Wednesday, November 14, 2012

For all practical Purposes!! மாணவர்களுக்கு சரியான உதாரணம் தந்த ஆசிரியர்!!



ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டாலும் அது சூரியனை வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றி வந்தாலும் For all practical Purposes பூமி நிலையாக இருப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

அடுத்து, புவிஈர்ப்பு விசை, பூமியின் மையத்திலிருந்து தூரத்தைப் பொறுத்து மாறுபட்டாலும்,  For all practical Purposes அதன் மதிப்பு 9.8 மீ/வினாடி^2 என்ற மாறாத மதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்படியே எதற்க்கெடுத்தாலும்  For all practical Purposes என்ற சொற்றொடரை ஆசிரியர் பயன்படுத்த ஆரம்பித்தார்.  மாணவ/மாணவிகளுக்கு அது கொஞ்சம் விளங்கவில்லை.  அதனால், ஆசிரியரிடம், சார் இந்த சொற்றொடருக்கு அர்த்தம் விளங்கவில்லை. கொஞ்சம் புரியும்படியா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆசிரியர் அப்படியே யோசிச்சார், இதுங்களுக்கு எப்படிடா புரிய வைக்கலாம்னு.........  டக்குன்னு ஒரு யோசனை வந்தது.  வகுப்பைப் பார்த்துச் சொன்னார்.  இங்க பாருங்கப்பா, யாருமே இல்லாத ஒரு ரூம்ல எதிரெதிர் சுவத்தில ஒரு பையனையும், ஒரு பொண்ணையும் நிற்க வச்சிட்டதா நினைச்சுக்கோங்க.   அவங்களுக்கு இடையே என்ன தூரம் இருக்கோ அதில பாதி தூரத்தில அவங்க ஒவ்வொரு முறையும் நெருங்கி வருவாங்கன்னு வையுங்க.  அதாவது முதலில் இருவரும் இருபது அடி தூரத்தில் இருந்தால், அடுத்து பத்தடி தூரத்தில் இருப்பாங்க அதற்கடுத்து, ஐந்தடி தூரம் இப்படி படிப்படியா குறைஞ்சுகிட்டே போகும்.  தூரம் குறைந்து கொண்டுதான் போகிறதே, கணக்குப் படி பார்த்தால் இவர்கள் இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் தொட முடியுமா?  முடியாது.  ஆனால், ஒரு ஐந்தாறு தடவை இவர்கள் இப்படி ஒருத்தரை ஒருத்தர் நெருங்கி வந்தால், They are close enough For all practical Purposes!! என்றார்.  ஆஹா, இப்போ புரிஞ்சது சார், என்றார்கள் எல்லோரும்!!


சர்.சி.வி. இராமன் கையில் பரிசு வாங்கிய பெருந்தகை நம்ம கடைக்கு வந்தாருங்கோவ்.....!!



 மின்னலும், இடியும் ஒரே சமயத்தில் தான் தோன்றுகிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.  ஆனாலும் மின்னல் முதலில் நமக்குத் தெரிகிறது, இடியோசை கால தாமதமாகத்தான் கேட்கிறது?  இதற்க்குக் காரணம் என்ன?  யோசியுங்கள் பதில், பதிவின் இறுதியில்!!


கீழே உள்ள படத்தைப் பாருங்கள், அதில் ஒருவர் சர் சி.வி. இராமன், இன்னொருவர் யார்?

சர் சி.வி.இராமன் கையில் இருந்து "சைமன்ஸ்" பரிசு பெறுபவர் பெயர் Dr .பசுபதி அவர்கள். அது சரி, யார் இந்த Dr .பசுபதி ஐயா?


நம்முடைய பதிவு கார்டூனிஸ்ட் RK லக்ஷ்மனை நேரில் பார்த்த அனுபவம் [1996]    க்கு ஐயா வருகை புரிந்திருந்தார்கள், தனது வலைப்பூவின் லிங்கை கொடுத்திருந்தார்கள், நான் முதலில் சீரியசாக எடுத்துக் கொள்ள வில்லை, பின்னர் தான் அவர் எமிரடஸ் பேராசிரியர் என்று தெரிய வந்தது.  பின்னர் அவரது வலை தளத்தின் லிங்கையும் கொடுத்தார்கள்.  சுட்டி.


