்ரஜன் சொல்லிச்சாம்,
" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன்."
இங்க தான் கவனிக்கணும். ஹைட்ரஜன் எங்கே அழிந்தது? ஹைட்ரஜன் அணுக்கருவில் இருந்தது புரோட்டன் மட்டுமே, அவை ஹீலியத்தில் புரோட்டான்களாகவும், நியூட்ரான்களாகவும் அப்படியேதானே இருக்கின்றன, எங்கே அழிந்தன?
இது எப்படி இருக்குன்னா,
"மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை குடிக்காதீங்க" என்றானாம் ஒருத்தன்.
"ஏன்?"
"அந்த தண்ணீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் அந்தத் தண்ணீரில் இருந்த மினரல்ஸ் எல்லாம் போயிடுச்சு, அதனால் குடிக்காதீங்க" என்றானாம்.
இவரு விடும் கதையும் அப்படித்தான் இருக்கு!!
அடுத்தது இவரு கருத்து கந்தசாமியாகும் முக்கிய பார்ட்.
உலகில் எது முக்கியம்? ஹைட்ரஜனா, ஆக்சிஜனா அல்லது தங்கமா?
"சூரியனில் உண்டாகும் ஒளிக்கு காரணம் நான் எனவே நானே பெரியவன்"-ஹைட்ரஜன்.
"உயிர் வாழ பிராண வாயு நான் தானே முக்கியம், அதனால் நான்"-ஆக்சிஜன்.
"உங்க எல்லோரையும் விட அழகு நான் தான், மக்கள் எனக்குத்தான் முக்கியத்துவம் தர்றாங்க, எனவே நான் தானே முக்கியம்?"- இது தங்கம்.
சரி நாட்டமை கொலாப்ஸ் கொடுக்கும் தீர்ப்பு என்ன?
"ஒளி இல்லாட்டி மத்த இரண்டும் இருந்தும் பிரயோஜனம் இல்லை, எனவே ஹைட்ரஜனே பெரியவன்!!"
ஐயையோ ......... என்ன கீழே உருண்டு புரண்டு சிரிக்கிறீங்க? அவரு இதோட நிறுத்தவில்லைங்க, இதை வச்சு இன்னொரு வாழ்க்கை தத்துவத்தையும் சொல்லியிருக்கார்!! அது என்னன்னு சொல்லும் அளவுக்கு நமக்கு மசாலா இல்லீங்க.
ஆனா ஒன்னு, இந்த சூரியனில் ஒளி எப்படி வந்துச்சு, அதுக்கு அடிப்படை ஹைட்ரஜன் தான் என்பதைக் கண்டுபிடிச்ச இந்த மாங்கா, ஆக்சிஜன், தங்கம் இதெல்லாம் எதிலிருந்து வந்துச்சுன்னு ஆராய்ச்சி பண்ணாம போயிடுச்சு, அப்படி யோசிச்சு இது பதிலை தேடியிருந்தா மேலே மூணு அணுக்களுக்கும் நடுவில சண்டையே வந்திருக்காதே!!
சரி, இந்த மொக்கை பதிவை படிச்சதுக்கு ஒரு பயனுள்ள தகவல்:
ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுவதால் உண்டாகும் காமா கதிர் வடிவிலான ஆற்றல் ஒளியாக சூரியனின் மேற்ப்பரப்பை அடைய ஆகும் காலம் எவ்வளவு?
10,000 வருடங்கள் முதல் 1,70,000 வருடங்கள் வரை!!
சூரியனின் மேற்ப்பரப்பில் இருந்து நம்மை அடைய?
எட்டே நிமிடங்கள்!!
எனவே தற்போது நம்மீது விழும்சூரிய ஒளி குறைந்த பட்சம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவானது!!
இந்த வினாடியில் சூரியனை எடுத்து விட்டாலும் அடுத்த எட்டு நிமிடங்களுக்கு நம்மால் சூரியனைப் பார்க்க முடியும்!!

![]() |
| இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன். |

.jpg)