அன்புள்ள மக்கள்ஸ்!!
இன்னைக்கு இரண்டு முக்கிய [அவங்க ஏன் முக்கணும்? Constipation ஆ? அப்படின்னுல்லாம் கேட்கப் படாது!!] தமிழ்ப் பதிவர்களைப் பத்தியும், அவர்கள் நம் அறிவுக் கண்களைத் திறக்க செய்துவரும் மொள்ளமாறித் தனங்களைப் பத்தியும் பார்க்கப் போகிறோம். இவங்க தமிழ்ப் பதிவர்கள் என்றாலும் International லெவலில் எழுதுவதால் தங்கள் பெயர்களை கொஞ்சம் மாத்திகிட்டாங்க, ஆனாலும் நாம் விட்டுவிடுவோமா? அதை திரும்பவும் தமிழ்படுத்தி விட்டோம்!!
பதிவர் 1: Mac Paul Kelvin [நம்ம மொழி பெயர்ப்பு : மக்குபால் கள்வன்], Go Donkey அப்படின்னு ஒரு வலைப்பூவை ஆரம்பிச்சு அழகு தமிழில் பித்தாலாட்டத்தை விதைத்து வருகிறார். [Go Donkey -அப்படின்னா, கோ டாங்கி அதாவது "போ ....... கழுதை" அப்படின்னு அர்த்தம். இதற்க்கு காரணம், "கழுதை கெட்டா குட்டிச் சுவரு"-ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவரோட பதிவுக்கு கெட்டு போன கழுதைங்க நாலு போய் விழுந்து கிடக்கும், அந்த கழுதைகளைப் பார்த்து சொல்வது போல சிம்பாலிக்கா இப்படி பேர் வச்சிருக்காரு.]
பதிவர் 2: Charcoal Wagon [சார்கோல் வேகன், சுருக்காமா சார்வாகன் அப்படின்னு வச்சுக்கலாம். நம்ம தமிழாக்கம் கரி வண்டி.] இவரு எங்க மாமு தான். சாதாரண மாமு இல்லை மாமூல் மாமு!! மீன் பிடிக்கிற தொழிலை பரம்பரை பரம்பரையா செய்துகிட்டு வர்றாரு. கடலுக்கோ ஏரிக்கோ போய்த்தான் மீன் புடிக்கணுமா என்ன? இருந்த இடத்திலேயே குட்டையை குழப்பி எல்லோரையும் கன்ஃபியூஸ் பண்ணிவிட்டு மீன் பிடிப்பாரு!! இவரு "பிதற்றல் அரசு"-என்கிற பேர்ல வலைப்பூவை நடத்திகிட்டு வர்றாரு.
மாமுவின் வலைப்பூவில் தமிழ்மண ஒட்டு பட்டை வேலை செய்யாது. மக்குபால் கள்வனின் வலைப்பூவில் அது இருக்கும், ஆனா இருக்காது. யாரும் ஓ ட்டு போட முடியாது. ஆனாலும் இதுங்க பதிவுகள் ஒவ்வொன்னுக்கும் இருபதுக்கும் குறையாம ஓட்டு விழுது. இரகசியம் வேற எதுவும் இல்லை, கிராமங்களில் சில இழவு வீடுகளில் செத்தவருக்காக அழ ஆள் இருக்க மாட்டார்கள், அழாமல் இருந்தால் நன்றாக இருக்காது, அக்குறையை நீக்க கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து மாரடிக்க வைப்பார்கள். இவங்களுதும் அதே டெக்னிக் தான். கள்ள ஒட்டு போட தனி டீமையே வைத்திருக்கிறார்கள். ஜகஜ்ஜால கில்லாடிங்க தான் போங்க!!
இந்த ரெண்டு பேரும் சேர்ந்து பரிணாமம் என்னும் பட்டை நாமத்தை......... ஸாரி ....... பித்தலாட்டத்தை கண்ணும் கருத்துமா இளிச்சவாயர்கள் நெத்தியில்........ மறுபடியும் ஸாரி ......... மத்தியில் பரப்பிக்கிட்டு வராங்க. அதென்ன பரிணாமம் டார்வின் புளுகிவிட்டு போனதா? அது தான் இல்லை. இது வேற!! ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்களின் பரிணாமம். அது ஒரு நிறுவனத்தின் தொழிச்சாலையில் தயாரிக்கப் பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தான் இல்லை, அது வந்த விதமே வேறு என்று ஆதாரப் பூர்வமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.