அதைப் பார்த்த பின்னர் மிரண்டு போனேன்.  1963-67 ஆண்டுகளில் தற்போது அண்ணா பல்கலைக் கழகம் எனப்படும் College of Engineering, Gunidy யில் B.E.(Telecom.) முடித்திருக்கிறார், பின்னர் IIT யில் M.Tech. எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் First Rank.  இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சர் சி.வி. இராமன் வந்திருக்கிறார்.   "என்னப்பா பரிசு ரொம்ப ஹெவியா இருக்கும் போலிருக்கே" என்று இராமன் கமென்ட் அடிக்க, முதலில் அவர் பேசுவாரா என்று எதிர்பார்க்காத Dr .பசுபதி, சுதாரித்து "ஆமா சார், கல்வியறிவு சில சமயம் வெயிட்டா இருக்கும் போல" என்று பேசி சமாளித்திருக்கிறார். 

ஐயா அவர்கள் நமது பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் இந்த மாதிரி பதிவு போடுங்கள் என்று தமது Facebook நண்பர்களுக்கு பரிந்துரைத்ததாகவும் பின்னூட்டத்தில் குறிப்பிடிருந்தார்.  இதை விட வேறெந்த பாராட்டும் பரிசும் நமக்குத் தேவையில்லை என்ற மன நிறைவை ஐயாவின் பாராட்டு தந்துள்ளது.  அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.  வாசகர்கள் அவரது வலைப் பக்கத்திற்குச் செல்லலாம் அவருடன் இ-மெயில் தொடர்பு கொண்டு, அவர் விருப்பப் பட்டால் Facebook -ல் நட்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

சரி, இப்போது பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில்:

நம் கண்கள் ரெண்டும் முன்னால இருக்கு, அதனால வெளிச்சத்தை முதலில் பார்த்துவிடுகிறது, காதுகள் சற்று பின்னால் இருப்பதால், சத்தம் போய்ச் சேர நேரமாகுது!!

[நீங்க நினைச்ச பதில்]:  ஒளியின் வேகம், ஒலியின் [sound ] வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம்.  ஒளியின் [Light ] வேகம்=வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்கள், ஒலியின் [sound ] வேகம் வினாடிக்கு 330 மீட்டர்கள். [~ஒரு கிலோ மீட்டரில் மூன்றில் ஒரு பங்கு !!].  நீங்க நினைச்சதுதான் சரியான பதில், நான் விட்டது கடி!!  ஹி .............ஹி .............ஹி .............


Tuesday, November 13, 2012

கல்லூரி விடுதியில் நான் பார்த்த வித்தியாசமான தீபாவளி!!

சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் நான் படித்த 18 மாதங்களில்முதல் 6 மாதம் பி.டெக். மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!!  மொத்தம் ஒரு டஜன் விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதி கட்டிடத்திலும் ஒன்றையொன்று பார்த்தாற்ப்போல இரண்டு பிளாக்குகள், ஒவ்வொரு பிளாக்கிலும் மூன்று தளங்கள், அதில் தரைத் தளத்தில் எப்பொழுதும் முதலாண்டு மாணவர்கள், முதல் தளத்தில் இரண்டாமாண்டு, மேல் தளத்தில் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் என சுண்டெலிகள் முதல் சிங்கங்கள் வரை தங்கியிருப்பார்கள்!! 




