வணக்கம் மக்கள்ஸ்!!
சமுதாய நன்மைக்காக இராத்திரி பகலா உழைக்கும் நம் நடிகர்கள், நாட்டில் எயிட்ஸ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும், அந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவத்திற்கு நிதி திரட்டவும் தங்களால் முடிந்த முயற்சியைச் செய்கிறார்கள். அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு ரிச்சர்ட் கெரே அப்படின்னு ஒரு வெள்ளைக்கார நடிகரை பாலிவுட் நடிகை [பேரு ஷில்பா ஷெட்டி], அழைத்து வந்தார். விழா மேடைக்கு அந்தாள் கையைப் பிடிச்சு ஷில்பா அழைத்துச் சென்றார் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாலாம், உடனே ஷில்பவின் கையைப் பிடிச்சு லைட்டா ஒரு கிஸ் வச்சான், அந்தம்மா ஒன்னும் சொல்லலை புன்னகையோட இருந்தாங்க, பொது மேடைன்னு கூட பார்க்காம மெல்ல கட்டிப் பிடிச்சான், அதுக்கு புன்னகைதான் பூத்தாங்க அந்தம்மா. அப்புறம் அவனுக்குள் இருந்த மிருகம் ஆவேசமா புறப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன். பிடிச்சு நாய் கவ்வுரா மாதிரி ஷில்பாவை ஒரு கவ்வு கவ்வுனான். இஷ்டத்துக்கும் கிஸ்ஸோ கிஸ்தான்...... [ஐயா..... புண்ணியவான்களே, பல் இருக்கிறவன் பக்கோடா சாபிடுறான் உனக்கென்ன அப்படின்னு ஒரு தத்துவத்தை மட்டும் பொழிய ஆரம்பிச்சுடாதீங்க, காது புளிச்சு போச்சு இங்க அது மேட்டரே இல்லை, பிரச்சினை வேற........].
எய்ட்ஸ் போன்ற பால் வினை நோய்கள் வரக்காரணம் என்ன? கண்ட கண்டவங்க கூட தகாத உறவு வைப்பதால் தானே? அது குறித்த விழிப்புணர்வு என்றால், "அடேய் கல்யாணம் என்ற பந்தத்திற்குள் மட்டும் பெண்ணோடு தொடர்பு வைத்திருங்கள் வெளியில் வேண்டாம்" என்று புத்திமதி சொல்வீர்களா, இல்லை அதே மேடையில் நாய் மாதிரி நடந்து கொள்வீர்களா? இதுவா விழிப்புணர்வு?
இப்போ விஜய் தொலைக்காட்சியிலும் அதே மாதிரி ஒரு கேம் ஷோ, அதில் வெல்லும் பணம் கேன்சர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவச் செல்லும். இங்கேயும் ரெண்டு பெண்களோட கட்டிப் பிடி வைத்தியம் + ஒரு கிஸ். அதில் தப்பர்த்தம் எதுவும் இல்லை, அன்பின் வெளிப்பாடு என்பதாக வைத்துக் கொள்வோம், அதே கட்டிப்பிடி வைத்தியம்+ கிஸ் இரண்டையும் ரெண்டு ஆண்களை அழைத்து செய்திருக்கலாம், அது ஏன் பெண்களுக்கு மட்டும்?
ஐயா உங்களுக்கு ஸ்ட்ராங்கா பல்லு இருக்கு, பக்கோடாவை சாப்பிடுங்க, ஆனா பப்ளிக்கா நாலு பேர் பார்க்கிற மாதிரி மொறுக்...... மொறுக்குன்னு சாப்பிடாதீங்க. உங்க சொந்த வாழ்க்கையைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால், "என் பெட் ரூமை ஏன் எட்டிப் பார்க்கிறீங்கன்னு" நீங்க கேள்வி கேட்க்கிறீங்க நியாயம் தான், ஆனா நீங்க உங்க பெட் ரூமுக்குள்ள என்ன பண்றீங்கன்னு மேடை போட்டு சொல்லாமல் தவிர்க்கலாமே?
ஒரு பெண் ஒரு ஆணுடன் வசிக்கிறாள், வீட்டு வேலைகளை இருவரும் பங்கிடுகிறார்கள், இரவில் உடல் ரீதியாக உறவு........ இப்படி வாழ்நாள் முழுவதும் இருந்தா அது திருமண பந்தம் தான்...... திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும்.
இதே செயல்பாடுகளை அப்பப்போ ஆட்களை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தால் அதற்குப் பெயர் விபச்சாரம், சொன்னாலும் சொல்லாவிட்டாலும். இதற்க்கு நட்பு/Living together அப்படின்னு வேறெந்த பெயரில் சொன்னாலும் அது உண்மையல்ல.
நாங்கள் நட்பாக இருக்கிறோம் திருமணம் செய்யாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் டுபாக்கூர். அப்படியெல்லாம் பார்த்தால் நாமக்கல் லாரி டிரைவர்கள் எல்லாம் வட இந்திய மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டிச் செல்லும் பொது சாலை ஓரத்தில் பெண்களுடன் நட்பாகவும், இரண்டு மணிநேர Living Together செய்தோம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பால்வினை நோய்கள் வருவது அந்த மாதிரி செயல்களால் தான். பெண்ணைத் தொடுதல், கிஸ் பண்ணுதல் இத்யாதி....... இத்யாதியெல்லாம் அவளை மணமுடித்தவன் செய்யட்டும், மற்றவன் ஒதுங்கி இருப்பது தான் பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்கும். மனித மனம் ஒரு குரங்கு, அதன் கையில் வாழைப் பழத்தைக் கொடுத்து எட்டு மணி நேரம் வேடிக்கை பார் என்றால் அது சும்மா இருக்காது. அதையெல்லாம் தூண்டுவதைப் போல பொதுவில் செய்யாமல் இருப்பதே பால் வினை நோய்களைத் தவிர்க்கும். அது நடந்தால் நீங்க எந்த நிதியும் திரட்ட வேண்டியதில்லை.

.jpg)