இவங்களோட கொள்கைப் படி, முதலில் மிதிவண்டி எனப்படும் சைக்கிள் தான் உருவாச்சு. எப்படி அது உருவாச்சு? யாராச்சும் செய்தார்களா? அதுதான் இல்லை!! ஒரு பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் விற்ப்பவன் வீட்டில் அவன் வியாபாரம் செய்து சேகரித்த இரும்பு, இரப்பர் சாமான்கள் எல்லாம் ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்திருந்தான். ஒரு நாள் சூறாவளிக் காத்து வந்து அவன் வீட்டைத் தாக்கியது, அந்த சாமான்கள் எல்லாம் காற்றில் பறந்து போயின, அவை கசாமுசா வென்று ஒன்றோடொன்று கலந்து கீழே விழும் போது சைக்கிளாக மாறிவிட்டது. இதுதான் சைக்கிளின் பரிணாமம்.
அது அப்படியே இருந்துச்சா? அதுதான் இல்லை, Natural Selection நடக்க ஆரம்பித்தது. மனுஷன் சைக்கிளை கஷ்டப்பட்டு மிதிப்பதையும், அடிக்கடி வழியில் டயர் பஞ்சர் ஆவதையும் பார்த்து அந்த சைக்கிளுக்கே பேஜார் ஆகிப் போச்சு. பழைய இரும்பு பக்கம் சைக்கிளை கொண்டுபோகும்போதேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பை தன்னோடு சேகரிக்க ஆரம்பித்தது, அப்படியே என்ஜினானது, பின்னாடி ஒரு வீலையும் ஏற்றிக் கொண்டது. இது Natural Selection என்பது ஒருத்தருக்கும் விளங்க வில்லை, அப்படியே ஒரு நாள் ரேஷன் கடைப் பக்கம் போனபோது அங்கே மண்ணெண்ணெய் வாங்கிய ஒருத்தர் இந்த பரிணாம வளர்ச்சி அடைந்த சைக்கிளின் மேல் தவறிப் போய் கொட்டி விட்டார், அதே சமயம் அங்கே நின்று பீடி குடித்துக் கொண்டிருதவர் தீக்குச்சியை தவறி வீச நின்று கொண்டிருந்த வண்டி தானாக ஓட முதல் ஸ்கூட்டர் பரிணாமம் அடைந்தது.
ஸ்கூட்டரை நம்மாளு சும்மா விட்டானா? ரெண்டு பேரு போயிருந்தா பரவாயில்லை, ரெண்டு பேரை ஏற்றும் வண்டியில் நம்மாளுங்க ஒரு ஊரையே ஏத்த ஆரம்பிச்சாங்க.
Natural Selection என்பது தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாறுவது என்பதை நீங்கள் உணரவேண்டும். இப்போது அதிகம் பேர் பயணிக்க வேண்டிய தேவையை உணர்ந்த ஸ்கூட்டர் பரிணாமம் அடைய ஆரம்பித்தது, பின்னால் வைத்திருந்த ஸ்டெப்னி வீல் கழண்டு கீழே வந்து மூன்று சக்கரங்களாகியது. உதைக்கும் ஸ்டார்ட்டர் லிவராக மாறி கையால் மேலே இழுத்தால் ஸ்டார்ட் ஆகும் ஷேப்புக்கு மாறியது, ஹெட்லைட் கீழே போனது, rear view கண்ணாடிகள் அப்படியே ஓரம் போயின, நீங்கள் இன்றைக்கு பார்க்கும் ஆட்டோ ரிக்ஷா உருவானது!!
இன்றைக்கும் பாருங்க ஸ்கூட்டருக்கும் ஆட்டோ ரிக்ஷாவுக்கும் எஞ்சின் சப்தம், சக்கரங்களின் வடிவமைப்பு என நிறைய தொடர்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுமட்டுமல்ல, பைக்குகளும் ஸ்கூட்டரில் இருந்து கிளைத்து வந்தவைதான் என்பதையும் இவர்கள் இருவரும் ஆணித்தரமாக அடித்து உதைத்து கூறுகின்றனர். எனவே இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஆட்டோ, பைக்குகள் இரண்டுக்கும் பொது மூதாதையர் ஸ்கூட்டரே, அவை தானாகவே உருவானவை, யாரும் செய்யவில்லை என்பதே இவர்களின் வாதம்.