இவர்கள் தீபாவளி   கொண்டாடும் விதம் சிறப்பாக இருக்கும்!!  இவர்கள் வாங்கும் வெடிகளில் முதலிடத்தில் இருப்பது ஏவுகணைகள் தான்.  நிறைய ராக்கெட்டுகளை வாங்கி வந்து, அதைச் செலுத்துவதற்கு பெரிய பெரிய நீளமான குழாய்களையும் தயார் செய்து கொண்டு வந்து விடுவார்கள்.  அது சரி இவர்கள் செலுத்தும் ஏவுகணைகளின் இலக்கு எது தெரியுமா?  அவர்களுக்கு எதிரே உள்ள பிளாக்குதான்!!  இவர்கள் ராக்கெட் எப்போதும் மேலே போகவே போகாது, பக்கவாட்டில்தான் செல்லும், எதிர் பிளாக்கில் உள்ளவன் அறைதான் இவர்கள் குறியே!!  எதிர் பிளாக்கு காரப் பசங்க என்ன ஏமாந்த சோனாங்கிகளா!! அவனுங்களும் தங்களது ஆயுத படை பலத்தோடு இவர்களை குறிவைத்து ரெடியாக இருப்பார்கள்.  இவன் கொளுத்திவிடும் ஏவுகணை புஸ் .......... என்று சீறிப் பாய்ந்து எதிர்த்த பிளாக்கில் போய் டமால் ........ என்று வெடிக்கும்.  அடுத்து அவன் கொளுத்தி விடுவது இங்கே வந்து வெடிக்கும்!!  எந்த நேரமும்  உ ஷாராகவே இருக்க வேண்டும்.  ஏவுகணைகள் வரும்போது தளத்தின் தடுப்புச் சுவரில் பதுங்கிக் கொண்டு பின்னர் தமது ஏவுகணையைச் செலுத்த வேண்டும்!! ஒரு சமயம் ஒரு பையன் அறையின் கதவை திறந்து வைத்து விட்டு ஏமாந்த சமயத்தில் ஒரு ராக்கெட் அவன் அறைக்குள்ளே புகுந்து உள்ளே இருந்தவனை விரட்டியது, பின்னர் டமால் என்று வெடித்தது.  ஓரே தமாஷ்தான்!!

இந்தச் சண்டை நாள் முழுவதும் நடக்கும், ஒவ்வொரு தளத்தில் இருப்பவனுக்கும் எதிரி யார் என்றால் நேர் எதிர் தளத்தில் இருப்பவன்தான். சில சமயம் முதல் தளத்தில் இருப்பவன் இரண்டாம் தளத்தில் இருப்பவனைத் தாக்குவதும் நடக்கும்.  இதைப் பார்த்தால் இரண்டு எதிரி நாடுகளின் இராணுவ வீரர்கள் போர்முனையில் ராக்கெட் செலுத்தி ஒருத்தரையொருத்தர்  தாக்குவது போன்ற கட்சியாக இருக்கும்.  ஒரு வேலை இந்த பசங்க சினிமாவில் பார்த்துவிட்டு இதை ஆரம்பித்தார்களா, இல்லை அதே மாதிரி த்ரில் வேணும்னு நினைப்பார்களா தெரியவில்லை!!

நாள் பூராவும் இந்த கூத்து நடந்தால் மாலையில் தொடங்கி இரவில் வேறு விதமான கூத்து நடக்கும்.  விடுதி மாணவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுதியின் மொட்டை மாடிக்குப் போய்விடுவார்கள்.  அங்கே இன்னமும் பலம் வாய்ந்த ராக்கெட் பட்டாசுகளை வாங்கிவந்து பக்கத்து விடுதிக்கு அனுப்புவார்கள், அந்த விடுதி மாணவர்களும்  தங்கள் படை பலங்களோடு தயாராய் மேலே வந்திருப்பார்கள். இவர்கள் அனுப்புவது  அங்கே போய்  வெடிக்கும், அவர்கள் அனுப்புவது இங்கே வந்து வெடிக்கும்.  யார் அனுப்புவது சரியா போய்த் தாக்கி பயமுறுத்துது என்பதில் தான் போட்டியே.  ஒரே கும்மாளம்தான்!!  இப்படி எல்லாம் வெடித்துக் கொண்டிருந்த போது ஒரு வெடி ஒரு பையனின் முகத்தைத் தாக்கியது.  உடனே மருத்துமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.  சோதித்துப் பார்த்ததில் அவனது ஒரு கண் சேதமடைந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  அந்தக் கண்ணில் பார்வை இழப்பு அதைத் தவிர்க்க முடியாது என்று மருத்துவர் கைவிரித்துவிட்டார்.  அந்த வருடம் மாணவர்கள் அடித்த லூட்டி சோகத்தில் முடிந்தது.  எல்லோருக்கும் தமாஷ் என்றாலும், ஒரு கண்ணின் பார்வை இழந்த அந்த மாணவனின் மீதி வாழ்நாள் எப்படி இருக்கும்?  நினைக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது. இந்த விஷயம் நிறுவனத்தின் டைரக்டருக்குப் போய் எல்லா  பயல்களும் உங்க ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துங்கடா என்று சட்டம் கொண்டு வந்தார்.  அதற்க்கு அடுத்த தீபாவளிக்கு நான் அங்கு இல்லை.  இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் என்று யாராவது விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!!

Monday, November 12, 2012

IT துறையில் வாழ்க்கை....... [The Wild side.....!!]

டீம் லீட் பார்க்கிறதுக்கு இப்படித்தான் இருப்பாங்க!!


புது ரிசோர்ஸ் தேடும் மேனேஜர்!!

டீம் வொர்க்.... விழுந்தாலும் எழுந்தாலும் ஒன்னா இருப்போம்!!

Defect -ஐ கண்டுபுடிக்காம விட்ட டெஸ்டர்.....

ஆபீஸ்ல காஞ்சுபோன அன்னைக்கு வெறுத்து போய் உட்கார்ந்திருக்கும் டெவலப்பர்.

Tech Talk குடுக்கிறார்.

பாஸ் கிட்ட பெர்ஃபாமான்ஸ் ரிவியூ பண்ணுகிறார்.  [குனிந்து பார்ப்பவர்தான் பாஸ்...!!]

சொல்லவே தேவையில்லை, ஆன்சைட் கிளையன்ட் இவர்!!

டீம் பிக்னிக் போயிருக்காங்க.....
தன்னோட கோடில் பக் இருக்குன்னு தெரியவந்த டெவலப்பர்.

ஓவர்டைம் பார்க்கிறாரு.....

லீவுக்கு அப்பளை பண்ணிட்டு கிடைக்குமான்னு பாத்துகிட்டு இருக்காரு.

லீவ் லெட்டரைப் பார்த்த மேனேஜரின் ரியாக் ஷன்.....!!

Sunday, November 11, 2012

கல்லூரி மாணவனை அவன் வழியிலேயே மடக்கிய ஸ்வாமிஜி!!

மும்பையில் ஒரு  சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்லூரிக்கு ஒரு சாது பகவத் கீதை உபன்யாசம் செய்யப் போகிறார்.  அவர் பேச்சை முடித்த பின்னர் கேள்வி நேரம் வந்தது.  ஒரு மாணவன் எழுந்தான்,

"ஸ்வாமிஜி நீங்க சொன்னது அத்தனையும் வேஸ்ட்,  உங்க பேச்சை கேட்டுட்டு எல்லோரும் ஸ்வாமியாயிட்டா, யார் விவசாயம் செய்யுறது? யார் மிலிடரிக்கு போய் நாட்டை காப்பத்துவது? யார் அரசாங்கத்தைப் ஆள்வது? யார் வியாபாரம் செஞ்சு விவசாயப் பொருட்களை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது?  அதனால நீங்க சொல்வது எதுவும் வாழ்க்கைக்குப் பயன்படாது, சுத்த வேஸ்ட்."

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த மாணவர்கள் அத்தனை பேருக்கும் குஷி, ஓ .........  வென கூச்சலுடன் பலத்த கைதட்டல், ஏன்னா வாத்தியாரை மடக்கும் மாணவன் என்றாலே மத்த மாணவர்களுக்கு சந்தோசம் தானே.  அதுவும் மும்பையைப் பற்றி சொல்லவா வேணும்.  மொத்த கூட்டமும் அந்த கேள்வி கேட்ட மாணவன் பக்கம், கூச்சல் அடங்கவே ரொம்ப நேரம் ஆனது.

ஸ்வாமி ஆரவாரம் அடங்கட்டும் என்று சற்று பொறுத்தார்.  அமைதியானது.  அவர் என்ன பதில் தரப் போகிறார் என கேட்கும் ஆர்வம் எல்லோருக்கும்.  முதலில் ஸ்வாமி இந்தக் கேள்விக்கு பதில் தரும் வல்லமையைத் தாருங்கள் என தனது பிரார்த்தனைகளை தனது குருவுக்கும் இறைவனுக்கும் செலுத்துகிறார்.  பின்னர் கூட்டத்தை நோக்கி தனது பேச்சை துவக்குகிறார்.  

"உங்கள் கேள்விக்கு பதிலாக நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்"  கூட்டத்தில் எல்லோருக்கும் வியப்பு.  என்னடா இது பதில் வரும்னு பார்த்தா கேள்வி வருதேன்னு!!  ஸ்வாமி தொடர்ந்தார்.