இதையடுத்து, இவர்கள் உயிர்களின் பரிணாமத்திற்கும் தொண்டு செய்து டார்வினுக்கு நன்றிக் கடன் செலுத்த இருக்கின்றனர். இவர்களின் ஆராய்ச்சியில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு மூட்டை இராசாயனப் பொருட்கள் இருந்தால் போதும், [தற்போது மனித உடலில் உள்ள அதே இராசாயன மதிப்பு!!] அதிலிருந்து ஒரு ஆளையே உருவாக்கி விடலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு code நம்பரை உருவாக்குவார்கள், அதை இவர்கள் இயந்திரத்தில் கொடுத்தால் போதும், அந்த 200 ரூபாய் இரசாயனப் பொருட்களும் உங்களுக்கு வேண்டிய நபராக மாறிவிடும். வேண்டாத போது மீண்டும் கெமிக்கல்களாகப் பிரித்து போட்டு விடலாம். ரொம்ப சுளுவு.
எதை எடுத்தாலும் 200 ரூபாய்..... |
உங்களுக்கு எந்த ஃபிகர் வேண்டும், அல்லது எந்த நட்சத்திரம் வேண்டும்? இனி நீங்கள் ஏங்கி ஏங்கி வாழ் நாள் முழுவதும் நொந்து சாக வேண்டியதில்லை வெறும் 200 ரூபாய் போதும். இரவில் உருவாக்கிக்கலாம், விடிஞ்சதும், பிரிச்சு போட்டு விடலாம், கல்யாணம் கருமாதி, பிள்ளை குட்டி என எந்தவித சுமையுமில்லை, விவாகரத்து, ஜீவனாம்சம் என பிரச்சினையும் இல்லை. வெறும் மஜா......மஜா..... மஜாதான். இந்த ஆராய்ச்சி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஹி ...........ஹி ...........ஹி ...........
அடுத்து சமுதாயத்திற்கு சில அறிவுரைகளை இவர்கள் வழங்க இருக்கிறார்கள்:
மனுஷனுக்கு மட்டும்தான் வலிக்கும், மத்த ஜீவன் எதுக்கும் வலி என்பதே கிடையாது. அதனால மனுஷனுக்கு எதாச்சும் ஒன்னு என்றால் கூவோ கூவுன்னு கூவனும், நாய் மாதிரி ஊளையிடனும், மத்ததெல்லாத்தையும் அடிச்சு திண்ணனும்.
ஆண், பெண் இவர்கள் தான் இணையனுமா? ஏன்யா இப்படி பழைமை வாதின்களா இருக்கீங்க? ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளையை பிடிச்சிருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம், அதனால என்ன தப்பு? ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொம்பளையோட குடும்பம் நடத்தினா என்ன தப்பு? கொஞ்சம் விசாலமா சிந்திங்கையா.........
கல்யாணம் பண்ணாமலேயே குடும்பமும் நடத்தலாம், முடிஞ்சவரைக்கும் சந்தோஷமாய் இருக்கலாம், முடியாட்டி கலட்டிகிட்டு போய்கிட்டே இருக்கலாம். இண்டர்நேஷனல் லெவலுக்கு வாங்கையா.......
உங்க பொண்ணு பையன் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே டேஸ்டு பண்ணப் போவாங்க, இதெல்லாம் தப்புன்னுகிட்டு பழைய காலத்திலேயே இருக்காதீங்க, கம்பியூட்டர் காலத்துக்கு வாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ரிகர்சல் பார்க்கிறதை நீங்க ஏத்துக்கணும், அதனால என்ன தப்பு? அதற்க்கேற்ப நீங்க மன முதிர்ச்சியடையனும்.
இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சமூக சீர் திருத்தங்களையும் சமுதாயத்தில் ஏற்ப்படுத்தும் இவர்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும் அதாவது ஒரு கொரடாவை எடுத்து இவங்க பல்லை புடுங்கனும். அது தான் நோ -பல்.
இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம், வணக்கம் மக்கள்ஸ்!!