"ஒரு கற்பனை பண்ணிப் பாருங்க, உலகத்தில் உள்ள அத்தனை பேரும் சார்டர்ட் அக்கவுண்டன்ட்  ஆயிட்டா என்ன ஆகும்?  யார் விவசாயம் பண்ணுவாங்க?  யார் நாட்டை ஆள்வது?  யார் மிலிடரிக்குப் போய் நாட்டை காப்பாத்துவாங்க?  யார் வியாபாரம் பண்ணுவாங்க?  சொல்லப் போனா எல்லோரும்  சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருப்பதால் ஒருத்தருக்கும் சார்டர்ட் அக்கவுண்டன்டே தேவைப் படாது, அதனால அத்தனை பேரும் வேலையத்தவங்களாப் போயிடுவாங்களே!!"

இதைக் கேட்டதும், அந்த மாணவனுக்கு எழுந்ததை விட பல மடங்கு கரகோஷம், கூட்டம் இப்போது ஸ்வாமியின் பக்கம் திரும்பிவிட்டது. ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.

நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன.  இதயம், நுரையீரல், லிவர், மூளை என ஒவ்வொன்றும்  வெவ்வேறு நிறம், வடிவம், செயல்பாடுகள்.  இருந்த போதிலும் அவை அனைத்திற்கும் ஒரே நோக்கம் இந்த  உடல்  ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே. அத்தனை உறுப்புகளும் ஒருங்கிணைந்து உடலுக்காக உழைக்கின்றன.  அதைப் போல இந்த சமுதாயம் ஒரு உடல் என்றால், அது ஆரோக்கியமாக இருக்க, ஆட்சி செய்பவர்கள், மிலிடரிக்காரர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சார்டர்ட் அக்கவுண்டன்ட் என அத்தனை பேருக்கும் தேவை இருப்பது போல பகவத் கீதையை போதிக்கும் ஸ்வாமிகளுக்கும் தேவை இருக்கிறது.  நீங்கள் உங்கள் கடமையைச் சமுதாயத்தைக்குச் செய்வது போல நாங்களும் எங்கள் கடமையை சமுதாயத்திற்குச் செய்கிறோம்.  இறுதியில் அனைவரின் நோக்கமும் சமுதாய நலன், சமுதாய மேம்படுதானே!!  கேள்வி கேட்ட மாணவன் உட்பட அத்தனை பேரும் ஸ்வாமியின் இந்த பதிலை ஒப்புக் கொண்டனர்!!  அந்த ஸ்வாமியின் பெயர்: தவத்திரு ராதாநாத் ஸ்வாமி!!

 

தவத்திரு ராதாநாத் ஸ்வாமி மேலதிகத் தகவல்கள்:

அமெரிக்க ஜனாதிபதியுடன்.......
இயற்பெயர் ரிச்சர்ட் ஸ்லேவின் [Richard Slavin], 1950 -ல் சிகாகோவில் பிறந்த அமெரிக்கர்.  தனது பத்தொன்பதாம் வயதில், ஏற்றத் தாழ்வுடன் மக்கள் நடத்தப் படுவதைக்  கண்டு சகிக்க முடியாமலும், நகர வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவும் வீட்டை விட்டு வெளியேறி, வாழ்வின் அர்த்தமென்ன, இறைவன் யார் என்ற கேள்விகளுடன் கிழக்கு திசை நோக்கி [கையில் பணமே இல்லாமல்!!] தனது நண்பர் கேரி [Gary ] என்பவருடன் கிளம்பினார்.  வழியில் அவர் நண்பர் வேறு திசையில் பிரிந்து விட,  இந்தியா நோக்கிச் செல் என்ற உள்ளுணர்வு  சொன்னதால் ரிச்சர்ட் ஸ்லேவின், கிரீஸ், துருக்கி, இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இறுதியில் இந்தியாவை அடைந்தார்.  [நாம் வழியில் செல்லும் பொது யாரிடமாவது லிப்ட் கேட்டு போகிறோமே அது மாதிரி விமானத்தில் கையில் காசே இல்லாமல் வந்தடைந்திருக்கிறார்!!].  இமயமலைப் பகுதியில் பல யோகிகளுடன் வசித்ததோடு, இந்தியா நேபாளம் முழுவதும் சுற்றி எல்லா விதமான ஸ்வாமிகள், யோகிகள், புத்த மதத்தினரையும் சந்தித்திருக்கிறார்.  கல்கத்தாவில் அன்னை தெராசா, Art of Living ரவிசங்கரின் குரு மகேஷ் யோகியின் ஆஸ்ரமத்திலும் இருந்திருக்கிறார்.  [மகேஷ் யோகி அச்சமயம் அங்கு இல்லை]. இறுதியில் 1970 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்த போது, ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்று மும்பை கிராஸ் மைதானத்தில் நடைபெற அங்கே இவர் செல்கிறார்.  அங்கு பக்தி வேதாந்த ஸ்வாமி [1896-1977, ஹரே கிருஷ்ண இயக்க நிறுவனர், ஆச்சாரியர்] அவர்களைச் சந்தித்து அவர் பால் ஈர்க்கப் பட்டு சிஷ்யாரானார்.  பின்னர் 31 வயதில் சன்யாசம் ஏற்று தற்போது உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியை பரப்பி வருகிறார்.  இவரது வழிகாட்டுதலின் பேரில் மும்பை சேரிகளில்  தினமும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு  மதிய உணவும், பக்தி வேதாந்தா மருத்துவமனை, கண் சிகிச்சை முகாம்கள், இயற்க்கை விவசாயம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடை பெற்று வருகின்றன. 

இந்திய ஜனாதிபதியுடன்......

தலாய் லாமாவுடன்.....

அன்னை தெரசாவுடன்.........



யோகா குரு BKS ஐயங்காருடன் ...........
பக்தி வேதாந்தா மருத்துவமனை சுட்டி.

Saturday, November 10, 2012

தமிழன் பேசும் ஆங்கிலம்.......... உங்கள் கவலைகளைப் போக்கும்!!

தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனத் தலைவர்,  பெயர் Mr.X  அவர் ஆங்கிலம் மிகவும் புகழ் பெற்றது, இதோ சில உதாரணங்கள்:
 
# விளையாட்டு மைதானத்தில்:

-----------------

All of you stand in a straight circle.
There is no wind in the balloon.
The girl with the mirror please comes here...(அதாவது  கண்ணாடி போட்டிருக்கும் மாணவியை அழைக்கிறாராம்).


# கோபத்தில் ஒரு பையனிடம்:

---------------------

I talk, he talk, why you middle middle talk?


# மாணவர்களுக்கு தண்டனை வழங்குதல்:

-----------------------

You, rotate the ground four times...
You, go and understand the tree...
You three of you stand together separately.
Why are you late - say YES or NO .....(?)


# இதுதான் டாப்பு:

---------------

 ஐயா ஒரு முறை அவரோட துணைவியாரோடு திரையரங்குக்கு போயிருக்கார் அங்கே சினிமாவுக்கு வந்திருந்த மாணவனை பார்த்துவிட்டார், ஆனால் அவன் இவர்களைப் பார்க்கவில்லை அடுத்த நாள் வகுப்பில் அந்த மாணவனைப் பார்த்து சொல்கிறார்:  

"Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theatre"


# வகுப்பில் வெளுத்துக் கட்டியவை:

----------------------------------------------

Open the doors of the window. Let the atmosphere come in.
Open the doors of the window. Let the Air Force come in.
Cut an apple into two halves - I will take the bigger half.
Shhh...Quiet, boys...the principal JUST PASSED AWAY in the corridor
You, meet me behind the class. (வகுப்பு முடிஞ்சதும் தன்னை வந்து பார்க்கச் சொல்கிறார்!!)
 இது கூல் >>
"Both of u three get out of the class."
Close the doors of the windows please. I have winter in my nose today...
Take Copper Wire of any metal especially of Silver.....
Take 5 cm wire of any length....



இறுதியாக ஐயாவின் அனுபவங்கள்:

 ஒருமுறை கல்லூரி விழாவுக்கு ஐயா காலதாமதமாக வந்தார், விழா ஆரம்பித்து விட்டிருந்தது. மேடைக்குச் சென்றார்,  பேசத் துவங்கினார்: " Sorry I am late, because on the way my car hit 2 muttons (இரண்டு ஆடுகள் காருக்கு குறுக்கே வந்து மோதிடுச்சாம்).


  கல்லூரி ஆண்டு விழாவில்:


"This college strict u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


  அவருடைய பள்ளி ஒன்றின் ஆரம்ப நாளில்:


"No ragging this college. Anybody rag we arrest the police" 


மேலும் இங்கு சொன்னதற்கு சம்பந்தமில்லாத வேறு சிலவற்றைப் படிக்க சொடுக்கவும்.